எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 27, 2022

கணினி படுத்தும் பாடு

 கணினியில் வேலை செய்கையில் அடிக்கடி இணைய இணைப்புப் போய் விடுகிறது. இது தோஷிபா மடிக்கணினியில். வாங்கிப் பனிரண்டு வருடங்கள் ஆகின்றன. அதில் ஓ.எஸ். வின்டோஸ் 7 பிரிமியம். ஒரு வேளை அதனால் இணையம் சரியாக வேலை செய்யவில்லையோ? ஞாயிற்றுக்கிழமையில் இருந்து இந்தப் பிரச்னை. இணையச் சேவை கொடுப்பவரைக் கூப்பிட்டுக் கேட்டதில் அவர் கணினி தான் சரியில்லை என்கிறார். காலை ஏழு ஏழரை மணி வரை சுமாராக வரும். அப்போது ஏதேனும் பார்த்துக்கொண்டாலோ/எழுதிக் கொண்டாலோ உண்டு. இல்லை எனில் மதியமெல்லாம் வருவதே இல்லை. நேரம் தான் வீணாகப் போகிறது. இணைய இணைப்பு என்னமோ இருக்கும். ஆனால் கணினியைத் திறந்து க்ரோமில் ஜிமெயில் இணைப்புக் கேட்ட உடனே இணைய இணைப்புப் போய்விடும். திரும்ப இணைப்பைப் பெற்று மறுபடி ஜிமெயிலுக்குள் நுழைந்தால் சிறிது நேரம் சரியாக இருக்கும். உடனே போய்விடும். டிஎன் ஏஸ் செர்வர் சரியில்லை என்றும் நெட்வொர்க் மாறி விட்டது என்றும் எரர் செய்திகள் வரும். மறுபடி மறுபடி கணினியில் இணையத்தை இணைத்தாலும் எந்த வேலையும் செய்ய முடியாது ஒரு வரி தட்டச்சுவதற்குள்ளாக இணையம் போய் விடும். கணினி மருத்துவரைக் கூப்பிட்டு இருக்கேன். 

இணையச் சேவை கொடுப்பவர்கள் வந்து பார்த்துட்டுக் கணினி தான் பிரச்னை என்று சொல்கின்றனர். ஏதோ ஒண்ணு. எனக்கு அந்த மடிக்கணினியை ரொம்பப் பிடிக்கும். ரொம்பவே சமரசம் செய்து கொள்ளும். என் கைவாகிற்கு ஏற்றாற்போல் இருக்கும். இது இப்போத் தட்டச்சிக் கொண்டிருப்பது  2017 ஆம் ஆண்டில் வாங்கின டெல் மடிக்கணினி. அதிலிருந்து இப்போ எழுதறேன். இதில் ஈ கலப்பை மூலம் தட்டச்சினால் எழுத்துப் பிழைகள் நிறைய வருது என்பதால் ஒவ்வொரு முறையும் சுரதாவில் தங்கிலீஷில் அடிச்சு அதை மாற்றி இங்கே போடணும். ஆனால் இணையம் பிரச்னை இதில் இல்லை. ஆகவே அந்த மடிக்கணினி தான் பிரச்னை போல. 12 வருஷம் ஆச்சே. ஆனால் எதுக்கும் மருத்துவரும் வந்து பார்க்கட்டும்னு இருக்கேன்.

இந்த மடிக்கணினியை அம்பேரிக்காவில் இருந்து கொண்டு வருகையில் நம்மவர் பாக் பேக்கைத் தோளில் மாட்டிக்காமல் ட்ராலியில் மேல் தட்டில் வைச்சுட்டார். அது கீழே விழுந்ததில்  ஹார்ட் டிஸ்கில் பிரச்னையோனு நினைக்கிறேன். கொஞ்சம் மெதுவாகவே வேலை செய்யும். பாட்டரி வேறே சார்ஜ் ஆகலையாம். செய்தி வருது. பரவாயில்லைனு இதிலேயே வேலை செய்யலாம்னு செய்யறேன். பார்ப்போம். அதுக்கு மறு வாழ்வு உண்டா இல்லையானு! இன்னிக்கோ நாளைக்கோ தான் கணினி மருத்துவர் வருவார். வந்ததும் தான் என்னனு தெரியும்.

