எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 14, 2007

அம்பியோட கல்யாணம்

மே மாதம் 14-ம் தேதி திங்கள் அம்பிக்குக் கல்யாணம். இந்த வலை உலகுக்கு வந்து பழக்கம் ஆனவர்களில் அம்பியும் ஒருவர் என்றாலும் அவர் என்னைச் சீண்டுவதும், நான் அவருக்குப் பதில் கொடுப்பதும் ஒரு வருஷமாக ஓயவில்லை. அதனாலேயே எல்லாரும் என்ன இது இவங்க இரண்டு பேருக்கும் எப்போ பார்த்தாலும் சண்டைன்னு நினைக்கிறாங்க! இது இன்னும் ஓயவில்லை என்பதும் நிஜம். இத்தனைக்கும் 2 பேரும் ஒரே நட்சத்திரம், ஒரே ராசி. என்றாலும் 7-ம் பொருத்தம் தான். நான் என்ன சொன்னாலும் அதற்கு அவர் எதிராகவும் அவர் என்ன எழுதினாலும், நான் போய் நல்லா இல்லைனு சொல்லுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தனைக்கும் அவரோட தங்கமணி குறிப்பிட்ட மாதிரி அவர்களோட ப்ளாகர் குடும்பத்து அங்கத்தினர் கூட இல்லை நான். இருந்தாலும் இது தொடருகிறது. அம்பி தன்னுடைய கல்யாண விஷயத்தை என்னிடம் தெரிவிக்கும்போதே மே மாதம் நான் இந்தியாவில் இருக்க மாட்டேன் என்று எனக்கு தெரியும். அப்பாடா, மொய் எழுதறதிலே இருந்து தப்பிச்சேனேன்னு ஒரு அல்ப சந்தோஷம்.! :P இது அம்பிக்கு! இதான் கல்யாண மொய்!

இந்த வலை உலகில் நாங்கள் இருவரும் போட்டுக் கொள்ளும் சண்டை ரொம்பப் பிரபலம் ஆகி இருக்கிறது. தினத் தந்தி "சிந்துபாத்" மாதிரி இது ஓயாது என திரு தி.ரா.ச. அவர்கள் கூட ஒருமுறை கூறி உள்ளார். இன்று காலையில் இருந்து அம்பியைத் தொடர்பு கொள்ளப் பல முறை முயன்றும் முடியவில்லை. நேரில் சென்று வாழ்த்த முடியாவிட்டாலும், தொலைபேசியாவது வாழ்த்தலாம்னு நினைச்சேன். மொபைலை நிறுத்தி வச்சிருப்பார் போலிருக்கு. இந்தப் பதிவை அவர் பார்க்கும்போது திருமணம் ஆகிப் பல நாட்கள் ஆகி இருக்கும். அல்லது மாசங்கள் ஆகி இருக்கும். இருந்தாலும் பார்ப்பவர்கள் யாராவது சொல்லுவார்கள் என நம்புகிறேன். மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் அம்பி அன்ட் அவரோட தங்கமணி இருவருக்கும். அந்த மரியாதா புருஷோத்தமன ஆன ஸ்ரீராமனையும், அன்னை சீதாவையும் போல் ஈருடலும், ஓருயிருமாய் செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் இரண்டும் கலந்து வாழ எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளைப் பிரார்த்திக்கிறேன்.

27 comments:

  1. இந்த ப்ளாகர் பாருங்க இந்த லேபலை ஒண்ணுமே சொல்லாம் ஏற்றுக் கொண்டதோட இல்லாமல் கலரிலேயும் காட்டறது! ஹிஹிஹி, பதிவே கலரிலே போடலாம்னு தான் இருந்தேன். ஆனால் வேணாம்னு விட்டுட்டேன், எங்கேயாவது சமயத்தில் காலை வாரிடும், அதான்!

    ReplyDelete
  2. அம்பிக்கும், தங்கமணிக்கும் மனமார்ந்த திருமண வாழ்த்துகள்!

    மொபைலை ஆஃப் பண்ணி வெச்சதை வெச்சு ஒரு 2 வருஷம் சண்டை போடலாமே நீங்க!

    ஜமாயுங்க!

    :))

    ReplyDelete
  3. நான் சண்டை போடலாம், ஆனால் அம்பிக்குத் தான் என்ன செய்யறதுன்னு புரியாது! ஒரு பக்கம் பூரி கட்டை அடி வாங்கிட்டு இன்னொரு பக்கம் என் கிட்டேயும் ஆப்பு வாங்கணும்.ஆஹா, நினைச்சாலே ஜாலியா இருக்கே! இதுவும் நல்ல யோசனைதான்! :D

    ReplyDelete
  4. எல்லா நலன்களும் பெற்று நல்வாழ்வு வாழ மணமக்களை மனமார
    வாழ்த்துகின்றோம்.

    என்றும் அன்புடன்,
    துளசி & கோபால்

    ReplyDelete
  5. ரொம்ப நன்றி, துளசிக்கும், மணிப்ரகாஷுக்கும், அம்பியின் சார்பாக.

    ReplyDelete
  6. எல்லா நலன்களும் பெற்று நல்வாழ்வு வாழ மணமக்களை மனமார
    வாழ்த்துகின்றோம்.

    by

    abiappa,abiamma & abipappa

    ReplyDelete
  7. அம்பிக்கும், தங்கமணிக்கும் மனமார்ந்த திருமண வாழ்த்துகள்!

    ReplyDelete
  8. அபி அப்பா, அபி பாப்பாவொட தம்பியைச் சேர்த்துக்க மறந்துட்டீங்களே? அழப் போறான்! :D

    @மதுரையம்பதி, வாங்க, வாங்க, அத்தி பூத்தாப்போல இருக்கு உங்க வரவு.

    ReplyDelete
  9. அம்பிக்கும், தங்கமணிக்கும் மனமார்ந்த திருமண வாழ்த்துகள்

    ReplyDelete
  10. naanum ranguvum kooda than ore natchathiram ore raasi, evlo othumai theriyuma?? adhellam rendu pakkathilayum irundhu varanum, ambi oruthare poraadina paavam epdi othumai varum :-)

    ReplyDelete
  11. யம்மா போர்க்கொடி, ஏன் சொல்ல மாட்டீங்க! உங்க அருமை அண்ணாச்சியைப் பத்தி எனக்குத் தான் நல்லாத் தெரியும். ஏதாவது பரிஞ்சு பேசினால் அப்புறம் வண்டவாளம் தண்டவாளத்தில் இறங்கிடும்! ஜாக்கிரதை, அண்ணன், தங்கை இருவருக்குமே! :P

    ReplyDelete
  12. நானும் வேதாவும் கூட ஒரே ராசி, ஒரே நட்சத்திரம். நாங்க ரெண்டு பேரும் ஒத்துமையா தான் இருக்கோம்! அது தெரியுமா?

    ReplyDelete
  13. அம்பிக்கும் தங்கமணிக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  14. // கீதா சாம்பசிவம் said...
    நானும் வேதாவும் கூட ஒரே ராசி, ஒரே நட்சத்திரம். நாங்க ரெண்டு பேரும் ஒத்துமையா தான் இருக்கோம்! அது தெரியுமா? //
    தலைவி எழுத மறந்து போன டிஸ்கி : மொக்கைப் பதிவுகள் போடுவதில் தவிர மற்றவற்றில்.
    :-)))

    ReplyDelete
  15. அம்பிக்கும், தங்கமணிக்கும் மனமார்ந்த திருமண வாழ்த்துகள்


    (அப்புறம் உங்கள் சண்டைகளுக்கும்)

    ReplyDelete
  16. வாங்க லதா, என்ன உங்களை "டாக்" பண்ணி எத்தனை நாளாகுது? என்னோட அற்புதமான பதிவுகளைப் பத்தி இப்படி ஒரு விமரிசனமா? என்ன தொண்டி நீங்க? (தொண்டருக்குப் பெண்பால்) :D

    @மின்னல், அடுத்து உங்களோட சண்டை ஆரம்பிக்கலாமான்னு பார்க்கிறேன். உங்களுக்கும் தங்கமணி வந்துடுவாங்க என்னோட சண்டை போடற ராசி அப்படி!

    ReplyDelete
  17. அட, ராயல், சத்தமே இல்லாமல் வந்துட்டு போயிருக்கிங்க!

    ReplyDelete
  18. அட, ராயல், சத்தமே இல்லாமல் வந்துட்டு போயிருக்கிங்க!

    ReplyDelete
  19. apram "hihihi thalaippu kuduthen kaanalai" postla "ennai mudhal dhadavai paarkum yaarum avalavu buthisaaliyaga ninaithadhu illai"nu solli irukinga! idhai padichadhula irundhu ore vi.vi.si!!!

    appo rendavadhu dhadavaila irundhu apdi nenapanga nu solla varingla?? enna koduma saravanan idhu?? yaarum kekradhu illiya indha akramatha ellam? ;-)

    ReplyDelete
  20. enna vandavalam thandavalamnu, ennnoda ranguvum seri, ambiyoda thanguvum seri, naanga solradhai thaan nambuvaanga! idhukku mela neenga yaaru kitta enna sonna englukku enna bayam :-)

    overa pesina apram pera kuzhandhaiya unga mela asingam panna solluven! neenga jakradhai :D

    ReplyDelete
  21. போர்க்கொடி, ரொம்பப் பேசாதீங்க, உடம்புக்கு ஆகாது. அப்புறம் என்னைப் பத்தி நானே எவ்வளவு தன்னடக்கத்தோடு(!) சொல்லிட்டிருக்கேன், அது கூடத் தெரியாமல் என்ன? உங்களுக்கும் ஆப்பு இலவசமாக வழங்கப் படும், எச்சரிக்கை! :P

    ReplyDelete
  22. Kandippa Mobile off pannidhaan vaippar.Illaiyana, Thanguvai gavanikira attention Thappi pona kalyanam andre poori kattaiyil adi dhaan vanganum.

    Nan adhunala 2 days earlier a kooptu wish pannittomla. Ungalai koopida thaan neram innum varala.Iam really sorry.Adutha varam kandippa Kilambum mun koopduren.

    ReplyDelete
  23. வாங்க எஸ்.கே.எம். நினைவு வச்சுட்டு இருக்கீங்களா? ரொம்பவே சந்தோஷம். ரொம்பப் பேர் இப்போ மறந்துட்டாங்க இங்கே வரதுக்கு. அதிலே உபிச.வும் ஒருத்தர். என்ன செய்யறது? எல்லாம் நேரம்! :P

    ReplyDelete
  24. My heartiest congratulations to the bride and the groom.

    ReplyDelete
  25. அம்பிக்கும் தங்கமணிக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  26. ரொம்ப நன்றி சதயாவுக்கும், தேவுக்கும்.

    ReplyDelete