சுமார் பனிரண்டு மணி அளவில் எக்ஸ்ரேக்கு அழைத்துச் சென்று கொண்டு விட்டார்கள். தூக்கம் வேறே முழு ஏசி என்பதால் குளிர் வேறே. ஒண்ணும் சாப்பிடாததால் பசி வேறே. காலை நீட்டிப் படுத்தால் தேவலை போல இருந்தது. கொஞ்சம் சாய்ந்தாற்போல் உட்கார்ந்தால் இடப்பக்கம் அந்த நரம்பு முடிச்சுக்களெல்லாம் நகர்ந்து கொண்டு மேலும் வலியை அதிகப்படுத்தியது. அதற்குள்ளாக மேலும் இரு முறை மருமகள் வந்து பார்த்துட்டு செவிலியரிடம் எப்போ எனக்கு செக்கப் ஆரம்பம் எனக் கேட்டுக்கொண்டாள். சர்ஜன் வரணும் என்றார்கள். அதுக்குள்ளாக ட்யூட்டி மருத்துவர் மாதிரி ஒரு சர்ஜன் வந்து என்னைப் படுக்கையில் படுக்கச் சொன்னார். படுக்கை மிக உயரத்தில் இருக்க என்னால் ஏறிப் படுக்க முடியலை. உடனே ஒரு நர்சை அனுப்பி ஸ்டூல் கொண்டு வரச் சொல்லிப் படுக்கையையும் கொஞ்சம் இறக்கச் சொன்னார். ஏறிப் படுத்தேன். கால்களை மேலே தூக்கிப் போட முடியாமல் தவிக்கச் செவிலியர் தூக்குகையில் வலி தாங்காமல் கத்திவிட்டேன். பின்னர் இந்த மருத்துவர் என்னிடம் விபரங்களைக் கேட்டுக் கொண்டு சின்னதான ஒரு ஸ்கேன் மானிடரில் என் மேல் வயிற்றில் வலி இருக்குமிடம் பரிசோதனை செய்து கொண்டார். அரை மணி நேரத்துக்குப் பின்னர் அது முடிந்து அவர் ஏதோ சொல்லிட்டுப் போனார். என்னவென்று கேட்டதற்கு அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் எடுத்தே ஆகணும் எனவும் அங்கே ஆள் இன்னும் வராததால் சிறிது நேரம் அங்கேயே இருக்கணும் எனவும் சொன்னார்கள். மறுபடி தேவுடு காத்துக் கொண்டிருந்தேன்.
நல்லவேளையாகப் போர்த்திக்கொள்ளப் போர்வை கொடுத்தார்கள். கீழே இருந்து யாரும் வரலை. தூங்கிட்டாங்க போலனு நினைச்சுட்டிருந்தப்போ என்னோடு காத்திருந்த ஒரு தமிழ்ப் பெண் அல்ட்ரா சவுன்டுக்கு நர்ஸ் துணையுடன் கிளம்பிப் போனார். அடுத்து நம்மைக் கூப்பிடுவாங்கனு எதிர்பார்ப்புடன் உட்கார்ந்திருந்தேன்.கொஞ்சம் அப்படியே கண்ணசர யாரோ கூப்பிடும் ஒலி கேட்டுக் கண் விழித்தால் நர்ஸ் ஒருத்தர். என்னை அல்ட்ரா சவுன்ட் ஸ்கேனுக்கு அழைத்துச் செல்ல வந்திருந்தார். அவருடன் அங்கே போனேன். ஆனால் இது விஷயம், பையருக்கோ அவர் மனைவிக்கோ தெரியாது. அவங்க கீழேயே இருந்தாங்க. அங்கே இருந்த பெண்மணி என்னைத் தனியாகவா வந்திருக்கே எனக் கேட்கக் கீழே பையரும், மருமகளும் காத்திருப்பதைச் சொன்னேன். இவர் ஹிந்தியிலும் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் நடந்தது. நான் வெளியே வந்தப்போப் பையர் அங்கே நின்றிருந்தார். செவிலியரோ அல்லது மருமகள் மூலமாகவோ செய்தி தெரிந்து அங்கே வந்திருந்தார். ஸ்கேன் செய்த பெண்மணியிடம் என்ன பிரச்னை எனக் கேட்க அவர் சர்ஜன் தான் சொல்லுவார் எனச் சொல்லிட்டார்.
ஆக இரவு முழுவதும் ஆஸ்பத்திரி அவஸ்தை. எபப்டியோ ஒன்றுமில்லை என்று ஆனதே.. அதுவரை நிம்மதிதான்.
ReplyDeleteஆமாம், என்னோடு சேர்ந்து குழந்தை உள்பட அவதிப்பட்டார்கள்.
Deleteஇங்கே செய்வது போல எதற்கும் இருக்கட்டும் என்று காசுக்காக நிறைய சோதனைகள் அங்கு செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இப்படிச் சொன்னாலும் கூட சில சோதனைகள் அவசியமானதாகத்தான் இருக்கின்றன.
ReplyDeleteஅரசாங்க மருத்துவமனை என்பதால் ஒண்ணு இலவசமாய் இருக்கணும். அல்லது குறைவான கட்டணமாய் இருக்கணும். அப்படித்தான் நான் நினைக்கிறேன். அன்றிரவு முழுவதும் பல பெண்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தனர். நல்ல கூட்டம். அத்தனைக்கு அறை சின்னது. அதில் பாதியில் நாலு படுக்கைகள்.
Deleteவிலா எலும்பு பக்கம் நரம்பு எப்படி சுருட்டும்? அபுரி...
