எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 29, 2006

123. தலைவியின் வடமாநிலத் திக்விஜயம்

சங்கத்துச் சிங்கங்களே, புலிகளே, எலிகளே, மற்றும் உள்ள பெருமக்களே, எல்லாருக்கும் தலைவியின் பேரன்பு கலந்த வாழ்த்துக்கள். இப்போது தலைவி தன் சுற்றுப் பயணத்திட்டத்தை அறிவிப்பார்.
தலைவியை ஏற்கெனவே,
அப்துல் கலாம் அவங்க கூப்பிட்டாஹ!
மன்மோகன்சிங் அவங்க கூப்பிட்டாஹ!
சோனியா காந்தி அவங்க கூப்பிட்டாஹ!
வாஜ்பாய் அவங்க கூப்பிட்டாஹ!
சோம்நாத் சாட்டர்ஜி அவங்க கூப்பிட்டாஹ!

ஹி,ஹி,ஹி, இத்தனை பேர் கூப்பிட்டிருக்கறப்போ போகாமல் எப்படி? அதான் போறாங்க! அங்கேயும் போய்க் களப்பணி ஆற்றி வெற்றிக் கொடி நாட்டி விட்டு வருவாங்க. அதுவரை சங்கத்தின் பொறுப்புக்களையும், எல்லாருக்கும் ஆப்பு வைக்கும் சிறப்புக்களையும் யாரிடம் ஒப்படைப்பது என்று குழப்பம்! ஏற்கெனவே அம்பிக்கு ஆப்பு வைத்த மகோத்ஸவத்தில் கலந்து கொண்டவர்களில் யாரையாவது போடலாம்னு பார்த்தா இந்தக் கைப்புள்ள ஏற்கெனவே அம்பி காட்டிய பஞ்சாபிக் குதிரையைப் பார்த்துக் கிறுகிறுத்துப் போயிருக்கார். அவர் சரியா வராது. தானா வலுவிலே வந்து மாட்டிக்கும் தேவ் சரியானு பார்த்தா, பாவம் அப்பாவி, இப்போ தான் குழந்தை பிறந்திருக்கு. கொஞ்சம் ப்ரீயா இருக்கட்டும்னு பார்க்கறாங்க.

விவசாயி நேத்திக்கு வந்து இரண்டு முறை தலையிலே அடிச்சுக்கிட்டதிலே தலையிலே ஏதாவது இருக்கானு சந்தேகம்! :D வேதாள வேதாவை நம்பவே முடியாது. எப்போ நம்ம பக்கம், எப்போ அம்பி பக்கம், எப்போ ச்யாம் பக்கம்னு மாறி மாறி இருப்பாங்கனு புரியாது. லதா புதுசு. இப்போ தான் விண்ணப்பம் வந்திருக்கு. அது தவிர ஆப்பு வக்கிற லிஸ்டே நிறைய இருக்கே அதுக்கு என்ன செய்யறது? இன்னும் வேதா, சிவா, ச்யாம் எல்லாரும் முதல் நிலையில் ஆப்பு வாங்கக் காத்திருப்புப் பட்டியலில் இருக்காங்க! அது தவிர கைப்புள்ள சங்கத்திலே வாங்கறது போதாதா? இங்கே வேறயானு பயப்படறார். இந்த தேவ் பாவம் ஆப்புனு தெரியாம வந்து மாட்டிக்கிறதாலே அவருக்கு வைக்க மனசு வரலை. விவசாயிதான் இன்னும் எழுந்திருக்கவே இல்லை. மின்னல், கார்த்திக் இவங்க கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் இருக்காங்க. இதிலே மின்னல் என்னவோ புள்ளி விவரம் எல்லாம் சொல்றதினாலே ஆப்புப் புள்ளி விவரமும் கொடுத்தால் என்ன செய்யறதுனு புரியலை! கார்த்திக் ஏதோ சொன்னதாலே இன்னிக்கு வந்து தலையைக் காட்டிட்டுப் போயிருக்கார். ஆப்பு வச்சா அப்புறம் வருவாரா? சந்தேகம் தான்,. ஒரே குழப்பமா இருக்கு தலைவிக்கு!

