எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 15, 2006

சிபிக்குச் சில குறிப்புகள்

திருவிளையாடல் புராணம் மூலநூல் "ஆலாசிய மகாத்மியம்" என்னும் வடமொழி நூல் ஆகும். திருவிளையடல் புராணம் பரஞ்சோதி முனிவரைத் தவிரப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவாரால் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் என்ற பெயரிலும் மற்றும் உள்ள கடம்பவன புராணம், சுந்தர பாண்டியம் என்ற நூல்களிலும் உண்டு. கடைசி இரண்டும் எழுதியவர் பெயர் தெரியவில்லை. வரகுண் பாண்டியனின் மகனான ராஜராஜ பாண்டியனுக்குப் பிறகு வந்த அரசர்கள் முறையே
சித்திர விரதன்,
சித்திர பூடணன்
சித்டிரத்துவசன்
சித்திரவருமன்
சித்திரசேனன்
சித்திரவிக்கிரமன்
ராஜமார்த்தாண்டன்
ராஜசூடாமணி
ராஜசார்த்தூலன்
துவிராஜகுலோத்துமன்
ஆயோதனப்பிரவீணன்
ராஜகுஞ்சரன்
பரவிராஜ பயங்கரன்
உக்கிரசேனன்
சத்துருஞ்சயன் வீமரதன்
வீம பராக்கிரமன்
பிரதாப மார்த்தாண்டன்
விக்கிரம் கஞ்சனன்
சமர கோலாகலன்
அதுல கீர்த்தி
மாறவர்மன் சுந்தர பாண்டியன் (மாமல்ல பல்லவர் காலத்தில் இருந்தான்) தங்கை தான் பல்லவ மன்னன் பட்டத்து ராணி. இந்த சுந்தர பாண்டியன் தான் சோழ ராஜ குமாரியான மங்கையர்க்கரசி. இவன் தான் கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டுத் திருஞானசம்பந்தரால் வெப்ப நோய் நீங்கப்பெற்றான். தகவல்கள் உதவுமா எனத் தெரியவில்லை. யாருக்காவது தேவைப்பட்டால் உதவும் என்று நம்புகிறேன்.வரகுண பாண்டியனுக்குச்சிவலோகம் காட்டியதோடு அல்லாமல் அவன் காலத்தில் தான் விறகுவெட்டி யாக வந்து பாணபத்திரனுக்குச் சீடனாகவும் திருவிளையாடல் புரிந்து மேலும் அவனுக்கு உதவியாகப் பாண்டியன் கருவறையிலிருந்தே பொருட்களைக் கொடுத்து வந்து பின் சேரமான் பெருமாள் நாயனாருக்கு ஓலை அனுப்பிப் பாணனுக்கு உதவினார்.தற்சமயம் குழப்பினது போதும் என்று நினைக்கிறேன். முடிந்தபோது குழப்புவது தொடரும்.

8 comments:

 1. அடேங்கப்பா! இத்தனை பாண்டியர்களா? (எனக்கு மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - MGR தான் தெரியும்). தமிழ் களஞ்சியம் என்ற பட்டத்தை உங்களுக்கு வழங்குகிறேன்! (காசா பணமா!)

  ReplyDelete
 2. dear geetha,recd yr mail and comments.thank you for taking time to read my posts. ungal post abt all the Paandiya mannarkal is god to read. yetho saandilyan, kalki novels beginning paditha maathiri irukku. will follow yr instructions regarding e-kalappai.Manu

  ReplyDelete
 3. மேடம்! எனக்காக மெனக்கெட்டு தகவல்களைத் தேடித் தொகுத்திருக்கிறீர்கள். பயன்படாமல் போய்விடுமா என்ன? நிச்சயம் பயனுள்ளவையே! மிக்க நன்றி!

  ReplyDelete
 4. அம்பியின் பின்னூட்டத்தை[அடேங்கப்பா! இத்தனை பாண்டியர்களா?] வழிமொழிகிறேன்.[எவ்வளவு வசதி.ஒருவருடைய பதிவை மட்டுமல்ல,பின்னூட்டத்தையும் காப்பியடிக்க -)]

  ReplyDelete
 5. Siva, I cannot follow your blog from here. Hope you make it not to open for all. I have tried twice but the' url was not found' message is coming.

  ReplyDelete
 6. கீதா அவர்களே, நானெல்லாம் வெறும் பின்னூட்டம் மட்டும் செய்யும் சின்னப்பிள்ளை. சொந்தமாக் ப்ளாக் வைத்துக்கொள்ளுமளவு பெரிய ஆள் இல்லை[என்னே ஒரு தன்னடக்கம் -) ]
  டோண்டுவின் பதிவில் உங்கள் பின்னூட்டத்திற்க்கு["பிராமணர்கள் தமிழ் வளர்க்கவில்லை என்று சொல்கிறார்களே"] பதில் பின்னுட்டமிட்ட அதே சிவாதான்.
  டோண்டுவின் பதிவில் குறைந்தது ஒரு தடவையாவது பின்னூட்டமிடுவதுதான் என் வலை(web)ப்பணி. இன்று டோண்டுவின் பதிவில் உங்களின் பின்னுட்டத்திற்கும் பதில் பின்னூட்டமிட்டுள்ளேன்.

  ReplyDelete
 7. சிவா, இனி உங்கள் பின்னூட்டத்தைக் கவனமாகப் பார்க்கிறேன். நீங்கள் கவனித்த அளவு நான் கவனிக்கவில்லை பாருங்கள்.

  சிபி, நான் படித்த புத்தகங்களிலிருந்து தான் உங்களுக்குத் தேவைப்படுமோ என்று தகவல் கொடுத்தேன். இதனால் நான் பல புத்தகங்கள் படிக்க முடிகிறது. மேலும் என் வலைப் பதிவிற்கும் விஷயம் கிடைக்கும் அல்லவா? நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.

  ReplyDelete
 8. Dear Geetha Madam,
  உங்கள் வலைப் பதிவு நன்று. பாண்டிய மன்னர்கள் பற்றிய தொகுப்பு அருமை. கடந்த ஒரு மாதமாகத்தான் ,இந்த வலைப் பதிவுகளில் உலா வருகிறேன். தமிழ் மீது ஆர்வம் கொண்ட இவ்வளவு உள்ளங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி. உம் பணி தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete