எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 09, 2006

போலி டோண்டுவும் என்னுடைய வலைப் பதிவும்

நான் வலைப் பதிய ஆரம்பித்த ஆரம்ப நாட்களிலே ஆங்கிலத்தில் தான் எழுதி வந்தேன். அதுவும் தொடர்ந்து எழுத முடியாமல் வீட்டில் சூழ்நிலை சரியாக இல்லை. அந்தச் சமயம் திரு டோண்டுவின் பதிவில் ராஜாஜி அவர்களைப் பற்றியும் திரு டோண்டுவின் தகப்பனாரின் சிக்கன நடவடிக்கை பற்றியும் எழுதி வந்தார். ராஜாஜி பற்றி மாறுபட்டக் கருத்து எனக்கு இருந்ததால் அதைக் குறிப்பட விரும்பினேன். ஆங்கிலத்தில் எழுதுவதை விடத் தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்த காரணத்தால் அதைப் பற்றிக் குறிப்பிடவும், அவர் எனக்கு உதவியாக ஒரு உரல் அனுப்பி வைத்தார்.ஆனால் என் வீட்டில் அதற்குள் என்னுடைய நாத்தனாரின் கணவர் இறந்து வீட்டில் இருந்த துக்கமான சூழ்நிலையில் என்னால் கணினி பக்கம் மாதக் கணக்காக வர முடியவில்லை. அத்ற்குள் திருவாளர் என் பதிவிற்கு வந்து விஷம் விதைத்து விட்டுப் போயிருக்கிறார்.நான் பார்க்கவே ரொம்ப நாள் ஆகி விட்டது. தற்செயலாக என் மைத்துனன் தன்னுடைய மெயில் பார்த்துக் கொள்ளத் திறக்கவே நானும் என்னுடைய மெயிலையும் பார்த்து விட்டு வலைப் பதிவையும் ஒரு நோட்டம் விடலாம் எனத் திறந்தால் அதிர்ச்சி. அதை அழிக்க அழிக்க ப்ளாக்கர் சொதப்பல் காரணமா என்னவென்று புரியாமல் திரும்பத் திரும்ப வந்து கொண்டு இருந்தது. மிகவும் சிரமப்பட்டு அவற்றை நிரந்தரமாக அழித்து விட்டு பின்னூட்டம் மட்டுறுத்தல் மட்டும் இன்றி பின்னூட்டப் பெட்டியை மூடி வைத்தேன். 10 நாட்கள் முன்பு தான் திரு சிபி பின்னூட்டம் இட முடியவில்லை என்று கேட்டுக் கொண்டதாலும். இந்தத் தொந்திரவு எனக்கு மட்டும் இல்லை என்று புரிந்து கொண்டதாலும் திறந்து வைத்துள்ளேன். திரு டோண்டுவின் அறுபதாம் கலியாணத்திற்கு வாழ்த்துச் சொல்லி விட்டுப் பார்த்தால் மறுபடி வந்து எனக்கும் என் குடும்பத்தாருக்கும் செந்தமிழ் வாழ்த்துச் சொல்லி இருக்கிறார். நேற்று திரு டோண்டுவின் பதிவில் குமுதம் ரிப்போர்ட்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது அறிந்து கொஞ்சம் நிம்மதி கிடைத்து உள்ளது. தன் கண்ணால் பார்க்காத் ஒருவர் மேல் இவ்வளவு வெறுப்பைக் ஒருத்தரால் காட்ட முடியுமா என்று யோசித்தால் அவர் மனநிலை தான் காரணம் என்று புரிகிறது. என்றாலும் அவருக்கும் ஒரு அம்மா, அக்கா அல்லது தங்கை மற்றும் மனைவி மக்கள் இருப்பார்களே. கண்டிப்பாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்து தான் இருக்க வேண்டும். அவர்கள் நடுவில் இவருடைய இந்த முகம் தெரிந்தால் எவ்வளவு தலைக்குனிவு அந்த மனிதருக்கு? அவரையும் அவர் நிலையையும் யோசித்தால் பாவமாகத் தான் உள்ளது. இது யாரும் படிப்பார்கள் என்று எதிர்பார்த்து எழுதவில்லை. தினமும் என் வலைப்பதிவிற்கு வந்து ஏதாவது எழுதிச் செல்லும் அம்பி கூட இரண்டு நாளாக வரவில்லை. நான் தமிழ் மணத்தில் எல்லாம் எழுதும் அளவு தேர்ச்சியும் பெறவில்லை. அதில் அறிமுகம் ஆகும் அளவு எந்தப் பின் புலமும் கிடையாது. யாராவது ஒருத்தர் படித்துப் புரிந்து கொண்டால் அது போதும். அந்த முகம் தெரியாத் மனிதருக்காக ஏற்கெனவே ஒருத்தர் பிரார்த்தனை செய்துள்ளார். அவருடன் எல்லாரும் சேர்ந்து கொள்ளலாம்.

