எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, January 29, 2007

நான் யார்,நான் யார்,நான் யார்?

நான் யாரு, எப்படி இருப்பேன்னு எல்லாருக்கும் மண்டையைக் குடையுது. பார்த்தவங்க ரொம்பக் கம்மி. இந்த வலை உலகிலே முதன் முதல் என்னைப் பார்த்த பெருமை இருக்கிறதாலே அம்பி ரொம்பவேத் தம்பட்டம் அடிச்சுக்கிறார். அதுக்கு அப்புறம் வேதா வந்துட்டுப் போயாச்சு. அப்புறம் முத்தமிழிலே இருந்து காழியூராரும், பாசிட்டிவ் ராமாவும் வந்தாங்க. இப்போ புலி வந்து உறுமிட்டுப் போயிடுச்சு. புலி வருது, வருதுன்னு சொல்லிட்டே இருந்தது, நிஜமாவே வந்துட்டுப் போயிடுச்சு. நேத்திக்கு நாங்களே கடலூர் போய் நடேசனைப்பார்த்தோம். இன்னும் சில பேர் வரேன்னும் சொல்லிட்டிருக்காங்க. நீங்க பார்க்கிறப்போ கொஞ்சம் ஏமாற்றம் ஏற்படலாம். ஏனெனில் நீங்கள் தினம் தினம் பார்க்கும் ஒரு சாதாரணப் பெண்மணி போல் தான் நான் இருப்பேன். இன்னும் சொல்லப் போனால் கைப்புள்ள சொல்வார், "எங்க பக்கத்து வீட்டு ஆண்டி போல் எனக்குத் தோணும்"னு அப்படித்தான் நான் இருப்பேன். அதனால் ரொம்பவே எதிர்பார்த்துட்டு வந்து ஏமாறாதீங்க அம்பி, ரொம்பவே ஏமாந்துட்டார் என்னைப் பத்திக் கற்பனை பண்ணி. நானும்தான் ஒரு மதுரை வீரன் ஸ்டைலில் எதிர்பார்த்துப் போனால் பார்க்க ரொம்பவே அப்பாவியா, பார்க்கத் தான், ஒரு பையர் வந்திருக்கார். என்னத்தைச் சொல்ல? ஹிஹிஹி, பையன்னு சொன்னா மரியாதை இல்லைங்கிறதாலே விகுதியை மாத்தி இருக்கேன்.

அப்புறம் எழுதற அளவு பேசறது கொஞ்சம் கம்மி தான். பேச ஆரம்பித்தால் நல்லாப் பேசுவேன். ஆனால் பேசக் கொஞ்சம் நேரம் பிடிக்கும். அப்புறம் வந்தவங்களோட நானே பேசிட்டு இருந்தால் என் கணவர் முழிச்சுட்டு உட்கார்ந்திருக்கணுமே,அதனாலும் கொஞ்சம் கம்மியாத் தான் பேசுவேன். வர்ரவங்க வந்து ஏமாந்துட்டுப் போங்கப்பா! இன்னும் இந்த வலைப்பதிவர் மீட்டிங் எல்லாம் நான் போகிறதில்லை. போனால் போக ஒரு 2 மணி நேரம் ஆகும். அப்புறம் திரும்பி வர 2 மணி நேரம் ஆகும். இது சாதாரணமாக ஆகும் நேரம். போக்குவரத்து அதிகம் இருந்து ட்ராஃபிக் ஜாம்னால் கேட்கவே வேணாம். அதனால்தான் நான் இதெல்லாம் போகிறதே இல்லை. நான் போய் உட்கார்ந்து பேச ஆரம்பிக்கிறதுக்குள்ளே (அதுக்குள்ளே அவங்க வடையோ, போண்டாவோ, சமோசாவோ ஆர்டர் கொடுத்திருப்பாங்க) டிஃபன் வரும். அதைச் சாப்பிடக்கூட முடியாது. திரும்பிப் போக நேரம் ஆயிடும். நான் போய்ட்டு உட்கார்ந்து சாப்பிடாமல் வர முடியுமா? போண்டாவும், வடையும், சமோசாவும் அழாதா? அதற்காக வீட்டுக்கும் எடுத்து வர முடியுமா? அப்படி இருந்தால் போய் எடுத்துட்டு வந்துடுவேன். கல்யாணத்துக்குப் போனால் அப்படித்தான். அங்கே ஒண்ணுமே சாப்பிடாமல் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடலாம் போல் இருக்கும். போகாமல் இருக்கவும் முடியாது. அதனாலேயே வலைப்பதிவர் மீட்டிங் எல்லாம் போறதில்லை.

5 comments:

 1. :-))))))))
  நானும் உங்களைப்பார்க்கலை தான்.

  நாம என்ன உலக மகாப் பெண்கள் வரிசைக்குப் போட்டி போடலியே.

  அதனால் கீதாங்கற அறிவான ,அறிவார்த்தமான பேச்சு பேசற பெண்ணை எதிர்பார்த்துத் தான் நான்வருவேன்.
  அதனால நான் ஏமாற மாட்டேன்......சரியா.

  ReplyDelete
 2. //அதனால் கீதாங்கற அறிவான ,அறிவார்த்தமான பேச்சு பேசற பெண்ணை எதிர்பார்த்துத் தான் நான்வருவேன்.
  அதனால நான் ஏமாற மாட்டேன்......சரியா.
  //

  அதைத்தான் ஏமாந்துடாதீங்கன்னு சொல்றாங்க வல்லியம்மா!

  ReplyDelete
 3. பார்ப்பதுதான் எல்லாமா? அல்லது பார்த்தால் மட்டும் போதுமா?

  சரிதானே வல்லியம்மா? :))

  ReplyDelete
 4. //நான் யார்,நான் யார்,நான் யார்? //

  டைட்டில பாத்தவுடனே நீங்க யாருன்னு உங்களுக்கே தெரியலியா? ன்னு கேக்கலாம்னு பாத்தேன்...

  ரொம்ப பழைய போஸ்டா இருக்கும்போல?? ஜனவரில போட்டது இப்பத்தான் வருது...

  சரி.. நீங்க யாரு?? ;))

  ReplyDelete
 5. ஹிஹிஹி இந்தப் பதிவு நடுவிலே எங்கே இருந்து வந்து எல்லாரையும் குழப்பிச்சுனு புரியலையே! ஏற்கெனவே 2 முறை பப்ளிஷ் ஆச்சேன்னு ஒரே குழப்பம், இப்போ இந்தக் குழப்பம் வேறேயா?

  @சிபி, இ.கொ. நறநறநறநறநற

  @வல்லி, ஹிஹி ரொம்ப டாங்ஸு, டாங்ஸு!
  ஜி நான் யாருங்க? கொஞ்சம் சொல்லுங்களேன்! :D

  ReplyDelete