இப்போதைக்குப் போயிட்டு வரேன். இதில் இத்தனை நாழி தட்டச்சி இருப்பதால் இணையம் ஒரு நிமிஷம் கூடப் போகாததால் அந்த மடிக்கணினி தான் பிரச்னைனு நினைக்கிறேன். பார்க்கலாம். அதில் நிறையவே சேமிப்புகள் இருக்கு. எல்லாத்தையும்  இதில் மாத்தணும். வேலை நிறையவே இருக்கும். :)))) ஆனால் இணைய இணைப்புப் பிரச்னை இல்லைனு புரிஞ்சிருக்கு. ஆகவே கணினியை என்னனு கேட்கணும். முந்தைய திருவாரூர்ப் பதிவுக்குப் பதில் கொஞ்சம் மெதுவா வரும். வரேன் இப்போ. ஒரு மாதிரி மனசுக்கு ஆறுதல் ஏற்பட்டிருக்கு. மூணு நாளா ஒரே மண்டைக்குடைச்சல்.

ஒரு விதத்தில் மத்தியானங்களில் படிக்கிறேன். ஆனால் பொன்னியின் செல்வன் டீசர் அதுக்கான கருத்துகள், பாழ்நெற்றி ஆதித்த கரிகாலன், சோழ அரசர்களைப் பார்த்ததால் பொன்னியின் செல்வனையே லக்ஷத்துப் பதினோராம் முறையாகப் படிச்சுட்டு இருக்கேனாக்கும். முதல் பாகம் முடியப் போகுது. நடுநடுவில் வீட்டில் மாவிளக்குப் போட்டது, வீடு சுத்தம் செய்தது குளிர்சாதனப் பெட்டியைச் சுத்தம் செய்தது,எனப் பல்வேறு வேலைகள். ஆகவே மத்தியானம் மட்டும் தான் படிக்க முடிஞ்சது.:(  நான் நினைக்கிறேன், இந்தப் புதுக்கணினிக்குத் தன்னை அடிக்கடி பயன்படுத்துவதில்லை என்பதில் கோபம் வந்து இப்படிப் பண்ணி இருக்குமோ? இப்போது இதில் தானே எல்லாம் பண்ணணும். 

41 comments:

  1. உலவி என்ன? நெருப்பு நரி உபயோகித்து பார்த்தீர்களா? 12 வருஷம் எல்லாம் ரொம்ப ஜாஸ்தி. தற்போது விண்டோஸ் 7 சரியாக வேலை செய்வதில்லை. காரணம் மற்ற செயலிகள் (app) விண்டோஸ் 10க்கு மாற்றப் பட்டுள்ளன.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா Fire Fox!!!

      இப்போது மைக்ரோசாஃப்ட் எட்ஜ் நல்லாருக்குன்னு சொல்றாங்க. என்னிடம் இருக்கிறது ஆனால் இன்னும் அதைப் பயன்படுத்தவில்லை. க்ரோம்தான். மகனின் கல்லூரியில் எட்ஜ் பயன்படுத்தச் சொல்லி அவன் அதுதான் பயன்படுத்துகிறான்.

      கீதா

      Delete
    2. நெருப்பு நரியெல்லாம் கணினியை உபயோகிக்க ஆரம்பித்த நாட்களில் கொஞ்ச காலம் இருந்தது. பின்னர் பல்லாண்டுகளாக க்ரோம் தான். இப்போவும் மைக்ரோசாஃப் எட்ஜ் இந்தக் கணினியிலும் இருக்கு. டாப்லெட்டிலும் இருக்கு. பையர் அதைத் தான் சிபாரிசு செய்கிறார் . ஆனால் எனக்குக் க்ரோம் பழகினாப்போல் மற்றவை இல்லை. டாப் இன்னமும் பழக்கமே ஆகலை. :( இன்னிக்கும் காலம்பர பழைய கணினி ஒரு மணி நேரம் நல்ல வேகமாக வேலை செய்தது. இப்போத் தகராறு. இது கொஞ்சம் மெதுவாக இயங்கினாலும் பரவாயில்லை.