13 comments:

 1. இரண்டு நாட்களாக ஆபிஸ் லீவு. அதான் வரவில்லை. எனக்கு எதோ அரைகுறையாக தான் புரிகிறது, பின்னூட்டத்தில் விஷம் என்று! நல்லதை எடுத்து கொள்வோம், கருட புராணத்தில் சொன்னபடி, பெருமாள் தண்டனை குடுப்பார்.

  முழுக்க முழுக்க தமிழில் ஒரு பதிவு இன்று போட போகிறேன். நேரம் இருந்தால் எனது முந்தைய பதிவுகளை பார்க்கவும்.

  ReplyDelete
 2. hi first time here.hopped from ambi's.
  neenga ezhuthina matter nannum kumudham reporterla padichen. enaku payangara athirchi. ithula kodumai ennana naan antha poli donduvin commentsa vera oru blogla paathutu atha nejamave avar thaan ezhuthinarnu nethu varaikum nenachen. its highly atrocious. i hope that they find out the culprit soon.

  ReplyDelete
 3. இந்தப் பதிவிலேயே அவன் Dooondu என்ற பெயரிலே விஷம் கக்கி உள்ளான். இது அவந்தானா அல்லது புதிய ஆளா தெரியவில்லை. அதை அழித்து விட்டேன். கடவுள் காப்பாற்ற வேண்டும்.

  ReplyDelete
 4. i really don't understand. who is this doondu? wat he is doing with your blog? from your comments, i understood that some brutal,barbaric commetns has been posted in ur blog. hope u've comment moderation. just ignore.. don't give much importance and never afraid to these culprits.

  ReplyDelete
 5. doondu என்பதும் போலி டோண்டுதான். இப்போதிருக்கும் நிலையில் அவன் தன்னுடைய டிஸ்ப்ளே பெயரை அம்மாதிரி மாற்றிக் கொண்டுள்ளான். 4800161 எண்ணும் போடுவதில்லை. போட்டோவும் இல்லை.

  அதே சமயம் இம்மாதிரியே எதிர்காலத்திலும் வேறுபடுத்திப் போடுவான் என்று சொல்லுவதற்கும் இல்லை.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 6. I understand what you are undergoing. "Just ignore" is something very easy to say. But I am glad that you have already started doing that.
  Dont be put off by these things. Just carry on writing.

  ReplyDelete
 7. I understand what you are undergoing. "Just ignore" is something very easy to say. But I am glad that you have already started doing that.
  Dont be put off by these things. Just carry on writing.

  ReplyDelete
 8. விடுங்க கீதா.. நல்லவங்க இருந்தா இப்படி குறுக்கு புத்தியோட கிறுக்குத்தனமா யோசிக்கிறவங்களும் இருப்பாங்க.. நான் கூட டோண்டு சாரின் அறுபதாம் கல்யாணத்திற்கு வாழ்த்துச் சொல்லி இந்த செந்தமிழ்ச் செல்வர்கிட்டேர்ந்து வாங்கிக் கட்டிகிட்டேன்..

  ஒண்ணும் செய்யறதுகில்லை.. ஜீவாவின் பதிவையும் பாருங்க.. குமுதமாவது ஏதாவது செய்யறாங்களான்னு பார்ப்போம்.

  ReplyDelete
 9. Geetha please go on writing.you are courageous even to mention this.

  ReplyDelete
 10. கீதா அவர்களே, நீங்கள் போட்டோவை டிஸேபிள் செய்திருக்கிறீர்கள். ஆகவேதான் என் போட்டோவைக் காணோம். மற்றப்படி நீங்கள் பிளாக்கர் பின்னூட்டங்கள் மட்டும் அனுமதிப்பதால் என் நம்பர் சரியாக எலிக்குட்டி சோதனையில் தெரிந்தால் போதும். நீங்கள் குறிப்பிட்டப் பின்னூட்டமும் நான் இட்டதுதான்.

  போலி டோண்டு என் நம்பரை சரியாகத் தெரிய வைப்பது அதர் ஆப்ஷன் இருந்தால்தான் சாத்தியம்.

  எதற்கும் போட்டோக்களை எனேபிள் செய்து விடுங்கள்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 11. naan inge vanthu comment pannitu pona appuram thiruvalar poli dondu en blogukum vanthaar. naan moderation set pannivitathal, ipothaiku escape.

  ReplyDelete
 12. முதலில் வந்த 'செந்தமிழ் வாழ்த்தைப்' படித்து 'அசந்து' விட்டேன். இப்போ அதை சட்டைசெய்வதில்லை. அதுவே அவனுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதை. நீங்கள்சொன்னது மாதிரி அவன் வீட்டு பெண்களை நினைத்தால் ...பாவம்தான்.

  ReplyDelete
 13. அட! இதெல்லாம் நமக்கு இப்போ சில்லி மேட்டர்! ஜஸ்ட் ரிஜெக்ட் அண்ட் டெலிட் பண்ணிட்டு அதுத்து உருப்படியான யோசனை பண்ணுறதுதான் பெஸ்ட். தமிழிலேயே எழுத ஆரம்பித்து விட்டீர்கள். கலக்குங்கள். என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete