அடுத்தாப்போல் இரு ஆங்கிலப் படங்கள். ஒரு தமிழ்ப்படம், இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே முதல் முதலாக ஆகஸ்ட் மாசம் 23ஆம் தேதி 2019 ஆம் ஆண்டில் வந்த படத்தைப் பார்த்துட்டேனே! ஹையா! ஜாலி! எடுத்த எடுப்பில் உம்மாச்சி படத்தைக் காட்டினாங்க. அதுவும் வெங்கடாசலபதி. கடைசியிலே பார்த்தால் இது டிவிஎஸ் காரங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்க எடுத்த படமாம். டிவிஎஸ் அவர்களின் மகனான டி.எஸ்.கிருஷ்ணாவின் பிள்ளை சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன் நிக்கி சுந்தரம் எடுத்த படமாம். எல்லாத் துறையிலும் புகுந்த டிவிஎஸ் குழுமம் சினிமாத் துறையிலும் புகுந்தது நல்லது என்றாலும் அவங்க பேரனே நடிச்சிருப்பது கொஞ்சம் சரியாத் தெரியலை. அதுவும் நிக்கி சுந்தரத்துக்கு நடிப்பே வரலை! ஒரே மாதிரி முகபாவத்தோடு நடிக்கிறார். அதுக்குக் கதாநாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பரவாயில்லை ரகம். படத்தோட பெயர் "மெய்". உடம்புனும் அர்த்தம் எடுத்துக்கலாம். உடல் உறுப்புக்களைத் திருடுவதால், உண்மையைத் தேடிக் கண்டு பிடிப்பதால் உண்மைனும் அர்த்தம் எடுத்துக்கலாம்.

உடல் உறுப்பு தானம் பற்றியும், அதை விளம்பரப்படுத்தவுமே எடுக்கப்பட்ட படம் என்கிறார்கள். ஆனால் படத்தின் கதைக்கரு இந்த உறுப்பு தானத்திற்காக நல்ல உடல்நிலையில் இருப்பவர்களின் உறுப்புக்களை, முக்கியமாகச் சிறுநீரகங்களைத் திருடும் வணிக ரீதியாகச் செயல்படும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் ஆகியோரைப் பற்றிய படம். கதைப்படி (நிஜம்மாகவும்?) அம்பேரிக்காவில் மருத்துவம் படிக்கும் அபிநந்தனுக்கு ஹவுஸ் சர்ஜன் பயிற்சியின் போது அவன் மிகவும் பாசமும் அன்பும் வைத்த, அவன் மருத்துவராகிச் சேவை செய்ய வேண்டும் என நினைத்த அவன் தாய் இறந்து போகவும் மனம் வருந்தித் தொழிலில் கவனம் செலுத்தாமல் இருக்கிறான். அவன் மனம் மாற வேண்டி அவன் தந்தை அவனை இந்தியாவுக்குத் தன் சிநேகிதனிடம் அனுப்பி வைக்க, மருந்துக்கடை வைத்திருக்கும் அந்த சிநேகிதன் வீட்டில் வந்து தங்கும் அபிக்கு ஏற்படும் சிக்கலான அனுபவங்களே கதை! அதிலிருந்து எப்படி மீண்டான் என்பதும் பின்னர் அவன் இந்தியாவிலேயே மருத்துவமனை ஒன்றை ஏற்படுத்திக் கதாநாயகியைத் திருமணமும் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துவதும் தான் கதை!

