செப்டெம்பர் பதினொண்ணுக்குப் பின்னர் பல முறை எழுத நினைச்சு எழுதலை. மனசு பதியலை. நடுவில் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகள் தீர்ந்து போய் இங்குள்ள மருத்துவமனையின் மருத்துவரைப் பார்த்துச் சொல்லி மருந்து வாங்கி வரப் போகும்படி இருந்தது. என்னதான் இங்கே இருந்தாலும் மனமெல்லாம் ஸ்ரீரங்கத்தை விட்டு நகரவே இல்லை. அங்கேயே இருக்கு. சில சமயம் காலை சாப்பிடும்போது ரங்க்ஸ் நினைவு வந்துடும். ஒவ்வொரு விஷயத்தையும் அவரிடம் பகிர்ந்து சொல்லிட்டுத் தான் செய்வேன். அல்லது அவரிடம் கேட்டுப்பேன். இப்போவும் சில சமயம் ஏதானும் விஷயம்னால் உடனே அவர் வந்ததும் சொல்லணும் எனத் தோன்றுகிறது. பின்னர் தூக்கிவாரிப் போட்டுக்கொண்டு கடவுளே, அவர் எங்கே இருக்கார்னு நினைவில் வரும். எதையும் பகிர ஆளில்லையேனு மனசு கிடந்து தவிக்கும். வெங்கட்டின் அம்மா அவர் கணவர் இறந்து ஒரு வருஷத்துக்குள்ளாக அவரிடம் போயிடுவேன்னு சொன்னாங்களாம். அதே மாதிரிப் போயிட்டாங்க. ஒரு மாசம் ஆகி இருக்கும். எனக்கெல்லாம் அப்படிக் கிடைக்குமானு தெரியலை. கிடைச்சாலும் தெரியப் போறதில்லை. :(
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Wednesday, October 08, 2025
கூப்பாடு ஆன சாப்பாடு!
சாப்பாடு பல மாதங்களாகவே வேண்டாவெறுப்பாகத் தான் சாப்பிட்டு வருகிறேன். அங்கேயானும் கிரைண்டர் இருப்பதால் இட்லி, தோசைக்கு மாவு நானே அரைச்சுடுவேன். இங்கே மிக்சி தான். அதையும் ஸ்டபிலைசர் போட்டுட்டு அரைக்க வேண்டி இருக்கு. குளிர்சாதனப் பெட்டி, மிக்சி, ரைஸ் குக்கர் எல்லாமும் அம்பேரிக்காவின் மின் பயன்பாட்டுக்கு ஏற்றவகை என்பதால் இங்கே ஸ்டபிலைசர் போட்டுத் தான் அவற்றை இயக்கணும். அம்பேரிக்காவில் இதே மிக்சியில் நானே தனியாக அரைச்சிருக்கேன். ஆனால் இங்கே அரைக்க யோசனை. ஏதானும் பிரச்னையாயிடுத்துன்னா என்ன செய்யறது? ஏற்கெனவே இங்கே குளிர்சாதனப் பெட்டி வீணாகப் போய் கன்டென்சர்/கம்ப்ரெஸர்(?) எதுனு தெரியலை. மாத்தணும்னு சொல்லி அப்புறமா ஒண்ணுமே தெரியலை. ஆகவே கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கு. சப்பாத்தி மாவு சப்பாத்தி பண்ணினால் நல்லாவே இல்லை. கடிக்கக் கொஞ்சம் இல்லை, ரொம்பவே கஷ்டம். ஏற்கெனவே பற்களில் பிரச்னை. ஆகவே சப்பாத்தி பண்ணினால் சாப்பிட அரை மணிக்கும் மேல் ஆயிடும். :( சாதம் போதும்னு சொன்னாலும் பிள்ளை, மருமகள் கேட்பதில்லை. இதிலே அசிடிட்டி தொந்திரவு ரொம்பவே அதிகம் ஆகி இரவுத் தூக்கம் இல்லாமல் போனதில் நேற்று மருத்துவரைப் போய்ப் பார்த்தோம்.
