எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 25, 2007

இது ஒரு காதல் கதை!

எல்லாருமே காதல் கதைகள் நிறையவே எழுதி இருக்காங்க. ஆனால் கல்கியின் இந்தக் காதல் கதை வித்தியாசமான ஒன்று. அவர் இதை எழுதும்போது திரைப்படமாய் எடுக்கும் நோக்கில் எழுதி வந்ததாய்ச் சொல்வார்கள். எப்போ எழுதினார் என்பதெல்லாம் தெரியலை. ஆனால் இதுதான் அவரோட கடைசிக் கதை என்ற வரையிலும் தெரியும். பாதியில் நின்று போன இந்தக் கதை பின்னர் அவர் பெண்ணான "ஆனந்தி"யால் எழுதி முடிக்கப் பட்டது என்றும் தெரிந்து கொண்டேன். எனக்குப் பத்து வயது இருக்கலாம். தற்செயலாக மாமா வீட்டுக்கு லீவுக்குப் போன நான் இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தைப் படிக்க நேர்ந்தது. கதையில் சந்திரமணி என்னும் பெண், காசிலிங்கம் என்னும் சர்க்கஸ்காரரைக் காதல் மணம்புரிவதும், இந்துமதி என்ற பெண் பிறப்பதும் அவளின் காதலும் தான் முக்கியமான ஒன்று. காதல் என்றால் ஆண், பெண் இருவரிடம் மட்டும் திருமண ஆசையில் ஏற்படும் ஒன்று என்ற அளவில் மட்டுமே புரிந்து வைத்திருந்த நான், அப்போதுதான் வேறு பரிமாணங்கள் இதில் இருப்பதையும் தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன் எனச் சொல்லலாம். காதல் என்பது புரியாவிட்டாலும் அன்பு, பாசம்னால் புரியுமே! அந்த வகையில் இதில் புரியாமல் ஒன்றும் இல்லை. உண்மையில் இப்படிப் பட்ட ஓர் அன்பை, பாசத்தை, நேசத்தை, கரை காணாக் காதலை அன்று வரையில் எனக்குத் தெரியாது! கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. இது ஒரு கதைதானே என்றும் நினைத்துக் கொண்டேன். மற்றப் பாகங்கள் கிடைக்கவில்லை. முடிவும் தெரியவில்லை. சிறையில் இருக்கும் அமரதாரா என்ன ஆனாளோ என்ற எண்ணம் துரத்திக் கொண்டே இருந்தது. ரங்கதுரையும், இந்துமதியும் சேர்ந்தார்களா? இந்துமதி தன் மேலிருந்த கொலைப்பழியில் இருந்து தப்பித்தாளா? யார் உண்மையில் கொலை செய்தது? மனம் தத்தளித்துத் தடுமாறிக் கொண்டே இருந்தது பல வருஷங்கள். இந்தக் கதை மனதில் இருந்து கொண்டே இருந்தது.

அந்தப் புத்தகம் தான் "கல்கியின் அமரதாரா". கல்கி அவர்கள் தன் வாழ்நாளின் கடைசியில் எழுத ஆரம்பித்து முடிக்காமலே போனது. இந்தக் கதையின் நாயகியான "அமரதாரா" என்ற இந்துமதி சிறையில் இருக்கும்போது தன் காதலன் ஆன ரங்கதுரையின் வேண்டுகோளுக்கு இணங்கி எழுதியதாய்க் கதை ஆரம்பிக்கும். கதை இந்துமதியின் அம்மா சந்திரமணி, காசிலிங்கத்தை மணந்து கொண்டு, உறவினர் தொல்லையில் இருந்து தப்பிக்க மந்திரமூர்த்திப் பண்ணையாரிடம் அடைக்கலம் புகுந்ததில் ஆரம்பித்து இருக்கும். இந்துமதியின் வார்த்தைகளிலேயே போகும் இந்தக் கதையில் இந்துமதி, ரங்கதுரையை முதன் முதல் அவன் சிநேகிதன் ஆன தங்க பாண்டியனுடன் சேர்ந்துக் காரில் போகும்போது சந்தித்ததும், அப்போது அவள் தறி கெட்டு ஓடும் கன்றுக்குட்டியை அடக்கக் கையில் பிடித்திருந்ததும், தாவணி காற்றில் பறக்க, பின்னல் தொங்க, கன்றுக்குட்டியை அடக்க முடியாமல் பிடித்து இழுத்துக் கொண்டு நிற்கும் இந்துமதியையும் அவளைப் பார்த்து வியக்கும் ரங்கதுரையையும் ஓவியர் மணியத்தின் தூரிகை அருமையாகச் சித்தரித்து இருக்கும். இந்துமதி தன் வாழ்க்கையைப் பற்றி ரங்கதுரையின் வேண்டுகோளுக்கு இணங்கி எழுதிக் கொடுத்தது போலவே, அவனும் தன் வாழ்க்கையைப் பற்றி முழுதும் எழுதி அவளிடம் படிக்கக் கொடுப்பான். அவனுக்கு அவள் மேல் உள்ள அன்பு எத்தகையது என்றால் இந்துமதிக்காகத் தன்னுடைய நீதிபதி பதவியையே வேண்டாம் என உதறிவிடும் அளவுக்கு இருந்தது.

ரங்கதுரைக்கு இந்துமதியிடம் தானாகப் பெருக்கெடுத்து வரும் அன்பும், பாசமும், நேசமும், காதலும், பரிவும் கதை முழுதும் விரவி நிற்கும். அதன் பிரதிபலிப்பே போல் இந்துமதிக்கும் ரங்க துரையிடம் ஏற்படும் அன்பும் இருக்கும். இருவருக்குமே இது எப்படிப்பட்ட அன்பு என்று ஆச்சரியமாக இருக்கும். தந்தை மகளிடம் வைத்திருக்கும் பாசம் போன்றதா? தாய் மகனிடம் காட்டும் அன்பு போன்றதா? அல்லது காதலன், காதலியிடம் காட்டும் காதலா? அல்லது கணவன், மனைவிக்குள் உள்ள நேசமா? என்று ஆச்சரியப் படுவார்கள். நானும் சேர்ந்துதான் ஆச்சரியப் பட்டிருக்கிறேன், இது என்ன அன்பு என்று. இந்துமதி ரங்கதுரையை நினைத்து ஏங்கும் அதே சமயம் ரங்கதுரையும் இந்துமதியை நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பான். இதையும் மணியத்தின் ஓவியம் மிகவும் அருமையாகச் சித்தரித்து இருக்கும். இந்துமதியின் கண்களில் தெரியும் ஏக்கமும், வருத்தமும் நம் நெஞ்சையே உலுக்கும். ரங்கதுரை அருகில் இல்லாமல் அவள் நண்பர்களாலும், உறவினர்களாலும் ஏமாற்றப் பட்டதும், அதன் தாக்கத்தில் சினிமாவில் நடிக்கப் போனதும், அதற்குப் பின்னர் ரங்கதுரையை நெருங்கிய சிநேகிதியுடன் கண்டு மனம் வெதும்பிப் போய் தங்கள் காதல் கதையையே படமாக எடுத்ததும், அதைப் பார்த்து மனம் பதைத்துப் போன ரங்கதுரையும், இப்போது ரங்கதுரை இங்கே வந்தால் பரவாயில்லை, என இந்துமதி அவன் பிரிவு தாங்க முடியாமல் நினைக்கும் அதே வேளையில் ரங்கதுரை அவள் அருகே வந்து விட்டிருப்பான். மனதின் எண்ண அலைகளின் ஓட்டமும், ஒரே சமயத்தில் இருவருக்கும் சேர்ந்தாற்போல் எண்ணங்கள் பரிமாற்றம் ஆகும் விந்தையும் சிலிர்க்க வைக்கும். கதையைப் படித்த எல்லாருக்கும் இப்படி இருக்குமா? அல்லது இருந்ததா? தெரியாது! என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு அதிசயம், ஆனந்தம், அபூர்வம், அழகு, எல்லையற்றது!. அவ்வளவுதான். இம்மாதிரியான அன்பை நான் அப்போதுதான் முதன்முதலாய் உணர்ந்தேன்.

அதுவரை பாரதியின் சுதந்திரப் போரட்டப் பாடல்களையே கேட்டிருந்த நான் அவரின் காதல் பாட்டுக்களையும் இந்தக் கதை மூலம் அறிமுகம் செய்து கொண்டேன். இப்போதும் ,

"நெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன்,
நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்,
திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்,
சின்னக் குமிழிகளில் நின்முகங்கன்டேன்"
"பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை,
சிரித்த ஒலியினில் உன் கைவிலக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங்கண்டேன்"

என்ற பாரதியின் பாட்டுப் படிக்கும் போதெல்லாம் இந்தக் கதைதான் நினைவில் நிற்கும். பின்னர் பல வருஷங்கள் கழித்து, இந்தப் புத்தகம் தற்செயலாய் எல்லாப் பாகங்களும் கிடைத்துப் படித்து முடிவைத் தெரிந்து கொண்டேன். காதல், திகில், பேராசை, அன்பு, பாசம், மர்மம் அனைத்தும் கலந்து வரும் இந்த நாவல் தான் கல்கியின் நாவல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

எனக்குத் தெரிந்து இந்தப் புத்தகம் அச்சில் இல்லை. பலவருஷங்களுக்குப் பின்னர் ஒரே ஒரு பதிப்பு மட்டும் வந்து பின்னர் அதுவும் இல்லை. அதனால் நிறையப் பேருக்கு இது பற்றித் தெரியவில்லைனு நினைக்கிறேன்.

8 comments:

  1. கீதா,அமரதாரா எங்க அம்மாவுக்குப் பரிசளிப்பாக வாங்கினேன். இரண்டு பாகம். அம்மா என்னிடமே திருப்பித் தந்தார். என்னிடம் இருக்கிறது என்று நினைக்கிறேன். நாம் சந்திக்கும்போது கொடுக்கிறேன்.

    ReplyDelete
  2. கடைசியிலே, இல்லை, இல்லை, முதலில் இருந்தே இந்தத் தலைப்பும் ஜி3 ஆயிடுச்சே! எல்லாம் ஹெட்லெட்டர்! வேறே என்ன சொல்றது?

    @வல்லி, ரொம்பவே நன்றி, கட்டாயமாய்ப் படிக்கணும் மறுபடியும், புத்தகம்தான் கிடைக்கவே இல்லை! :((((

    ReplyDelete
  3. //எனக்குப் பத்து வயது இருக்கலாம்.//

    அதாவது 1945ல். இல்லையா? ஓகே! ஓகே! :)

    @valli madam, ப்ளீஸ் தயவு செய்து அந்த புக்கை பாட்டிக்கு தர வேண்டாம். மீண்டும் ஒரு மொக்கை பதிவு நமக்கு தான் வந்து சேரும். :p

    ReplyDelete
  4. @ஆப்பு, எங்க அப்பா, அம்மா கல்யாணம் நடந்ததே சுதந்திரத்துக்குப் பின்னர் தான். ஹிஹிஹி,ஹி, மூஞ்சியிலே கரி ஜாஸ்தியா இருக்கு, துடைச்சுக்குங்க! :P

    ReplyDelete
  5. ஆப்பு, "தாமிரபரணி மகாத்மியம்" புத்தகத்தை நீங்க இன்னும் கொடுக்காமல் வச்சிருக்கிறதை நான் மறக்கவில்லை! :P மத்தவங்களையும் இப்படியா கெடுக்கிறது? :P

    ReplyDelete
  6. //எங்க அப்பா, அம்மா கல்யாணம் நடந்ததே சுதந்திரத்துக்குப் பின்னர் தான். //

    ஏன்? நேரு மண்டைய போட்டதுக்கு அப்புறம் தான்!னு சொல்ல வேண்டியது தானே.

    //தாமிரபரணி மகாத்மியம்" புத்தகத்தை நீங்க இன்னும் கொடுக்காமல் வச்சிருக்கிறதை நான் மறக்கவில்லை!//
    அந்த புக் எல்லாம் திருனெல்வேலி காராளுக்கு தான் குடுப்பேன். தஞ்சாவூர் காராளுக்கு கிடையாது.

    ReplyDelete
  7. அட, அம்பி, நீங்க தானே எங்க அம்மாவோட கல்யாணத்தைக் கிட்டே இருந்து நடத்தினது, உங்களுக்குத் தெரியாம வேறே யாருக்குத் தெரியும் இல்லையா? ரொம்பவே பொய் சொல்ல வேண்டாம், யாரும் நம்பறதுக்கு இல்லை, உங்க பொய்யை! புத்தகம் கொடுக்க மாட்டேன்னு சொல்றதுக்கு, இந்த ஊர்ப் பிரிவினை வேறேயா? உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியுமே! :P

    ReplyDelete
  8. Hi,
    I have read "Amarathara" book a month back,
    In chennai , near to my place a library contains all the binded edition of so many books (not only kalki) composing of the weekly magazine pages ,
    what a depiction! marvellous ....
    Amarathara is also a master piece.
    you know i read that of about when indhu lost all his well wishers, and by the story narration i assumed that indhu is going to join cinema,
    then i closed the book i was unable to continue , i wept ,
    because i was also a victim of the love,

    ReplyDelete