எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 10, 2007

180. திரும்பிப் பார்க்கிறேன்!!!!!!

கொஞ்சம் தாமதமா திரும்பிப் பார்க்கிறேன். ஏற்கெனவே கழுத்தெல்லாம் ஒரே வலி. இத்தனை நாளாத் திரும்பிப் பார்த்தது வேறே சேர்ந்துடுச்சு. முதலில் எனக்குப் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிச்ச எல்லாருக்கும் நன்றி. தனிப்பட்ட முறையில் வாழ்த்துத் தெரிவிச்ச தி.ரா.ச.அவர்கள், எஸ்.கே.எம்., கார்த்திக், கைப்புள்ள, ராம், வேதா, ராமநாதன், வைஷ்ணவ்(known stranger), ச்யாம் எல்லாருக்கும் என்னோட நன்றிகளும், வாழ்த்துக்களும்.
******************************************

2005-ம் வருஷம் நவம்பரிலேயே நான் என்னோட வலைப்பக்கத்தை ஆரம்பிச்சிருந்தாலும் பெரிசா ஒண்ணும் எழுதிக் கிழிக்கலை. ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் தான் எழுதிட்டிருந்தேன். அப்போவே தமிழ் வலைப்பக்கங்களுக்கு எல்லாம் போய் என்னோட ஆங்கிலத் திறமையைக் காட்டிப் பின்னூட்டமும் கொடுப்பேன். அப்புறம் கொஞ்ச நாளுக்கு உடல்நிலை ரொம்பவே மோசமாகப் போகவே கணினி பக்கமே வரலை. அப்புறம் என்னோட நுரையீரலின் நிலையைப் பார்த்துப் பயந்த எங்கள் குடும்ப மருத்துவர், இதயத்தின் நிலையைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டி ஒரு இருதய நோய் மருத்துவரிடம் அனுப்பித்தது 2006-ம் ஆண்டு ஜனவரியில். ஒருவேளை பை-பாஸ் சர்ஜரி செய்ய வேண்டி இருக்குமோ என்ற சந்தேகம் அங்கே எடுக்கப் பட்ட சோதனைகளில் மறுக்கப் பட்டு என்னோட இருதயம் இருக்கிற இடத்திலே நான் சந்தோஷமாத் தான் இருக்கேன். சென்னை மாநரகப் பேருந்துகளில் எல்லாம் ஃபுட்போர்டில் தொங்கிக் கொண்டு எல்லாரும் போகலியா? அதுமாதிரி நான் தொங்கிட்டிருந்தாலும் என்ன, நல்லாத் தான் இருக்கேன் என்று கண்டிப்பாகச் சொல்லவே நான் அறுவை சிகிச்சையில் இருந்து காப்பாற்றப்பட்டாலும், வாழ்நாள் பூரா மருந்துகளே உணவாக எடுத்துக் கொள்ளும் நிலைமைக்குத் தள்ளப் பட்டேன். நாம தான் "சவாலே, சமாளி" ரகமாச்சே? ஆகவே எது வந்தாலும் எதிர் கொள்ள ஆரம்பித்தேன்.