நடுவில் காணாமல் போன தன் மகள் பற்றி அறியத் துடிக்கும் சார்லி, இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன்,கிஷோர் என்பவராம், பார்க்க விநோத் கன்னாவின் பிள்ளை மாதிரி இருக்கார். மற்ற நடிகரெல்லாம் யாருனு தெரியலை. நர்மதாவாக நடிக்கும் பெண், (சார்லியின் மகள்) முகம் தெரிந்த முகமாக இருக்கு. யார்னு தெரியலை. உதவிக் காவலர் கருணாகரன் , டாக்டர் ஜெயந்த் ஆகிய பாத்திரங்களில் நடிப்பவர்கள் நன்றாக நடிப்பதால் படத்தில் ஆங்காங்கே தொய்வு ஏற்பட்டாலும் சரி செய்து கொள்கிறது தானாகவே! :) இயக்குநருக்கு முதல் படம் என்ற அளவில் பரவாயில்லை ரகம். ஆனால் திரைக்கதை ஏற்கெனவே பலமுறை வந்திருப்பதால் புதிதாக ஏதும் இல்லை எனப் பொதுவான விமரிசனம் சொல்லுகிறது. மற்றபடி காதல் காட்சிகள் அது,இதுனு குழப்பலை! இசையும் தேவையான அளவுக்கு மேல் காதைக் குடையவில்லை. ஒளிப்பதிவு அபாரம். சராசரியான படம் என்றாலும் பரவாயில்லை ரகம்.
அடுத்து ஓர் ஆங்கிலப்படம் மன்னரின் சொற்பொழிவு (King's Speech) omitted the original name of the picture பார்த்தேன். இது இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் இங்கிலாந்தில் அரச குடும்பத்தின் நிகழ்வுகளை வைத்து எடுத்த படம். ஐந்தாம் ஜார்ஜ் இறக்கும்போது எட்டாம் எட்வர்ட் பட்டமேற்க அவர் தன் காதலி வாலிஸ் சிம்ப்சனை மணம் முடிக்க வேண்டித் தன் பட்டத்தையே துறந்து விடுகிறார். வாலிஸ் சிம்ப்சன் இரு முறை விவாகரத்தான அமெரிக்கப் பெண்மணி. இங்கிலாந்தின் அரச குடும்பச் சட்டங்களின் படி விவாகரத்து ஆகிக் கணவன் உயிருடன் இருந்தால் அந்தப் பெண் அரசகுடும்பத்தவரைத்திருமணம் செய்து கொள்ள முடியாது. இங்கிலாந்துச் சர்ச்சுகள் அனைத்திற்கும் அரசரே தலைவர். அவர் விதவையாக இருந்தால் கூடத் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் விவாகரத்தான கணவன்மார் இருவரும் உயிருடன் இருக்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாது.

பட்டத்தைத் துறந்த சமயம் அவருக்குப் பின்னர் பட்டமேற்ற ஆறாம் ஜார்ஜ், இப்போதைய அரசி எலிசபெத்தின் தந்தையின் பேச்சுத் திறன் குறைபாட்டையும் அதை அவர் எப்படிச் சரி செய்து கொண்டார் என்பது குறித்தும் எடுக்கப்பட்ட உண்மையான சில நிகழ்வுகள். அருமையாகப் படம் ஆக்கி இருக்கிறார்கள். ஆஸ்கர் விருதுகள் நான்கோ, ஐந்தோ கிடைத்துள்ளது இந்தப் படத்திற்கு. சிறந்த நடிகராக இந்தப் படத்தில் ஆறாம் ஜார்ஜாக நடித்திருக்கும் காலின் ஃபர்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அதோடு இல்லாமல் வெஸ்ட்மினிஸ்டர் அபே, பக்கிங்காம் மாளிகை போன்ற சரித்திரப் பிரசித்தி பெற்ற இடங்கள் மிகக் கலை நயத்தோடு வடிவமைக்கப்பட்டுப் படமாக்கி உள்ளார்கள்.