தவிர, இம்முறை பிரிவுபசார விழா வேறே தொங்கல்லே இருக்கு. போனமுறை கார்த்திக் போஸ்டர் எல்லாம் போட்டு அமர்க்களப்படுத்திட்டார். இம்முறை செய்வாரா? சந்தேகம் தான். இந்த சிவா வேறே அவர் தலையில் பொறுப்பைக் கொடுத்தால் ஒரே அழுகை! அவருக்கு லாலிபாப் வாங்கவே நேரம் போதலை. அதனால் தலைவி ஆப்பு வைக்கும் தங்கமான பொறுப்பைத் தானே ஏற்றுக் கொண்டிருக்கிறார். யாருக்கும் விடவில்லை. பிரிவுபசார விழாவுக்கும் தலைவி "நமக்கு நாமே" திட்டத்தின் படி அவருக்கு அவரே விழா எடுத்துக் கொள்ள முடிவு செய்து விட்டார்.
சங்கத்தின் தங்கத் தலைவி, புரட்சித் தலைவி, யானைத் தலைவி, (சீச்சீ) தானைத் தலைவி, வடமாநில திக் விஜயம்!!!!!!!!!!!!!!!!!!!
அங்கே பொறுப்பில் உள்ளவர்கள் வரவேற்பு விழாவிற்கு ஏற்பாடு செய்து தலைவி தங்கவும், தலைவர்களைக் கலந்து ஆலோசிக்கவும் ஏற்பாடு செய்யுமாறு தலைமைக் கழகம் உத்திரவிடுகிறது. (தலைமைக் கழகம்னா என்ன, எல்லாம் நானே தான்) வேறு வழி? எல்லாம் தலை எழுத்து! ஒரு புகழ் பெற்ற தலைவியா இருந்துட்டு நானே எல்லாம் செய்ய வேண்டி இருக்கு. :D

28 comments:

 1. நீங்களும் உங்களவரும் தென்திசைக் குமரியாடி
  வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்
  சித்தூர்கட் வாவியுள் தங்கி
  நனைசுவர் விக்கி கனைகுரல் ராகா
  ப்ளாக்பார்த் திருக்குமிந்த மடையனைக் கண்டு
  எம்கோ மாறன் வழுதிக் கூடலில்
  கட்ட சோறின்றி ரொட்டியால் மெலிந்து
  கையது கொண்டு வாயது பொத்தி
  காலது கொண்டு காதது தழீஇப்
  பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
  ஏழை யாளனைக் கண்டு ஹை எனுமே!

  ReplyDelete
 2. mazhai vittalum thoovaanam vidaathu polirukkee! :)
  intha thdavaiyavathu saambu maamavai paduthaama periyavangala latchanama oorukku poittu bathramaa vaanga! :)

  ReplyDelete
 3. ஹி,ஹி,ஹி, கைப்புள்ள,
  ராஜஸ்தான் இப்போ நம்ம லிஸ்ட்லே இல்லை. அப்புறம் வரேன். அதுவரைக் காய்ந்த ரொட்டியைச் சாப்பிட்டு விட்டு வெயிட் பண்ணுங்க!

  ReplyDelete
 4. ஆப்பு அம்பி, grrrrrrrrrrrrrrrrrrrrrrrr......

  ReplyDelete
 5. raabri thevi koopidalaya????

  ReplyDelete
 6. O.K. O.K. Manasu, for your satisfaction,
  Rabri Devi avargal kuuppittaaha!
  Lalloo Prasad avargal kuuppittaaha!
  May be now you are satisfied. I just do not want to exhibit myself as an "ALPAM'" by simply saying this and that. So I do not want to tell all the names. Hi, Hi, Hi,Hi.

  ReplyDelete
 7. அட சாமி ஆம்ஸ்ட்ராங் கூட இவளோ பெரிய பில்ட் அப் குடுத்து இருப்பானோங்கறது சந்தேகம் தான்...ஆண்டவன் ஆட்டுக்கு...வேணாம் நான் ஒன்னியும் சொல்லல :-)

  ReplyDelete
 8. @kaipulla, ahaa, kaipulla, naarai vidu thoothu ippadi ulta panna mudiyum!nu ippa thaan therinjukitten. sabaaash! really enjoyed and appreciate your thamizh pulamai! :)

  @geetha, pathukoonga! kaipullayoda oru commente eppadi kalakalla irukku! :)

  ReplyDelete
 9. //அங்கே பொறுப்பில் உள்ளவர்கள்// இது என் கண்ணுக்கு வெறுப்பில் உள்ளவர்கள்னு தெரிஞ்சுது என் தப்பா பாட்டீ? :)

  ReplyDelete
 10. ச்யாம், ரொம்பப் புகை வருதே, வாசனை இங்கே எல்லாம் வருது. ஆப்பு லிஸ்ட்லே பேர் முன்னாலே வந்தாச்சு! இப்படிப் புகை விட்டா?:D

  ReplyDelete
 11. ஆப்பு அம்பி,
  இதோ எம் தமிழ்ப் புலமை!

  ஆப்புப் புறத்ததாத் தான் வாங்கல்
  சிறந்த ஆப்பெனினும் வேண்டற்பாற்றன்று.

  எல்லா ஆப்பும் ஆப்பல்ல -அம்பி
  வாங்கும் ஆப்பே ஆப்பு!

  தனக்குவமை இல்லாதான் ஆப்பு சேர்ந்தார்க்கல்லார்
  ஆப்பு வாங்கல் அரிது!

  சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்து, வளர்ந்து, படிச்சுக் குப்பை கொட்டிட்டு என்னைப் பார்த்துத் தமிழ்ப் புலமை இல்லை எனச் சொல்லிய அம்பியே!
  இதோ பார் என் புலமையின் சிறப்பை!
  கல்வெட்டுக்களால் பொறிக்கப் பட வேண்டிய எழுத்துக்களைப் பார்!
  என் தமிழின், என் தாய்த் தமிழின் சிறப்பைப் பார்!
  வாங்கிக் கொள் இன்னொரு ஆப்பு! :D

  ReplyDelete
 12. பொற்கொடி,
  எம் தமிழைப் பார்த்தும் நீ அறியாயோ என்னை!
  யாரைப் பார்த்து பாட்டி என்கிறாய்?
  ம்ஹூம், இது நல்லாவே இல்லை. புதுசுங்கறதாலே பேரைச் சேர்த்திருக்கேன் ஆப்பு லிஸ்ட்லே. சீனியாரிட்டி படியா என்னங்கறதை அப்புறம் முடிவு செய்யறேன். :D

  ReplyDelete
 13. othukaren, ungalukku thamizh pulamai irukku! :)
  (cha! ippadi maanatha vaanganumaa? :)

  //என் தப்பா பாட்டீ? :) //
  paatiya vida kollu paati!nu sollvathu saala siranthathu! :)

  ReplyDelete
 14. அம்பி,
  "வாங்கின ஆப்பெல்லாம் ஆப்பெல்ல இனி வாங்கும் ஆப்பே ஆப்பு!"
  வரேன் சீக்கிரமாவே ஆப்பு வைக்க!

  ReplyDelete
 15. ஆப்பு ஆப்பென்று சொல்லித் திரிவார்
  அவர்தம் வயதும் மூப்பன்றோ:)

  இது எப்படி இருக்கு:)

  ReplyDelete
 16. யாரோ யாரையோ ஏதோ சொல்றாங்க, எனக்கு என்ன வந்தது? இல்லையா வேதா?

  ReplyDelete
 17. நல்லா தான் சமாளிக்கறீங்க, போங்க போங்க திரும்பி இங்கத் தான வரப்போறீங்க(எப்படியும் தொல்லை தாங்காம உங்கள துரத்திடுவாங்க)அப்புறம் பார்க்கலாம்:)

  ReplyDelete
 18. டெல்லிக்குச்செல்லும் தலைவி வாழ்க!யாராவது சின்னபொண்ணை கைபிடித்து கூட்டிண்டு போனா நல்லது. பாம் ஸ்கேர் வேறு இருக்கு. வல்லியம்மா ரப்ரி தேவியைமட்டும் சொன்னீங்க பூலான் தேவி போஸ்ட் வேறு காலியாக இருக்கு.

  ReplyDelete
 19. geethaa, inga irunthu post marrum comments adikkirathu konjam kashtama irukku..athanala thaan adikadi vara mudivathillai.. unga ennangalai padikalaina anniku pozhuthu sanja maathiriye irukkathu.. adikadi varren madam.. postla pOttu manaththai flight yeththaatheenga.. :-)

  ReplyDelete
 20. மக்களே!
  ஒரு விசயத்தை நீங்க கவனிக்க தவறி விட்டீர்கள். அதை மட்டும் சொல்லி விட்டு நான் ஒடி விடுகின்றேன்.

  தலைவியை அழைத்த மக்கள் எல்லாரையும் பாருங்க. எல்லா 60 வயதுக்கு மேல் உள்ள ஆளுங்க தான். அவங்க ஏன் இவுங்கள கூப்பிடுறாங்க.
  எல்லாத்தையும் நானா சொல்ல முடியும். நீங்களே யோசிச்சுக்குங்க.

  ReplyDelete
 21. thideernu delhi poren varathukku konja naal akumnu oru kundai thokki podureengala.. inimel enga naan poven, intha maathiri pathivukal padikka.. oru laptop vangittu oor suththa vendiyathu thaane madam.. enna madam neenga.. ok take care..

  a

  ReplyDelete
 22. பாட்டீ சீக்கிரம் வாங்க ஐ மிஸ் யூ :)

  ReplyDelete
 23. kupai verra kooodunengalla sanga madhurailla. serri serri - delhi poiii angee vera madurai manathai vangathenga..

  ReplyDelete
 24. @veda: kalakkal ponga!
  @ geetha:
  "அகழ்வாரை தாங்கும் நிலம் போல,
  உம் வயதை இகழ்வாரை கடித்து கொலை!"

  பேசாம இவங்களை கடிச்சே(பல்லால்- அது இருந்தா)கொன்னுடுங்க! :)

  ReplyDelete
 25. //ஆப்பு ஆப்பென்று சொல்லித் திரிவார்
  அவர்தம் வயதும் மூப்பன்றோ:)//

  என்ன இருந்தாலும் என் உடன் பிறப்ப அடிச்சுக்க முடியுமா...வேதா நீ கலக்குமா :-)

  ReplyDelete
 26. mm ,koncha naal(matham) thane nimathiyay poitu varatume,
  ean ippadi ellarum paday padutharel
  gita mami ungal vada manila thig vijayam vetrikarama mudiyarthuku ean vazhthukal(vazhthum vasille)

  nan puthithay blog padipaval

  ReplyDelete