எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 07, 2008

கும்மியடி! தமிழ்நாடு முழுதும் குலுங்கிடக் கும்மியடி!

"பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக்களிப்போடு நாம் பாடக்
கண்களிலே ஒளி போலே உயிரில்
கலந்தொளிர் தெய்வம் நற் காப்போமே! "

கும்மியடி! தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோமென்று கும்மியடி!"

பாரதி இந்தப் பாட்டைப் பாடியது எப்போதுனு தெரியலை, இருந்தாலும் பாரதி பாடிய காலத்தில் பெண்கள் சற்று ஒடுக்கி, அடக்கித் தான் வைக்கைப் பட்டிருந்திருக்கின்றனர். ஆகவே பாரதி இவ்வாறு பாடினான், சரி, ஆனால் நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின, என்று கும்மி அடிக்கும் நிலையில் இன்ரு நாம் இருக்கிறோமா, என்றால் இல்லை. இப்போது பெண்களைப் பிடித்திருக்கும் புதிய பிசாசு, "மெகா தொடர்" என்னும் பிசாசு, அது போயிடுச்சா என்றால் இல்லைனு தான் சொல்லணும். மூட நம்பிக்கைகளைக் களைய வேன்டிய தொலைக்காட்சிகளின் தொடர்களிலே, அதை அதிகரிக்கும் வண்ணம், போலி சாமியாரிடம் சென்று ஜோசியம் பார்ப்பது, எதிரி அழியவேண்டி அவரிடம் சென்று வழி கேட்பது, இன்னும் சில தொடரில் , இந்த சூன்யம் வைக்கிறதுனு சொல்லுவாங்களே, அதுவே வைக்கிறாப்போல எல்லாம் வருது. நேற்று ஒரு தொலைக்காட்சித் தொடரில் திருமணம் ஆகும் முன்னரே கர்ப்பம் அடைந்த ஒரு பெண் அதைப் பற்றிய செய்தியைத் தன் அண்ணனிடம் சர்வ சாதாரணமாய்க் "கடையில் போய்க் கத்தரிக்காய் வாங்கினேன்" என்று சொல்லும்படியான அலட்சிய பாவத்தோடு சொல்லுவதும் இல்லாமல், தான் வாழப் பிறரை அழிப்பேன் என்றும் ரொம்பவே சந்தோஷமாய்ச் சொல்லுகிறாள். என்னே புதுமைப் பெண்? இப்படி அல்லவோ இருக்க வேன்டும்! இப்படி நம்மோட சொந்தக் காசை கொடுத்துத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கி, சொந்தக் காசிலே கேபிளுக்கும் பணத்தை அழுது, சொந்தச் செலவில் சூன்யம் வச்சுக்கிறதிலே தமிழ்நாட்டுப் பெண்களை யார் மிஞ்ச முடியும்? அடிப்போம் கும்மி அனைவரும் சேர்ந்து!
"கும்மியடி தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி!"

"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என
எண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற
விந்த மனிதர் தலை கவிழ்ந்தார்!"

உண்மை தான், 18-ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து பெண்கள் நிலைமை இவ்வாறே இருந்து வந்திருக்கிறது, குறைந்த பட்சமாய் இரன்டு நூற்றாண்டுகளுக்காவது. அதற்கு முன்னர் பெண்கள் இவ்வாறு இருந்ததாய்த் தெரியவில்லை. சங்க காலத்தில் பல தமிழ்ப் புலவர்கள் பெண்களாய் இருந்திருக்கின்றனர். வேதம் படித்த பெண்களும் இருந்திருக்கின்றார்கள். பெண்களுக்குச் சம உரிமை என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் பெண்களின் உரிமைகள் மதிக்கப் பட்டே வந்திருக்கிறது. என்றாலும் இடையில் ஏற்பட்ட தொய்வுக்குப் பின்னர் தற்சமயம் பெண்கள் படிக்க அரசும் எவ்வளவோ வழியில் ஒத்துழைப்புக் கொடுக்கின்றது. பல சலுகைகள் கொடுக்கிறது. பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியே போவது கூட மறுக்கப் பட்டது போய் இப்போது வெளிநாடுகளுக்குக் கூடத் தனியாகச் சென்று வருகின்றார்கள். எல்லாம் சரி, ஆனால் அந்தப் படிப்பு எவ்வகையில் பெண்களுக்கு உதவி என்றால் சொல்லக் கொஞ்சம் தயக்கமாகவே உள்ளது. பெரும்பாலான படித்த பெண்கள், தவறான வழிகாட்டுதலினால், தவறான உறவுகள் வைத்துக் கொள்ளுவதும், அதை நியாயப் படுத்துவதும் தான் நடக்கின்றது. முதல் கல்யாணத்தை மறைத்தோ, அல்லது அதற்காக முறையான விவாகரத்துச் செய்யாமலோ, இன்னொருவரைத் திருமணம் செய்யும் பெண்கள் தான் அதிகம் ஆகி இருக்கிறார்கள் என்பதோடு மட்டுமில்லாமல் இவர்கள் அனைவரும் சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில், பணம், படிப்பு யாவற்றிலும் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் என்பதும் கவனிக்கத் தக்கது. ஆகவே பெண்களுக்குச் சம உரிமை கிடைச்சாச்சு!
"கும்மியடி!தமிழ்நாடு முழுதும்
குலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி!"

