எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 17, 2007

185. என்ன நடந்தது?

முதலில் சில ஜோக்குகள்: அப்புறமா வழக்கம்போல் நம்ம புலம்பல்கள்:

அம்பி&தங்கமணி ஸ்பெஷல்: (அம்பிக்கு இப்போவே பயமா இருக்காமே? நிஜமா? :D)

கணவன்: என் மனைவியை நினைச்சாத் தான் ரொம்பக் கவலையா இருக்கு!

டாக்டர்: ஏன் ஏதாவது உடம்பு சரியில்லையா?

கணவன்: இல்லே.....கொஞ்ச நாளா கோவை சரளா-வடிவேலுவைப் போட்டு அடிக்கிற வீடியோக்களைத் திரும்பத் திரும்பப் போட்டுப் பார்க்கிறா, டாக்டர்.
*********************************************************************************

அநேகமாத் தினம் ஒண்ணு கொடுக்கணும்னுதான் ஆசை. ஆனால் அம்பி தங்கமணியோட பேசற மும்முரத்திலே இங்கே வரதில்லை. அதனால் அவர் வர ஆரம்பிச்சாத் தினமும் ஒண்ணு "அம்பி ஸ்பெஷல்" ஜோக்ஸ் கொடுக்கலாம். பார்க்கலாம். அவருக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கோ? அப்புறம் இந்த இணையம் சரியா இல்லைன்னதும் சில பேர் எனக்குச் சில யோசனைகள் கொடுத்திருக்காங்க. அதைச் செயல் படுத்த முடியாது. ஏன்னா இதுக்குப் பணம் மூணு மாசத்துக்குத் தண்டம் அழுதாச்சு. அதைத் திருப்பிக் கொடுங்கன்னு கேட்டால் பதிலே வரலை. எழுதிக் கேட்டிருக்கேன். அதுக்கப்புறம் தான் முடிவு செய்யணும்.

அப்புறம் தொண்டர்கள் கூட்டம் பெருகிட்டே போகுது. எதிர்க்கட்சியிலே அவங்க மூணு பேரைத் தவிர யாருமே இல்லை. ஹிஹிஹி. என்னோட அண்ணா பையனைப் பத்திச் சொன்னேனே, துபாயிலே எனக்குக் கோயில் கட்ட ரெடியா இருக்கான்னு, அவன் எனக்கு யாஹூ மூலம் ஆஃப் லைன் மெசேஜ் கொடுத்திருக்கான். அவங்க டீம் மானேஜர் "சோனால்"(ஏண்டா, கண்ணா, இது ஆணா, பெண்ணா?, அதை நீ சொல்லவே இல்லையே? :D) என்னையும், என்னோட பதிவுகளையும் (தமிழ் தெரியாமலேயே) படிக்கச் சொல்லிக் கேட்டு? என்னை ஹரிவன்ஷ்ராய் பச்சன் ரேஞ்சுக்குப் புகழ்ந்தாராம். ஹிஹிஹி, அடுத்து அமிதாப் வீட்டுக் கல்யாணத்துக்கு அழைப்பு வரும்னு நினைக்கிறேன். போதாதுக்கு "விப்ரோவிலே" ஒரெ அமர்க்களமாப் போயிடுச்சாம். அவனோட கூட வேலை செய்யற பொண்ணுங்க எல்லாம் கும்பாபிஷேஹத்துக்குத் தயார் ஆகி இந்தியா வரணும்னு ரகளை செஞ்சிருப்பாங்க போல் இருக்கு. ஹிஹிஹி, எங்கே எல்லாம் நம்ம புகழ் பரவுது பாருங்க.