மருத்துவரிடம் தன் சிறு வயது அனுபவங்களைப் பகிரும்போது இளவரசன் ஆல்பர்ட் (ப்ரின்ஸ் ஆல்பர்ட்டாக நடிக்கும் இவர் தான் ஆறாம் ஜார்ஜாகப் பட்டம் ஏற்றவர்) காலின் ஃபர்த் தன் சிறு வயதில் தங்களைக் கவனித்துக்கொண்ட செவிலித்தாய்மார்கள் தன்னை நடத்திய விதம் குறித்து மருத்துவரிடம் பகிர்கையில் ராஜகுமாரனாக இருந்தாலும் அவர்களையும் அடக்கி ஆளச் சிலர் இருப்பார்கள் என்றும் அவர்களுக்கும் உணவு, கவனிப்பு போன்றவற்றில் பாரபட்சம் காட்டப்படும் என்பதும் புரிகிறது. அதுவும் தன் செவிலித்தாய்க்குத் தன்னைப் பிடிக்கவே பிடிக்காது எனவும் தினம்தினம் தன் தந்தை ஐந்தாம் ஜார்ஜையும், அவர் தாய் ராணி மேரிக்கும் குழந்தைகள் நிலைமை பற்றித் தினம் அவர்களைக் காட்டிச் சொல்லும்போது தன்னைத் தன் செவிலித்தாய் கிள்ளிவிடுவாள் ரகசியமாக என்றும் தான் அழுவதைப் பார்த்துப் பெற்றோர் மனக்கசப்பு அடைவார்கள் என்பதையும், தனக்குச் செவிலித்தாய் சரியாக உணவு கொடுக்க மாட்டாள் என்றும் இது தெரியத் தன் ராஜகுலப் பெற்றோருக்கு ஐந்து வருஷங்கள் பிடித்ததாகவும் சொல்லும்போது நமக்கும் மனம் கசிகிறது.

இவரை "பெர்ட்டி" எனக் குடும்பப் பெயரில் அழைப்பார்கள். மருத்துவரும் பிடிவாதமாக அந்தப் பெயரிலேயே அழைப்பேன் என்கிறார். தன்னுடைய திக்குவாயைப் போக்கிக்கொள்ள முடியாமல் திண்டாடுபவரை அவர் மனைவி எலிசபத், பின்னாட்களில் ராணி எலிசபெத், ஆறாம் ஜார்ஜின் மனைவி, இப்போதைய ராணி எலிசபெத்தின் அம்மா தான் லண்டனின் ஹார்லி சாலையில் இருக்கும் இந்த ஆஸ்திரேலிய மருத்துவரிடம் அனுப்பிப் பேச்சுப் பயிற்சி மூலம் சரி செய்து கொள்ள ஊக்குவிக்கிறாள். அரசராக விருப்பமே இல்லாமல் இருந்தவரைத் தன் அண்ணனின் காதலினால் கட்டாயமாக அரசராக்கப்படுவதும், பின்னால் ஹிட்லரின் போர் அறிவிப்பினால் நேசநாடுகளை ஒன்றிணைத்துப் போருக்குத் தயாராக இருக்குமாறும் வானொலியில் பேசும் அளவுக்குப் பேச்சுத் திறமை படைத்தவர் ஆகிறார். ஆனால் அவர் மருத்துவரான லியோனெல் அப்போதும் அவரிடம், "பெர்டி, இன்னமும் உனக்கு "டபுள்யூ" சரியாக உச்சரிக்க வரலை என்பதும், அதற்கு ஆறாம் ஜார்ஜான பெர்டி, "நான் வேண்டுமென்று தான் அப்படிச் செய்தேன். அப்போத் தான் மக்கள் பேசுவது நான் தான் எனப் புரிந்து கொள்வார்கள்." என்று சொல்லுவதும் அதிலும் நடந்து கொண்டே சகஜமாகச் சொல்லுவதும் காட்சி அமைப்பில் அருமை. கடைசியில் இந்த உண்மையான மருத்துவருக்கு "ராயல் விக்டோரியன் ஆர்டர்" விருது கிடைத்ததாகப் படம் முடியும்போது போடும் டைடில் கார்ட் சொல்லுகிறது. நல்லதொரு சரித்திரப் படம்.
ஹாலிடேஸ் இன் தி வைல்ட் பார்த்தேன். தென் ஆப்பிரிக்காவில் யானைகளைப் பழக்கிப் பராமரிப்பவரான ஒருவருடன் ஒரு மிருக வைத்தியர் (பெண்) தற்செயலாகச் சந்திக்க நேர்கிறது. அவர்கள் வாழ்க்கை பின்னர் எப்படிப் போகிறது என்பது தான் கதை. ஒன்றரை மணி நேரப் படம். படம் முழுக்கத் தென் ஆப்பிரிக்க யானைகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. இயல்பாகப் போகிறது படம். இதுவும் நன்றாகவே இருந்தது. யானைகளைப் பார்ப்பதற்காகவே இந்தப் படம் பார்த்தேன்.