சங்கத்தின் நன்மைக்காக விடாது பாடுபட்டு வரும் தலைவி தன் வடமாநிலச் சுற்றுப் பயணத்தின் போது திடீரென வந்த அழைப்பின் பேரில் நேபாளம், திபெத் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்தார். அப்போது அவர் நேபாளத்தில் மன்னர் ஞானேந்திராவுடன் சில பேச்சு வார்த்தைகள் நடத்தினார். அதன் விவரம் வருமாறு:
**********************
தலைவி: வணக்கம், மன்னர் ஞானேந்திரா அவர்களே!
மன்னர்: நீங்க யார் தெரியலியே? பார்த்தா ரொம்ப புத்திசாலியாத் தெரியறீங்க?ரொம்பச் சின்னப்பொண்ணா வேறே இருக்கீங்க!
தலைவி: (மனதுக்குள்) (உங்களுக்குத் தெரியுது, இந்த அம்பிக்கும் அவங்க கூட்டாளிகளுக்கும் புரியலை.) வெளிப்படையாக: ஹி,ஹி,ஹி, கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.
மன்னர்: அப்படின்னா என்ன அர்த்தம்?
தலைவி:(மனதுள் தலையில் அடித்துக் கொள்கிறார்.) ஹி ஹி ஹி, நான் வந்து வ.வா.சங்கத்தின் நிரந்தரத் தலைவலி(வி), அந்தச் சங்கத்தின் சார்பா வந்திருக்கேன். களப்பணி ஆற்றுவதற்கு.
மன்னர்: (பயத்துடன்) சங்கமா? சங் பரிவார் எல்லாம் இங்கே வரக்கூடாதே? இது மதச் சார்பற்ற நாடாச்சே? முதல்லே இங்கே இருந்து போயிடுங்க! பிரதமர் கொய்ராலாவுக்குத் தெரிஞ்சா என் கதி அதோ கதி தான்.
தலைவி: (பல்லைக் கடிக்கிறார்.) மளுக். என்று சத்தம் கேட்கிறது.
மன்னர்: என்ன சத்தம் அது? பயமா இருக்கே?
தலைவி: என்னோட பல் விழுந்தது தான் சத்தம் கேட்டது. இப்போ வந்து களப்பணி ஆற்றுவது என்றால்...
மன்னர்: அதானே பார்த்தேன். (கொஞ்சம் நிம்மதியுடன்) அதென்ன களப்பணி ஆற்றுவது? காப்பி, டீ ஆற்றுவது மாதிரி இருக்குமா? ரொம்பச் சூடாக இருக்குமோ? குடிக்கலாமா? அப்படியே சாப்பிடலாமா?
தலைவி: தெரியாத் தனமா உங்களைக் கற்றார்னு சொல்லித் தொலைச்சுட்டேன். இது கூடத் தெரியாம நீங்க என்ன மன்னர்னு புரியலை? சரி, போகட்டும், நான் நாளை திபெத் போகிறேன். அங்கே இந்த மாவு இருக்கே அது எப்படி எடுத்துட்டுப் போகிறதுனு புரியலை!
மன்னர்: மாவோவா? கடவுளே, ஈஸ்வர், அல்லா, ஜீஸஸ், மஹாவீர், புத்தர், குருநானக் இன்னும் எல்லா மஹான்களுக்கும் வணக்கம். இவங்க சொல்றதுக்கும் எனக்கும் சம்மந்தம் கிடையாது. மாவோ பத்தி எனக்குச் சத்தியமா ஒண்ணும் தெரியாது.
தலைவி: அந்த மாவோ இல்லை. இது மாவு, சொல்லுங்க, மாவு, மாஆஆஆஅவூஊஊஊஊஊஊ.
திடீரென மன்னர் ஓட்டம் பிடிக்கிறார். தலைவி திகைத்துப் போய்ப் பார்க்கத் தூரத்தில் பிரதமர் கொய்ராலாவுடன் மாவோயிஸ்ட் தலைவர்கள் வருகிறார்கள்.தலைவியும் ஓஓஓஓஓட்ட்ட்ட்ட்ட்டம் பிடித்து ஹோட்டல் ரூமில் தான் வந்து நிற்கிறார்.ஹோட்டல் அறையில் பத்திரிகையாளர் சந்திப்பு. ஒரே கூட்டம். தலைவியுடன் நேர் காணல்.
தலைவி பெருமையுடன் சொல்கிறார்: மன்னருடனான சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தது.
பத்திரிகைக் காரர்கள்: சந்திப்பின் நோக்கம்? மற்றும் விவரம் தேவை.
தலைவி: மன்னிக்கவும். அரசாங்க ரகசியம் சொல்ல முடியாது.(ஹி ஹி ஹி ஹி ஹி ஹி, கெக்கலி கொட்டிச் சிரிக்கும் சப்தம் கேட்கிறது.)
தலைவி கோபத்துடன் பத்திரிகைக்காரர்களைப் பார்க்கிறார். "யார் சிரித்தது?"
பத்திரிகைக்காரர்கள்: நாங்கள் இல்லையே?
மறுபடி சிரிப்புச் சத்தம் கேட்க தலைவி உன்னிப்பாகக் கேட்கிறார். சிரித்தது தலைவியின் மனசாட்சி.
தலைவி:" வந்துட்டியா? இங்கேயும்? பேசாமல் போய்த் தொலை அல்லது வாயை மூடு."
மனசாட்சி:" கெக்கே கெக்கே கெக்கே," என்று சிரிக்கிறது.
"எனக்குச் சத்துரு யாரும் வேண்டாம் நீயே போதும் "என்று தலைவி தலையில் அடித்துக் கொள்கிறார்.
கீதா,
ReplyDeleteஉண்மையிலேயெ மன்னர் ஞானேந்திராவைச் சந்தித்திருந்தாலும் இவ்வண்ணமேதான் பேசியிருப்பார்.
நேரடியாக வருவதையே சரியாக ஹேண்டில் பண்ணத்தெரியாத சோப்ளாங்கி மன்னர் (23ம் புலிகேசியின் நிஜ உருவம்) தானெ அவர்.
ஏற்கனவே மாவா(ட்டி)யிஸ்டுகள் அவரை துவம்சம் பண்ணி இட்லிக்கோ ஊத்தப்பத்திற்கோ உதவும் அரிசி"மாவா"க்கியிருக்கிறார்கள் இதில்
அவர் அரசவையில் நீங்க வேற உங்க மனசாட்சியுடன் மானசீக உரையாடினால் ஓடித்தானே ஆக வேண்டும் மன்னர் ஞானேந்திரா!
அன்புடன்,
ஹரிஹரன்
/./
ReplyDeleteபார்த்தா ரொம்ப புத்திசாலியாத் தெரியறீங்க?ரொம்பச் சின்னப்பொண்ணா வேறே இருக்கீங்க!
/./
இதெல்லாம் ரொம்ப ஒவரு..:)
ரொம்ப டாங்ஸு ஹரிஹரன், உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த மாதிரி ஊக்கத்தைத் தான் நான் எதிர்பார்க்கிறேன்.
ReplyDelete@அம்பி, புரியுதா? இப்போவாவது?என்னை மாதிரி புத்திசாலிங்களுக்கு எவ்வளவு ஆதரவுன்னு?
ரொம்பச் சின்னபுள்ளத் தனமாயில்லே இருக்கு நீங்க சொல்றது? ஒரு புத்திசாலியான சின்னப்பொண்ணு தன்னை வேறே எப்படிச் சொல்லுவானு எதிர்பார்க்கறீங்க? Male Chauvnist! :D
ReplyDelete//தலைவி கோபத்துடன் பத்திரிகைக்காரர்களைப் பார்க்கிறார். "யார் சிரித்தது?"
ReplyDelete//
சிரித்தது நான்தான்.
// பார்த்தா ரொம்ப புத்திசாலியாத் தெரியறீங்க?ரொம்பச் சின்னப்பொண்ணா வேறே இருக்கீங்க!
//
இதுதான் கொஞ்சம் ஓவராத் தெரியுது!
``அமானுஷ்ய ஆவின்னா பயப்படுவேன்னு நினைச்சீங்களா என்ன? சிரித்தது நீங்க தான்னு தெரியும். இருந்தாலும் நான் வெளிக்காட்டிக்காமல் தைரியமாத் தான் இருந்தேன். பயந்தது நீங்க தான்.
ReplyDeleteஒரு சின்னப் பொண்ணு தன்னைச் சின்னப் பொண்ணுனு சொல்லிக்காம வேறே என்ன சொல்லுவா? எத்தனை தரம் எத்தனை பேருக்குச் சொல்றது? சரியான tube light. :D
//என்னோட பல் விழுந்தது தான் சத்தம் கேட்டது//
ReplyDeleteபாத்தீங்களா நான் சொல்ல சொல்ல கேட்காம பழைய பல்செட்டை போட்டுண்டு போயிருக்கீங்க:) இதுக்கு தான் என்னை மாதிரி குழந்தைகளோட அறிவுரையை தட்டக் கூடாதுங்கற்து.
//தலைவியும் ஓஓஓஓஓட்ட்ட்ட்ட்ட்டம் பிடித்து ஹோட்டல் ரூமில் தான் வந்து நிற்கிறார்.//
உண்மையை சொல்லுங்க அவங்க தான் உங்களைப் பாத்து ஓடியிருப்பாங்க:)
ஆமா முக்திநாத் போனீங்களா?
பார்த்தா ரொம்ப புத்திசாலியாத் தெரியறீங்க?//
ReplyDeleteஇதுதான் கொஞ்சம் ஓவரு.
புத்தி- அறிவு
சாலி-மைத்துனி (சாலா -மச்சான்)
//ரொம்பச் சின்னப்பொண்ணா வேறே இருக்கீங்க!//
மன்னருக்கு கண் தெரியாது போலிருக்கு.
//என்னோட பல் விழுந்தது தான் சத்தம் கேட்டது.//
பல்லா இல்லை பல் செட்டா?????
//இப்போ வந்து களப்பணி ஆற்றுவது என்றால்...//
களத்து மேட்டை கூட்டி வாரி அள்ளி சுத்தம் செய்யுறது. ஹி ஹி.
//தலைவியும் ஓஓஓஓஓட்ட்ட்ட்ட்ட்டம் //
இதெல்லாம் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா.
நொண்டி அடிச்சுட்டு வந்துட்டு ஓட்டமா.
//ஒரே கூட்டம். //
அதாவது ஒரே ஒரு ஆளு.
//தலைவி தலையில் அடித்துக் கொள்கிறார்.//
அக்கா, பாத்து பாத்து , டோப்பா விழப்போகுது.
@அம்பி, புரியுதா? இப்போவாவது?என்னை மாதிரி புத்திசாலிங்களுக்கு எவ்வளவு ஆதரவுன்னு
ReplyDeleteஅதான் சொல்லீட்டிங்க இல்லை கற்றாரை கற்றாரே காமுறுவார்ன்னு ஆனா அதுக்கு அப்பறம் இருக்கறத சௌகரியாமக விட்டுவிட்டீர்கள்.முதுகாட்டில் காக்கையுகக்கும் பிணம் என்றும் சொல்லி இருக்கு.நேபாள மன்னாருக்கு ஏற்கனவே கஷ்டம்,போதக்குறைக்கு பொன்னியம்மா குறைன்னு நீங்க வேறே அவரை பயமுறுத்தனுமா?
grrrrrrrrrrr வேதா(ள்), எனக்கு ஒண்ணும் பல்செட் இல்லை. நீங்க வச்சுக்கிட்டா நானும் வச்சுக்கணுமா என்ன? எல்லாம் ஒரிஜினல் எனக்கு. ஹி,ஹி,ஹி, நம்மளைப் பார்த்துக்கூடப் பயப்படறாங்கன்னா நம்மளோட சக்தியைப் பத்திப் பெருமையா இருக்கு.
ReplyDeleteமுக்திநாத் போகாமலா? போனேன். ஒண்ணொண்ணா வரும் பாருங்க!
வாங்க பெருசு, எல்லாருக்கும் எரியுது போல இருக்கு நம்மளோட பரந்து விரிந்த (!!!!!!!!) விசாலமான அறிவைப் பார்த்து? ரொம்பப் புகையாதீங்க, எற்கெனவே புகை ஜாஸ்தியாக இருக்கு.
ReplyDeleteநற நற நற நற யாருக்குப் பல்செட்? மன்னருக்குக் கண் தெரியாதுன்னா சொல்றீங்க? அதெல்லாம் இல்லை! என்னைப் பார்த்துத் திகைத்துப் போய்ச் சொன்ன வார்த்தைகள் அவை.