      Delete
  2. வணக்கம் சகோதரி

    கணினி குறித்த பதிவு நன்றாக உள்ளது தங்கள் கணினி பிரச்சனை சரியாக நானும் வேண்டிக் கொள்கிறேன். என்ன இருந்தாலும், பழையதையே பயன்படுத்தி கொண்டிருந்தால், புதுசுக்கு கோபம் வருமோ என்னவோ? என்னிடம் மடிக்கணினி இல்லை. ஆனால் டேபிள்டாப்பில்தான் என் மகன் எனக்கு முதல் முதலாக கற்று தந்து இந்த வலைத்தளங்கள் வருவதற்கு அதை பயன்படுத்தினேன் . அதன் பின் அவர்களிடம் தனித்தனியாக அலுவலக மடிக்கணினி வந்த பின் இதை அவர்கள் அந்தளவுக்கு உபயோகப்படுத்தாததினால் இதுவும் சிறிது பிணக்கு கொண்டு விட்டது. பிறகு என் மகன் வாங்கித் தந்த கைப்பேசியில் அனைத்தும் செய்ய மகன் கற்றுத் தந்ததும் அது (டேபிள்டாப்) ஒரேடியாக கோபித்துக் கொண்டு உள்ளது. இந்த தடவை அதை சரி செய்ய என் மகனிடம் கூறியும் அவருக்கு நேரமின்மையால் ஊருக்கு கிளம்பி சென்று விட்டார்.இனி எப்போதோ? இந்த கைப்பேசியும் அவ்வப்போது படுத்துகிறது.

    உங்களுக்குப் பழக்கமான அந்த பழைய கணினியை மருத்துவரிடம் காண்பித்து சரி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.பழையது என்றுமே நன்றி விசுவாசமாக நடந்து கொள்ளும் என்பது என் கருத்து. :)))) நான் கூறுவது தங்களிமிருக்கும் புதுசுக்கு கேட்டு விட்டால் அவ்வளவுதான்... ஹா ஹா ஹா. ஆனால் இந்த மாதிரி எலக்ட்ரானிக் பொருட்களுக்கு ஆயுள் கம்மி என வேறு எங்கள் வீட்டில் சொல்லிச் சொல்லி அடிக்கடி மாற்றிக் கொண்டே யிருக்கிறார்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை. விரைவில் தங்கள் கணினி பிரச்சனைகள் சரியாக வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. தெரியலை கமலா. இன்னும் டாப் பயன்படுத்த ஆரம்பிக்கலை அது என்ன பண்ணுமோ? டேபிள் டாப்பில்தான் நானும் வேலை செய்தேன். 2005 ஆம் ஆண்டில் வாங்கினது. சுமார் பத்து வருடங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். பின்னர் மடிக்கணினி பயன்பாடு அதிகரிக்கவும் அதில் உட்காரவே இல்லை. ஆகவே 2000 ரூபாய்க்குப் பரவாயில்லைனு கொடுத்துட்டோம்.

