எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, March 19, 2009

"மொய்" எனும் வழக்கொழிந்த சொல்!

இவ்வளவு சீக்கிரமாக் கவிநயா கொடுத்த சங்கிலித் தொடரைத் தொடருவேன் என நானே எதிர்பார்க்கலை. மின்சாரத் தடையின் போது படித்த சில புத்தகங்கள் இந்தச் சொற்களை நினைவுக்குக் கொண்டு வந்தது. அதை நம்ம கண்ணன் வருவான் கதைத் தொடருக்கு ஏற்றாற்போல பயன்படுத்திட்டு இருக்கேன். அடிக்க வராதீங்க! சொற்கள் பலருக்கும் தெரிந்தவையாகக் கூட இருக்கலாம். ஆனால் நான் அகராதியில் இவற்றைத் தேடினப்போ கிடைக்கலை. அப்பாடி நிம்மதி!
***********************************************

பலராமன் நல்லா "ஓங்குதாங்கா" வளர்ந்திருந்தான். அதே கண்ணனைப் பார்த்தாலோ நிதானமான உயரம், அளவான பருமன், செதுக்கி வைத்தாற்போன்ற முகம், கண்கள், நேர்த்தியான மூக்கு, சிவந்த அதரங்கள், ஒளி வீசும் நீல நிறத்தோடு காட்சி அளித்தான். யசோதா அம்மாவுக்குக் குழந்தையை மற்றப் பெண்களிடமிருந்து காப்பாற்றுவதே பெரும்பாடா இருந்தது. சின்னக் குழந்தைக்குச் "சீர் தட்டாமல்" பார்த்துக்கணும். தூக்கும்போது "உறம் விழாமல்" கவனமா இருக்கணும். சீர் தட்டினால் அந்த வாடைக்குக் குழந்தை துவண்டு போயிடும். உறம் விழுந்தால் தாய் மாமனின் வேட்டியில் குழந்தையைப் போட்டுவிட்டு, நாலு மூலையையும் எதிர் எதிரே இருவர் பிடித்துக் கொள்ளக் குழந்தையைக் கிடத்தி இருக்கும் பக்கத்தில் இருந்து மறுபக்கம் உருட்ட, அந்தப் பக்கம் இருப்பவர் இந்தப் பக்கம் உருட்ட ஒரு அரை மணி நேரத்தில் வேகவேகமாய்க் குழந்தையை உருட்டி உறத்தை நீக்க வேண்டும். அப்புறம் தான் குழந்தை பாலே குடிப்பான். அது மட்டுமா??

ஓய்வெடுக்குமிடமான "பட்டாசாலை"யில் குழந்தையை விட்டால், தவழ்ந்து, தவழ்ந்து அவன் "கூடத்துக்கு"ப் போயிடுவான். அப்படியே வாசல் "ரேழி"க்குப் போய் அங்கே இருக்கும் "குலுக்கை"க்குப் பின்னால் போயிட்டால் கஷ்டம். பூச்சி, பொட்டு நடமாடும் இடம். ஹிஹிஹி, கண்ணன் இப்போ ஆங்கிலம் பேசப் போறான் பாருங்க. அங்கிருந்து கேட்வாசலில், நடுசெண்டருக்குப் போய்க் குழந்தை உருள ஆரம்பிச்சதுனா புழுதி எல்லாம் ஒட்டிக்கும்.

யசோதை யோசித்தாள். இந்த நந்தனுக்கு "வாக்கப்பட்டு" இத்தனை வருஷம் கழிச்சுக் குழந்தை பிறந்திருக்கான். எல்லாரும் குழந்தையை எடுத்துக் கொஞ்சணும்னு பார்க்கிறாங்க. இருந்தாலும் உடனே கொடுத்திடக் கூடாது. கொஞ்சம் "பிரியக்கால்" பண்ணிட்டுக் கொடுக்கணும்.