ஏகப்பட்ட கேள்விகள், விசாரணைகள்! ஸ்ரீரங்கத்தில் கொடுத்திருக்கும் மருந்துகளில் அவருக்குத் திருப்தியே இல்லை. அதோடு ரத்த அழுத்தம் வேறே 103/54 என்றே காட்டியது. அவரோட பிபி மெஷினில் அவருக்கே சந்தேகம் வந்ததால் வேறே கொண்டு வரச் சொல்லி 2,3 முறை பார்த்தார். அதுக்கெல்லாம் பிபி அசரலை. விடாமல் 103/54 என்றே காட்டியது. உடனே பிபி மருந்தைப் பாதி மட்டும் எடுத்துக்கோ, 2,3 நாட்களுக்கு மாத்திரையே வேண்டாம்னு சொல்லிட்டு, அங்கே ரத்தச் சர்க்கரை பார்க்கவும் அதோடு கூட வயிற்றில் பாக்டீரியா இன்ஃபெக்ஷன் இருக்கானு பார்க்கவும் சேர்த்தே பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்து ரிப்போர்ட் வந்ததும் மறுபடி வரச் சொன்னார். அதுவரை அங்கேயே உட்காரச் சொல்லிட்டார். பரிசோதனைக் கூடத்தில் நாலைந்து பேர் காத்திருந்தார்கள். ஆகவே என்னைக் கூப்பிடவே ஐந்தே முக்கால் ஆச்சு. அவங்க ரத்தம் எடுக்கும்போது வலியே தெரியலையேனு நினைச்சால் இன்னிக்கு அந்த இடத்தில் நீலமாக ரத்தம் கட்டி இருக்கு. செவிலியரும் தமிழ். மருத்துவர் மலையாளம் என்றாலும் நல்லாத் தமிழிலேயே பேசினார்.
மருத்துவருக்கு என்னோட அனிமிக் பிரச்னை, விடமின் D குறைபாடு, ரத்த அழுத்தம், சர்க்கரை இதோடு காலில் ஆர்த்ரிடிஸ், வயிற்றில் லிவரில் பாதிப்பு, அசிடிட்டி எல்லாத்தையும் பார்த்ததும் ஒரே தலை சுற்றல். எப்படி இவங்க அனிமியா, விடமின் D குறைபாட்டுக்கெல்லாம் மருந்தே சாப்பிடாமல் இருக்காங்கனு ஆச்சரியம் வேறே. நல்லவேளையா லிவருக்கு ஸ்ரீரங்கம் மருத்துவர் மாத்திரைகள் 3 மாசத்துக்குக் கொடுத்திருக்கார். அது ஒண்ணுதான் பரவாயில்லை. மத்தபடி அங்கே நல்லாவே கவனிக்கலைனு இவரோட கருத்து. ரத்தப்பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்ததும் அங்கே உள்ள கான்டீனில் உட்கார்த்தி வைத்துவிட்டுப் பையருக்கு ஏதோ கேட்கப் போனார். அங்கே இட்லி, போளி, வடை போன்றவை கிடைப்பதாகப் போட்டிருந்தாங்க. பையர் வேண்டுமானு கேட்டார். தண்ணி கூட வேண்டாம்னு சொல்லிட்டேன். பின்னர் எனக்கு வீல் சேர் எடுத்துவரும் உதவியாளர் பரிசோதனைச் சாலையில் போய் ரிசல்ட் வந்துடுத்தானு கேட்டுட்டு வந்தார். ரிசல்ட் மருத்துவருக்கே ஆன்லைனில் அனுப்பிடறாங்க. அவர் பார்த்துத் தக்க மருந்துகளைக் கொடுக்கிறார். நமக்கு ரிப்போர்ட் கைக்கு வருவதில்லை. வேணும்னால் ஆன்லைனில் பார்த்துக்கலாம். அதுவும் மருத்துவர் பார்த்துச் சரியெனச் சொன்னதும். எனக்கு பாக்டீரியல் இன்ஃபெக்ஷன் இல்லைனு சொல்லிட்டார். மற்றபடி அசிடிடிக்கு மாத்திரை, சிரப் கொடுத்திருக்கார்.
