செப்டெம்பர் பதினொண்ணுக்குப் பின்னர் பல முறை எழுத நினைச்சு எழுதலை. மனசு பதியலை. நடுவில் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகள் தீர்ந்து போய் இங்குள்ள மருத்துவமனையின் மருத்துவரைப் பார்த்துச் சொல்லி மருந்து வாங்கி வரப் போகும்படி இருந்தது. என்னதான் இங்கே இருந்தாலும் மனமெல்லாம் ஸ்ரீரங்கத்தை விட்டு நகரவே இல்லை. அங்கேயே இருக்கு. சில சமயம் காலை சாப்பிடும்போது ரங்க்ஸ் நினைவு வந்துடும். ஒவ்வொரு விஷயத்தையும் அவரிடம் பகிர்ந்து சொல்லிட்டுத் தான் செய்வேன். அல்லது அவரிடம் கேட்டுப்பேன். இப்போவும் சில சமயம் ஏதானும் விஷயம்னால் உடனே அவர் வந்ததும் சொல்லணும் எனத் தோன்றுகிறது. பின்னர் தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு கடவுளே, அவர் எங்கே இருக்கார்னு நினைவில் வரும். எதையும் பகிர ஆளில்லையேனு மனசு கிடந்து தவிக்கும். வெங்கட்டின் அம்மா அவர் கணவர் இறந்து ஒரு வருஷத்துக்குள்ளாக அவரிடம் போயிடுவேன்னு சொன்னாங்களாம். அதே மாதிரிப் போயிட்டாங்க. ஒரு மாசம் ஆகி இருக்கும். எனக்கெல்லாம் அப்படிக் கிடைக்குமானு தெரியலை. கிடைச்சாலும் தெரியப் போறதில்லை. :(
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Wednesday, October 08, 2025
கூப்பாடு ஆன சாப்பாடு!
சாப்பாடு பல மாதங்களாகவே வேண்டாவெறுப்பாகத் தான் சாப்பிட்டு வருகிறேன். அங்கேயானும் கிரைண்டர் இருப்பதால் இட்லி, தோசைக்கு மாவு நானே அரைச்சுடுவேன். இங்கே மிக்சி தான். அதையும் ஸ்டபிலைசர் போட்டுட்டு அரைக்க வேண்டி இருக்கு. குளிர்சாதனப் பெட்டி, மிக்சி, ரைஸ் குக்கர் எல்லாமும் அம்பேரிக்காவின் மின் பயன்பாட்டுக்கு ஏற்றவகை என்பதால் இங்கே ஸ்டபிலைசர் போட்டுத் தான் அவற்றை இயக்கணும். அம்பேரிக்காவில் இதே மிக்சியில் நானே தனியாக அரைச்சிருக்கேன். ஆனால் இங்கே அரைக்க யோசனை. ஏதானும் பிரச்னையாயிடுத்துன்னா என்ன செய்யறது? ஏற்கெனவே இங்கே குளிர்சாதனப் பெட்டி வீணாகப் போய் கன்டென்சர்/கம்ப்ரெஸர்(?) எதுனு தெரியலை. மாத்தணும்னு சொல்லி அப்புறமா ஒண்ணுமே தெரியலை. ஆகவே கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு. சப்பாத்தி மாவு சப்பாத்தி பண்ணினால் நல்லாவே இல்லை. கடிக்கக் கொஞ்சம் இல்லை, ரொம்பவே கஷ்டம். ஏற்கெனவே பற்களில் பிரச்னை. ஆகவே சப்பாத்தி பண்ணினால் சாப்பிட அரை மணிக்கும் மேல் ஆயிடும். :( சாதம் போதும்னு சொன்னாலும் பிள்ளை, மருமகள் கேட்பதில்லை. இதிலே அசிடிட்டி தொந்திரவு ரொம்பவே அதிகம் ஆகி இரவுத் தூக்கம் இல்லாமல் போனதில் நேற்று மருத்துவரைப் போய்ப் பார்த்தோம்.