"வெள்ளெனெ" எந்திரிச்சு, பெறத்தாலே போயிட்டு வந்து பார்த்தாக்க இந்தக் கண்ணன் "உண்டக்கட்டி" அத்தனையும் எடுத்துவச்சுக்கிட்டு "அருவாக்கி" இருக்கான். அன்னிக்கு "நெம்ப" கோவம் வந்து "எருக்கம் மிளாறு" எடுத்து அடிக்கலாமானு யோசிச்சேன். அவன் சிரிப்பைப் பார்த்துட்டு மனசு மாறிடுச்சு. எத்தனை "தியாலம்" உட்கார்ந்து யோசிச்சாலும் இந்தக் கண்ணனைக் கோவிக்க மனசு வரலை. "ஊடால" இந்த பலராமனும் சேர்ந்துக்கிறான். அன்னிக்கு ரோகிணி பலராமனுக்கு ஒரு
"நிமிட்டாம்பழம்" கொடுத்துட்டா போலிருக்கு. "கம்மாய்க்கர"யிலே சொல்லிட்டு இருந்தா. நான் அதெல்லாம் சொல்லறதில்லை. கண்ணனை "உக்கி போட"ச் சொன்னாலே மனசு கேட்கலை. அவனும் என்ன "சொணை கெட்டவனா" சும்மா "திருப்பாட்டு" கேட்க. சரி, சரி, இதெல்லாம் யோசிச்சா மண்டை காய்ஞ்சிடும். மழை விட்டு "உச்சி வெரிக்கட்டும்" நாளைக்குப் "பிழைச்சுக் கிடந்தா" சோறு "தப்பாய்" இருந்தா "நீச்சுத் தண்ணி" குடுக்கணும், கண்ணனுக்கு. உடம்புக்குக் குளுமை அது!

***********************************************

இப்போ ஒரு சொந்த சந்தேகம் சின்னதாய். என்னமோ "மொய், மொய்" அப்படினு ஒண்ணு இருக்காமே? அப்படினா என்ன? அதுவும் ஒரு வழக்கொழிந்த சொல்லா? அதன் உண்மையான அர்த்தம் என்னனு இந்த கை.நா.வுக்குச் சொல்லுங்களேன். இந்த அம்பி வந்து கேட்டுட்டே இருக்கார். நானும் பத்து முறை மொய் எழுதிட்டேன். பத்தலையாமே! இல்லைனா இந்தச் சொல்லை நாமளே வழக்கொழிச்சுடலாமா?? எப்படி வசதி????
***********************************************************************************

அருஞ்சொற்பொருள் :)))))))))))ஓங்கு தாங்கு = நல்ல வாட்டம், சாட்டமா

சீர் தட்டறது= வேற்று வாடை ஒத்துக்காமல் போவது

உறம் விழுதல்=கிட்டத் தட்ட சுளுக்கு மாதிரியானது

கூடம்= இப்போ ஹால்

பட்டாசாலை=ஓய்வெடுக்குமிடம், சாப்பிடுமிடம்

குலுக்கை= நெல் குதிர்

கேட் வாசல்
நடு செண்டர்
வாக்கப்பட்டு= வாழ்க்கைப் பட்டு

பிரியக்கால்=பிகு பண்ணுவது
வெள்ளென= விடிகாலை

எருக்கம் மிளாறு= எருக்கம் செடியின் தண்டு பாகம்

பெறத்தாலே = பின் பக்கம்
துட்டி =துக்கம்

கலாவலியான= கிண்டல் பேச்சுக்கள்
தியாலம்=மணி

உண்டக்கட்டி= சோற்றுருண்டை

ஊடால= இடையிலே, நடுவிலே

நிமிட்டாம்பழம் =கிள்ளுதல்,
கலரு குடிங்க
நீச்சுத் தண்ணி - நீராகாரம்
கேஸ் பெட்டி
உக்கி போடுதல்= தோப்புக்கரணம் போடுதல்
கம்மாய்= ஏரிக்கரை
சொணை கெட்டவன்=சுரணை இல்லாதவன்
உச்சி வெரிக்கிறது=மழை விட்டு வானம் வெளுத்தல்
திருப்பாட்டு=திட்டு

அருவாக்கறது=தீர்ப்பது
தப்பாய் இருத்தல் = மிச்சம் இருந்தால்

பிழைச்சுக் கிடந்தா= நாளை

29 comments:

 1. நல்லா இருக்கு மேடம்.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ம்ம்ம்ம்... அருஞ்சொற்பொருளை போடலைனா அவ்ளோதான். பாதி புரிஞ்சு இருக்காது! அட ஆர்காட் வந்துட்டார்! டாடா!

  ReplyDelete
 3. அட, ரவிஷங்கர், வாங்க, வாழ்த்துகளுக்கு நன்றி, எதுக்கு வாழ்த்து, ஏன் வாழ்த்து, எப்படி வாழ்த்து, எங்கே வாழ்த்து, என்ன மாதிரியான வாழ்த்துனும் சொல்லி இருக்கலாமோ? :)))))))

  ReplyDelete
 4. மெளலி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எப்போ பின்னூட்டம் போட ஆரம்பிப்பீங்க?? :P

  ReplyDelete
 5. வாங்க திவா, அப்பாடா, அப்போ "ஆத்தா, நான் பாஸாயிட்டேன் நிஜமாவே!"

