எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 04, 2008

சில தடங்கல்கள், சில படிப்புகள், தீர்மானங்கள்

ஒரு இடைவெளி வேண்டும் என்பதாலும் 700-க்கு மேலே பதிவுகள் போய்விட்டன. ஆகவே எழுதிக் கொண்டிருப்பதில் ஓரளவுக்காவது அர்த்தம் இருக்கணும் என்பதற்காகவும் எழுதி வைத்த பல பதிவுகளையும் போடவில்லை. இந்த எழுதி வச்சுக்கற பழக்கமே கடந்த ஆறு மாதமாய் ஆர்காட்டார் தயவால் ஏற்பட்டது. இனி எழுதப் போவது ஒரு திருடனின் கதை. சூதாடியின் கதையைக் காலையிலும், பெண்ணின் கதையை மத்தியானத்திலும் , திருடனின் கதையை இரவிலும் கேட்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் இப்போ எழுதப் போற கதையில் சூதாடியும் வருவார், திருடனும் வருவார், பெண்ணும், சொல்லப் போனால் பெண்களும் வருவார்கள். இது ஒரு சிறிய முன்னுரை. இனி கதை ஆரம்பிக்கும். நேரம் கிடைத்தால் மதியமே ஆரம்பிக்கின்றேன். வழக்கம்போல் அவ்வப்போது சிறிய மொக்கைகளும் தேவையான நேரம் அனுமதிக்கப் படும்.

முழுக்க, முழுக்கக் கதையாகவே எழுத முயற்சித்தாலும் அவ்வப்போது இலக்கிய ஒப்பீடுகளையும் தவிர்க்க முடியலை. இலக்கியவாதி இல்லை என்றாலும் சில, பல ஆதாரங்களுக்காகப்படிக்க நேர்ந்ததையும் உங்களுடன் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுவேன். வழக்கம் போல் மெளனமாய்ப் படிக்கிறவங்களும், பின்னூட்டம் கொடுத்து ஆதரிக்கிறவர்களும் என்னுடைய இந்தத் தாக்குதலுக்குத் தயாராய் இருக்கும்படிக் கேட்டுக் கொள்கின்றேன். நன்றி. வணக்கம்.

12 comments:

 1. //சூதாடியின் கதையைக் காலையிலும், பெண்ணின் கதையை மத்தியானத்திலும் , திருடனின் கதையை இரவிலும் கேட்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு//

  எனக்குப் பல உண்மை தெரிந்தாகணும். யார் அந்த ஆன்றோர்? ஏன் காலையில தாடி கதை கேட்கணும்? பொண்ணு கதையிலாவது தாடித் திருடன் இல்லாம‌, நல்ல விஷயம் இருக்குமா? பாரத, சீதா, கிருஷ்ண கதைகள்?

  //700-க்கு மேலே பதிவுகள்// அம்பி, எப்படி இது?

  //அவ்வப்போது சிறிய மொக்கைகளும் // அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், அப்ப இது மொக்கை இல்லியா?

  நான் ரீடர்ல உங்களை படித்து விடுகிறேன். கட்டாயம் எழுதுங்கள், படிக்க நான் தயார்! வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. அப்பாடா எவ்ளோ பெரிய பதிவு.
  :P:P:P
  :-)))))))))))

  ReplyDelete
 3. எவ்வளவோ தாங்கிட்டோம்...

  இதை தாங்க மாட்டோமா....

  ஆகட்டும் ஆகட்டும் :)

  ReplyDelete
 4. ஆரம்பத்தைப் பார்த்த ஒரு பிரபல அரசியல் தலைவரை வாழ்க்கையைப் பத்தின தொடர் மாதிரி இருக்கே!! :)

  ReplyDelete
 5. // சூதாடியின் கதையைக் காலையிலும், பெண்ணின் கதையை மத்தியானத்திலும் , திருடனின் கதையை இரவிலும் கேட்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு //

  ஒவ்வொரு தலைப்பிலும் படிக்க வேண்டிய நேரத்தை குறிப்பிட்டுவிடுங்கள். ஆன்றோர் வாக்கை காப்பாற்றுவது நம் கடமை அல்லவா ! :))))

  ReplyDelete
 6. வாங்க கெகே! நல்வரவு,

  //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், அப்ப இது மொக்கை இல்லியா?//

  சொ.செ.சூ?? ம்ஹும், மீ த எஸ்கேப்பு!!

  ம்ம்ம்ம்ம்?? கிருஷ்ணரும் வருவார், அவ்வப்போது ஒப்பிடலுக்காக ராமர் வரலாம், வரலாமா, வேண்டாமானு இன்னும் தீர்மானிக்கலை, மத்தபடி மத்தவங்க எல்லாரும் வருவாங்கனு நம்பறேன்.

  ReplyDelete
 7. @திவா, இதை விடப் பெரிய பதிவுகள் எல்லாம் இருக்கே? ஒரு பதிவில் ஒரே ஒரு வார்த்தை மட்டும் இருக்கும், போங்க, போய் ரிவிஷன் பண்ணிட்டு வாங்க! :P:P:P

  ReplyDelete
 8. @புலி, என்ன சூடான் போயிட்ட தைரியம் போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 9. @இ.கொ. கரெக்டா சொல்றீங்களே??? :))))))

  ReplyDelete
 10. வாங்க கபீரன்பன், காலையில், மதியத்தில், மாலையில் எப்போ வேணா படிக்கலாம். ஆக மொத்தம் படிக்கிறேன்னு சொன்னதுக்கு தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 11. முன்னுரைன்னா இப்படி இருக்கணும். நல்லா பீடிகை போடறீங்க கீதாம்மா. :-)

  ReplyDelete
 12. அப்பாடி. நீங்க முடிவுரைக்கு வரதுக்குள்ள முன்னுரை படிச்சிட்டேன்னு நினைக்கிறேன் :) கரீட்டா, கீதாம்மா?

  ReplyDelete