எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 15, 2006

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே

எனக்குத் திருமணம் ஆகும்போது 19 வயது முடியவில்லை. நான் 15 வயது ஆகும் முன்னே பள்ளி இறுதி முடித்து விட்டேன். எல்லாம் பொய்ச் சான்றிதழ் கொடுத்துத் தான். அப்போது உண்மையான சான்றிதழ் இத்தனை அவசியப் படவில்லை. ஆகவே படிப்பு முடித்து வெகு நாளாக நான் வீட்டில் இருப்பது போல அப்பாவிற்கு ஒரு பிரமை. நடுவில் நான் பாங்க் பரீக்ஷை மற்றும் ஏஜீஸ் ஆஃபீஸ், மற்றும் வருமான வரித் துறை முதலியவற்றிற்கு விண்ணப்பங்கள் செய்து வந்தேன். எல்லாம் அந்த்ப் பொய் வயசை certificate-ல் கொடுத்துத் தான். பாங்க் பரீக்ஷை எழுத சில சமயம் சென்னை வருவதுண்டு. {அப்போதே எனக்குச் சென்னை பிடிக்காது.) அது தனி விஷயம். நான் சென்னை வரும் போதெல்லாம் சித்தி வீட்டில் தான் தங்குவேன். அம்மாவின் இரண்டாவது தங்கை. சித்தப்பா அப்போது கணையாழியில் பொறுப்பாசிரியராக இருந்து வந்தார். கனையாழியைத் தபால் மூலம் சித்தப்பா சொல்பவர்களுக்கு அனுப்புவது என் வேலை. மிக மகிழ்ச்சியாகச் செய்வேன். அதனால் பல எழுத்தாளர்களின் படைப்பை உடனுக்குடனே படிக்கவும் முடிந்தது. என் படிப்பார்வத்தைப் பார்த்தோ அல்லது அவர் வேலையில் நான் உதவி செய்து வந்த திறமை(வேணுங்கிறவங்க ஸ்மைலி போட்டுக்கங்க) பார்த்தோ சித்தப்பா எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் பொறுப்பை வலிந்து ஏற்றுக் கொண்டார்.

அவர் பார்த்த சில மாப்பிள்ளைகள் என் அப்பாவால் நிராகரிக்கப் பட்டது. அதனால் சற்றும் மனம் தளராத என் சித்தியும், சித்தப்பாவும் இம்முறை எப்படியும் வெற்றி என்ற நினைப்புடன் என் கணவர் ஜாதகம் அனுப்பினார்கள். ஆனால் பாதுகாப்புக் கணக்குத் துறை என்பதைச் சித்தி சரியாகப் புரிந்து கொள்ளாமல் மிலிட்டரி வேலை என்று சொல்ல அப்பா ஜாதகத்தையே எடுக்கவில்லை.அவர்கள் வீட்டில் பொருத்தம் பார்த்துச் சரியாக இருப்பதாக என் சித்திக்குச் சொன்னார்கள். பையன் வீட்டில் இருந்து பெண் ஜாதகம் பொருந்தி இருப்பதாகச் சொல்வது அந்த நாளில் கெளரவக் குறைச்சல். ஆகவே சித்தப்பா தன் தம்பியை எங்கள் வீட்டிற்குத் தூது அனுப்பினார். சித்தப்பாவின் தம்பி மனைவி தான் என் இரண்டாவது நாத்தனார். இப்படியாகத் தன் தம்பி கல்யாணத்தில் சித்தப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார். பின் அப்பா விபரம் தெரிந்து ஜாதகம் பார்த்துப் பின் அவர்கள் வந்து என் கல்யாணம் 15 நாளில் முடிக்கப்பட்டது.
நாங்கள் இருவரும் எல்லாவிதத்திலும் நேர் எதிர்.
அவர் உயரம், நான் சராசரி உயரம்.
நிறமும் அப்படியே. நான் நல்ல நிறம். அவர் நேர் மாறாக இருப்பார்.
என்ன வந்தாலும் யார் என்ன சொன்னாலும் அவர் முகத்தில் மாற்றம் ஏற்படாது. "சித்திரத்தில் அனைய தாமரை போல்" என்ற கம்பர் வாக்கு இவருக்குப் பொருந்தும் என்று நான் நினைப்பது உண்டு.
என் முகம் அடுத்தது காட்டும் பளிங்கு.
சாப்பாடு எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு சாம்பாரே பிடிக்காது.
அவர் நேர் எதிர்.
நான் எல்லாவற்றிலும் வேகம். தற்சமயம் உடல்நிலை காரணமாகக் குறைந்து விட்டது. இருந்தாலும் இப்போவும் எனக்கு வேகம் ஜாஸ்தி.சட்டென்று கோபம் வரும். முகத்தில் தெரியும்.
அவருக்குக் கோபம் வராது. வந்தாலும் முகத்தில் தெரியாது.
நான் வியாதிகளின் மொத்த உருவம்.இப்போ உங்க ப்ளாகில் இருந்து நீங்க தும்மினால் எனக்கு உடனே ஜலதோஷம் பிடிக்கும்.
அவருக்கு இந்தத் தொல்லை எதுவும் கிடையாது.
குழந்தைகளின் பாடத்தில் எதுவும் அவருக்குத் தெரியாது.
நான் அத்துபடி.
இப்போது இந்த வயதிலும் கூட என் பெண்ணும் பையனும் என்னிடம் கதை கேட்கும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
அவரிடம் அப்படி நெருங்குவது இல்லை.
அவருடைய ஊர் ஒரு குக்கிராமம். 77 வரை மின்சாரம் கிடையாது. கழிப்பறை வசதி கிடையாது.
நான் மதுரையில் பிறந்து வளர்ந்து கான்வெண்ட்டில் படித்து, இத்யாதி, இத்யாதி.
என்னுடைய சொல்லும் செயலும் அப்போது மிகவும் புரட்சிகரமாகத் தெரியும். என் கணவர் சொல்வது "நீ 20 வருடம் கழித்துப் பிறந்திருக்க வேண்டியவள். எல்லாத்துக்கும் அவசரம் மாதிரி இதுக்கும் உனக்கு அவசரம்" என்பது தான். இப்படி எல்லாம் ஏன் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பவர்களுக்கு. "மே மாதம் 17-ம் தேதி எங்கள் திருமண நாள்" என்பது தான்.