      Delete
    2. கணினி மருத்துவர் சாயங்காலத்துக்குள் வருவார். வேடிக்கை என்னவென்றால் எல்லோருமே மாமா தான் கணினியை இயக்குவதாக நினைப்பார்கள். நான் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். ஆனால் இந்தக் கணினி மருத்துவர் நேரடியாக என்னிடமே பேசினார். நான் தான் கணினியை இயக்குகிறேன் என்பதைப் புரிஞ்சுட்டு இருக்கார் பொதுவாகவே எங்க வீட்டுக்கு வரும் புதியமனிதர்களில் இருந்து உறவுக்காரர்கள் சிலர் வரை நான் வேலை செய்வேன் என்பதை நம்ப மாட்டார்கள். யார் சமைக்கிறாங்க என்றே கேட்பார்கள். அதே போல் கணினி சம்பந்தப்பட்ட வேலை அவங்களுக்கு எதிரே ஏதானும் செய்யும்படி நேர்ந்தால்," நீ ஏன் சிரமப்படறே! அவர் பார்த்துப்பாரே!" என்பார்கள்.

      Delete
  3. எந்த ஒரு எலெக்ட்டானிக் பொருளும் ஐந்தாறு வருடங்களுக்கு மேல் வேலை செய்தால் அதை போனஸாகத்தான் கருத வேண்டும்.  அந்த வகையில் உங்கள் அந்த மடிக்கணினி இரண்டு வாழ்நாளுக்கும் மேலாக உழைத்துக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், ஏ.சி. கூட நாங்க முதலில் அசெம்பிள் பண்ணினது போட்டோம் 2002 ஆம் ஆண்டில் போட்டது பத்து வருடங்கள் வந்தது. பின்னாலும் அதில் உபயோகம் இருக்கும் என்றாலும் கம்ப்ரெசரில் சில பிரச்னைகள். எங்களோடது க்ராம்ப்டன் கம்பெரெசர். அதன் உதிரி பாகங்கள் கிடைக்காமல் கொடுத்தோம்.

      Delete
    2. gmail ஐ காட்டிலும் google docs உபயோகியுங்கள். அதுவும் translit தான். நிறைய வசதிகள் உள்ளது. என்னுடைய பதிவுகள் யாவும் docs வழி செய்தவையே. எப்போது வேண்டுமானாலும்  பழைய வெர்சனுக்கு ரிவெர்ட் செய்யமுடியும். பவர் போனாலும் பைல் போகாது. முக்கியமாக கோப்பை எந்த போர்மட்டிலும் சேவ் செய்யமுடியும் pdf, word, html, text என்று எல்லா விதத்திலும். மேலும் பல மொழிகள் (മലയാളം, हिन्दी, english) எல்லா மொழிகளையும் கலந்து கட்டுரை உண்டாக்கலாம்.

       Jayakumar

      Delete
    3. ஆலோசனைகளுக்கு நன்றி.

      Delete
  4. நான் ஈ கலப்பை அழகி எதுவும் உபயோகிப்பதில்லை.  ஜிமெயில் டிரான்ஸ்லிட் தான்.  காபி பேஸ்ட்தான்!

    ReplyDelete
    Replies
    1. ஜிமெயிலில் நானும் பழகிக் கொண்டேன் என்றாலும் தொடர்ந்து பயன்படுத்தலை. மொபைலில் கூடத் தமிழில் அடிக்கச் சொல்லி வரும். ஆனால் பயன்படுத்துவது இல்லை. தங்கிலீஷ் எப்போவானும்.

      Delete
  5. பாழ்நெற்றி சோழர்கள், பாண்டியர்கள்...   பணம் பார்க்க வேண்டும் என்று  செய்து கொண்ட சமரசங்கள்.  அனாவசியமாக ஆள்வோரின் கோபத்துக்கு ஆளாகவேண்டாம் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். திரைப்படத்துறையே அவங்க கைகளில். என்ன செய்ய முடியும்?

      Delete
  6. கீதாக்கா நான் விண்டோஸ் 7 ம், 10 இரண்டுமே இருக்கிறது வேர்ட் ஃபைல்ஸ் எல்லாம் விண்டோஸ் 7 ல்தான் இருக்கின்றன. கணினிதான் உங்களுக்குப் பிரச்சனை பின்னே 12 வருஷம் ஆகியிருக்கே. ...
    கீதா

    ReplyDelete
    Replies
    1. அந்தச் சமத்து மடிக்கணினியில் வின்டோஸ் 7 தான். காலம்பர மட்டும் வருது. இதில் வின்டோஸ் 10. இதை டிசம்பரில் பையர் வந்தப்போ அப்டேட் எல்லாம் பண்ணி ரீ இன்ஸ்டால் பண்ணினார்னு நினைக்கிறேன். ஆகவே பிரச்னை இல்லை.