  பி.கு. இவை எல்லாம் அநேகமாய்த் தென் மாவட்ட வட்டார வழக்குப் பேச்சுகள், குறிப்பாய் மதுரை, ராமநாதபுரம் மாவட்டம்.

  ReplyDelete
 6. தலைவிஜி,

  நீங்க கிராமத்து மக்கள் மொழியிலயும் எழுதுவீங்களா? கலக்கலா இருக்கு.

  //உறம் விழுதல்=கிட்டத் தட்ட சுளுக்கு மாதிரியானது
  //

  பொதுவா இதை குழந்தைகளுக்குத் தான் சொல்லுவாங்க. குழந்தையைப் பாத்து தூக்கு உறம் விழுந்துடப் போகுதுன்னு. :)

  அம்பிக்கு பத்து தடவை எழுதிட்டீங்களா? எனக்கு எப்போ?
  :)

  ReplyDelete
 7. இவ்வளவு வார்த்தைகள் இருக்கா;)
  பாதிக்கு மேல அர்த்தம் கண்டு பிடிக்கிறதே சிரமமாகப் போய்விட்டது!!!

  ReplyDelete
 8. //பொதுவா இதை குழந்தைகளுக்குத் தான் சொல்லுவாங்க. குழந்தையைப் பாத்து தூக்கு உறம் விழுந்துடப் போகுதுன்னு. :)//

  க்ர்ர்ர்ர்ர்ர் ரிவிஷன் பண்ணுங்க, நானும் குழந்தைகளுக்குத் தானே எழுதி இருக்கேன். :)))))))))) கீழே பாருங்க!
  //உறம் விழுந்தால் தாய் மாமனின் வேட்டியில் குழந்தையைப் போட்டுவிட்டு, நாலு மூலையையும் எதிர் எதிரே இருவர் பிடித்துக் கொள்ளக் குழந்தையைக் கிடத்தி இருக்கும் பக்கத்தில் இருந்து மறுபக்கம் உருட்ட, அந்தப் பக்கம் இருப்பவர் இந்தப் பக்கம் உருட்ட ஒரு அரை மணி நேரத்தில் வேகவேகமாய்க் குழந்தையை உருட்டி உறத்தை நீக்க வேண்டும். அப்புறம் தான் குழந்தை பாலே குடிப்பான். அது மட்டுமா??//

  ReplyDelete
 9. //அம்பிக்கு பத்து தடவை எழுதிட்டீங்களா? எனக்கு எப்போ?
  :)//

  ஹிஹிஹிஹிஹிஹிஹி, முன்னேயே கேட்டிருக்கக் கூடாதோ? இதோ தரேனே!
  1.மொய்
  2.மொய்
  3.மொய்
  4.மொய்
  5.மொய்
  6.மொய்
  7.மொய்
  8.மொய்
  9.மொய்
  10.மொய்
  பத்துத் தரம் உங்களுக்கும் கொடுத்தாச்சு! :P:P:P:P

  இதுக்குத் தான் தலை தலையா அடிச்சுக்கிறேன். "மொய்" என்னும் சொல்லையே வழக்கில் இருந்து ஒழிச்சுடலாம்னு. யாரு கேட்கிறாங்க? :))))))))))))))))

  ReplyDelete
 10. //நீங்க கிராமத்து மக்கள் மொழியிலயும் எழுதுவீங்களா? கலக்கலா இருக்கு. //

  மதுரையே ஒரு பெரிய கிராமம்னு தான் சொல்லுவாங்க. இப்போ தான் அதை மாநரகமா மாத்த முயற்சி செய்யறாங்க! :((((((((

  ReplyDelete
 11. @வல்லி, அதான் அர்த்தம் தனியாக் கொடுத்தேன், ஆனால் எங்க வீட்டிலே இன்னும் புழக்கத்திலே இருக்கு பாதி வார்த்தைகள், இந்த அருவாக்கறது மட்டும் எங்க அப்பாவோட அருவாப் போச்சு! :))))))))

  ReplyDelete
 12. //ஹிஹிஹிஹிஹிஹிஹி, முன்னேயே கேட்டிருக்கக் கூடாதோ? இதோ தரேனே!
  1.மொய்
  2.மொய்
  3.மொய்
  4.மொய்
  5.மொய்
  6.மொய்
  7.மொய்
  8.மொய்
  9.மொய்
  10.மொய்
  பத்துத் தரம் உங்களுக்கும் கொடுத்தாச்சு! :P:P:P:P

