எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, January 04, 2007

178. அணி மாற்றமா? தெரியாதே!!!!!!!!!!!

முதலில் சில ஜோக்குகள்:
மன்னா, மன்னா, என்னா, என்னா

அரசி: யாரங்கே, இந்தச் சிம்மாசனத்தைக் கொஞ்சம் சுத்தம் செய்யுங்கள்.

மந்திரி:ஏன் மஹாராணி,

அரசி: போர்ப்பறை ஒலித்ததும் மன்னர் பயத்தில் "உச்சா" போய்விட்டார்!!!!!!!!!
&&&&&&&&&&&&&&&

மந்திரி: என்ன? மன்னர் முல்லைக்குத் தேர் கொடுத்ததுக்கு மஹாராணிக்குக் கோவமா?

தளபதி: மன்னர் தேர் கொடுத்தது மஹாராணியின் அந்தப்புர வேலைக்காரி முல்லைக்கு.
&&&&&&&&&&&&&&&
நம்ம "ச்யாம்"க்காக ஒரு மன்னர் ஜோக்: இது ச்யாம் ஸ்பெஷல்

மன்னன்: ஏன் அமைச்சரே, எதிரி நாட்டுலே இருந்து தூது விடுறதுக்கு மயில், வான்கோழி எல்லாம் பயன்படுத்த மாட்டாங்களா?

அமைச்சர்: ஏன் மன்னா?

மன்னன்: புறா ஒரு நேரத்துக்கே பத்த மாட்டேங்குதே....!!!!!!!!!
&&&&&&&&&&&&&&&&&
இப்போ ஒரு கணவன், மனைவி ஜோக். அது இல்லாமல் பூர்த்தி ஆகாது.

கணவன்: ஏண்டி, நான் ரொம்ப நேரமாக் கழுதை மாதிரிக் கத்திட்டிருக்கேன். நீ என்ன செய்யறே உள்ளே?

மனைவி: உங்களுக்குத் தான் "மசாலா பேப்பர் ரோஸ்ட்" செய்துட்டிருக்கேன்.

குமுதம், ஆனந்த விகடன், ஒருவேளை கல்கி? எதிலோ இருந்து நினைவு வந்ததை எழுதி இருக்கேன். அர்த்தம் இது தான். வார்த்தைகள் மாறலாம். குமுதம், விகடன், கல்கி வாசகர்கள் மன்னிக்கவும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஒரு வரவேற்பு விழா அறிவிப்பு
வேதா(ள்) என்று தலைவியால் அருமையாகப் பெயர் வைக்கப் பட்டு அங்கீகாரமும் பெற்ற நம்ம வேதா(ள்), தன் தென் மாவட்ட, மற்றும் தென் மாநிலச் சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாய் முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். அவரின் தென் மாநிலச் சுற்றுப் பயணத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் "முல்லைப் பெரியாறு" பிரச்னை பற்றி விவாதிக்கப் பட்டதாய் அவரே தெரிவித்திருக்கிறார். அதனால் இப்போ அணைச் சுவர் உடைந்ததுக்கும் அதற்கும் சம்மந்தம் இருக்கிறதாய் யாரும் நினைக்க வேண்டாம் :D. வேதா(ள்)வின் வரவேற்பு விழா இந்திய நேரப் படி இரவு 00-00 மணிக்கும், மற்ற உறுப்பினர்கள் இருக்கும் நாடுகளில் அவரவர் நாட்டின் நேரப்படி இரவு 00-00 மணிக்கும் நடக்கும். அப்போது எல்லா உறுப்பினர்களும் நன்கு குறட்டை விட்டுத் தூங்கி தங்கள் மேலான ஆதரவை வேதா(ள்)வுக்குத் தெரிவிக்கும்படித் தலைவியின் ஆணை.
*************************************************************************************
அணி மாற்றமா? தெரியாதே....!
கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாய்த் தெரிகிறது. ஹிஹிஹி, அரசியல் கூட்டணின்னு நினைச்சு வந்தவங்களுக்கு ரொம்ப சாரி, நான் சொல்றது வலை உலகக் கூட்டணி. அம்பி தன்னோட தங்கமணியின் வரவுக்குப் பின் கூட்டணியில் இருந்து விலகித் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டதோடு அல்லாமல், தன்னோடு கூட்டணியில் சேரத் திரு தி.ரா.ச., போர்க்கொடி போன்றவர்களை அழைத்ததாய்த் தெரிய வந்துள்ளது. இந்தக் கூட்டணியில் தற்சமயம் உறுப்பினர்கள் கம்மி என்பதாலும், எதிர்க்கட்சியினர் பதவி தருவதாய்ச் சொல்லி இருப்பதாலும் பதவிக்கு ஆசைபட்டு இந்தக் கூட்டணி மாற்றம் என்பது தலைவிக்குப் புரிந்து விட்டது. இதற்கு ஆதாரம், திரு தி.ரா.ச. அவர்கள் கூட்டணி மாறி விட்டது என்பதை அம்பிக்குக் கொடுத்த பின்னூட்டப் பதில்களில் அவரே ஒத்துக் கொண்டதோடு அல்லாமல், தலைமைப் பதவியை அம்பி தன் மனதுக்குப் பிடித்தவருக்குக் கொடுக்கலாம் என்றும் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார்.