இது எல்லாம் சொல்லிட்டுக் கடைசியிலே ஒண்ணு சொல்லி இருக்கான் பாருங்க, ஒரு வார்த்தைன்னாலும் திருவார்த்தையாப் போயிடுச்சு. அதாங்க, ரொம்பக் கஷ்டமா இருக்கு. இந்த லதா ரொம்ப நாள் கழிச்சு வந்ததாலேயும், வருஷம் புதுசாப் பிறந்திருக்கிறதாலேயும், நம்ம வயசை சும்மா, சும்மாத் தான் ஒரு 2 குறைச்சாங்களா? அதுக்குக் கேட்கிறான் பாருங்க ஒரு கேள்வி, "என்ன அத்தை? உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா இல்லை?"னு. பாருங்க! :D ஹிஹிஹி, நான் இதுக்கெல்லாம் அசந்து போயிடுவேனா என்ன? இப்படி எல்லாம் எதிர்ப்பு வரக்கூடாத இடத்திலே இருந்து எல்லாம் வரும்னு அப்போவே தெரியும். அதனால் தான் என்னிக்கும் மாத்தாம வச்சிருக்கேன் என்னோட வயசை. மாத்தினாத் தானே பிரச்னை. இப்போக் கூட நான் மாத்தலையே? லதா தானே மாத்தினாங்க. அதனாலே அவங்க வந்து பதில் சொல்லட்டும். எனக்கு நிம்மதி! :D இதைப் படிக்கிறப்போ அம்பிக்குக் கோபம் வரும். மொக்கை போஸ்ட்னு சொல்லுவார். நல்லாச் சொல்லட்டும். சும்மாச் சும்மாத் தங்கமணியோட பேசிட்டே இருந்தா இப்படித்தான். சும்மாத் தான் தலைப்பு இப்படிக் கொடுத்தேன். தலைப்புக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லை.

14 comments:

 1. என்ன அத்தை? உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா இல்லை?"னு. பாருங்க! :D ஹிஹிஹி

  அப்பாவோட தங்கைக்கு 16 வயது. ஆனா மருமானுக்கு 30 வயசு.இதுமாதிரி ஒரு காட்சி எங்கே கிடைக்கும்?அம்பிதான் தங்கமணியோட செட்டில் ஆயி நம்ம எல்லாரையும் மறந்துட்டானே இன்னும் என்ன தினம் அழைப்பு பதிவிலே.

  ReplyDelete
 2. கனெக்ஷன் இல்லை என சொல்லிக் கொண்டே மட மடன்னு பதிவு வந்த வண்ணமா இருக்கு.அதுக்குள்ளே 3 பதிவு!!!! 16 வயசு சுறுசுறுப்பு நிறையவே இருக்கு.அம்பி ரொம்ப ரொம்ப பிஸியாமே.கமெண்ட்ஸ் போடக் கூட முடியாத அளவுக்கு பிஸியாமே.பக்கம் எட்டிப் பார்க்கக் கூட முடியாத அளவு பிசியாமே.என்ன பண்ணலாம் சொல்லுங்கோ.16வயசு பொண்களுக்குதான் நல்ல நல்ல ideas வரும்.---SKM

  ReplyDelete
 3. மொக்கைத் தலைவினு நிரூபிக்கறீங்க :) ஆனாலும் புது மாப்பிள்ளை அம்பிய இப்படி வாரி இருக்க வேண்டாம்!

  ReplyDelete
 4. மேடம், இப்படி எல்லாம் ஒரு மொக்கை பதிவு தேவையான்னு எல்லோரும் கேக்குறாங்க.. ஆனா நான் அப்படி கேப்பேனா.. இப்போ தான் ஏதோ உங்க இணையம் வேலை செய்யுது.. நீங்களும் திரவுபதி கதைன்னு புராணம் எல்லாம் ஆரம்பிச்சிருக்கீங்க.. கலக்குங்க போங்க

  ReplyDelete
 5. என்ன நடக்குது இங்க?

  கமெண்ட்க்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை. சும்மா.......