இருந்தாலும் என்னுடைய 3-வது நாத்தனார் கணவர் இறந்தது எங்கள் எல்லாருக்கும் இன்றளவும் ஆறாத வடுவானது. இருதய நோயினால் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருந்த அவர் ஜனவரி ஆரம்பத்திலேயே நோய்வாய்ப்பட்டு 31-.ம் தேதி இறந்து போனார். அதுக்கு அப்புறம் நாங்கள் ஒரு வழியாகத் தேறி வந்த சமயம் திரு டோண்டு அவர்களின் பதிவில் நான் கொடுத்த ஆங்கிலப் பின்னூட்டத்தைப் பார்த்து விட்டு, அவரும் வெ.பா.வ. ஜீவாவும் எனக்குத் தமிழ் எழுத உதவினார்கள். நான் ஆங்கிலத்தில் எழுதுவதைப் பார்த்துவிட்டுத் திரு தருமி அவர்கள் தலையில் அடித்துக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன். அதான் ஆங்கில விரிவுரையாளர் பதவியைக் கூட விட்டு விட்டதாய்க் கேள்விப்பட்டேன்.ஹிஹிஹி!!!!!! இதற்குள் ஓரளவு நான் பிரபலம் அடைந்து வர (ஹிஹ்ஹி, கொஞ்சம் தன்னடக்கத்தோடு சொல்லி இருக்கேன்) எனக்கு வலைப்பதிவர் மாநாட்டிற்கு அழைப்புத் தனிப்பட்ட முறையில் திரு டோண்டு அவர்கள் அனுப்பி வைத்தார். ஏற்கெனவே திடீரென ஏற்பட்ட முக்கியத்துவத்தால் திகைத்துப் போயிருந்த நான் இந்த அழைப்பால் உச்சி குளிர்ந்து போனேன். அப்போ நல்ல கோடை வேறே. அப்புறம் இந்த வலைப்பதிவர் மாநாட்டிற்கு வரதெல்லாம் என்னால் முடியாத காரியம் என்று அவருக்கு விளக்கி விட்டு, என்னோட களப்பணிக்கும், தமிழுக்கும் கைங்கரியம் ஆற்றத் தொடங்கினேன். என்னோட தமிழறிவைப் பார்த்து பிரமித்தது நான் தமிழ் எழுத ஆரம்பித்ததில் இருந்து என்னை நன்றாய்க் கவனித்து வரும் "கைப்புள்ள" அவர்கள். அவருக்கு என்னமோ நான் பெரிய தமிழறிஞர்னு நினைப்பு, பாவம், கைப்புள்ள தானே. இல்லைனு சொன்னால் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிப்பார். சரினு ஒத்துக்கறதிலே எனக்குத் தானே லாபம். இந்தச் சமயத்தில் தான் அம்பி, வல்லி சிம்ஹன் அறிமுகமானார்கள். அவங்களும் வரவே, நான் அம்பியின் வலைப்பக்கத்துக்குப் போனதின் மூலம் வேதா அறிமுகம் ஆனார். வேதா மூலம் Known Stranger என்னோட வலைப் பதிவுக்கு வர ஆரம்பித்தார். கார்த்திக்கை நான் பதிவு எழுத ஆரம்பித்ததில் இருந்து கவனித்து வருகிறேன். அவரும் முதலில் ஆங்கிலத்தில் எழுதிவிட்டுப் பின் தமிழில் எழுத ஆரம்பித்தார்.