சாப்பாடுதான் கூப்பாடாகி விட்டது. பருப்பு வகைகள், உ.கி. புளி முதலியன அறவே தவிர்க்கணும்னு சொல்லிட்டார். பையருக்கு அப்போவே கவலை. பின்னே எதைச் சாப்பிடுவதுனு. வீட்டுக்கு வந்ததும் நான் தக்காளியை சூப் மாதிரி வைச்சு மிளகு பொடி போட்டு அதை ரசத்துக்குப் பதிலாகப் பயன்படுத்திக்கிறேன்னு சொன்னேன். அதோடு மோர்ச்சாறு போன்றவையும் அவ்வப்போது பண்ணிக்கிறேன்னு சொன்னேன். காய்கறிகள் கொஞ்சமா சாம்பார்ப் பொடி போட்டு வதக்கியோ வேக வைச்சோ சாப்பிட்டுக்கலாம். பையர் நாளையிலே இருந்து உன்னோட சாப்பாட்டை நீயே சமைச்சுக்கோ. உனக்குத் தான் எப்படினு புரியும்னு சொல்லிட்டார். ஆகவே இன்னிக்கு நானே சமைத்துக் கொண்டேன். ராத்திரிக்கு மருமகள் தோசைக்கு அரைச்சு வைச்சிருக்கா. அதான் சாப்பிடணும்.
Subscribe to:
Post Comments (Atom)
//மனமெல்லாம் ஸ்ரீரங்கத்தைவிட்டு நகரலை.// (அதுக்கு முன்னால, அம்பத்தூரைவிட்டு நகராமல் இருந்தது என் நினைவுக்கு வருது). இருந்தாலும் சாம்பசிவம் மாமா ஸ்ரீரங்கத்திலும் கூடவே இருந்தாரே. அதுவும் தவிர அங்கே கிச்சன் உங்கள் வசம் இருந்தது. வீடும் உங்க வீடு என்ற நினைவும் இருந்தது.
ReplyDeleteஅம்பத்தூர் வீடும், அதன் வேப்பமரமும் இன்னமும் நினைவில். சில நாட்கள் முன்னால் கூட மத்யமர் குழுவில் அது பற்றி எழுதி இருந்தேன். இங்கே ஸ்ரீரங்கத்தில் கண்ணுக்கு நேரே தெரியும் பெருமாள் தான். மனம் கிடந்து தவிக்கும். இங்கேயும் மாமா கூட இருந்திருந்தால் அவ்வளவு கஷ்டம் தெரியாது. ஆமாம், சமையலறை இல்லாமல் ரொம்பக் கஷ்டமாத் தான் இருக்கு.
Deletehttps://sivamgss.blogspot.com/2017/06/blog-post_17.html// Ambattur house and neem tree
DeleteYou gave a comment also.
Deletehttps://sivamgss.blogspot.com/2006/11/home-sweet-home.html
Deleteமத்யமர் குழு என்றாலே அலர்ஜியாக இருக்கிறது!
Deleteமத்யமர் குழு ஆரம்பத்தில் இருந்து இருக்கேன். என்னோடு இருந்தவங்க பலரும் இப்போ மனஸ்தாபங்களால் விலகித் தனிக்குழு (சக்தியோ என்னவோ. கூப்பிட்டாங்க. போகலை)ஆரம்பிச்சிருக்காங்க . ஆனால் நான் மத்யமரில் பதிவெல்லாம் போடறதில்லை. அவ்வப்போது சிலர் எழுதும் பதிவுகள் படிச்சுக் கருத்துச் சொல்லுவதோடு சரி. எப்போவுமே ஒரு கோடு போட்டுட்டுத் தான் பழகுவேன். எந்தக்குழுவானாலும். இங்கேயும் அப்படியே. அதனால் பிரச்னை எல்லாம் என் வரை இல்லை. மத்யமரும் அடிக்கடி காணாமல் போகும். மீட்டுக் கொண்டு வருவாங்க.
Deleteபொதுவா மிடில் ஈஸ்ட்ல, எது உடைஞ்சுபோனாலும் உடனடியா ரொம்ப செலவில்லாமல் வாங்கிடலாம்.
ReplyDeleteமருத்துவர் விசிட் நன்று. அங்க கேண்டீன்ல இதெல்லாம் தர்றாங்களா? ஆச்சர்யம்
இதோடு மருத்துவரை மூன்று முறைகள் போய்ப் பார்த்தாச்சு. கண்ணில் வந்த கட்டிக்காக இரு முறை, ரத்த அழுத்த மாத்திரைக்கு ஒரு தரம், அப்புறமா நேத்திக்குப் போனது. இன்னும் 2 நாளில் மறுபடி சனிக்கிழமை போகணும்.
Deleteகல்ஃப்ல நம்ம ஊர் காய்கறிலாம் கிடைக்கும். இருந்தாலும் இப்போ பெங்களூர்ல நான் ஃப்ரெஷ்ஷா வாங்குவதுபோல இருக்காது.
ReplyDeleteதோசைக்கு மி.பொடி ஒத்துக்குதா?
இங்க, இந்திரா பிராண்டில், வித வித ரச பேஸ்ட் கிடைக்குது. வெந்நீர்ல கொதிக்கவச்சா சூப்பரா ரெடியாகிடும். மகளுக்கு அனுப்பிவைத்தேன். உங்களுக்கு அதெல்லாம் சரிப்பட்டுவருமா?
தோசைக்குக் காரமில்லாமல் சட்னி அரைக்கிறாள் மாட்டுப் பெண். அவள் சமையலும் காரமாக இருக்காது.
Deleteநன்றாக இருக்காது என்று சொல்வதை விட, 'என் சுவைக்கு, நான் பழகிய சுவைக்கு ஒத்துவரவில்லை 'என்று சொல்லலாம்!
Deleteஅவங்களுகு நல்லாவே தெரியும், எனக்குச் சட்னி எல்லாம் காரமே இல்லைனு. ஏன்னா மாமாவுக்குக் கொஞ்சம் கூட இறங்காது என்பதால் நான் தனியாகவே மாமாவுக்கும் எனக்கும் சட்னி அரைப்பேன். அவங்களுக்கு 3 பேருக்கும் மருமகள் அரைச்சுப்பா. 20 வருஷமாக அதான் பழக்கம். அம்பேரிக்காவிலும் சரி, இங்கேயும் சரி சமையல் மட்டும் நான் பண்ணிட்டு இருந்தப்போ எல்லாம் தனியாய்ப் பருப்புக் கரைய விட்டு, நாங்க சாப்பிட்டதும் அல்லது எங்களுக்கு எடுத்து வைச்சுட்டு வெந்த பருப்பை ரசம், சாம்பாரில் அவங்களுக்குக் கலந்து கொதிக்க வைச்சுடுவேன். காரம் குறைஞ்சுடும். எங்க பையர் என் சமையல் சாப்பிட்டுட்டு இருந்தவர் தானே. இப்போத் தான் அவ்வளவாச் சாப்பிடறதில்லை.
Deleteகிரைண்டர் என்பதால் அவளுக்குச் சரியா வரலை என்பதால் நான் தான் இட்லி, தோசைக்கு அரைப்பேன்.. இந்தியாவிலும் நான் அரைச்சு வைப்பது தான். அம்பேரிக்காவிலும் நான் தான் அரைச்சுட்டு இருந்தேன். இப்போ இங்கே மருமகளே அரைக்கிறாள். ஆனால் அந்த மாவில் இட்லி சரியா வரலையாம். என்றாலும் நான் அரைக்கலாமா என்பதுக்கு யோசனை. ஸ்டெபிலைசர் போட்டுட்டுத் தான் மிக்சி போட வேண்டி இருக்கு. ஆகவே நான் ஒதுங்கியே இருக்கேன். அநேகமா தோசை, சப்பாத்தி, சப்பாத்தி, தோசை தான். என்னிக்காவது கிச்சடி, அவல் உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவை உப்புமா. சில நாட்கள் பாஸ்டா/தா? இருக்கும். ரொம்பவே ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்வீட்டு. ஆனாலும் கொடுப்பாள் எனக்கும். அன்னிக்கு ராத்திரி அதான் உணவு. இப்போக் கொஞ்ச நாட்களாக வியாழக்கிழமைக்கு மத்தியானம் லஞ்சுக்குப் பாஸ்டா/தா பண்ணுகிறாள். குழந்தைக்கு அன்னிக்கு அரை நாள் தான் ஸ்கூல். ஸ்விம்மிங் போயிட்டுக் களைப்பாய் வரும்.
Deleteகாய்கறி எல்லாம் நல்லாவே இருக்கு. எல்லாமும் கிடைக்கிறது. போன புதுசில் ஒரே வெளிநாட்டுக்காய்களாகப் பையர் வாங்கிட்டு இருந்தார். அப்புறமா நான் வாழைக்காய், புடலை, அவரை, பாகல்காய்னு வாங்கச் சொன்னேன். அவரை தவிர்த்து மற்றவை வாங்குகிறார். வாழைக்காய் ஒன்று பண்ணினாலே எங்களுக்கு அதிகமா இருக்கு. அவ்வளவு பெரிய காய். முருங்கை கூட வாங்கி இருக்காங்க ஆனால் சரியாக வைக்காததால் காய்ஞ்சு இருக்கு. பண்ணினால் வாசனையும் இல்லை.
ReplyDeleteஅங்கு எல்லா காய்கறிகளையும் செயற்கை முறையில் செறிவூட்டி இருக்கிறார்கள் போலிருக்கிறது .ஆமாம், வாழக்காய் சரியான வாய்வு பிரச்சனை தருமே..
Deleteகாய்கறிகள், பழங்கள் எல்லாம் இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீரல்ங்கா போன்ற நாடுகளிலிருந்து வருவதாகச் சொல்கின்றனர்.
Deleteஇந்த ரசம் பேஸ்ட், வத்தக்குழம்பு பேஸ்ட் இப்போச் சாப்பிட முடியாது. அடுத்த மாசம் இந்தியா வரச்சே இதெல்லாம் வாங்கி எடுத்து வரணும்னு ஒரு எண்ணம். போகப் போகப் பார்க்கலாம்.
ReplyDeleteSo, அடுத்த மாதம் இந்தியா வரப்போகிறீர்கள் என்று தெரிகிறது.
DeleteYes
Deleteநானும் நீங்கள் நினைத்தது போல நினைத்து ஆதியிடம் புலம்பவும் செய்தேன்.
ReplyDeleteஆதி அப்படியெல்லாம் நினைக்காதீர்கள் என்றார்கள்.
நீங்களும் மனதை தளர விடாதீர்கள் , உடல் நலத்தை பார்த்து கொள்ளுங்கள் , விரைவில் நலம்பெற பிராத்திக்கிறேன்.
இன்னமும் மனது ஏத்துக்கலை கோமதி அரசு. ஒரு மாதிரித் தவிப்பாவே இருக்கு. ஏதோ விட்டுட்டு வந்தாப் போல
Deleteமன கஷ்டத்தோடு உடல் கஷ்டமும் சேர்ந்து கொண்டால் என்ன செய்வது? மன உளைச்சல் இருந்தாலே அசிடிடி அதிகமாகும். மாற்ற முடியாதவைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ReplyDeleteமுயற்சி செய்ய/ரேன் பானுமதி.
Deleteபானு அக்கா கருத்தையும், கோமதி அக்கா கருத்தையும் வழிமொழிகிறேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஉங்கள் பதிவை படிக்கையில் மனது வருத்தமடைகிறது. மன வருத்தத்தில் நீங்களும் பலதும் நினைக்கிறீர்கள். உடல்நிலை வேறு படுத்துவது ல், மனதும் சங்கடப்படுகிறது. மகன் வசிக்கும் இருப்பிடம் வசதிகள் குறைவாக இருந்தால், நீங்கள் மகளிடம் போய் மாறுதலுக்காக கொஞ்ச நாட்கள் தங்கி வரலாமே..! ஸ்ரீ ரங்கம் உங்களுக்கு பழகிய இடம் என்றாலும், தனியாக இருக்கையில், மாமாவின் நினைவுகள் அவ்வப்போது வரத்தானேச் செய்யும். அங்கிருந்தாலாவது, உங்கள் பேத்தியின் அருகாமை கொஞ்சம் மன ஆறுதலைத் தரும். தைரியமாக இருங்கள்.உடல்/ மன நிலைகள் விரைவில் நலம் பெற நானும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி. சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நினைப்புத் தாஅனே பிழைப்பைக் கெடுக்கிறது. கமலா ஹரிஹரன், , ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி. குழந்தை அவள் படிப்பில் மும்முரம். அதோடு நாங்க வீடியோவில் பார்க்கிறச்சே பேசினது கூட இப்போக் கிட்டே இருக்கிறச்சே பேச முடியலை. அம்பேரிக்காவுக்கு இப்போப் போக முடியாது. 2024 இல் முடிந்த எங்க அம்பேரிக்க விசாவை அப்போ மாமா படுக்கையில் இருந்ததால் இனிமேல் தேவையில்லைனு பிள்ளைகிட்டே சொல்லிப் புதுப்பிக்கவே இல்லை. இப்போ இங்கே வந்து முயற்சி செய்கிறார் பையர். பார்ப்போம். இப்போது சூழ்நிலையும் சரியா இல்லையே. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி.
Deleteஅது என்ன பிபி அளவு 103/ 54. சம்பந்தமில்லாத ரேஷியோவாக இருக்கிறது?!! அதுதான் டாக்டரும் குழம்பி போனார் போலும்.
ReplyDeleteமருமகள் உப்பு, உறைப்பு எல்லாமே சிட்டிகை தான் போடுகிறாள். அதனால் கூட பிபி ரொம்பவே கீழே இறங்கி இருக்கும்னு என்னோட எண்ணம். (உண்மையாகவே) ஆனால் பையரும் மருத்துவரைப் பார்க்க என்னோட வருவதால் அவருக்கு எதிரே மருமகள் சமையலைப் பத்தி ஏதும் சொல்லக் கூடாதுனு வாயே திறக்கிறதில்லை. வீட்டிலும் உப்பே சமயத்தில் ரசத்தில் இருக்காது என்றாலும் எதுவும் சொல்லாமல் சாப்பிட்டு எழுந்துடுவேன். மாங்காய், காரட், இஞ்சி ஊறுகாய் போட்டு வைச்சிருக்கேன். அதைத் தொட்டுண்டு ரசம் சாதம் சாப்பிடுவேன். சாப்பிடுவதே ரசமும் மோரும் தான்.
Deleteசப்பாத்தியை கடிக்க முடியாவிட்டால் சூடாக பால் விட்டு சாப்பிடலாம். நான் பால் விட்டு, சர்க்கரை விட்டு சாப்பிடுவேன். உங்களுக்கு சர்க்கரை இருப்பதால் சர்க்கரை வேண்டாம். சூடாக பால் மட்டும் விட்டு சாப்பிடலாம். இப்போது எனக்குமே சர்க்கரை அளவு அதிகரித்திருக்கிறது!!
ReplyDeleteசப்பாத்திக்கு விதம் விதமாக் கூட்டுகள் பண்ணிச் சாப்பிட்டுட்டு இங்கே ப்ளான்டாக ஏதோ ஒரு கூட்டு என்று சாப்பிடும்போது நம நாலு முழ நீள நாக்கு ஏத்துக்கறதில்லை. அதோடு சப்பாத்தி மொறுமொறு எனவும் இருக்கு. ஒரு பக்கம் கடைவாய்ப் பல்லே கிடையாது. இருக்கும் ஒரு பக்கத்து நாலு கடைவாய்ப்பல்லில் எதைத் தான் கடிக்கிறது? பல் கூச்சம், வலினு வருது. :)))))
DeleteTake care of your sugar problem. Be careful. I got sugar after completing 65 years. very late. After Kunjulu's birth
Deleteஇப்போ எனக்கு சர்க்கரையும் குறைந்த அளவு, பிபியும் குறைந்த அளவு. சர்க்கரை க்ளூகோஸ் 96 தான் இருக்கு. பிபி நர்ஸ் பார்த்தப்போ 124/65 என்றும் அரை மணி கழிச்சு டாக்டர் பார்த்தப்போ 112/56 ஆகவும் இருக்கு. லோ ஷுகர் ஆகக் கூடாதுனு டாக்டர் சொல்றார். பிபியும் குறைந்து ஷுகரும் குறைஞ்சால் மயக்கம், நினைவு தப்பிப் போகுதல், குளிர் அல்லது அதீத வியர்வைனு இருக்கும்னு சொல்றார்.
Deleteஇந்தியாவிலும், அதாவது சென்னையிலுமே, பரிசோதனை முடிவுகள் ஆன்லைனில் டாக்டரை சென்று அடைந்து விடுகின்றன. அவர் பார்த்து விடுகிறார். தேவைப்பட்டால் நமக்கு அச்சில் ரிப்போர்ட் கொடுக்கிறார்கள். இது நீண்ட காலத்திற்கு முன்பே வழக்கத்திற்கு வந்துவிட்டது .தற்சமயம் அரசு மருத்துவமனைகளிலும் இது செயல்படுத்தப்படுகிறது!
ReplyDeleteWe used to get mama's reports online. But ask for hard copy also. But they won't go to the doctors.
Deleteலிவர் பிரச்சனைக்கு என்ன மாத்திரை கொடுக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்!! எனக்கு fatty லிவர் இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.
ReplyDeleteUdiliv-150mg
Deleteஓ அக்கா இப்பதிவு வந்து ஒரு வாரம் ஆகிடுச்சு போல. சொல்லப் போனா இங்க வந்து பார்ப்பேன் பதிவு வந்திருக்கான்னு அது முந்தைய பதிவைத்தான் காட்டியதால் அப்புறம் நானும் இங்க பார்க்காம விட்ட்டுவிட்டேன். இன்று பார்த்தால் வந்திருப்பது தெரிந்தது.
ReplyDeleteஅக்கா லிவர் பிரச்சனைக்குச் சில இயற்கை மருந்துகள் வேலை செய்கிறது என்று சொல்றாங்களே. அதாவது fatty liver பிரச்சனை என்றால்.
சப்பாத்தியை தால்/கூட்டில் ஊற வைத்துச் சாப்பிடமுடியலியோ?
கீதா
பிபி அளவு வித்தியாசமாக இருக்கிறதே அக்கா.
ReplyDeleteஇங்கும் வீட்டில் உப்பு காரம் எல்லாம் கம்மிதான். புளிப்பும். ஒவ்வொரு முறையும் மருத்துவர் உப்பு கம்மியாகத்தானே எடுத்துக்கறீங்க என்று கேட்கிறார்!!!!!
பிபி இருக்கறவங்க ஒரு நாளைக்கு மொத்தமாகவே 1500 mg தான் எடுத்துக்கணுமாம் அதாவது 1 டீஸ்பூனுக்கும் குறைவாக.
கீதா
மனசு சரியில்லைனா, அசிடிட்டி வரும் அக்கா.
ReplyDeleteஎனவே, உங்கள் நிலை புரிகிறது, மனதை திடபடுத்திக் கொள்ளுங்கள் மன்அம் சோர்ந்தால் உடலும் சோர்ந்துவிடும்.
கீதா