களப்பணி ஆற்றுவது என்றால் என்னன்னு கூடத் தெரியலையே! காப்பி, டீ ஆத்தறது மாதிரிதான். :D
நான் ஒண்ணும் நொண்டி அடிச்சிட்டு வரலை. இரண்டு காலாலே நல்லா நடந்து தான் வந்தேன். டோப்பாவெல்லாம் ஏன் வைக்கிறீங்க? முன்னாலேயே சொல்லக் கூடாது? மெதுவாத் தட்டி இருப்பேனே? டோப்பா பத்திரம்.
vedha same pinch :) pal settu potu ponadum illama ada kadi vera.. pavam anda pallu :(
ReplyDeletethalaivi odi irundalum kuda karanam enava irukum teriyuma? mannar ivangala raja maatha nu edhum kuptruparu :)
ஹிஹி சொல்றதை ஒழுங்கா சொல்லணும், குழந்தைங்கெல்லாம் பல்செட் வச்சுக்கற்தில்லை, உங்களை மாதிரி பாட்டிங்க தான் வச்சுப்பாங்க:)
ReplyDeletegrrrrrrrrrrrrrrrrrr.
ReplyDeleteதி.ரா.ச. சார், நீங்களுமா? உங்களை எனக்கு சப்போர்ட்டுன்னு நினைச்சேன், இப்படிக் காலை வாரறீங்களே? ரொம்ப மோசம் சார் நீங்க! உங்க அம்பி என்னைப் பார்த்து பயந்துட்டு வரவே இல்லை பாருங்க! தனி ஆளா என்ன செய்யப் போறீங்களோ?
பொற்கொடி, பொற்கொடி, இருக்கு உங்களுக்கு வட்டியும் முதலுமா. காத்துக்கிட்டு இருங்க.
ReplyDeleteவேதா, ரொம்ப டாங்ஸு என்னைக் குழந்தைன்னு சொன்னதுக்கு. சரியா பாட்டி? :D
ReplyDeleteஹா, ஹா, ஹா, என்னோட வரவிலே அம்பி இருந்த இடமே தெரியலியே? ஹையா ஜாலி, இனிமேல் யாருக்கு வேணாலும் எவ்வளவு வேணாலும் ஆப்பு வைக்கலாம். அம்பி, ரொம்ப டாங்ஸு.
ReplyDeleteஞானேந்திராவயும் விட்டு வைக்கலயா...சரி அவனுக்கு சனி உச்சத்துல இருந்தா யாரு என்ன பண்ன முடியும்...
ReplyDelete//என்னோட பல் விழுந்தது தான் சத்தம் கேட்டது//
இன்னும் எத்தனை மிச்சம் இருக்கு :-)
நான் ஊருக்கு புதுசுங்க.. தெரியாம 'உங்க தலைவி யாரு'ன்னு பொற்கொடியைக் கேள்வி கேட்டுட்டேன் நேத்து.. இப்போதான் shyam வந்து அது நீங்கதான்னு சொல்லிட்டுப் போனார்..(//இங்க போய் பாருங்க...எங்க தலைவி விடுற பில்டப் பார்த்து J.J, Imelda Marcos, Benazir Buto இவங்க எல்லாம் பிச்சை எடுக்கணும்.....//)
ReplyDeleteஇங்க வந்து பார்த்தா.. ஆத்தாடீ.. பேருக்கு ஏத்தாப்ல தலைவிதான் நீங்க.. உங்க சங்கத்து ஆளுங்கள கோச்சுக்க வேணாம்னு நீங்க தான் என் சார்பா சமாதானம் செய்யணும்..
தலைவி.. நான் ஏதோ சின்னப் புள்ளத் தனமா கேட்டுட்டேன்.. மனசுல வச்சுக்கப் படாது.. உங்க சங்கத்து சமாசாரம் எதுவும் தெரியாம இருந்துட்டேன்.. மன்னிச்சுடுங்க..
அதுசரி.. தலைவி யாருன்னு தெரிஞ்சுகிட்டேன்.. உங்க சங்கத்து பேரு வ.வா.சங்கம்னு என்னமோ வாசிச்சேன்.. அப்படீன்னா என்னாங்க?.. (இது அடுத்த கேள்வி.. இதுக்கு யார்கிட்டேயிருந்து வாங்கிக் கட்டிக்கப் போறேனோ தெரியல..)