      Delete
    2. வின்டோஸில் பிரச்னை இல்லைனு சொல்லிட்டார் கணினி மருத்துவர். இணைய இணைப்பை முழுதும் துண்டித்துவிட்டுப் பின்னர் மறுபடி இணைப்பு வாங்கினார். சரியாகி விட்டது. அதோடு ஒரு சில சுத்தப்படுத்தும் வேலைகளும் செய்தார். மற்றபடி இந்தச் சமத்து மடிக்கணினி 20 நிமிஷத்தில் சரியாகிவிட்டது. மருத்துவரே இதைப் பாராட்டினார். இதைத் தான் இணைப்புக் கொடுக்கும் நபர்களிடம் நானும் சொல்லிப் பார்த்தேன். அவங்க அதிலும் ஒரு சின்னப் பையர் இருக்கார். 22 அல்லது 25 வயசுக்குள் இருக்கும். அவர் எனக்குக் கணினி பத்தி எதுவுமே தெரியாது எனச் சொல்லாமல் சொன்னார். கணினியில் தான் பிரச்னை என அடித்துச் சொல்லிவிட்டார். மருத்துவர் வரும்போது என்னைக் கூப்பிடுங்க என்றும் சொன்னார்.நான் தான் கூப்பிடலை. ஏனெனில் இணையம் தான் பிரச்னை என்பது எனக்குப் புரிந்திருந்தது.

      Delete
  7. நான் அழகி தவிர வேறு எதுவும் பயன்படுத்துவதில்லை இதுவரை. அது லதா ஃபான்ட், நிர்மலா ஃபான்ட் ரெண்டுமே ஏற்கிறது. யுனிக்கோட் , ஆங்கிலத்தில் அடிக்க அது தமிழ் மாற்றிக் கொள்ளும் எனவே சௌகரியமாக இருக்கிறது.

    ஓ அதனால்தான் நீங்க எங்கள் தளம் பக்கம் வரமுடியலையோ...கோயில் பதிவுகள், அப்புறம் இப்ப மலேஷியா பயணம்,....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தளம் மட்டும் இல்லை. நிறையத் தளங்கள் போகலை. நேற்றுத்தான் கில்லர்ஜி, துரை ஆகியோரின் தளங்களுக்குப் போனேன். உங்கள் தளத்துக்கும் வரணும்.

      Delete
    2. "அழகி" விஸ்வநாதன் நெருங்கிய நண்பர். அம்பத்தூரில் தான் இருந்தார். அவர் உடல்நிலை காரணமாகத் தி.நகர் சென்றார். அவர் அப்பா வேத வித்து. வேதக் கணக்கு முறை நன்கு அறிந்தவர். இப்போ அவங்க யாருமே தொடர்பில் இல்லை. எல்லோருமே "மழலைகள்" என்னும் தளத்தில் (தமிழக அரசால் குழந்தைகளுக்கென அங்கீகாரம் பெற்றது) இருந்தோம். அதில் நிறையவே தொடர்கள் எழுதி இருக்கேன். அவற்றின் நிலைமை என்னனு தெரியலை.ஒரு சிலவற்றை மின்னூலாக்கினேன். அந்தத் தளத்தின் உரிமையாளர் திரு ஆகிரா ராஜகோபாலனின் மறைவால் நண்பர்கள் அனைவருமே தொடரபை இழந்து விட்டோம். மத்தவங்க நினைக்கிறாங்களா இல்லையானு கூடத் தெரியலை.

