எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 12, 2008

கருஞ்சாம்பல் நிறத்தில் ஒரு குட்டி!


எல்லாரும் படிச்சுட்டுப் பின்னூட்டம் போடறதுக்குப் பதில் சொல்ல முடியலை, மன்னிக்கவும், ஒண்ணும் இல்லை, ஏற்கெனவேயே தேன் கலரில் ஒரு அம்மாப் பூனை வந்து குட்டி போட்டுப் பதினைந்து நாள் ஆகிவிட்டது. அது வந்து சைடில் உள்ள பாத்ரூமில் குட்டி போட்டுட்டு, நாங்க யாரும் அங்கே வரவே கூடாதுனு தடை உத்தரவு போட்டுட்டு இருக்கு. இந்தத் தேன்கலர்ப் பூனை சயாமிஸ் பூனை மாதிரிச் சின்ன ரகம். ஒரு கைக்குள் அடக்கிவிடலாம், இந்தப் பூனையை. குட்டிகளும் உள்ளங்கைக்குள் அடங்கறாப்போலச் சின்ன சைஸ்தான். மூணு குட்டிகள். எல்லாம் மெத்து, மெத்துனு பார்க்கவே ரொம்ப சாஃப்டாக, வழவழனு, ரொம்பவே பிரகாசமான நிறங்களிலும் இருக்கு. கிட்டேத் தான் போக முடியலை. ப்ளம்பிங் வேலை செய்ய வந்த ப்ளம்பரை பார்த்ததும் அது சீறிய சீறல் இருக்கே, ரொம்பவே ஜாக்கிரதையாக் குட்டிகளைப் பார்த்துக்குது. மூணு குட்டியும் மூணு கலர். சின்னக் கண்களைத் திறந்து பார்க்கிறதே அழகா இருக்கு. இந்தத் தேன் கலர் பூனை குட்டிகளை விட்டுட்டு, வேலைக்கு? அல்லது சாப்பாடு தேடப் போகும்போது, குட்டிகளிடம் சொல்லிட்டுப் பிரியாவிடை பெற்றுக் கொண்டு போகிறது. அதுங்க "மியாவ்" "மியாவ்"னு கத்திட்டு ஒண்ணை ஒண்ணு சுத்திச் சுத்தி வந்துட்டு, ஏதோ புரிஞ்சாப்பலே குட்டிகள் அமைதியாப் போய்ப் படுத்துக்கிறதும், இந்த அம்மாப் பூனை எங்கேயோ போயிட்டு வரதும், எப்படியோ குட்டிகள் கத்தற சத்தம் கேட்டு ஓடி வந்து பார்க்கிறதுமாய் ஒரே பாசமழை தான் போங்க!

இது இவ்வாறிருக்க இப்போ இன்னொரு சாம்பல் கலர் பூனையும் வந்திருக்கு. இது பார்க்க நாட்டு/காட்டுப் பூனை சைஸில் பெரிசா இருக்கு. இதுவும் குட்டி போடத் தயாரா வந்திருக்கு போலிருக்கு. அதே பாத்ரூமிற்குப் போட்டி போட்டுட்டு இருக்கு. ஆனால் தேன் கலர் பூனை இன்னும் காலி செய்யலை. அதைப் புக்ககத்துக்கு அனுப்பாமல் இதை எப்படி உள்ளே விடறதுனும் தெரியலை. தேன் கலர் பூனையோட மாமியார் அதிகமாய் நகை, பாத்திரம், பண்டம்னு கேட்கிறாங்க. அதைப் பார்க்கிறதா? இல்லை பிரசவத்துக்குக் காத்திருக்கிற இதைப் பார்க்கிறதானு புரியலை. மேலே, மேலே ஒரே செலவா வைக்குதுங்க இரண்டுமாச் சேர்ந்து, கொஞ்ச நாள் கழிச்சு வச்சுக்கக் கூடாதோ? இப்போ எங்கே போவேன் பணத்துக்குனு புரியலை! ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை கவலையினாலே. யாராவது பணம் கொடுத்து உதவுங்க, இல்லைனா பூனை இரண்டையும் பிடிச்சுட்டுப் போங்க!