ஏகப்பட்ட கேள்விகள், விசாரணைகள்! ஸ்ரீரங்கத்தில் கொடுத்திருக்கும் மருந்துகளில் அவருக்குத் திருப்தியே இல்லை. அதோடு ரத்த அழுத்தம் வேறே 103/54 என்றே காட்டியது. அவரோட பிபி மெஷினில் அவருக்கே சந்தேகம் வந்ததால் வேறே கொண்டு வரச் சொல்லி 2,3 முறை பார்த்தார். அதுக்கெல்லாம் பிபி அசரலை. விடாமல் 103/54 என்றே காட்டியது. உடனே பிபி மருந்தைப் பாதி மட்டும் எடுத்துக்கோ, 2,3 நாட்களுக்கு மாத்திரையே வேண்டாம்னு சொல்லிட்டு, அங்கே ரத்தச் சர்க்கரை பார்க்கவும் அதோடு கூட வயிற்றில் பாக்டீரியா இன்ஃபெக்ஷன் இருக்கானு பார்க்கவும் சேர்த்தே பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்து ரிப்போர்ட் வந்ததும் மறுபடி வரச் சொன்னார். அதுவரை அங்கேயே உட்காரச் சொல்லிட்டார். பரிசோதனைக் கூடத்தில் நாலைந்து பேர் காத்திருந்தார்கள். ஆகவே என்னைக் கூப்பிடவே ஐந்தே முக்கால் ஆச்சு. அவங்க ரத்தம் எடுக்கும்போது வலியே தெரியலையேனு நினைச்சால் இன்னிக்கு அந்த இடத்தில் நீலமாக ரத்தம் கட்டி இருக்கு. செவிலியரும் தமிழ். மருத்துவர் மலையாளம் என்றாலும் நல்லாத் தமிழிலேயே பேசினார்.
மருத்துவருக்கு என்னோட அனிமிக் பிரச்னை, விடமின் D குறைபாடு, ரத்த அழுத்தம், சர்க்கரை இதோடு காலில் ஆர்த்ரிடிஸ், வயிற்றில் லிவரில் பாதிப்பு, அசிடிட்டி எல்லாத்தையும் பார்த்ததும் ஒரே தலை சுற்றல். எப்படி இவங்க அனிமியா, விடமின் D குறைபாட்டுக்கெல்லாம் மருந்தே சாப்பிடாமல் இருக்காங்கனு ஆச்சரியம் வேறே. நல்லவேளையா லிவருக்கு ஸ்ரீரங்கம் மருத்துவர் மாத்திரைகள் 3 மாசத்துக்குக் கொடுத்திருக்கார். அது ஒண்ணுதான் பரவாயில்லை. மத்தபடி அங்கே நல்லாவே கவனிக்கலைனு இவரோட கருத்து. ரத்தப்பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்ததும் அங்கே உள்ள கான்டீனில் உட்கார்த்தி வைத்துவிட்டுப் பையருக்கு ஏதோ கேட்கப் போனார். அங்கே இட்லி, போளி, வடை போன்றவை கிடைப்பதாகப் போட்டிருந்தாங்க. பையர் வேண்டுமானு கேட்டார். தண்ணி கூட வேண்டாம்னு சொல்லிட்டேன். பின்னர் எனக்கு வீல் சேர் எடுத்துவரும் உதவியாளர் பரிசோதனைச் சாலையில் போய் ரிசல்ட் வந்துடுத்தானு கேட்டுட்டு வந்தார். ரிசல்ட் மருத்துவருக்கே ஆன்லைனில் அனுப்பிடறாங்க. அவர் பார்த்துத் தக்க மருந்துகளைக் கொடுக்கிறார். நமக்கு ரிப்போர்ட் கைக்கு வருவதில்லை. வேணும்னால் ஆன்லைனில் பார்த்துக்கலாம். அதுவும் மருத்துவர் பார்த்துச் சரியெனச் சொன்னதும். எனக்கு பாக்டீரியல் இன்ஃபெக்ஷன் இல்லைனு சொல்லிட்டார். மற்றபடி அசிடிடிக்கு மாத்திரை, சிரப் கொடுத்திருக்கார்.
சாப்பாடுதான் கூப்பாடாகி விட்டது. பருப்பு வகைகள், உ.கி. புளி முதலியன அறவே தவிர்க்கணும்னு சொல்லிட்டார். பையருக்கு அப்போவே கவலை. பின்னே எதைச் சாப்பிடுவதுனு. வீட்டுக்கு வந்ததும் நான் தக்காளியை சூப் மாதிரி வைச்சு மிளகு பொடி போட்டு அதை ரசத்துக்குப் பதிலாகப் பயன்படுத்திக்கிறேன்னு சொன்னேன். அதோடு மோர்ச்சாறு போன்றவையும் அவ்வப்போது பண்ணிக்கிறேன்னு சொன்னேன். காய்கறிகள் கொஞ்சமா சாம்பார்ப் பொடி போட்டு வதக்கியோ வேக வைச்சோ சாப்பிட்டுக்கலாம். பையர் நாளையிலே இருந்து உன்னோட சாப்பாட்டை நீயே சமைச்சுக்கோ. உனக்குத் தான் எப்படினு புரியும்னு சொல்லிட்டார். ஆகவே இன்னிக்கு நானே சமைத்துக் கொண்டேன். ராத்திரிக்கு மருமகள் தோசைக்கு அரைச்சு வைச்சிருக்கா. அதான் சாப்பிடணும்.
Subscribe to:
Post Comments (Atom)
//மனமெல்லாம் ஸ்ரீரங்கத்தைவிட்டு நகரலை.// (அதுக்கு முன்னால, அம்பத்தூரைவிட்டு நகராமல் இருந்தது என் நினைவுக்கு வருது). இருந்தாலும் சாம்பசிவம் மாமா ஸ்ரீரங்கத்திலும் கூடவே இருந்தாரே. அதுவும் தவிர அங்கே கிச்சன் உங்கள் வசம் இருந்தது. வீடும் உங்க வீடு என்ற நினைவும் இருந்தது.
ReplyDeleteஅம்பத்தூர் வீடும், அதன் வேப்பமரமும் இன்னமும் நினைவில். சில நாட்கள் முன்னால் கூட மத்யமர் குழுவில் அது பற்றி எழுதி இருந்தேன். இங்கே ஸ்ரீரங்கத்தில் கண்ணுக்கு நேரே தெரியும் பெருமாள் தான். மனம் கிடந்து தவிக்கும். இங்கேயும் மாமா கூட இருந்திருந்தால் அவ்வளவு கஷ்டம் தெரியாது. ஆமாம், சமையலறை இல்லாமல் ரொம்பக் கஷ்டமாத் தான் இருக்கு.
Deletehttps://sivamgss.blogspot.com/2017/06/blog-post_17.html// Ambattur house and neem tree
DeleteYou gave a comment also.
Deletehttps://sivamgss.blogspot.com/2006/11/home-sweet-home.html
Deleteபொதுவா மிடில் ஈஸ்ட்ல, எது உடைஞ்சுபோனாலும் உடனடியா ரொம்ப செலவில்லாமல் வாங்கிடலாம்.
ReplyDeleteமருத்துவர் விசிட் நன்று. அங்க கேண்டீன்ல இதெல்லாம் தர்றாங்களா? ஆச்சர்யம்
இதோடு மருத்துவரை மூன்று முறைகள் போய்ப் பார்த்தாச்சு. கண்ணில் வந்த கட்டிக்காக இரு முறை, ரத்த அழுத்த மாத்திரைக்கு ஒரு தரம், அப்புறமா நேத்திக்குப் போனது. இன்னும் 2 நாளில் மறுபடி சனிக்கிழமை போகணும்.
Deleteகல்ஃப்ல நம்ம ஊர் காய்கறிலாம் கிடைக்கும். இருந்தாலும் இப்போ பெங்களூர்ல நான் ஃப்ரெஷ்ஷா வாங்குவதுபோல இருக்காது.
ReplyDeleteதோசைக்கு மி.பொடி ஒத்துக்குதா?
இங்க, இந்திரா பிராண்டில், வித வித ரச பேஸ்ட் கிடைக்குது. வெந்நீர்ல கொதிக்கவச்சா சூப்பரா ரெடியாகிடும். மகளுக்கு அனுப்பிவைத்தேன். உங்களுக்கு அதெல்லாம் சரிப்பட்டுவருமா?
தோசைக்குக் காரமில்லாமல் சட்னி அரைக்கிறாள் மாட்டுப் பெண். அவள் சமையலும் காரமாக இருக்காது.
Deleteகாய்கறி எல்லாம் நல்லாவே இருக்கு. எல்லாமும் கிடைக்கிறது. போன புதுசில் ஒரே வெளிநாட்டுக்காய்களாகப் பையர் வாங்கிட்டு இருந்தார். அப்புறமா நான் வாழைக்காய், புடலை, அவரை, பாகல்காய்னு வாங்கச் சொன்னேன். அவரை தவிர்த்து மற்றவை வாங்குகிறார். வாழைக்காய் ஒன்று பண்ணினாலே எங்களுக்கு அதிகமா இருக்கு. அவ்வளவு பெரிய காய். முருங்கை கூட வாங்கி இருக்காங்க ஆனால் சரியாக வைக்காததால் காய்ஞ்சு இருக்கு. பண்ணினால் வாசனையும் இல்லை.
ReplyDeleteஇந்த ரசம் பேஸ்ட், வத்தக்குழம்பு பேஸ்ட் இப்போச் சாப்பிட முடியாது. அடுத்த மாசம் இந்தியா வரச்சே இதெல்லாம் வாங்கி எடுத்து வரணும்னு ஒரு எண்ணம். போகப் போகப் பார்க்கலாம்.
ReplyDelete