      Delete
    3. காயத்ரி மந்திரத்தைத் தலைகீழாகச் சொன்னால் அது பிரம்மாஸ்திரத்தின் சமம் எனச் சொல்லி அதைத் தற்சமயம் விளக்கிச் சொல்லுவது கூடாது என்றும் சொல்லுவார். அவர் சொல்லி இருந்த பல அரிய விஷயங்கள் என் சேமிப்பில் இன்னமும் இருக்கு. எல்லாமே டெஸ்க் டாப்பில்// பென் டிரைவில் எடுத்து வைச்சிருக்கேன்.

      Delete
    4. அழகி விஸ்வநாதன் பற்றி கொஞ்சம் தெரியும் கீதாக்கா. நீங்களும் முன்னர் சொல்லியிருக்கீங்க.

      நான் அழகியை டவுன்லோட் செய்து பேசிய போது அவர் வேளச்சேரியில் இருந்த நினைவு. ஒரு வேளை அலுவலகமாக இருக்கலாம்.

      கீதா

      Delete
    5. சேமிப்பில் இருப்பவற்றை முடிந்தால் பதிவிடுங்களேன், கீதாக்கா

      கீதா

      Delete
    6. இப்போது வேளச்சேரி போயிருக்கலாம் தி/கீதா. எனக்குச் சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாகத் தொடர்பில் இல்லை. அவர் உடல்நிலை பற்றி அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

      Delete
    7. அந்த சேமிப்பெல்லாம் டெஸ்க் டாப்பில் என்பதால் பென் ட்ரைவில் போட்டு வைச்சிருக்கேன். தேடித்தான் பார்க்கணும் தி/கீதா. நிறைய விஷயங்கள் தெரிந்த நல்ல மனிதர்.

      Delete
  8. டீசர் பார்க்கவில்லை...இன்னும்.

    அக்கா பழைய கணினி நிஜமாகவே ரொம்பவே உழைத்திருக்கிறது. மருத்துவர் பார்க்கட்டும் ஆயுள் ஓடுமா என்று. இல்லை என்றால் இப்போதையது நன்றாக இருக்கிறது என்றால் அதையே பயன்படுத்துங்க. இப்போதையதையும் ஒரு மருத்துவ சோதனை செய்துவிடுங்கள் மருத்துவர் வரும் போது...ஏதோ ஹார்ட் டிஸ்க் பிரச்சனை என்று சொல்லியிருக்கீங்களே..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சமத்து மடிக்கணினி சரியாகி விட்டது. அந்தப் புதுசையும் பார்த்தாச்சு. நேற்றுச் சாயங்காலம் ஆறு மணிக்கு வந்தவர் கிளம்பும்போது எட்டரை ஒன்பது ஆகிவிட்டது. மாலை வேளைகளில் எனக்குச் சமையலறை வேலை இருக்கும். அதனால் அவரை மத்தியானமே வரச் சொல்லியும் அவர் வரலை. பின்னர் நேத்திக்கு வந்தப்போ இனிமேல் மத்தியானங்களில் வாங்கனு சொல்லி இருக்கேன். ஹார்ட் டிஸ்க் பிரச்னை ஏதும் பெரிசா இல்லைனும் தேவையானால் SSD போட்டுக்கலாம், இப்போ ஒண்ணும் அவசரம் இல்லைனும் சொல்லிட்டார். அதையும் காலையில் பயன்படுத்தினேன். முன்னைக்கு இப்போ வேகமும் இருக்கு. நல்லாவும் வேலை செய்யுது. ஆனால் இந்த "சிங்க்" தான் இன்னமும் கழுத்தை அறுக்கிறது. கணினி மருத்துவரிடம் சொல்லியும் அவர் ரொம்பவே அதைக் கண்டுக்கலை.ஜிமெயிலுக்குள் நுழையும்போதே cann;t sync to sivamgss@gmail.com என வருது. மறுபடி மறுபடி முயற்சி செய்து தான் உள்ளே நுழைய முடிகிறது. இது இரண்டு வருஷமாப் பழகிப் போச்சு என்பதால் ஒண்ணும் பிரச்னையாத் தெரியலை. :)

      Delete
  9. ஆமாம். இரண்டையுமே பார்க்கச் சொல்லப் போகிறேன். கூடவே டாப்லெட்டையும். அதிலும் பழகிக் கொள்ளலாமே!