ஞாயிறு அன்று குரோம்பேட்டையில் ஒரு கல்யாணத்திலே கலந்துக்கப் போயிட்டுத் திரும்பி வரும்போது காலை பத்து மணி தான் ஆகி இருந்தது. ஆனால் வெயில் சுட்டெரித்தது. நிஜமாவே கை எல்லாம் வெயில் பட்டு எரிச்சல் ஜாஸ்தியா இருந்தது. இப்போவே இப்படி இருக்கே, இன்னும் அக்னி நட்சத்திரம்னா என்ன செய்யப் போறோமோனு கவலைப் பட்டுட்டு இருந்தேன் பாருங்க. திங்கள் அன்று என்னோட ம.பா. வாசலில் கீரைக்காரி ரொம்பத் தொந்திரவு செய்தாள்னு அவள் கிட்டே மனைத்தக்காளி வாங்கினார் ஒரு 2 ஆழாக்கு. அதை திங்கள் அன்று மோரில் ஊறப் போட்டு வைத்தேன். செவ்வாய் அன்றில் இருந்து சென்னையில் காலம் இல்லா காலத்தில் மழை, அதுவும் லோ ப்ரஷரில் மழை. சும்மாவே அங்கங்கே, நம்ம விஷயம் தெரிஞ்சு எங்க ஊரில் மழை இல்லை, நீங்க வந்து வத்தல் போடுங்க, வடாம் காய வையுங்கனு கூப்பிடறாங்க, இப்போ என்னன்னா, கோடை காலம் மாதிரியே இல்லை சென்னை! வெயிலின் தாக்கமே தெரியலை 2 நாளா. தினம் தினம் இப்படி ஏதாவது வாங்கிப் போடுன்னு என் ம.பா. யோசனை சொன்னதோடு இல்லாமல், நீ ஆன்மீகமே அதிகம் எழுதறதாலே வருணபகவானுக்கு ரொம்பவே சந்தோஷம் வந்துடுச்சு போலிருக்கு, வேணும்னா அவருக்கு நன்றி தெரிவிச்சு ஒரு மெயில் கொடுத்துடுனு சொல்லிட்டு இருக்கார். என்ன செய்யலாம் சொல்லுங்களேன்!

3 comments:

 1. /செவ்வாய் அன்றில் இருந்து சென்னையில் காலம் இல்லா காலத்தில் மழை, அதுவும் லோ ப்ரஷரில் மழை. சும்மாவே அங்கங்கே, நம்ம விஷயம் தெரிஞ்சு எங்க ஊரில் மழை இல்லை, நீங்க வந்து வத்தல் போடுங்க, வடாம் காய வையுங்கனு கூப்பிடறாங்க, ...என்ன செய்யலாம் சொல்லுங்களேன்! !//

  கவலைப்பட வேண்டாம். நான் புனெ போய் திரும்பிட்டேன். மழை போயிடும். இன்னிக்கு ஒத்தர் என்னப்பாத்து "நன்றிப்பா! நீ ஊருக்கு போனதால மழை பெஞ்சது" அப்படி சொன்னார். இன்னொத்தர் "நன்றிப்பா! நீ திரும்பி வந்திட்டே. மழை நின்னுடும்" னார்!

  ReplyDelete
 2. @திவா,
  நேத்துப் போய்ச் சுண்டைக்காய் வாங்கிட்டு வந்தாச்சு, தம்பி பேரைக் கெடுக்க வேணாம்னு தான், பார்க்கலாம், மழை என்ன செய்யுதுனு! :P

  @ரசிகரே, என்ன இளிப்பு? க்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete