ஒரு நல்ல ஹிந்திப்படம் பார்த்தேன். ஒரு மாதத்துக்கும் மேலாக அது அமேசான் பிரைமில் இருந்தாலும் நேத்திக்குத் தான் திடீர்னு அதைப்பார்க்கணும்னு நினைச்சேன். முதலில் ஏதோ மாநில கவர்னர் பத்தின கதைனு தான் நினைச்சேன். ஆனால் இல்லை. இது இந்தியாவின் பொருளாதார வரலாறு. அதுக்காக அறுவை எல்லாம் போடவில்லை. த்ரில்லிங்காக எடுத்திருக்காங்க. இது 1990 ஆம் ஆண்டில் திரு சந்திரசேகர் பிரதமராக இருந்தப்போ, அதாவது வி.பி. சிங்கிற்குப் பின்னர் கொஞ்ச காலமே சந்திரசேகர் பிரதமராக இருந்தார். யஷ்வந்த் சின்கா தான் அப்போ நிதி மந்திரினு நினைவு. அந்தக் கால கட்டத்தில் இந்தியாவில் தோன்றிய நிதி நெருக்கடியையும் அதை ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த திரு வெங்கிட ரமணன் அந்த நிதி நெருக்கடியை எப்படிச் சமாளித்தார் என்பதையும் திரைப்படமாக எடுத்திருக்காங்க.
ஓர் தமிழரான வெங்கிடரமணன் இதிலும் கிட்டத்தட்ட அந்தப் பெயரிலேயே ராமன் என்று அழைக்கப்படுகிறார். ரிசர்வ் வங்கி கவர்னர் ராமனாக நடித்திருப்பவர் மனோஜ் வாஜ்பாய். இவர் ஆரம்ப காலத்துப் படங்கள் அதிகம் பார்த்திருக்கேன். இப்போதைய படங்கள் பார்க்கவில்லை. இதில் சிறப்பாகச் செய்திருக்கிறார். முதலில் தன்னை விட சீனியரான டெபுடி கவர்னர் சி.ஆர். இருக்கையில் தன்னை கவர்னராகப் போட்டதையே ஏற்க முடியாமல் இருந்தாலும் பின்னர் மெல்ல மெல்ல சமாளித்துக் கொள்கிறார். ஆரம்பத்தில் அலுவலக ஊழியர்களின் ஒத்துழைப்புக் கிடைக்காமல் இருந்தாலும் மெல்ல மெல்ல அவர்கள் அபிமானத்தைப் பெறுகிறார். இவர் நிதி நெருக்கடியைச் சமாளிக்கச் சொல்லும் ஒவ்வொரு யோசனையும் தோற்றுப் போகக் கடைசியில் அரசியல் நெருக்கடி காரணமாகச் சந்திரசேகர் காபந்து சர்க்காரின் பிரதமராக இருக்கையில் தான் இந்தத் தங்கத்தை வைத்துப் பணம் வாங்கும் சூழ்நிலையை ராமன் அவர்கள் நிதி மந்திரியிடமும், பின்னர் பிரதமரிடமும் சொல்ல இருவரும் கடுமையாக ஆக்ஷேபிக்கின்றனர். ஆனால் இப்போது ராமனின் தேசத்தின் மீதுள்ள பற்றும் எப்படியாயினும் தேசத்தைக் காக்க வேண்டும் என்று அவர் முழு மூச்சாக இயங்குவதையும் பார்த்த சி.ஆர். டெபுடி கவர்னர் அவருடன் ஒத்துழைத்துப் பிடிவாதமாக நிதி மந்திரியிடமும், பிரதமரிடமும் தங்கத்தை வைக்க ஒப்புதல் பெற்று விடுகிறார்.
அலுவலகச் சூழ்நிலையும் திருப்தியாக இல்லாத சமயத்தில் ஒவ்வொரு பிரச்னையையும் நிதானமாகக் கையாண்டு நாட்டின் நிதி நெருக்கடியைச் சமாளிக்கத் தங்கத்தை வைக்க வேண்டும் என்னும் முடிவுக்குப் பிரதமரை ஒப்புக்கொள்ள வைக்கிறார். அந்தத் தங்கத்தை விமானம் மூலம் குறிப்பிட்ட நாடுகளுக்குக் கொண்டு சேர்க்க அவர் படும் பாடு. கடைசி நிமிடத்தில் இன்ஷூரன்ஸ் பிரச்னை பண்ண அதுவும் பிரச்னை தீர்ந்து போய்த் தங்கம் அனைத்தும் மூன்று ராணுவ வான்களில் ரகசியமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அதை சாதாரணமான வான் எனக் காட்டிக் கொண்டு எந்தவிதமான அடையாளங்களும் இல்லாமல் எடுத்துப் போனாலும் ஓர் பத்திரிகை நிருபியான அதிதி வர்மா என்னும் பெண் அதைப் பார்த்து விடுகிறாள்.
இதுக்கு நடுவில் 3 வான்களில் மற்ற இரண்டும் விமானம் ஏறப் போய்ச் சேர்ந்து விட மூணாவது வான் மட்டும் விபத்தில் மாட்டிக் கொள்ள விபத்தில் மாட்டினவன் பேட்டை தாதா. மூணாவது வானுக்கு என்ன ஆச்சுனு பார்க்க வந்த மனோஜ் வாஜ்பாய் அந்த மனிதனைச் சமாளித்து மூணாவது வானையும் விமான நிலையம் அனுப்பி வைக்கும் வரை அனைவருக்கும் திக் திக் திக் தான்.அவன் தன்னுடைய அரசியல் செல்வாக்கை வைத்து வானுக்குப் பாதுகாப்பாக வந்த ரிசர்வ் வங்கி அலுவலரின் மேல் சந்தேகப்பட்டு வானைச் சோதனை போட வேண்டும் என்று தகராறு செய்து போலீசை அழைக்கச் சரியாக அந்த நேரத்தில் வானைத் தேடிக் கொண்டு வரும் ராமன் விஷயம் புரிந்து தாதாவைச் சமாளித்து வானை விமான நிலையம் கொண்டு செல்ல உதவுகிறார். அந்தச் சமயம் பார்த்து பத்திரிகை நிருபியான அதிதி வர்மா அவரிடம் தங்கத்தை அடகு வைப்பது குறித்து ஆக்ரோஷமாகச் சண்டை போட அவரோ தன் நிலையை விளக்குகிறார். அவர் சொல்வதைக் கேட்ட அதிதிக்கும் மனம் மாறி இந்த விஷயத்தை ஸ்கூப் செய்தியாகப் பத்திரிகைக்கு அனுப்பாமல் காத்திருந்து காரியம் முடிந்ததுமே பத்திரிகையில் வெளியிட வைக்கிறாள்.
ராமனின் மகள் ஐஏஎஸ். பாஸ் செய்த தகவல் வர அங்கே நினைத்தால் எல்லோரிடமும் கடன் வாங்கிப் பிழைக்கும் ப்யூன் படில் ஸ்வீட்டை எடுத்துக் கொண்டு வந்து தன் மகள் பார்தியும் ஐஏஎஸ் பாஸ் பண்ணி இருப்பதாகச் சொல்ல ஊழியர்கள் அனைவரிடமும் ஒரே உணர்ச்சி வெள்ளம்.ப்யூன் ஆன படில் ஸ்வீட் எடுத்து வந்து தன் மகள் ஐஏஎஸ் பாஸ் பண்ணி இருப்பதாகச் சொல்ல அனைவரும் கண்ணீரோடு ஆசீர்வாதம் பண்ணப் பின்னர் தங்கம் அனைத்தும் குறிப்பிட்ட இடங்களுக்குப் போய்ச் சேர்ந்து ரிசர்வ் வங்கிக்குப் பணமும் வந்து சேருகிறது. நடுவில் ராஜிவ் காந்தி கொலை பத்தி எல்லாம் வந்தாலும் விரிவாக எல்லாம் சொல்லலை. பின்னர் நர்சிம்ம ராவ் பிரதமராக ஆவதும் மன்மோகன் சிங் நிதி மந்திரி ஆனதும் அவர் மூலம் இந்தியா திறந்த பொருளாதாரத்துக்குள் நுழைந்ததும் காட்டப்படுவதோடு இப்போது இந்தியா பொருளாதாரத்தில் வலிமை அடைந்திருப்பதையும் சிம்போலிக்காகக் காட்டுவதோடு படம் முடிகிறது.
இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும்னு எல்லாம் சொல்ல முடியாது. எந்தவிதமானக் காதல் காட்சிகளோ, அல்லது சண்டைக் காட்சிகளோ இல்லை. பாடல் கூட ஒரே ஒரு இடத்தில் பின்னணியில் வருகிறது. உண்மையில் அந்தக் கால கட்டத்தில் இந்திய அரசாங்கத்தில் என்ன நடந்திருக்குமோ அதை மட்டுமே எடுத்துப் போட்டிருக்கிறார்கள். உண்மைச் சம்பவங்கள் என்பதால் அதிகமாகக் கட்டுக்கதையோ மிகைப்படுத்தலோ இல்லை. எல்லோரும் நிஜமான உணர்வுகளோடு வருகிறர்கள். நடிச்சுட்டு இல்லை அந்த அந்தப் பாத்திரமாக வாழ்ந்துட்டுப் போயிருக்கிறார்கள்.
நான் மனோஜ் பாஜ்பாயின் (வாஜ்பாய் அல்ல) ரசிகன். அவர் நடித்த Fபேமிலி மேன் சீரிஸ் தொடங்கி அப்புறம் அவர் நடித்த சைலன்ஸ் உட்பட நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன். தமிழில் சூர்யா நடித்த ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
ReplyDeleteம்ம்ம் நானு பாஜ்பாய் என்று தான் போட்டேன். ஆனால் அது என்னமோ பக்கத்தில் உள்ள வி எழுத்துத் தான் வந்தது. ஃபாமிலி மேன் சீரியல் இப்போக் கூடப் பையர் பார்த்துட்டு இருக்கார். புதுசா, இல்லை நீங்க சொல்வது தானானு தெரியலை. சைலன்ஸ் பார்த்த நினைவு.
Deleteஅமேசான் பிரைமிலா? பார்க்கிறேன். என்னதான் சொன்னாலும் கொஞ்சம் பொறுமை வேண்டும் என்று தோன்றுகிறது. நான் உங்கலோனுக்கு ஹிந்தி தெரியும்தானே என்று கேட்டு ஏதோ ஒன்று சிபாரிசு செய்திருந்தேன். எது என்று நினைவில்லை. பார்த்தீர்களோ? அது என்ன என்று நினைவில் இருக்கிறதா?
ReplyDeleteஅப்படியா? கேட்டிருந்தீங்களா? நினைவில் இல்லை. பொறுமை எல்லாம் வேண்டாம் என்றாலும் எல்லோருக்கும் ப்பிடிக்கும்னு சொல்ல முடியாது. கனமான கரு. முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது. அரசு சார்ந்தது.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஇது ஹிந்தியில்தான் கிடைக்கிறதா? தமிழ் உண்டா?
ReplyDeleteNo Tamil
Deleteபியூன் மகன் ஐ ஏ எஸ் பாஸ் செய்வது, விமானம் தாதாவிடம் மாட்டுவது, பெண் நிருபர் எல்லாம் படத்துக்கான கற்பனையோ...
ReplyDeleteகீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தைச் சொல்லவும், அந்தக் கஷ்டமான காலத்தில் அவங்க படும் கஷ்டத்தைச் சொல்லவும் தான் புகுத்தி இருக்கணும். தாதா தங்கம் எடுத்துச் செல்லும் ஒரு வானோடு மோதுவது தற்செயலாக நடப்பது போலவே சித்திரிக்கப்பட்டிருக்கு.
Deleteமனோஜ் பாஜ்பாய் நல்ல நடிகர். பார்க்கத் தூண்டும் விமர்சனம். தமிழில் டயலாக் இருக்கிறதா என்று பார்க்கிறேன்.
ReplyDeleteதமிழில் இல்லைனாலும் ஆங்கில சப் டைடில்களுடன் வருவதால் உங்களுக்கும், ஸ்ரீராமுக்கும் நன்கு புரியும் பானுமதி. பார்க்கலாம்.
Deleteஐயையோ... எனக்கு ஹிந்தி புரியாது. பார்க்க வாய்ப்பு இல்லை.
ReplyDeleteஎத்தனையோ பேர் இந்திய நாட்டின் நன்மைக்காக உழைத்திருக்கிறார்கள், வெளிச்சத்துக்கு வராமலேயே
இப்போத் தான் இன்னொரு அருமையான படம் பார்த்தேன். சிஸ்டம் என்னும் படம். சோனாக்ஷி சின் ஹாவும், ;ஜோதிகாவும் நடிச்சது. மிக நல்ல படம். மத்தியானமாய் உட்கார்ந்தேன். ஒரே மூச்சில் படத்தைப் பார்த்த்ட்டுத் தான் வெளியே வந்திருக்கேன். அவ்வளவு விறு விறு. தொய்வே இல்லை. இதிலும் பாட்டு, நாட்டியம், சண்டை, ரத்தம் சிந்துதல் இல்லை.. அருமையான வசனங்கள். ஆங்கிலத்தில் சப் டைடில்கள் வருகின்றன. இதை எல்லாம் தமிழில் எடுத்தால் மூலக்கருவையே சிதைத்து லாஜிக்கே இல்லாமல் பண்ணிடுவாங்க.