கார்த்திக்கின் எழுத்து இப்போது மிகவும் பண்பட்டுத் தங்கம் போல் ஒளிர்கிறது. அதுவும் உள் ஆழத்தில் இருந்து வரும் சத்தியமான வார்த்தைகள் என்பதால் மிக மிக அருமையாக எழுத ஆரம்பித்து விட்டார். மேன்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகிறேன். இந்தச் சமயம் நாகை சிவா பரிச்சயமாக அவர் மூலம் ச்யாமும் வர ஆரம்பித்தார். என்னோட வலைப் பதிவுகள் காணாமல் போய் நான் உதவி கேட்டு எழுத இருவரும் வலுவில் வந்து உதவி செய்வதாய்த் தெரிவித்தார்கள். ச்யாமின் அமெரிக்க நேரமும் நான் இணையத்தில் இருக்கும் நேரமும் ஒத்துக் கொள்ளாது என்பதாலும்,(ஆன்லைனில் சாட் செய்யறது கஷ்டம்) இதில் சிவா சூடானில் இருப்பதாலும் நேரம் அதுதான் ஒத்துக் கொள்ளும் என்பதால் நான் அவரின் உதவியால் என் பதிவுகளைச் செம்மைப் படுத்திக் கொண்டேன். இப்படியாக என்னோட பதிவுகள் ஓரளவுக்குப் பிரபலமாக திரு தி.ரா.ச.அவர்கள், லதா, எஸ்.கே.எம்., உமாகோபு, பொற்கொடி, சின்னக்குட்டி போன்றோரும் வந்தார்கள். இதில் லதா எப்போதாவது தலையைக் காட்டி நானும் இருக்கிறேன் என்பார். பொற்கொடி புதுக் கல்யாணப் பொண்ணு,அதனால் இப்போ இதெல்லாம் நினைப்பு இருக்காது. சின்னக்குட்டி என்னைப் பார்க்கவேண்டும் என்று தன்னோட வலைப் பதிவில் எழுதி விட்டுப் பின் காணாமல் போய் இப்போ தி.ரா.ச. அவர்களின் வலைப் பதிவுக்கு மட்டும் வந்து பின்னூட்டம் கொடுக்கிறார் என நினைக்கிறேன்.இப்போ சமீப காலத்தில் மண்ணின் மைந்தர் திரு ராமும், எனக்குக் கட்-அவுட் வைக்கிற அளவுக்குத் தொண்டராகி விட்ட மணி ப்ரகாஷும் சேர்ந்திருக்கிறார்கள். ஹிஹிஹி, கடல் கடந்தும் நம்ம புகழ் பரவுது பாருங்க!

அப்படி ஒண்ணும் பெரிசா எழுதிக் கிழிக்கலைன்னாலும் எழுத முடிஞ்ச விஷயங்களையே இன்னும் பூரணமா எழுத முடியலை. நடு நடுவே வீட்டில் பிரச்னைகள், போதாதக் குறைக்கு இணையம் இணைப்பில் பிரச்னை. ஊர் சுற்றியதில் எழுத முடியாமல் போனது, இப்படி எவ்வளவோ இருக்கு. இப்படியே நான் எழுத ஆரம்பிச்சு ஒரு வருஷத்துக்கு மேலே ஆயிடுச்சு. இந்த அளவு நான் எழுதறதே பெரிய சாதனை தான். ஆனால் என்னை விட என் கணவர் தான் இணைய இணைப்பு வராமல் நான் எழுத முடியாமல் போனதுக்கு வருத்தப் படுகிறார். அதனாலேயே என் அண்ணா வீட்டிற்குப் போய்ப் பார்த்துவிட்டு வான்னும் சொல்லுவார். அதுவும் கடந்த 15 நாளாக இணையம் இல்லாமல் நான் சிரமப் பட்ட மாதிரி முன் எப்போதும் நடக்கவில்லை. DNS Serverமாற்றினார்கள். அதுக்கு அப்புறம் இணையமே வரலை. அவங்க கொடுத்த DNS server number -ஐக் command-ல் போட்டுப் பின் ping கொடுத்தால் கேட்வே பிரச்னை இல்லைனு தெரியும். ஆனால் இணைப்பு வராது.(ஹிஹிஹி, தொழில் நுட்ப அறிவிலும் தேர்ந்துட்டேன்.) Refer DNS server error அப்படின்னே செய்தி வரும். டாட்டா இண்டிகாம் காரங்களுக்கு மானம், ரோஷம் இருந்தால் நான் கத்தினதுக்குத் திரும்பச் சண்டை போட்டிருக்கணும், ஆனால் அவங்களுக்குக் குழையக் குழையப் பேசத் தானே சம்பளம். கடைசியில் டைரக்டர், வி.எஸ்.என்.எல்.-க்கு ஒரு கையால் எழுதப் பட்ட புகார், மேலும் தொலைபேசிப் புகார் எல்லாம் கொடுத்தும் நேற்று வரை வரவில்லை. என்ன ஒரு ஆறுதல் என்றால் இங்கே ஆடிட்டர் ஒருத்தருக்கு அவர் வீடு, அலுவலகம் இரண்டிலும் டாட்டா இண்டிகாம் இணைப்புக் கொடுத்து விட்டுத் திண்டாடிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தியும் கிடைத்ததால் அவரை விட நம் நிலைமை பரவாயில்லை எனத் தேற்றிக் கொண்டேன். இன்று மறுபடி முயற்சி செய்து விட்டு இன்றைய பாட்டுப் பாட ஆயத்தம் ஆகலாம் என்று கணினியைத் திறந்தால் என்ன ஆச்சரியம்? இணையம் இணைந்தது, இந்தக் குளிரிலும் (இதெல்லாம் என்ன குளிர்?) என் மனம் குளிர்ந்தது. இன்னும் எத்தனை நாளுக்குன்னு தெரியலை, பார்க்கலாம். அப்புறம் உ.பி.ச. நான் வர முடியலைன்னா தகவல் வரும். அப்போ கமெண்ட் மட்டும் பப்ளிஷ் செய்துடுங்க, வழக்கம்போல், என்ன? எல்லாரும் மண்டையை உடைச்சுக்கட்டும், என்ன நடக்குதுன்னு!!!! ஹிஹிஹி.

