என்ன நடந்தாலும் யார் என்ன செய்ய முடியும்? நேற்றிரவு, (இன்றைய அதிகாலை 1.30 இல் இருந்து 2.00 மணிக்குள்ளாக மறுபடி செக்யூரிடி எச்சரிக்கை மணி. பின்னர் விடிகாலை 3.30 / 4.00 மணி அளவில் எல்லாம் சரியாகி விட்டது எனச் செய்தி வந்தது. இப்போ இது வரை ஒண்ணும் இல்லை. ஆனாலும் ஒரு பக்கம் பேச்சு வார்த்தை எனச் செய்திகள், இன்னொரு பக்கம் விட்டேனா பார் என்னும் செய்திகள், மொத்தத்தில் குழப்பமாகவும் கவலையாகவும், பயமாகவும் இருக்கு. பயணம் செய்வதும் குறிப்பா விமானப் பயணம் செய்வதும் இப்போதைய நிலையில் ஆபத்தானதே. என்னவோ பார்ப்போம், என்ன நடக்கும் எனப் புரியவில்லை. என்னோட கவலை எல்லாம் முக்கியமாக இது நீட்டித்துக் கொண்டே இருக்கும் எனவும் செப்டெம்பர் தாண்டும் எனவும் சொல்கிறார்கள். ஜூன் மாதம் மாமாவின் ஆப்தீகம் வருது. அதுக்கு இந்தியா வர முடியுமா என்ற கவலை. பையர் போயிடலாம், அதுக்குள்ளே முடிஞ்சுடும் என்கிறார். பார்க்கலாம். எல்லாம் கடவுள் விட்ட வழி. நேற்றுச் சாயங்காலம் ஆறரை மணி அளவில் பையர் முக்கியமான பொருட்கள் வாங்கச் சென்றிருந்தார். அப்போது பல ட்ரோன்கள் வருவதும் போவதுமாக இருந்தன என்றார். கடைகளில் கூட்டம் அதிகமில்லை என்றாலும் ஓரளவு மக்கள் காணப்பட்டனர் என்றும் சொன்னார்.
No comments:
Post a Comment