"மாட்டை அடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொன்டு வந்தே
வீட்டினில் எம்மிடங்காட்ட வந்தார் அதை
வெட்டி விட்டோமென்று கும்மியடி!"

பெண்கள் வீட்டு வேலை செய்வதற்கு மட்டுமே என்றிருந்த காலத்தில் எழுதப் பட்டது என்றாலும், இன்றைக்கும் அதிக அளவில் பெண்கள் தான் வீட்டை நிர்வாகம் செய்யவும் செய்கின்றார்கள். அந்த வகையில் இறைவனுக்கு நன்றி. ஆனாலும் சில பெண்கள், கணவனின் கொடுமைக்கு ஆளானாலும், பெருமளவில் பெண்கள், தங்கள் தவறான உறவினால் ஏற்பட்ட உறவை விட முடியாமல் கணவனையோ, மாமியாரையோ, புக்ககத்து மற்ற மனிதர்களையோ போலீஸில் புகார் கொடுக்கும் சம்பவங்களும் இருக்கின்றது. பெண்கள் செய்யும் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியே வாய் திறந்து சொல்லவும் முடியாமல் தவிக்கும் ஆண்களும், மாமியார், மாமனார்களும் உண்டு. நம்ம தொலைக்காட்சிகளும் இந்த விஷயத்தில் மாமனாரைப் பழிவாஙுவது முதற்கொண்டு, கணவனைப் பழி வாங்குவது வரை அனைத்தையும் சொல்லிக் கொடுத்து விடுகிறதே, அப்புறம் அதை எப்படி முயன்று பார்ப்பதாம்? அப்பாவையே அடிப்பது போலவும், காதலிக்கும் காதலனையோ, கணவனையோ அடிப்பது போலவும் காட்ட நிறையவே இயக்குநர்கள் இருக்கின்றார்கள், இவங்க எல்லாம பெண் விடுதலைக் காரர்கள். இதைப் பார்த்து ரசித்துச் சிரிக்கும் ஒரு கூட்டம் இருக்கும் வரையில் இம்மாதிரித் தொடர்களுக்கும் பஞ்சமே இல்லை. அவங்களும் பிழைக்க வெண்டாமா? ஆகவே கும்மி அடிப்போம் வாங்க!
"கும்மியடி!தமிழ்நாடு முழுதும்
குலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி!"


நாளைக்குப் பெண்கள் தினம், நாளைக்கு என்னோட கணினி என்ன செய்யும்னு எனக்கே தெரியாத ஒன்று. ஆகவே இன்னிக்கே போட்டுட்டேன், இது இன்னும் முடியலை, நேரமும். கணினியும் சரியா இருந்தா உங்களுக்கும் அதிர்ஷ்டம் இல்லாமலும் இருந்தால் மீதிப் பகுதி நாளைக்கும் வரும். வருஷா வருஷம் இது ஒண்ணு, இந்தத் தினம், அந்தத் தினம்னு வருது, இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு அன்னையர் தினம்னு வரும், என்னைப் பொறுத்த வரை, பெண்கள் தினமோ, அன்னையர் தினமோ, ஊனமுற்றோர் தினமோ, தந்தையர் தினமோ, நண்பர்கள் தினமோ, நாம் தினம் தினம் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்தாலே போதும், நம்மளாலே முடிஞ்சதைச் செய்தாலே போதுமானது. நம் சக்திக்கு உட்பட்டதே போதும்.

5 comments:

  1. உங்க கணிணி அதுக்குள்ள சரியாயிடுச்சா? :p

    //கணினியும் சரியா இருந்தா உங்களுக்கும் அதிர்ஷ்டம் இல்லாமலும் இருந்தால் மீதிப் பகுதி நாளைக்கும் வரும். //

    அதானே! நீங்க தான் முன்னெச்சரிக்கை முத்து பாட்டியாச்சே! :))

    ReplyDelete
  2. வாணா! சீரியலைப்பத்தி பேசாதீங்க. அப்புறம் நான் அழுதுடுவேன்!

    ReplyDelete
  3. பெண்கள் செய்யும் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியே வாய் திறந்து சொல்லவும் முடியாமல் தவிக்கும் ஆண்களும்

    ஆமாம் ஆமாம் நீங்கள் சொல்லுவது 100% சரி.என்ன அம்பி நான் சொல்லுவது சரிதானே!

    மெகா சீரியல் மோகத்திலிருந்து என்று விடுபடுவார்களோ? சீரியல் முடிந்தவுடன் உடனே போன் போட்டு அக்கா, அம்மாவுடன் ஒரு மணிநேரம்
    மதன் பார்வை மாதிரி அலசல்வேறு.பி ஸ் என் எல்க்கு இன்னும் ஏன் லாபம் வரவில்லை தெரியாத புதிராக இருக்கிறது

    மகளிர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தலைவிக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  5. மகளிர் தின நல்வாழ்த்துகள் கீதா

    ReplyDelete