Deleteசிஸ்டம் அருமையான படம் என்கிறீர்களா? நான் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் பார்த்தேன்.
Deleteஜோவை வெறுத்து நாளாச்சு. குண்டு சோனாக்ஷி...
சோனாக்ஷியை எனக்கு அவ்வளவாத் தெரியாது. ஜோதிகாவை எப்போவுமே பிடிக்காது. என்றாலும் படத்தின் கதைக்கரு நன்றாக இருந்ததாலும் அதிகம் கோர்ட் காட்சிகள் வந்ததாலும் படத்தை முழுதும் பார்த்தேன்.
Deleteசோனாக்ஷி சத்ருகன் சின்ஹா பெண். நானும் கோர்ட் ஸீன் பிரியன் என்பதால்தான் அந்தப் படம் பார்த்தேன்.
Deleteகீசா மேடம்... நான் ஆளைப் பார்த்துத்தான் அவர்களது கருத்தைப் படிப்பேன். கருத்தைப் படித்து வெறுத்த இரண்டு பேர்களில் ஜோதிகா மற்றும் சுகி சிவம் ஆகிய இருவரும் உண்டு. இந்து மதத்திற்கு எதிரானவராக இந்த இருவரையும் பார்ப்பதால், அவங்க நடித்த, எழுதிய, பேசிய எதையுமே பார்ப்பதில்லை.
Deleteவாங்க ஸ்றீராம், சோனாக்ஷி சின் ஹா என்னும் பெயரிலே நடிகை இருப்பதே இப்போத் தான் தெரியும். நடிப்பெல்லாம் நல்லாவே இருந்தது. ஜோதிகாவுக்கு வயதாகிவிட்டது என்பது இந்தப்படத்தின் மூலம் நன்றாகத் தெரிந்தது.
Delete@Nellai, 2007 ஆம் வருஷம் அம்பேரிக்கா போனப்போ ஹூஸ்டன் மீனாக்ஷி கோயிலில் ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் நடத்திய ஓர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் சுகி சிவம் பேசினார். எனக்காகப் பையர் எங்கள் எல்லோரையும் அழைத்துச் சென்றார். அவர் பேசியது நாட்டார் தெய்வங்கள் எனப்படும் குலதெய்வங்கள் பற்றிய ஒரு சொற்பொழிவு. அப்போவே அவர் இவங்கல்லாம் தான் தமிழகத்தின் சாமிங்க. மத்தவங்க எல்லோரும் வெளியே இருந்து வந்தவங்கனு சொன்னார்.
Deleteகடைசியில் கேள்வி நேரம் வந்தப்போ நான் சிலப்பதிகாரம், சங்கப்பாடல்கள் ஆதாரங்களோடு திருமால், சிவன், கந்தன் போன்றோர் பற்றி எடுத்துக் காட்டிப் பேசினேன். அவர் ஒத்துக்கவே இல்லை. ஆனால் அவர் தந்தை டி.என்.சுகி சுப்ரமணியன் நல்ல பேச்சாளர். திருச்சி வானொலியில் பணி புரிந்தார். நல்ல கதைகள், நாடகங்கள்னு எழுதி அரங்கேற்றம் எல்லாம் பண்ணினார். இவர் இப்படி. அதுவும் இப்போ! முழுக்க முழுக்கத் தீராவிஷம் தான்.
ஜோதிகாவை எப்போவுமே பிடிக்காது. ஆனாலும் கதைக்கருவுக்காகவும் நல்ல கோர்ட் காட்சிகளுக்காகவும் இந்தப் படம் பார்த்தேன். நேற்று ஒரு படம் பார்த்தேன் "நீயத்" என்று. அதில் வித்யா பாலன் தவிர்த்து மற்ற நடிகர்கள் அவ்வப்போது பார்த்திருப்பேனோ என்னமோ! கதை ஸ்காட்லான்டில் நடக்கிறது. அங்கேயே போய்ப் படப்ப்பிடிப்பு நடத்தி இருக்காங்க. நல்ல விறுவிறு. கடைசி ட்விஸ்ட் எதிர்பார்க்காதது ஆனாலும் முடிவு பிடிக்கலை. :(
Delete