  ReplyDelete
 6. Yen Iniya Pongal Valthukal Athai... First Attendence yenodathu

  ReplyDelete
 7. ஹெல்லோ சார், நிஜமாவே அவன் சின்னப் பையன். வேலையிலே இருந்தா 30 வயசா? அப்பாடி, அதுக்கு இன்னும் நிறைய வருஷம் இருக்கு. கீழே முதல் பின்னூட்டம் கொடுத்திருக்கான் பாருங்க. என்னோட பதிவிலே பின்னூட்டம் கொடுக்கிறதுக்காகவே ப்ளாக் திறந்திருக்கான்.

  ReplyDelete
 8. அதெல்லாம் இல்லை எஸ்.கே.எம். சும்மா இருக்கும்போது எழுதி வச்சுப்பேன். அதை எனக்கு இணையம் வரப்போ ரொம்ப முயற்சி செய்து போடறேன். சிலது பப்ளிஷ் ஆகுது, சிலது ஆகலை. உங்களுக்கு அனுப்பிச்ச மெயில், மயில் எல்லாமும் அப்படித்தான் போயிருக்கு. எதுவும் போனதாத் தெரியலை.

  ReplyDelete
 9. போர்க்கொடி, இதெல்லாம் ஒரு மொக்கையா? அதெல்லாம் இல்லை.இந்த மாதிரிப் பதிவுகள் படிக்கவே ஒரு கூட்டமே இருக்கு. இன்னிக்கு என்னோட அண்ணா பையன் ரசிகர் மன்றமே திறந்தாச்சுன்னு சொல்லி இருக்கான். நீங்க வேறே.

  ReplyDelete
 10. கார்த்திக், நான் ஏற்கெனவே நிறையப் புராணம் எல்லாம் சொல்லிட்டுத் தான் இருந்தேன். மறந்துட்டீங்க போல் இருக்கு. அது சரி, நீங்களும் ஏதாவது தங்கமணியைப் பார்த்து வச்சிருக்கீங்களா என்ன? உங்க பதிவிலே புதுசா ஒண்ணையும் காணோம். எனக்குத் தான் தெரியலையா?

  ReplyDelete
 11. ஹிஹிஹி, புலி, பதுங்குமிடத்திலே இருந்து வெளியே வந்தாச்சா? எப்போ இங்கே வந்து உறுமப் போறீங்க? ரொம்ப நாள் கழிச்சு வரீங்க.

  ReplyDelete
 12. கண்ணா, மணி வண்ணா? நீ சொன்னபடி எனக்கு ஒரு கோவில் கட்டி, ரசிகர் மன்றம் திறந்து, கட்-அவுட் வைக்கும் பொறுப்பையும் துபாய் ரசிகர்கள் சார்பில் ஏத்துக்கோ அப்பா, எல்லாம் உன் செலவு. அத்தைக்கு இது கூடவா செய்ய மாட்டே? உனக்கும் ரசிகர் கூட்டம் தானே வரும் பாரு. இங்கே வந்துட்டே இல்லை? இனிமேல் தங்கமணியும் தானே தேடி வருவாள். :D

  ReplyDelete
 13. அம்பி வரமாட்டார்னு தெரியும், அதுக்காக ஆப்பு வைக்காமல் இருக்க முடியுமா? என்ன தி.ரா.ச. சார்&எஸ்.கே.எம், உங்க 2 பேர் பதிவுக்குக் கூடவா வரதில்லை? இல்லாட்டி ஈ-மெயில், எறும்பு மெயில் எல்லாம் அனுப்பறதில்லையா? அப்படி என்ன பேசுவார்? ஃபோனிலே? ஆஃபீஸ் வேலை ஏதும் உண்டா இல்லையா?

  ReplyDelete
 14. Sorry ATHAI Oru 1 Monthuku Thanglish postu than...Inga Admin sathi panran.......
  Ippo Thanungo Donation receipt Book Ready panirukom......Inga Kooda irukum Kalavani payalugo,Jigidingo yellarum 1% Jan WBPya Nivarana nithiya tharennu soliruka....
  Trisha Rasigar Manram kelvi patten athuku opposite open panidalama,Illa Inga internet Cityla Cutout Vaikalamanu Survey Intranetla oditu irukku

  ReplyDelete