எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 31, 2008

புத்தாண்டு வாழ்த்துகள்.

அஞ்சனை புத்திரன் அனுமந்தன் பிறந்த நாளுக்குனு எதுவும் எழுதலை. சிலர் சித்திரா பெளர்ணமியிலே அனுமன் ஜெயந்தி கொண்டாடறாங்க. அதனாலும் எழுதலை. அனுமனின் பிரபாவத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. எல்லாத்துக்கும் மேலே ஜிதேந்திரியன் என்ற பெயர் பெற்றவன் அனுமன். அதுக்காகக் காட்டுக்குள்ளே போய்த் தனியா எல்லாம் போய்த் தவம் செய்ய என்று உட்காரலை. இவ்வுலக வாழ்க்கையில் அனைவருடனும் வாழ்ந்து வந்தான். ஒரு இடத்தில் இருக்காமல் சமுத்திரம் தாண்டினான். நற்செய்தியைக் கொண்டு சேர்த்தான். தூதனாய்ப் பணி புரிந்தான். சஞ்சீவி மலையைப் பெயர்த்துக் கொண்டு வந்தான். "என் கடன் பணி செய்து கிடப்பதே!" என்பதை நிரூபித்தவன் அனுமன். அனைவருக்கும் அவனால் முடிந்ததைச் செய்தான். இத்தனை செய்தும் விநயம் என்பதைக் கடைப்பிடித்தான். புலனை அடக்கியவன் அனுமன். உலகவாழ்க்கையில் உழன்று கொண்டே சேவைகள் செய்து கொண்டே, பிறரை வாழவைத்துக் கொண்டே தான் தனித்து அதிலிருந்து விலகி நின்றவன். நைஷ்டிக பிரம்மசாரி. அவன் துணை இருந்து அனைவரையும் காத்து ரக்ஷிக்க வேண்டுகின்றேன். இந்தப் புத்தாண்டில் அனைவருக்கும் அனுமன் துணை இருந்து நாட்டையும், வீட்டையும் காக்கவேண்டும். இனிய புத்தாண்டாக மலரவும், அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்கவும் வாழ்த்துகள்.

நாம் அனைவரும் இயற்கையையோடு இசைந்த வாழ்க்கை என்றால் என்ன என்பதைப்புரிந்து கொண்டு, நாம் மட்டுமில்லாமல், மரம், செடி, கொடிகள், காடுகள், நிலம், மண், நீர் வளம் பெறவும் முயலுவோம்.

"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்ததுவே!"

தமிழ் மணம் நண்பர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

16 comments:

  1. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் இணையத்தில் தமிழ் வளர்க்கும் அனைவர்க்கும்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.


    இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
    பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
    மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
    விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்

    கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
    ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்

    வைரமுத்துவின் வைர வரிகள்

    SOURCE: http://tamillyrics.wordpress.com/2007/12/10/vidiyaatha-iraventru/

    ReplyDelete
  3. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கீதாம்மா...சாம்பு அங்கிளிடமும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துவிடுங்கள்.

    ReplyDelete
  4. //இந்தப் புத்தாண்டில் அனைவருக்கும் அனுமன் துணை இருந்து
    நாட்டையும், வீட்டையும் காக்கவேண்டும் //

    அன்பான, அழகான, அமுதமான, நிறைவான‌
    வாழ்த்துரைகள்.
    நன்றி.

    அஞ்ஜனா நந்தனம் வீரம்
    ஜானகி ஸோக நாசனம்.
    கபீஸமக்ஷஹன் தாரம்
    வந்தேலங்கா பயங்கரம்.

    மனோஜவம் மாருத துல்ய வேகம்
    ஜீதேந்திரியம் புத்திமதாம் வரிஷ்டம்

    வாதாத்மஜம் வானர யூ (தூ) த முக்யம்
    ஸ்ரீ ராம தூதம் ஸிரஸா நமாமி.

    அனுதினமும்
    அனுமனை வந்திப்போருக்கு
    அவனியிலே தீங்கெதும்
    அண்டுமோ ?

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    எங்களது
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  5. iniya puthandu vaazthukkal :)

    ReplyDelete
  6. தலைவி அவர்களுக்கும் அங்கிளுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. திரு.சாம்பசிவத்திற்கும் திருமதி கீதா சாம்பசிவத்திற்கும் எங்கள் குடும்ப்த்தின் மனம் நிறைந்த வாழ்த்துகள். நல எண்ணங்களைப் பரப்பும் இந்தப் பதிவுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. // மதுரையம்பதி said...
    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கீதாம்மா...சாம்பு அங்கிளிடமும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துவிடுங்கள்.##

    ஆமா நானும் அதையே சொல்லிகிறேன்~!

    ReplyDelete
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    //நாம் அனைவரும் இயற்கையையோடு இசைந்த வாழ்க்கை என்றால் என்ன என்பதைப்புரிந்து கொண்டு, நாம் மட்டுமில்லாமல், மரம், செடி, கொடிகள், காடுகள், நிலம், மண், நீர் வளம் பெறவும் முயலுவோம்.//

    இதை இதை இதையேதான் நானும் சொல்லி வாழ்த்தியிருக்கிறேன் இங்கே!

    ReplyDelete
  10. வாங்க குமார், நன்றி..

    சூப்பர் சுப்ரா, வாங்க, உங்களை மறக்க முடியுமா? நீங்களும் நினைவு வச்சுட்டு வந்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  11. @பழமை, உங்க பதிவைக் குழுமத்திலே பார்த்துட்டு இஃகி இஃகினு சிரிச்சுட்டு இங்கே வந்து இதை வெளியிட்டேன்.

    @மதுரை, நன்றி!

    ReplyDelete
  12. வாங்க சூரி சார், பல மாதங்கள் கழிச்சு வந்ததுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    ReplyDelete
  13. அட, வேதா(ள்), அதிசயம் தான் போங்க, புத்தாண்டு வாழ்த்துகள்.

    கைப்புள்ள, இதுக்காவது நினைவு வச்சுட்டு வந்தீங்களே? :(

    வாங்க வல்லி, தொலைபேசியும், குழுமத்திலும், பதிவிலும் வாழ்த்தியதுக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  14. @அபி அப்பா, நானும் மதுரைக்கு எழுதினதையே ஒரு ரிப்பீஈஈஈட்டேஏஏஏஏஏ போட்டுடறேன்.:P

    ReplyDelete
  15. ராமலக்ஷ்மி, வாங்க, ஹிஹிஹி, Great Women Think Alike னு இதை, இதைத் தான் சொல்லுவாங்களோ? :)))))))

    ReplyDelete