நான் என்னை தான் குழந்தைன்னு சொன்னேன், கண்ணாடி போட்டுண்டு இன்னொரு வாட்டி படிங்க:) ஆமா அம்பிக்கெல்லாம் பயப்படறீங்க:) அய்யோ அய்யோ:) பொற்கொடி இங்க பாரு இந்த காமெடியை:)
ReplyDelete//புத்திசாலியாத் தெரியறீங்க?ரொம்பச் சின்னப்பொண்ணா வேறே இருக்கீங்க!//
ReplyDeleteதாங்க முடியலடா சாமி
//பாத்தீங்களா நான் சொல்ல சொல்ல கேட்காம பழைய பல்செட்டை போட்டுண்டு போயிருக்கீங்க//
வேதா, நல்லா தலைவியை பழிதீக்குரீங்க போல.. அதெல்லாம் வேண்டாம்.. தலைவி ஏதாவது உங்களுக்கு புதுப் பேர் வச்சுரப்போறாங்க
//மனசாட்சி:" கெக்கே கெக்கே கெக்கே," என்று சிரிக்கிறது.//
ReplyDeleteசில சமயம் உங்க மனசாட்சி என்னை மாதிரியே பேசுது.. இதை தான் தலைவர்களோட மனசாட்சி எப்போமே ஒரு தொண்டன் மாதிரி செயல்படும்னு சொல்றதா
ச்யாம், பல்லு இருக்கிறதாலே தானே விழுது? இது கூடத் தெரியலையே? இன்னும் நிறையவே இருக்கு. அப்போ அப்போ விழும்,
ReplyDeleteரொம்ப டாங்ஸு, புதுசா வந்த தொண்டருக்கு என்னை அறிமுகம் செஞ்சதுக்கு. (மனசுக்குள்ளே பல்லைக் கடிக்கிறது தெரியுது.)
ஹி,ஹி,ஹி, எந்தக் கடல் கணேசன் நீங்க? எப்படி இருந்தாலும் என்னைத் தலைவியா ஏத்துக்கிட்டஉண்மைத் தொண்டரான உங்களுக்கு நல்வரவு. (அப்பாடி, அடுத்த ஆப்பு லிஸ்ட்டுக்கு ஒரு அப்பாவி(!) வரவு.)
ReplyDeleteசங்கத்து ஆளுங்களைப் பார்த்துப் பயப்படாதீங்க. நம்ம தலைவர் கைப்புள்ள அதியமான் என்றால் நான் ஒளவையாக்கும். ஒளவை தான் சின்ன வயசிலேயே பாட்டி ஆனாங்க இல்லையா, அதான் இங்கே எல்லாரும் என்னை அன்போட அப்படிச் சொல்றாங்க. எல்லாம் நம்ம தமிழ்ப் புலமையைப் பார்த்துட்டுத் தான்.
நற நற நற நற வேதா, உங்க மேலே பொற்கொடி மேலே இன்னும் அம்பி மேலே எல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படுகிறது. தலைவி இல்லாத சமயம் தி.ரா.ச. கூட்டுடன்(கத்திரிக்காய்க் கூட்டா) எனக்கு எதிராகச் சதி செய்ததற்கு! :D
ReplyDeleteகார்த்திக், இருங்க உங்களுக்கு "அசின் கார்த்திக்" என்று பெயர் வைத்தது வாபஸ்.
ReplyDeleteநீங்க பழைய பல்செட் போட்டுக்கிட்டா எனக்குப் பல்லே இல்லைனு அர்த்தமா என்ன? பத்திரம், பிஸ்ஸா சாப்பிடும்போது பல் வந்துடப் போகுது! :D
நற நற நற நற நற நற
ஆப்பு லிஸ்ட்லே முன்னேறிட்டீங்க, வாழ்த்துக்களுடன். அடுத்த ஆப்புக்கு நீங்க தயாரா?
ayyO thalaiviyE enna ithu...
ReplyDelete1000 appugal kodduthu/(vangiyaaa) apurva Kumari/mami geetha sambasivamuuu - oru paddatha nengaleee produce panni - athulla gilli mathiri screen play ezhithi - vadivellukku nightlla nightmare koddukkara khanna nadichi - release pannungoo.. unka sangathu passanga 1000 nall ottuvangaa..
ReplyDelete