    ReplyDelete
  10. இருப்பதில் SSD இணைக்க முடியுமா என்று கேட்டுப் பாருங்கள்... அவ்வாறு முடிந்தால் புதிய கணினி / மடிக்கணினி தேவையிருக்காது...

    SSD - கணினி இயங்குவதற்கான கோப்புகள் மட்டும்... வேகம் அதிகம்... கணினியின் மற்ற drive-களை ஏறெடுத்தும் பார்க்காது... அதனால் பிரச்சனையும் வர வாய்ப்புகள் இல்லை...

    ReplyDelete
    Replies
    1. ஆலோசனைகளுக்கு நன்றி. திரு தனபாலன். அவர் இன்னமும் வரவில்லை. ஏற்கெனவே ஒத்துக்கொண்ட வேலைகளை முடிச்சுட்டுத் தான் வருவேன் என்றார். ஆகவே ஐந்து மணிக்கு மேல் வரலாம்.

      Delete
    2. முடியும். நான் இணைத்திருக்கிறேன்.

      Delete
    3. தற்சமயம் SSD தேவை இல்லை என்கிறார். ஆகவே பொறுத்திருந்து பார்க்கிறேன். நேற்று மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்து இரண்டு மடிக்கணினியையும் பார்த்துச் சரி செய்து முடிக்க இரவு எட்டரை ஆகிவிட்டது. :(

      Delete
    4. இங்கு இப்போது வரை ஹெச்டிடி ஹார்ட் டிஸ்க் ட்ரைவ் ஒன்று இருக்கிறது. எஸ் எஸ் டி வாங்க வேண்டும் என்று வீட்டில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

      கீதா

      Delete
  11. கணினிக்கு உணவு (மின்சாரம்) சரியாக கொடுக்கிறீர்களா ? முதலில் அதை கவனியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சார்ஜெல்லாம் 100% வரை கொடுத்துடுவேன் கில்லர்ஜி. மற்றபடி இங்கே அடிக்கடி மின்சாரம் போகும். அணில் விளையாட்டு அதிகம். :)

      Delete
  12. டெக்னிக்கல் சமாச்சாரங்கள் அவ்வளவாகத் தெரியாது கணினியோ, மடிக்கணினியோ இல்லை. பதிவுகள், கருத்துகள் எல்லாமே நான் அனுப்பிவிட கீதாவின் கணினியிலிருந்துதான் இதுவரை. பதிவுகளை பேப்பரில் எழுதி, கருத்துகள் என்றால் வாட்சப்பில் என்றால் தங்கிலிஷ், பேப்பரில் என்றால் தமிழில் எழுதி மொபைல்வழி ஃபோட்டோ எடுத்து வாட்சப்பில் அனுப்பிவிடுகிறேன்.

    கணினி மருத்துவர் வந்தாரா? கணினி சரியாகிவிட்டதா?

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன், கணினி சரியாகி விட்டது.

      Delete
  13. கணினியும் இணைய்ச் இணைப்பும் விரைவில் சீராகட்டும்..

    ReplyDelete
  14. கணினி ரொம்பவும் பாடு படுத்தி விட்டது என்று தெரிகிறது.
    இப்போது மருத்துவர் வந்து சரி செய்து விட்டார் என்று அறிந்து மகிழ்ச்சி.
    ஒரு பொருள் பழகி விட்டால் அது பழுது பட்டால் கஷ்டம் தான்.
    அதுவும் கணினியின் பயன்கள் இப்போது அதிகமாகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி. இரண்டுமே இப்போ நன்றாக வேலை செய்கின்றன. மருத்துவருக்கு நன்றி.

      Delete