எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 24, 2006

124. நான் வந்துட்டேன்.

ஹி,ஹி,ஹி, நான் வந்துட்டேன். இன்னிக்குத் தான் வந்தேன். வந்து பார்த்தா இணைய இணைப்பு இல்லவே இல்லை..இன்னும் வரலை. அப்பாடா, இது எழுத ஆரம்பிக்கும் போதே இணைப்பு வந்து விட்டது. உடனே விட்டேன் அம்பி, வேதா, ச்யாம், கார்த்திக், சிவா ஆகியோரின் பதிவுக்கு. சிவாவின் பதிவு மட்டும் இன்னும் வரலை. மறுபடி முயற்சி செய்யணும்.
இத்தனை நாளா எங்கே போயிருந்தேன்னு யாருக்கும் தெரியாது. நான் யார் கிட்டேயும் சொல்லவே இல்லை. சொல்லப் போனால் எங்களோட பெண், பையன் இரண்டு பேரைத்தவிர யாருக்கும் சொல்லவில்லை. நாங்க இரண்டு பேரும் ஒரு குழுவோட சேர்ந்து கைலாஷ், மானசரோவர் யாத்திரை போயிருந்தோம். பிரயாண அனுபவங்கள் வரும் நாட்களில். ஆனால் முக்கியமா ஒண்ணு சொல்லணும், உங்க எல்லாரையும் மறுபடி பார்ப்பேனா என்று ரொம்ப ஏங்கினேன். இது தான் நிஜம். எங்கே போனாலும் இந்த மாதிரி தோணியது இல்லை. வந்து அம்பியை இப்படி வாரலாம், வேதாவை எப்படிக் கிண்டல் செய்யலாம், சிவாவை எப்படிக் கேலி செய்யலாம், ச்யாமை என்ன சொல்லி ஆப்பு வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டே போவேன். வந்து ஓரளவு அதே மாதிரி எழுதிடுவேன். ஆனால் இப்போ அந்த மாதிரியான எண்ணங்கள் வந்தாலும், திரும்பி வருவோமா என்ற நிச்சயம் இல்லாமல் இருந்தது. காரணமே இல்லாமல் ராத்திரியில் பங்கஜ் உதாஸின், "சிட்டி ஆயி ஹை, வதன் கி சிட்டி ஆயி ஹை," பாட்டு நினைவு வந்து அழுகை வரும். இப்போ வந்ததும் தான் ஒரு பாதுகாப்புத் தெரிகிறது. இனி என்னோட அனுபவங்கள் தொடரும், இரண்டு வலைப்பக்கத்திலும். அப்போதான் உங்க எல்லாருக்கும் என்னோட கலக்கத்தின் காரணம் புரியும். யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க, என்னோட வரவை. எல்லாருக்கும் என்னோட நன்றி, மற்றும் எல்லாருக்கும் அந்தக் கைலாச நாதனின் அருள் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

24 comments:

 1. வாங்கோ! வாங்கோ! சீரியஸ் பதிவுகளா படிச்சி படிச்சி போர் அடிக்குது, நாலு காமெடி பதிவுகளை எடுத்து உடுங்க!

  ReplyDelete
 2. நல்வரவு.

  //என்ன சொல்லி ஆப்பு வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டே போவேன்.//

  காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாதுன்ற பழமொழிக்கு அர்த்தம் இப்ப லேசாப் புரியுது:-))))))

  கைலாசநாதர் என்ன சொன்னார்?

  ReplyDelete
 3. கீதா,


  பயணம் எல்லாம் நல்லபடியா அமைஞ்சுதா? பகவான் தரிசனமெல்லாம்
  நல்லா கிடைச்சுதா?

  அப்படியே நம்ம வலைத்தளத்துக்கும் அப்பப்ப வாங்க. வந்து கருத்துச் சொல்லுங்க!

  அன்புடன்

  ஹரிஹரன்

  ReplyDelete
 4. வாங்க வாங்க ஒங்க பயணமெல்லாம் நல்லபடி நடந்ததுல ரொம்ப மகிழ்ச்சி. பாத்தது கேட்டதெல்லாம் எழுதுங்க. படிக்கிறோம்.

  ReplyDelete
 5. பாட்டி.. எல்லாரயும் நினைச்சுண்டே போன நீங்க என்ன நினைக்கவே இல்லியா :((

  ReplyDelete
 6. "இமயம் கண்டாள்", என்ற பட்டப் பெயரும் சூட்டுவதாக முடிவு செய்து மற்றுமொரு பெயர் சூட்டுவதற்கும் ஆலோசனை நடந்து வருவதாகவும் தெரிகிறது.
  இமயம் கண்டாள்,இதயம் கொண்டாள்,சமயம் பார்த்து சதியும் செய்வாள் என்ற பட்டங்கள் எல்லாம் என் பரிசீலினைக்காக பரிந்து உரைக்கப்பட்டு இருக்கிறது
  வாருங்கள் நீங்கள் இல்லாத போது எவ்வளவு அக்கிரமங்கள் நடந்து இருக்கு. நேத்திக்கி வந்த முளைச்சு முனு இலை விடாத பொற்கொடி பாட்டி பாட்டிங்கறது,அம்பி வேறே கொள்ளுபாட்டின்னு திருத்தரான்.கேள்வி கேட்க ஆளே இல்லை.வேதவேறு அப்படியே அங்கே போய் ஐக்கியமாயிட்டா.பாவம் நீங்க தனியா எப்படி சமாளிக்கப்போறீங்களோ.ஆப்பூதான் இப்போ உங்களூக்கு காப்பூ.நான் தான் முழு ஸ்ப்போர்ட் உங்களுக்கு.

  ReplyDelete
 7. வந்ததும் குண்ட தூக்கி போடுரிங்க...

  ReplyDelete
 8. நிறைய பேரோட சாபத்தையும் மீறி வந்துட்டீங்க...:)

  ReplyDelete
 9. ஒரூ திரிலான கட்டுரை கண்டிப்பா உண்டு சீக்கிரம் போடுங்க.

  ReplyDelete
 10. எனிவே
  பை
  பை
  எல்லாத்துக்கும்
  குட்
  நைட்

  ReplyDelete
 11. கைலாயக்கிரி கண்ட கீதா வாழ்க:)
  அங்க போயும் எங்க ஞாபகமா? பாத்தீங்களா? எங்களை மாதிரி நல்லவங்க நாலு பேர் இருந்தா அவங்க ஞாபகம் வந்துண்டே தான் இருக்கும்:)

  ReplyDelete
 12. தம்பி, ரொம்ப சந்தோஷமா வரவேற்கிறீங்க, பார்க்கலாம், ஆப்பு லிஸ்ட்லே பின்னாடி போயிருக்கீங்க, இதனாலே. கொஞ்சம் காத்திருந்து ஆப்பு வாங்கவும்.

  ReplyDelete
 13. ஹி,ஹி,ஹி, துளசி, இதெல்லாம் கண்டுக்கக் கூடாது. நம்ம வேலையே ஆப்பு வைக்கிறது தானே! கைலாசநாதர் சொன்னது தனிப் பதிவா வரும், கட்டாயம் வந்து பாருங்க!

  ReplyDelete
 14. வாங்க ஹரிஹரன், உங்க வலைத் தளத்துக்கு நான் நிச்சயம் வருகிறேன். சில சமயம் பின்னூட்டம் வேண்டாம்னு தவிர்க்கறதாலே உங்களுக்குத் தெரியலை. இனிமேல் "உள்ளேன் ஐயா" என்று சொல்லி விடுகிறேன்.

  ReplyDelete
 15. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி ராகவன். பார்த்தது கேட்டது எல்லாம் எழுதுகிறேன்.

  ReplyDelete
 16. பொற்கொடி, நற நற நற நற, இந்த அம்பி பேச்சைக் கேட்டுக் கெட்டுப் போறீங்க போல் இருக்கு. எனக்கு வயசு ஆச்சுன்னு யார் சொன்னது? அம்பிதானே? அதான் வேதாள் வேதாவே சொல்லி ஆச்சே, ஆப்பு அம்பி எப்பவுமே தப்பாத் தான் சொல்லுவார்னு. அதுக்கு அப்புறமும் கூடவா?

  ReplyDelete
 17. ஹி,ஹி,ஹி, சார், ஒருத்தரைப் பாட்டி, கொள்ளுப் பாட்டின்னால் அதனால் அவங்க பாட்டி ஆகி விடுவாங்களா என்ன? சின்னப் பொண்ணுங்க பெரிய மனுஷத் தனமாப் பேசறப்போ, "பாட்டி மாதிரிப் பேசறே", னு சொல்ல மாட்டாங்களா? அது மாதிரிதான் பொற்கொடி சொல்றாங்க! வேதா என்ன சாதா! இனிமேல் பாருங்க. அப்புறம் உங்க ஆதரவு வெளியில் இருந்தா அல்லது உள்ளே வந்தா? பதவி எல்லாம் கிடையாது. one and only leader நான் மட்டும் தான். போட்டிக்கு வந்துடாதீங்க! :D

  ReplyDelete
 18. மின்னல், நற நற நற நற நற நற.\

  த்ரில்லா? மயிர்க்கூச்செரியும் சம்பவங்கள் நிறைய இருக்கிறதே!

  ReplyDelete
 19. ஹி,ஹி,ஹி, வேதா ரொம்ப அப்பாவியா இருக்கீங்க! நான் அங்கே போயும் உங்களை எல்லாம் நினைச்சது ஆப்பு வைக்கத் தான். நல்லவங்கனு யாரைச் சொல்றீங்க? என்னைத் தானே? ரொம்ப நன்றி. :D

  ReplyDelete
 20. amamamam.. trc sir support panina than undu ungaluku.. pathu aapu aapu nu yosichu unga moolai off aagida poradhu :)

  ReplyDelete
 21. vedha madri ninga kudirai la ellam poiruka mudiyadhu.. vayasanadhala avanagale vandila vechu talli irupanga seriya?

  ReplyDelete
 22. பொற்கொடி, யாருக்கு வயசு ஆயிடுச்சு? உங்களுக்கும், அம்பி, வேதா, ச்யாம், சிவா இவங்க எல்லாருக்கும் தான்.
  சும்மா தி.ரா.ச. சார் சப்போர்ட்டுனு எழுதினால் எனக்கு வயசு ஆயிடுச்சுன்னு அர்த்தமா என்ன? நற நற நற நற நற நற. ஆப்பு லிஸ்ட்லே வெகு வேகமா முன்னுக்கு வந்துட்டு இருக்கீங்க, ஜாக்கிரதை!

  ReplyDelete
 23. வந்துட்டாங்கையா...வந்துட்டாங்க...இவளோ நாளா எல்லோரும் நிம்மதியா இருந்தாங்க...இனி ஒரே ஆப்போ அப்புதான்....தலைவியே welgum bag (கேப்டன் ஸ்டைல்ல படிங்க) :-)

  ReplyDelete
 24. yenada ithu - oru teleserial villi - ali commedy serial missingunnu yoschinduirunthen.. appadiya - anth gangothirilla - nalla arivu, budhi ( seri seri) ennakku varnumnu prathanai pannindu vanthella ?

  ReplyDelete