பாரதியார் எழுதிய இந்தக் கவிதை தமிழகத்தின் இப்போதைய நிலைமைக்குப் பொருந்தி இருக்கா? கேள்விக்குறியே? அநேகமாக இன்றைய ஜென் ஜி எனப்படும் இளைய சமுதாயம் பாரதியைப் பற்றி அறிந்திருக்கவே நியாயம் இல்லை. பாரதியா அது யாருனு கேட்பாங்க. பாரதி தன் கவிதையில் தமிழ்நாடு கல்வியில் சிறந்தது எனக் கம்பரையும் இளங்கோவையும் மேற்கோள் காட்டுகிறார். ஆனால் அவர்களை இந்த இளைஞர்கள், இளம்பெண்கள் படித்திருப்பார்களா என்பதே சந்தேகம். இன்றைய இளம் தலைமுறைக்குக் கம்பனோ, இளங்கோவோ,, தமிழ் வளர்த்த புலவர்கள் பற்றியோ எதுவும் தெரியாது. திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் பற்றியோ சுந்தரர் பற்றியோ அறிய மாட்டார்கள். ஆழ்வார்கள் குறித்தோ ரங்கனுக்காக உருகிய கோதை நாச்சியார் பற்றியோ இறைவனுக்கே பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போதைய இளைஞர்கள் தமிழ் பேசவும் எழுதியதைப் படிக்கவும் திக்கித் திண்டாடித் தடுமாற்றத்துடன் படிக்கிறார்கள். இத்தனைக்கும் தமிழ் தான் தமிழக் மாணவர்கள் கற்க வேண்டும் என முனைப்புடன் இருந்தஇருக்கும்/ ஆட்சியாளர்கள் காலத்தில் வளர்ந்தவர்கள். வளர்பவர்கள். ஆனாலும் தமிழ் தடங்கல் தான்.வேற்று மொழி நுழைந்தால் தமிழ் அழிந்துவிடும் எனச் சொல்பவர்கள் இருக்கையிலேயே தமிழுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இனி ஒரு பாரதி வந்து தமிழை வளர்த்தால் தான் உண்டு. அதுக்காகவாவது மீண்டு வா பாரதி!
இப்போதைய அமைச்சர்கள் உட்பட முன்னாள் கழக வி ஐ பிக்கள் வரை எத்தனை பேர் தமிழை சரியாக பேசுகிறார்கள்? அப்படிபேசாதது ஏதோ பெரிய பெருமை என்றல்லவா நினைக்கிறார்கள்.. சட்டசபையிலேயே தப்பும் தவமாய் தமிழ் பேசிக்கொண்டு... கொடுமைடா சாமி.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம். பாரதியை இப்போதைய அரசு கண்டு கொள்ளவே இல்லை. இதே கால்டுவெல் என்றால் விழா எடுத்திருப்பாங்களா இருக்கும். :(
Deleteஇப்போதைய அமைச்சர்கள் உட்பட முன்னாள் கழக வி ஐ பிக்கள் வரை எத்தனை பேர் தமிழை சரியாக பேசுகிறார்கள்? அப்படிபேசாதது ஏதோ பெரிய பெருமை என்றல்லவா நினைக்கிறார்கள்.. சட்டசபையிலேயே தப்பும் தவமாய் தமிழ் பேசிக்கொண்டு... கொடுமைடா சாமி.
ReplyDeleteபாரதி வந்தால் கூட இன்றைய கலக கழக காரர்களால் மானபங்கபப்டுத்தப்பபடுவார். அவர் நேர்மை சந்தேகிக்கபப்டும். அவர் ஜாதி விமர்சிக்கப்படும். தொலைக்காட்சி விவாதங்களில் மாற்றி மாற்றி அவரை அவமானப்படுத்துவார்கள்..
ReplyDeleteஉண்மை தான். இவங்க கௌரவிக்கலைனா பாரதியின் பெருமை ஒண்ணும் குறையப் போவதில்லை. தமிழ்த்தாத்தாவையும் மறந்துட்டாங்க. உ.வே.சாமிநாத ஐயர் என்பதற்கு உ.வே.சாமிநாதன் என்று வேறே சொல்லுகின்றனர். அதே ஜி.டி.நாயுடுவை நாயுடு என்றே போடுகிறார்கள். :(
Deleteஇன்றைய தேதியில் பிறந்ததால்தான் என் அண்ணனுக்கு பாரதி என்று பெயர்!
ReplyDeleteரெண்டு பேருமே சொல்லி இருக்கீங்க.
Deleteதமிழக அரசோ, ஊடகங்களோ எந்த அளவு இன்று பாரதியை நினைவுகூர்ந்தார்? இதுவே கலகத்தலைவர்கள் என்றால் மாலை போட்டு mike பிடித்து உளறி என்று ஷோ காட்டி இருப்பார்கள்.
ReplyDeleteஉண்மை. மெல்ல மெல்ல மறக்கடிச்சுடுவாங்க. அதுவும் இப்போதைய அரசு. :(
DeleteToday is Kutti Kunjulu's birthday also. completing 10 years.