எல்லாவற்றிலும் ஒத்துப் போகாத நாங்கள் குடும்ப விஷயம் என்று வரும்போது பெரிய விஷயங்களில் நானும், அதாவது,
யாருக்கு வோட்டுப் போட வேண்டும்?தமிழ்நாட்டிற்கு யார் முதல் மந்திரியாக வந்தால் நல்லது?
இந்த பட்ஜெட் எப்படி?
அப்துல் கலாமிற்குப் பின் யார் குடியரசுத் தலைவராக வரலாம் என்பது போன்ற விஷயங்களில் நான் முடிவு எடுப்பேன்.

மற்ற விஷயங்கள் அவர் தம்பி, தங்கைபடிப்பு, கல்யாணம், எங்கள் குழந்தைகளின் எதிர் காலம் எல்லாம் முடிவு எடுப்பது அவர் கையில். வீட்டிலும் எல்லாரும் இந்த விஷயங்களை அவரிடம் மட்டும் விவாதிக்குமாறு ஏற்படுத்தி விட்டோம்.ஆகவே பிரச்னை எதுவும் எங்களுக்குள் இல்லை. யாராவது எங்கள் வீட்டில், மதுரையா, சிதம்பரமா? என்று கேட்டால் நான் "திருச்செங்கோடு" என்பேன். எத்தனாவது வருஷம் என்று கேட்பவர்களுக்கு "அது மட்டும் ரகசியம்". கண்டு பிடிப்பவர்கள் வலைப்பூவில் என் சார்பில் ஒரு பின்னூட்டம் இலவசம். ஸ்பெஷல் ஆஃபர் கொசுறு ஒரு பின்னூட்டம்.

10 comments:

  1. //பெரிய விஷயங்களில் நானும், அதாவது,
    யாருக்கு வோட்டுப் போட வேண்டும்?தமிழ்நாட்டிற்கு யார் முதல் மந்திரியாக வந்தால் நல்லது?
    இந்த பட்ஜெட் எப்படி?
    அப்துல் கலாமிற்குப் பின் யார் குடியரசுத் தலைவராக வரலாம்//

    =))

    வாழ்த்துக்கள்!!!!


    //எத்தனாவது வருஷம் என்று கேட்பவர்களுக்கு "அது மட்டும் ரகசியம்". கண்டு பிடிப்பவர்கள் வலைப்பூவில் என் சார்பில் ஒரு பின்னூட்டம் இலவசம். //


    //77 வரை மின்சாரம் கிடையாது.//

    //எனக்குத் திருமணம் ஆகும்போது 19 வயது முடியவில்லை.//

    //அப்போதே எனக்குச் சென்னை பிடிக்காது//

    //தற்சமயம் உடல்நிலை காரணமாகக் குறைந்து விட்டது. //

    //இப்போது இந்த வயதிலும் கூட என் பெண்ணும் பையனும் என்னிடம் கதை கேட்கும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.//

    என்ன ஒரு 25 வருசம் ஆயிருக்க்குமா?????

    ReplyDelete
  2. முதலில் இந்தாருங்கள் பிடியுங்கள் எனது திருமணவாழ்த்தை.
    விருந்துக்கு கண்டிப்பா வந்துருவோம். ஆனா கொஞ்ச லேட்டா....

    சொந்த கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா ஒரே நாளில் முக்கால்வாசி முடித்துவிட்டீர்களே. (எங்களுக்கும் கதைக்கேட்க பிடிக்குமுங்கோ), சரி....புரியுது. கணவரைப் பற்றி பேச ஆரம்பிச்சா எல்லாத்தையும் ஒரேயடியா கொட்டிவிடத்தான் தோணும்.

    ஆனா, மறுபடியும் நாளைக்கி எழுதறதுக்கு மேட்டர் வேணுமே, அதுக்காக சொன்னேன்.

    வாழ்த்துக்கள். முதன் முதலில் நான் தான் சொன்னேன் என்ற பெருமை......

    அல்ப சந்தோசம்.

    ReplyDelete
  3. அன்பின் கீதாக்கா,
    மணநாள் வாழ்த்துக்கள்.. இப்படியெல்லாம் உங்கள் கணவரைப் புகழ்வதிலிருந்து.. உங்களுக்குக் கல்யாணம் ஆகி..இப்பொழுது ஒரு 25 வருஷம் ஆகியிருக்குமென்று நினைக்கிறேன்...
    என் மனைவி இன்னும் என்னைப் புகழ ஆரம்பிக்கவில்லை.. எங்களுக்குத் திருமணம் ஆகி 9 வருடங்கள் தான் ஆகிறது.
    என்றென்றும் அன்புடன்,
    சீமாச்சு...

    ReplyDelete
  4. இதிலே ஒரு முக்கியமான தகவல் யாருமே கண்டுபிடிக்கலை.

    ReplyDelete
  5. 28 or 29 years.

    வருடங்களா முக்கியம். எப்படி வாழ்ந்தோம் என்பது தானே முக்கியம்.

    வாழ்த்த வயது இல்லை, வணங்கி மகிழ்கின்றேன். (தேர்தல் effect இன்னு போல அதான்?

    ReplyDelete
  6. பரவாயில்லை சிவா, கொஞ்சம் கிட்டத்தில் வந்து விட்டீர்கள். உங்களுக்கு என் ஆசிகள். எப்படி இருந்தாலும் நீங்கள் சிறியவர்தான்.

    ReplyDelete
  7. சில்வர் ஜுபிளிதானே அக்கா ?
    :-)))
    எத்தனையாவது என்று நீங்கள் சொல்லாதீர்கள்.
    சொல்லிவிட்டால் உங்கள் வயது 18+... என்று தெரிந்துவிடும்.
    :-)))

    ReplyDelete
  8. அன்பு கீதா,

    மனமார்ந்த வாழ்த்து(க்)கள்.
    ரெண்டு பேரும் நல்லா இருங்க.

    என்றும் அன்புடன்,
    துளசி.

    பி.கு: உங்க இமெயில் ஐடி அனுப்புறீங்களா?

    ReplyDelete
  9. கொடியே, (லதாவின் தமிழாக்கம்) உங்கள் ஊகம் தப்பு. நான் என்றும் 16 தான் என்று நினைக்க நீங்கள் என்னடாவென்றால் 18+ என்கிறீர்களே.

    ReplyDelete
  10. அடடா! நம்ம நலம் விரும்பி அவர்களின் பதிவை இன்னிக்குத் தானே பாக்குறேன். நேத்தே பாத்துருந்தா சரியான நேரத்துல திருமண நாள் வாழ்த்துச் சொல்லி சந்தோஷப் பட்டிருக்கலாமே? லேட்டா வந்தாலும் என்னுடைய உளங்கனிந்த திருமண நாள் வாழ்த்துகள் மேடம். சரி! இப்போ என்னுடைய கெஸ் - 17.05.1977...சரியா?

    ReplyDelete