எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 07, 2006

எனக்குப் பிடித்த எழுத்து

நான் முதல் முதல் புத்தகம் படிக்க ஆரம்பித்தது என்னுடைய 5வது வயதில் என்று நினைக்கிறேன். அப்போது எங்கள் வீட்டில் ஆனந்த விகடன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் அப்போது டாக்டர் கீதா என்ற பெயரில் ஒரு சித்திரத் தொடர் வந்து கொண்டு இருந்தது. அன்றைய நாட்களில் என்னுடைய ஆசையும் கனவும் ஒரு டாக்டர் ஆவதாகவே இருந்தது. மேலும் என் அம்மாவின் அடுத்த தங்கை கணவர் ஒரு டாக்டராக இருந்து வந்தார்.அந்தக் கதையும் நேதாஜியின் இந்திய தேசீய ராணுவத்தைப் பற்றி இருந்ததாக ஞாபகம்.கதா நாயகியும் என் பெயரில் இருந்தாள். அதற்குப் பிறகு தான்"துப்பறியும் சாம்பு" சித்திரத் தொடராக வந்தது.அந்த நாட்களில் ஆனந்த விகடன் படிப்பது ஒரு கெளரவமாகவே இருந்தது. இன்றைய விகடனைப் பார்க்கும்போது இன்றைய வாசகர்கள் தரம் குறைந்து விட்டதா? அல்லது விகடன் வாசிக்கும் எனக்கு ஏற்றுக் கொள்ள முடிய வில்லையா தெரியவில்லை.அந்தச் சமயம் தான் விகடனில் "தில்லானா மோகனாம்பாள்" ஆரம்பித்தது என்றும் நினைக்கிறேன். என் தமிழை வளர்த்தது விகடன் தான் என்று என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஒவ்வொரு வார விகடனிலும் "சிறுவர் வண்ண மலர்" என்ற பகுதி தனிப்பக்கங்களாக வெளி வந்தது. அதை முதலில் படிக்க எனக்கும் அண்ணாவிற்கும் போட்டி வரும். ஆனால் அண்ணா கடையில் போய்ப் புத்தகம் வாங்கி வருவார். ஆதலால் முதலில் வரும் வழியில் படித்து விடுவார். வீட்டிற்கு வந்து அந்த வாரக் கதையை என்னிடம் சொல்லி வெறுப்பு ஏற்றுவார். இரண்டு பேரும் சண்டை ஆரம்பிப்போம். இது எல்லாம் நடக்கும்போது அப்பா வீட்டில் இருக்க மாட்டார்.

4 comments:

 1. எனது எல்லா பதிவுகளும் தமிழே! பின்னூட்டங்கள் மட்டும் தான் ஆங்கிலம். சோம்பல் தான் காரணம். தற்போது ஆனந்த விகடன் தரம் தாழ்ந்து விட்டது. வியாபார போட்டி தான் காரணமா? தெரியவில்லை.

  ReplyDelete
 2. geetha, you bring back good memories. we atarted to buy when vikatan was 2 annaas.Kumudham padikka koodathu.kalaimagal,manjari was ok.Even now I do buy Vikatan,.Ippo konjam change therikirathu.still Pazhasai ninaithe kaalam thalla mudiyaathu. then it was Saavi,Gopulu,Kothamangalam subbu days.Ippo pudhiya writers vanthaachu.they have to cater to everybody's needs to survive.Manu

  ReplyDelete
 3. dear madam, i too used to read vikatan and used to look forward to doctor geetha and vaathiaar vedapuri. do you by any chance know where we can get copies of it. i am willing to buy or pay to xerox a copy. i tried vikatan and they told me it was too old and they do not have back copies. thank you. rajamani (phantom363@gmail.com)

  ReplyDelete
 4. நானும் நீங்களும் ஒரே மாதிரியாக இருந்திருக்கிறோம், அந்தக் காலத்தில் இருந்தே! நானும் தில்லானா மோகனாம்பாள் விகடனில் தொடராக வந்தபோது படித்திருக்கிறேன். எங்கள் வீட்டிலும் குமுதம் படிக்கத் தடை!

  ReplyDelete