21 comments:

 1. முதல்ல வருகை பதிவு..அப்புறம் தூங்கி எழுந்து வந்து, படிச்சு மத்தது எல்லாம்

  ReplyDelete
 2. முதல்ல வருகை பதிவு..அப்புறம் தூங்கி எழுந்து வந்து, படிச்சு மத்தது எல்லாம்

  ReplyDelete
 3. கார்த்திக்,
  இது என்ன? தூங்கி வழிஞ்சுட்டுப் பின்னூட்டம் கொடுக்கிறீங்க? நாளைக்கு ஒரு மூணு பின்னூட்டமாவது இருக்கணும். இது தலைவியின் ஆணை. அதுவும் கொடுத்ததே 2 முறை கொடுத்துக்கிட்டு, (ஹிஹிஹி, நான் தான் பின்னூட்டம் ஹிட் ஏறுமேன்னு எடுக்கலை, வெளியே சொல்லி மானத்தை வாங்கிடாதீங்க)

  ReplyDelete
 4. வேதா(ள்), உண்மையில் என்னோட ப்ளாக்கர் லிஸ்ட் படி பார்த்தால் இது 183-வது பதிவு. நான் கொஞ்சம் பெருந்தன்மை ஜாஸ்தி ஆச்சே, அதனாலே ஒரு மூணு குறைச்சிருக்கேன். அதைப் புரிஞ்சுக்க வேணாமா?

  ReplyDelete
 5. //கார்த்திக்கின் எழுத்து இப்போது மிகவும் பண்பட்டுத் தங்கம் போல் ஒளிர்கிறது. அதுவும் உள் ஆழத்தில் இருந்து வரும் சத்தியமான வார்த்தைகள் என்பதால் மிக மிக அருமையாக எழுத ஆரம்பித்து விட்டார். மேன்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகிறேன்//

  நன்றிங்க தலைவியே.. உங்களை போன்றவர்களின் ஆதரவும் ஆசியும் என்றென்றும் இந்த சிறியவனுக்கு கிடைக்க வேண்டும்.. அதனால் தான் இப்போதெல்லாம் சினிமா பதிவுகளை ரொம்ப குறைத்துவிட்டேன்.. வாரத்திற்கு ஒன்று தான்.. அதுவும் போகபோகப் குறைந்துவிடும்னு நினைக்கிறேன் தலைவியே

  ReplyDelete
 6. உங்க கூட சேர்ந்து திரும்பி பார்த்ததிலே எனக்கும் கழுத்து வலிக்குதுங்க மேடம்.. நல்ல மலரும் நினைவுகள்

  ReplyDelete
 7. தலைவி வாழ்க!!!
  தலைவி மென்மேலும் வாழ்க!!!
  தலைவி மேலும் மென்மேலும் வாழ்க!!!

