அடுத்து என்ன என்பது புரியலை. ஏற்கெனவே முன்னர் நான் கத்தார், தோஹா வந்த ஓரிரு மாதங்களிலேயே எங்க குடியிருப்புக்கு அருகேயே ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. . இப்போவோ வேறே மாதிரி நிலைமை. நேற்றுக் காலை எழுந்ததுமே மொபைலில் புதுசாக ஏதேனும் செய்தி வந்திருக்கானு பார்த்தப்போத் தான் யுத்தம் ஆரம்பித்திருப்பது தெரிய வந்தது. பின்னர் காலையிலிருந்து அடுத்தடுத்து அவசர எச்சரிக்கைச் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. நேற்று சனிக்கிழமை வாரக் கடைசி விடுமுறை நாள் என்பதால் எல்லோருமே வீட்டில் தான். என்றாலும் கவலையும் பயமும் உலுக்கத் தான் செய்தது. இதற்கு முன்னால் இந்தியாவில் ஜாம்நகரில் கணவர் வேலை மாற்றத்தில் சென்றப்போ நாங்களும் அங்கே இருந்தோம். சில/பல கலவரங்கள், ஏர்பேஸ் தாக்குதல் என அப்போவும் கொஞ்சம் அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. நேற்று அடுத்தடுத்து நடந்த ஏவுகணைத் தாக்குதல் இரவு பத்துமணி வரை நீடித்தது. பின்னர் அமைதி. மௌனம் . காலை எழுந்து பார்த்தால் நிலைமை கொஞ்சம் மாறி இருப்பதாகச் செய்தி. என்றாலும் இன்னமும் கவலையோ பயமோ எச்சரிக்கை நிலைமையோ மாறவில்லை எனத் தோன்றுகிறது. இறைவனைப் பிரார்த்திப்பதை விட வேறே வழி இல்லை. அனைவரும் பயம் இன்றி அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்ளுவோம்.
Still under emergency. :( Praying
ReplyDeleteகவலைப்பட ஒன்றும் இல்லை என்றே நான் நம்புகிறேன் கீசா மேடம்.
ReplyDeleteவிமானங்கள் கேன்சல் ஆகின்றன. ஏர்போர்ட்கள் செயல்படவில்லை. இருந்தாலும் பயப்பட ஒன்றும் இல்லை என்பது என் நம்பிக்கை.
அமெரிக்காவை எதிர்த்து யாரும் ஒன்றும் செய்ய இயலாது, அவர்களின் இராணுவ டெக்னிகல் பலத்தால். அவங்க ரொம்பவே முன்னெச்சரிக்கையானவங்க, நிறைய அனுபவம் கொண்டவர்கள்.
நெல்லை, அமெரிக்காவை எதிர்த்து ஒன்னும் செய்ய முடியாதுன்றது வேறு. அவங்களுக்கும், இவங்களுக்கும் தானே சண்டையே இப்ப. என்னதான் டெக்னிக்கல் இராணுவ பலம் இருந்தாலும் பழிவாங்கல் அது இதுன்னு மாத்தி மாத்தி அடிச்சுக்கும் போது, அதில் பாதிப்பு அடையறவங்க அப்பாவி ஜனங்கதானே. இப்ப துபாய், அபுதாபி வரை வந்தாச்சு.
Deleteகீதா
கீதா
நான் நம்பறேன் கீசா மேடம்... எல்லாம் விரைவில் செட்டிலாகிவிடும்
Deleteஅக்கா, நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறது. காரணங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறேன் நெட்டில்.
ReplyDeleteஎதுவும் அசம்பாவிதம் நடக்காது என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை அக்கா பிரார்த்திப்போம்.
கீதா
கவலைப்படாதீர்கள். ஆபத்து விலகிக் கொண்டிருக்கிறியாது என்று தெரிகிறது. ஆசிப் மீரான் பேசிய காணொளி உங்களுக்கும் அனுப்பியிருக்கிறேன். நெல்லையும் சொல்லி இருக்கிறார். கடவுள் இருக்கிறார். அமைதி திரும்ப பிரார்த்திப்போம்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவை படிக்கவே மனது சங்கடமாக இருக்கிறது. உங்கள்இப்போது அங்கு நிலைமை எப்படியுள்ளது.? சுமூகமாகி விட்டதா? கவலைப்படாமல் இருங்கள். எலலா பிரச்சனைகளும் சரியாகி விடுமெனதான் எல்லோரும் சொல்கிறார்கள். என்னவோ நாட்டு குழப்பங்களுக்குள் நாம்தான் முதலில் சிக்கிக் கொள்கிறோம். தைரியமாக இருங்கள். உங்கள் கூடவே மகன் மருமகள் இருக்கிறார்கள் என்பது சற்று ஆறுதல் தரும் விஷயம். இறைவன் நல்லதையே நடத்துவான். நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Thanks to one and all.
ReplyDelete