ReplyDeleteஆஹா.. கு. கு வின் பிறந்த நாளுக்கு எங்கள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
Deleteபத்து வயது ஆகி விட்டதா? நீங்கள் வேறு குட்டி குஞ்சுலு என்றே சொல்கிரீர்களா? இன்னும் மூணு அல்லது நாலு வயதுதான் ஆகிறது என்று எண்ணம். குழந்தைக்கு ஆசிகள்! எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன்.
Deleteநீங்களாவது பாரதியை நினைவுகூர்கிறேர்களே. இப்போது நிறைய பேர் சமஸ்கிருதம் பயில்வது போல தமிழும் கற்கும் காலம் வரும்.
Deleteநான் இந்த மாதக் கடைசியில்தான் இந்தியா திரும்புகிறேன். நீங்கள் எ.பி.யில் கேட்டிருந்தீர்கள், நான் உங்களுக்கு வாட்ஸாப்பில் பதில் அனுப்பியிருந்தேன். நீங்கள் பார்க்கவில்லை.
Deleteநன்றி ஸ்ரீராம். நேற்று அக்கம்பக்கம் இருக்கும் சீனர்களின் குழந்தைகள், கொரியக்குழந்தைகள் ஆகியோருடன் பிறந்த நாள் கொண்டாடியது கு.கு. அதுக்கு ரொம்பப் பெருமை, பத்து வயசு ஆகிடுச்சுனு. :)
Deleteவாங்க பானுமதி, அது என்னிக்குமே குட்டிக் குஞ்சுலு தான் எங்களுக்கெல்லாம்.
இப்போ நானும் சம்ஸ்கிருதம் படிக்கிறேன். தமிழும் படிக்க ஆரம்ப காலத்தில் பதினைந்து வயதில் ரொம்ப முயற்சி செய்தேன். மதுரை மீனாக்ஷி கோயில் ஆடி வீதியில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்படும் பள்ளி இருக்கு. திருப்புகழ் கழகமெல்லாமும் அங்கே தான் பக்கத்தில் பக்கத்தில் இருக்கும். அங்கே போய் முயற்சி செய்தேன். அது மிகவும் ஏழை மாணவ, மாணவியருக்காக இலவசமாகச் சொல்லிக் கொடுக்கும் பள்ளியைச் சேர்ந்ததாம். என்னைச் சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. :(
நன்றி ஸ்ரீராம். நேற்று அக்கம்பக்கம் இருக்கும் சீனர்களின் குழந்தைகள், கொரியக்குழந்தைகள் ஆகியோருடன் பிறந்த நாள் கொண்டாடியது கு.கு. அதுக்கு ரொம்பப் பெருமை, பத்து வயசு ஆகிடுச்சுனு. :)
Deleteவாங்க பானுமதி, அது என்னிக்குமே குட்டிக் குஞ்சுலு தான் எங்களுக்கெல்லாம்.
இப்போ நானும் சம்ஸ்கிருதம் படிக்கிறேன். தமிழும் படிக்க ஆரம்ப காலத்தில் பதினைந்து வயதில் ரொம்ப முயற்சி செய்தேன். மதுரை மீனாக்ஷி கோயில் ஆடி வீதியில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்படும் பள்ளி இருக்கு. திருப்புகழ் கழகமெல்லாமும் அங்கே தான் பக்கத்தில் பக்கத்தில் இருக்கும். அங்கே போய் முயற்சி செய்தேன். அது மிகவும் ஏழை மாணவ, மாணவியருக்காக இலவசமாகச் சொல்லிக் கொடுக்கும் பள்ளியைச் சேர்ந்ததாம். என்னைச் சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. :(
உங்கள் வாட்சப் செய்தி எனக்கு வரலை பானுமதி. ஒரு வேளை இன்னொரு நம்பரில் வந்திருக்கோனு பார்க்கிறேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. தாங்கள் இன்றைய தினத்தில் பாரதியை நினைவாக நினைவு கூர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி. பாரதியாரின் இந்த கவிதை அருமை. நல்ல பொருளுள்ள பாடல்,
நீங்கள் பதிவில் சொல்வதெல்லாம் உண்மையான பேச்சுக்கள். பள்ளிகளிலும், இளைய தலைமுறையினரிடமும் தமிழின் பெருமை குறைந்து வருகிறது. அதற்காகவாவது மறுபடி பாரதி மீண்டு வர வேண்டும். அவர் திரும்பி வருவார் என நம்பிக்கை கொண்டு நாம் அவர் நினைவை என்றும் தவறாது போற்றி மகிழ்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, விரிவான கருத்துரைக்கு நன்றி. இப்போனு இல்லை எண்பதுகளில் நான் சென்னை அம்பத்தூரில் இருந்தப்போ அக்கம்பக்கம் உள்ள குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். அப்போவே தமிழ் தடுமாற்றம் தான். கவிதைகள்னு பெயரிலே சினிமாக் கவிஞர்களின் கவிதைகளெல்லாம் இடம் பெற்றிருக்கும். திராவிடத் தலைவர்களின் வாழ்க்கைச் சரித்திரம் தான் படிச்சாகணும். :(ராமாயணமோ, மஹாபாரதமோ, ஔவையின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் இவை எல்லாம் பாடத்திலே இல்லவே இல்லை. அவ்வளவு ஏன் ஔவை என்னும் ஒரு புலவர் இருந்தது கூட இப்போதைய குழந்தைகளைக் கேட்டால் தெரியாது.
Delete