இதில் நடுநிலைமை வகிப்பவர்களில் வேதா(ள்), கார்த்திக், எஸ்.கே.எம், உமாகோபு போன்றோர்.
திரு கைப்புள்ள தலைவிக்குத் தான் தன் ஆதரவு என்று தெரிவித்துக் கொண்டே இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
திரு மணிப்ரகாஷோ கார்த்திக், சிவா போன்றவர்களையும் நாட்டாமை என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் (இங்கே மட்டும் என்ன வாழுது? உங்களுக்குத் தலைவி பட்டம் நீங்களே வச்சிக்கிட்டது தானே?) (யார் அது முணுமுணுப்பு? ஹிஹிஹி, வேறே யாருமில்லை, என்னோட மனசாட்சி தான், வழக்கம்போல் கழுத்தறுக்க வந்துடுச்சு.) ச்யாம் என்பவர்கள் ஆதரிக்கும் நபரைத் தான் தான் ஆதரிப்பதாய்ச் சொல்லுகிறார். இது மறு பரிசீலனைக்கு உட்பட்டது. அவர் தன் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கட்டளைக் கலித்துறை. சீச்சீ, கட்டளை.
கொஞ்சல்ஸ் ஆஃப் நாகப்பட்டினம் (courtesy:Ram)நாகை சிவா இன்னும் பதுங்குமிடத்தில் இருந்தே வெளி வரலை. திரு ராமோ என்றால் இன்னும் சேரலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார். இந்நிலையில் தலைவி தான் தான் திரும்பத் திரும்ப தலைவி என்று உறுதிபடத் தெரிவிக்கிறார். இதில் மாற்றம் ஏதும் இல்லை.

13 comments:

 1. //இந்நிலையில் தலைவி தான் தான் திரும்பத் திரும்ப தலைவி என்று உறுதிபடத் தெரிவிக்கிறார். இதில் மாற்றம் ஏதும் இல்லை. //

  அப்போ பெரிய தலைவலி'தான் :)

  ReplyDelete
 2. ஜோக்ஸ் ரசித்தேன்.ஆமா,மாமா வீட்டுல நிம்மதியா தூங்கும் போது நீங்க ஸ்கேட்டிங் ஹாலில் அமைச்சரவை கலாட்டாவா நடத்துரீங்க.அங்கேயும் உங்கள் லீலைகள் நடத்தினீங்களா மாமி?யார் சொன்னாலும் சொல்லாட்டியும் எனக்கு நீங்கதான் தலைவி.என் ஈமெயில் எறும்பு மெயில் வந்ததுன்னு சொன்னதே பெரிய த்ருப்தியா இருக்கு.
  --SKM

  ReplyDelete
 3. மேடம், இப்படி எல்லாம் நடக்குதா..

  என் கிட்ட சேர்ந்த கூட்டம் அன்பால சேர்ந்தது.. யாரும் ஒண்ணுமே பண்ண முடியாது.. அதுவும் இல்லாம அமைச்சரவை மாற்றம் வேற வரப் போறதால, இப்போதைக்கு யாரும் கட்சியை விட்டு போகமாட்டாங்க..

  மேடம், போன பதிவுல இருக்க படத்தின் நீள அகலத்தை குறையுங்கள்.. வலது பக்க லிங்குகள் எல்லாம் டாஸ்மாக் போகாமல் கீழ விழுந்து கிடக்கிறது.

  ReplyDelete
 4. ஒண்ணுமே புரியல உலகத்துல...என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது.....

  உங்க பதிவின் கடைசி பகுதியை படித்தவுடன் தோன்றிய பாடல்....ஹஹஹா....(மாமி, தப்பா எடுத்துக்காதீங்க...எனக்கு வலையுலகம் புதிது...அதுவும் இந்த குழு ரொம்ப புதிசு...அதான்)

  ReplyDelete
 5. //கொஞ்சல்ஸ் ஆஃப் நாகப்பட்டினம் (courtesy:Ram)நாகை சிவா இன்னும் பதுங்குமிடத்தில் இருந்தே வெளி வரலை. //

  அடப்பாவிகளா... இது எப்ப நடந்துச்சு...

  ReplyDelete
 6. ஆமாம் அணி மாற்றம்தான். அணி அணியாக எங்கள் அணிக்கு வருகிறார்கள். உங்கள் அணியிலிருந்து.

  ReplyDelete
 7. அணி மாற்றமாவது ஒன்னாவது...நீங்க தான் எப்பவும் ஒரே தானை தலைவி(வலி)...அதில அனாசின் ஓனர் வந்து சொன்னா கூட மாற்றம் இல்ல... :-)

  ReplyDelete
 8. அமெரிக்காலயா இருக்கீங்க...சொல்ல்ல்ல்ல்ல்ல்லலலலவே இல்ல...அதுதான் ரெண்டு நாளா புஷ் வெளில வராம காய்ச்சல்னு படுத்து இருக்காரா...அவருக்கு பயம் வந்துடுச்சு போல எங்க அவரு பதவிக்கு வேட்டு வெச்சுடுவீங்களோனு :-)

  ReplyDelete
 9. ஆகா புது வருசம் நமக்கு களை கட்டுது..

  இதுநாள் வரைக்கும் தலைவியின் பின்னுட்டத்தில் இருந்து பிறகு தலைவி நம்ம தொகுதிக்கு வந்து இப்ப தலைவியோட முதல் பக்கத்திலெ நம்ம பெயர் வந்துடுச்சே,..

  //மணிப்ரகாஷோ கார்த்திக், சிவா போன்றவர்களையும் நாட்டாமை என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் (இங்கே மட்டும் என்ன வாழுது? உங்களுக்குத் தலைவி பட்டம் நீங்களே வச்சிக்கிட்டது தானே?) (யார் அது முணுமுணுப்பு? ஹிஹிஹி, வேறே யாருமில்லை, என்னோட மனசாட்சி தான், வழக்கம்போல் கழுத்தறுக்க வந்துடுச்சு.) ச்யாம் என்பவர்கள் ஆதரிக்கும் நபரைத் தான் தான் ஆதரிப்பதாய்ச் சொல்லுகிறார்//

  ReplyDelete
 10. நம்ப இப்பதான் கட்சிக்கு வந்து இருக்கிறேன்.. அதுனால லோக்கல் தலைவர்கள் ஆசியோட கட்சி பணியில் கலக்க வெயிட்டிங்..

  தலைவியே அதுக்காக கவலை படாதீங்க.நீங்க வேற என்ன பத்தி எழுதிட்டீங்க.
  உங்களுக்கு சின்சினாட்டியில் கட் அவுட் வைக்கிலாமானு யோசிச்சுகிட்டு இருக்கேன்..

  ReplyDelete
 11. எல்லாமே ஓகே. ஏதோ 1 குறையுதேனு பாத்தேன்...

  //
  இந்நிலையில் தலைவி தான் தான் திரும்பத் திரும்ப தலைவி என்று உறுதிபடத் தெரிவிக்கிறார். இதில் மாற்றம் ஏதும் இல்லை.
  //

  சொல்லீட்டீங்க... :)

  ஜோக்ஸ் சூப்பர்... அதுவும் ஸ்யாம் ஜோக்.. ஹி ஹி :)

  ReplyDelete
 12. //அம்பி தன்னோட தங்கமணியின் வரவுக்குப் பின் கூட்டணியில் இருந்து விலகித் //

  aiii! inga paarunga ellorum! first mokkai post started for this year. good! :)

  //அணி மாற்றம்தான். அணி அணியாக எங்கள் அணிக்கு வருகிறார்கள். உங்கள் அணியிலிருந்து.
  //
  Ahaa! Guruve saranam! :) oru vasagam!naalum athu thiruvaasagam! :)

  ReplyDelete
 13. அணி அணியாக யார் போனாலும், யார் வந்தாலும், எனக்குன்னு சிலர் இருக்காங்கங்கறதே போதும். அவங்க கட்டாயம் என்னை ஆதரிப்பாங்க.

  @SKM, comment publish பண்ணறது எல்லாம் எனக்காக உ.பி.ச. வேலை. என்னோட கையறு நிலை தெரிஞ்சதும் அவங்களே வலிய இந்தப் பொறுப்பை ஏத்துக்கிட்டாங்க. பதில் நான் தானே சொல்லணும்? அவங்க சொன்னால் அவங்க ஸ்டைல் வெளியே தெரிஞ்சதும், அவங்க யாருன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போயிடுமே? அதான் பதில் சொல்ல நானே வந்தேன்! ஹிஹிஹி,

  ReplyDelete