  ReplyDelete
 8. தலைவியின் ஆணைப்படி இது நாலாவது பின்னூட்டம்..

  தலைவியே.. நீங்கள் நடந்து வந்த பாதை முட்கள் நிரம்பியதாகவே தெரிகிறது.. ஆனாலும் இலக்கு நோக்கி நடந்திருக்கிறீர்கள்.. இது உங்கள் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் உலகுக்கு பறைசாற்றுகிறது.. இன்னும் சில நாட்களில் இரட்டை சதம் அடிக்கப்போகும் உங்களுக்கு இப்போதே முந்திக்கொண்டு வாழ்துக்கள் சொல்லிக்கிறேன் தலைவியே..

  ReplyDelete
 9. எக்ஸ்குஸ்மீ மேடம் மே ஐ கம் இன் பார் தி ஆட்டம்....

  :)

  ReplyDelete
 10. மாமி உங்களுக்கும் கழுத்து வலியா?.....

  ReplyDelete
 11. தூக்கத்தில் இருந்து எழுந்து வந்திருக்கும் கார்த்திக்கே! வருக! வருக! பாருங்க நீங்க தலைவியா ஏத்துக்கிட்டது போதாதுன்னு தக்க வச்சுகிறதுக்காகப் புகழ்ந்தும் எழுதி இருக்கேன்! :D

  ReplyDelete
 12. வாங்க, வாங்க, ஸ்ரீகாந்த், நல்வரவு, வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்க. பதவி ஏதும் இப்போக் கிடைக்காது. வேணும்னா கார்த்திக் கிட்டே கேட்டுத் தாற்காலிக முதல் அமைச்சர் பதவி கேளுங்க, இல்லாட்டி அவர் மந்திரி சபை விரிவாக்கம் பண்ணப் போறாராம், அப்போ கேளுங்க, நான் தலைவி ஆச்சே! பதவி ஆசையே கிடையாது எனக்கு. :D

  ReplyDelete
 13. என்ன மதுரையம்பதி, உங்களுக்குமா கழுத்து வலி? சீசன் போல் இருக்கு!

  ReplyDelete
 14. //சவாலே, சமாளி" ரகமாச்சே? //
  இதுதான் உங்க ஸ்பெஷாலிட்டி.
  183 பதிவுகளா?Great!
  உங்க வேகத்துக்கு ஈடுக் கொடுத்துத் திரும்பிப் பார்த்ததில் இப்போ collar Belt போட்டுக்க வேண்டி வந்துடுச்சு.இந்தப் புத்தாண்டில் உங்கள் உடல்நலம் முன்னேற பிராத்திக்கிறோம்.உங்கள் online connection problem சரியாகி விடவும்தான்.--SKM

  ReplyDelete
 15. //(ஹிஹிஹி, நான் தான் பின்னூட்டம் ஹிட் ஏறுமேன்னு எடுக்கலை, வெளியே சொல்லி மானத்தை வாங்கிடாதீங்க)
  நான் தலைவி ஆச்சே! பதவி ஆசையே கிடையாது எனக்கு. :D //
  சே!சே!அப்படியெல்லாம் கிடையவே கிடையாது.தலை(வலி)வி சொல்லி ,பத்தாக்குறைக்கு உங்களுக்கு 16 வயசே மட்டும்னு வேறே தம்பட்டம் அடிச்சிகிட்டு நீங்க அடிக்கிற லூட்டிக்கு போட்டியா யார்தான் வர முடியும்.சான்ஸே இல்லை.--SKM

  ReplyDelete
 16. வணக்கம் தலைவியே..

  கட் அவுட் எந்த இடத்தில வைத்தால் நல்லா இருக்கும்னு இடம் தேர்வு செய்ய போனதால் கால தாமதம்..
  வருந்துகிறென்...