ReplyDeleteதெரியலை ஸ்ரீராம், ஆனால் எனக்கு அடிக்கடி ஒரு சின்னப் பந்து போல் உருண்டையாக மார்புக்கூட்டுக்கு நடுவில் ஏறி இறங்கும். நரம்புச் சுருட்டல் என நான் நினைச்சுட்டு இருக்கேன். ஆனால் பரிசோதனை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் உணர முடிந்திருக்கிறது.
Deleteநான் கூட என் ஆஸ்பத்திரி அனுபவங்களை எழுத வேண்டும். நினைத்துக் கொண்டே இருக்கிறேனே தவிர...
ReplyDeleteஉங்களால் இன்னமும் சுவாரசியமாக எழுத முடியும். எழுதுங்கள்.
Deleteவலி குறைந்து இருக்கிறதா? இப்படி கஷ்டபட்டுவிட்டீர்களே இனி நல்லபடியாக இருக்க வேண்டும். உடல்நலத்தோடு பேத்தியோடு உரையாடி கவலைகளை மறந்து இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும்
ReplyDeleteகுழந்தைக்குத் தாத்தாவின் பிரிவே இன்னமும் ஜீரணிக்கலை. அவ்வப்போது நினைவு வருது. நான் ஏதானும் புலம்பாமல் இருக்கணுமேனு அடக்கி வாசிக்கிறேன். தனியாக அறையில் இருக்கையில் தான் என்னோட மனதைத் திறந்து வைச்சுக்கறேன். மற்றபடி ரொம்பக் கஷ்டப்பட்டு சாதாரணமாக இருக்க முயல்கிறேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநல்லபடியாக வீடு வந்து சேர்ந்ததற்கு மகிழ்ச்சி. இரவு முழுவதும் மருத்துவமனையில் இருப்பதென்பது கடினந்தான். அங்கு ஒவ்வொன்றிக்கும் ஏன் இவ்வளவு தாமதமாக்குகிறார்கள். எப்படியோ அன்றைய ராத்திரி முழுவதும் கண் விழித்தபடி அனைவரும் அவஸ்தைபட்டு விட்டீர்கள். இப்போது வலி பூரணமாக குணமாகி உள்ளதா.? மருத்துவர் தந்த மருந்துகளை விடாமல் சாப்பிடுங்கள். உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல கூட்டம் கமலா. அங்கேயே இருந்த நோயாளிகளைப் பார்க்க மருத்துவர்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள். செவிலியர் அவங்களையும் கவனிச்சு உதவி செய்யணும். வெளி நோயாளிகளாக வந்திருக்கும் எங்களைப் போன்றவர்களையும் கவனிக்கணுமே. மொத்தத்தில் இரவு போல் இல்லை. அங்கே எப்போதும் கூட்டமாகவே இருக்கு. நேற்றோடு மருந்துகள் முடிந்து விட்டன.
Deleteமருந்துகள் முடிந்து விட்டது என கூறியுள்ளீர்கள் இப்போது உடல் நலம் எப்படி?
ReplyDeleteஇறைவன் அருளால் நலமே இருக்க வேண்டுகிறோம்.
குட்டிக்குஞ்சுலுவுடன் மகிழ்ச்சியாக இருங்கள். மகிழ்ச்சி உடல் நலனை குடுக்கும்.
நன்றி மாதேவி.
Deleteஎல்லாம் நல்லதாகவே நடக்கும்... உடல் நிலை சரியாக எனது பிரார்த்தனைகள்......
ReplyDeleteபிரார்த்தனைகளுக்கு நன்றி வெங்கட்.
Deleteஅக்கா, ஸ்பாசம் தான் எப்படி நரம்புகள் முடிச்சுக் கொண்டு படுத்துகிறது. எப்படியோ எல்லாம் நல்லபடியாக ஒன்றுமில்லாமல் வீடு வந்து சேர்ந்தது மகிழ்ச்சிக்கா.
ReplyDeleteஒரு நாள் தூக்கம் போனாலே கஷ்டமாகிவிடுமே இல்லையா.
எப்படியோ ஒன்றும் இல்லாமல் ஏதோ மருந்து மாத்திரைகள் தான். நல்லதாயிற்று.
வெரிக்கோஸில்தான் நரம்புகள் சுட்டிக் கொள்ளும். உடம்பின் பிற பாங்களிலும் ஆகிறது என்று தெரிகிறது,.
எல்லாம் நல்லபடியாக ஆகிவிடும் அக்கா.
கீதா
என்னவோ எனக்குனு அதிசயமா ஏதானும் வரும். ஆனால் இது ஆகஸ்டில் பையர் என்னைத் தூக்கிக் கீழே இறக்கும்போது தான் ஆரம்பித்தது. ஆகஸ்ட் எட்டு அல்லது ஒன்பது தேதியில் . மருந்துச் சீட்டுகளைப் பார்த்தால் தெரியும்.
Deleteஇந்த மாதிரி ஒரு நாள் முழுவதும் ஆஸ்பத்திரியில் வாசம் செய்யவேண்டியதாகிவிட்டதே அதுவும் இரவில்.
ReplyDeleteநல்லவேளை பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்று சொல்லியிருக்கிரார்கள்.
நன்றி நேல்லை.
Deleteகடவுளே! ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteநன்றி பானுமதி!
Deletehttps://my.clevelandclinic.org/health/diseases/8098-hiatal-hernia
ReplyDeleteஎனக்கு ஏற்கெனவே அம்ப்லிகல் ஹெர்னியா இருக்கு. பையர் கூட அது தான் வலியோனு சந்தேகப்பட்டார். ஆனால் அல்ட்ரா சவுன்ட் ஸ்கேனிலோ அது பற்றியோ ஹியாடஸ் ஹெர்னியா பத்தியோ எதுவும் தெரியலை.
Delete