  எவ்வளவு தடைகளை தாண்டி ,எதிரிகளின் சதிகளை முறியடித்து, களத்தில்,மக்களுக்கு தொண்டு செய்வதையே குறிக்கோளாக கொண்டுள்ள தலைவி வாழ்க.வாழ்க !!!அவரது தமிழ் சேவை. வலைப்பக்கத்திற்கு தேவை..

  இப்படிக்கு,
  கட்-அவுட் தொண்டன்
  மணி ப்ரகாஷ்

  ReplyDelete
 17. போட்டியின்றி என்னைத் தலைவியாகத் தேர்ந்தெடுத்த எஸ்.கே.எம்முக்கு ஒரு "ஜே" மட்டும் three cheers!
  Say everybody to SKM
  Hip Hip Hooray!
  Hip Hip Hooray!
  Hip Hip Hooray!
  @ambi&
  @TRC, note the point. உங்க அணிக்கு உங்களையும், அம்பியையும், அம்பியோட தங்கமணியையும் தவிர வேறே அணி அண்ணி அண்ணியாக :D
  யார் வருவாங்க?

  ReplyDelete
 18. எஸ்.கே.எம், மற்றும்னு எழுதி இருக்க வேண்டியது "மட்டும்"னு டைப் ஆகிடுச்சு. அர்த்தமே மாறிடுச்சு. மன்னிச்சுக்குங்க.

  @மணிப்ரகாஷ்,
  முக்கிய அமெரிக்க நகரங்களிலே தான் வைக்கணும். என்ன இது? இது கூடத் தெரியாம "கட்-அவுட்" வைக்கிறதா வலுவிலே சொல்லி, இப்போ என்னையே கேட்கிறீங்களே? நான் எத்தனை முறை தன்னடக்கத்தோடு சொல்ல வேண்டி இருக்கு? எனக்கு இந்தக் "கட்-அவுட்" மட்டும் பத்தாது. கூடவே அலங்கார வளைவுகளும் வேணும்னு. ம்ம்ம்ம்ம், நீங்க புதுசு இல்லை? அதான். கார்த்திக் கிட்டே ட்யூஷன் எடுத்துக்குங்க. சொல்லித் தருவார்.

  ReplyDelete
 19. கீதா
  இந்த வருஷமாவது தலைவலி,திருகு வலி

  டட்டா இண்டிகாம் வலி இதெல்லாம் இல்லாமல் உங்கள் நாட்கள் இனிமையாக இருக்கணும்.

  தைப் பொங்கல் பால் பொங்கி இன்னும் அழகான அருமையான பதிவுகள் எழுத வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. // இதில் லதா எப்போதாவது தலையைக் காட்டி நானும் இருக்கிறேன் என்பார். //

  உள்ளேன் அம்மா.

  Sandai-Kozhi said...
  ......பத்தாக்குறைக்கு உங்களுக்கு 16 வயசே மட்டும்னு வேறே தம்பட்டம் அடிச்சிகிட்டு நீங்க அடிக்கிற லூட்டிக்கு போட்டியா யார்தான் வர முடியும்.சான்ஸே இல்லை.--SKM //

  அதெல்லாம் இரண்டு வருடத்திற்கு முன். இந்த வருடம் தலைவி அவர்களுக்கு வயது 14. :-))))

  புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. வல்லி, உங்க பிரார்த்தனை பலிக்கட்டும் கடவுளை வேண்டிக்கிறேன்.

  @லதா, ஹிஹிஹி, வந்ததுமே சந்தோஷப் படுத்திட்டீங்களே. இப்படிப் போட்டி போட்டு எனக்கு ஆதரவு தெரிவிக்கிறதோட இல்லாமல் என்னோட வயசையும் குறைச்சதுக்கு ஒரு 3 cheers for you.
  HIP HIP HOORRAY
  HIP HIP HOORRAY
  HIP HIP HOORRAY

  ReplyDelete