  இதுக்குத் தான் தலை தலையா அடிச்சுக்கிறேன். "மொய்" என்னும் சொல்லையே வழக்கில் இருந்து ஒழிச்சுடலாம்னு. யாரு கேட்கிறாங்க? :))))))))))))))))
  //

  அம்பி சொல்வாரு இல்லை...நீங்க ஒரு "மொக்கையர் திலகம்"னு...நானும் அதை இப்போ ஒத்துக்கறேன்.
  :)

  ReplyDelete
 13. அப்புறம்...உங்களை மாதிரி மொய்யெழுதறவங்க இருந்தா...சந்தேகமா வேணாம்...கண்டிப்பா இந்த சொல் வழக்கொழிஞ்சு போயிடும்.


  அத சொல்லத் தான் திரும்ப வந்தேன்...உங்க ஸ்டைலில்.
  :)

  ReplyDelete
 14. //அம்பி சொல்வாரு இல்லை...நீங்க ஒரு "மொக்கையர் திலகம்"னு...நானும் அதை இப்போ ஒத்துக்கறேன்.
  :)//

  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னங்க இது? மொய் எழுதுனு சொன்னீங்க, எழுதினேன், இப்படிச் சொன்னா எப்படி?? ஆனா என் கணக்கு என்னமோ தீர்ந்து போச்சு! இன்னிக்கு ராத்திரி நிம்மதியாத் தூங்குவேன்! :))))))

  ReplyDelete
 15. //அத சொல்லத் தான் திரும்ப வந்தேன்...உங்க ஸ்டைலில்.
  :)//
  வாங்க, வாங்க, யாரு வேண்டாம்னாங்க?? அனைவரும் சேர்ந்து ஒழிப்போம் "மொய்" என்னும் சொல்லை வழக்கிலே இருந்து! அப்பாடா, கடைசியிலே நீங்க ஒருத்தராவது என் கட்சிக்கு வந்தீங்களே, தாங்கீஸ், தாங்கீஈஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 16. கீதாம்மா!!!
  நல்ல வெவரமாத்தான் சொல்லியிருக்கிறீங்க. 'பட்டாசாலை, நிமிட்டாம்பழம், வெள்ளன' எல்லாம் எங்க ஊர் சொலவடைகள். இன்னும் 'கூறு கெட்ட செறுக்கி, கசவாளிப் பய, வெருவாக்கல கெட்ட மூதி' எல்லாம் இருக்கே! இவையெல்லாம் செல்லமாக திட்டும் வார்த்தைகள்.

  ReplyDelete
 17. @நானானி,
  இங்கே பார்ரா, கஷ்டப்பட்டு மாமா கிட்டே நிமிட்டாம்பழத்துக்கு அழுததை எல்லாம் நினைப்பு வச்சுட்டு எழுதினா, இவங்க வந்து அவங்க தினேலி பாஷை னு சொல்லிட்டுப் போறாங்க! :)))))))))))

  ReplyDelete
 18. உங்களுக்கும், இந்த வலைப் பதிவைத் துவங்கின Sriram அவர்களுக்கும் நன்றி!!

  ReplyDelete
 19. வாங்க பழமைபேசி, ஸ்ரீராம்?? சுட்டி கொடுத்திருக்கலாமே? நானும் முதல்லே ஆராய்ச்சி பண்ணலாமோனு நினைச்சேன், யார் தொடங்கினதுனு. நேரம் இல்லை! :)))))))

  ReplyDelete
 20. //உறம் விழுதல்=கிட்டத் தட்ட சுளுக்கு மாதிரியானது//

  பிறந்த குழந்தைக்கு கழுத்தை தாங்கிப் பிடிக்கலைன்னா கழுத்துல சுளுக்கு விழுந்திடும்னு சொல்வாங்க. அதான் இது.

  ஓரிரண்டு வார்த்தைகளை தவிர எல்லாமே எனக்கு தெரிஞ்சிருந்தது! :)

  கலக்கீட்டீங்க கீதாம்மா! ரொம்ப நன்றி :) சங்கிலில மாட்டி விட வேற யாருக் கிடைக்கலயா? :)

  ReplyDelete
 21. //நீங்க ஒரு "மொக்கையர் திலகம்"னு...நானும் அதை இப்போ ஒத்துக்கறேன்.
  //

  இதை தான் நான் இப்போதைக்கு அப்போதே சொல்லி வைத்தேன் கைப்ஸ். :))

  ReplyDelete
 22. \\உறம் விழுதல்=கிட்டத் தட்ட சுளுக்கு மாதிரியானது\

  யப்பா எங்க பாட்டி இந்த உறம் விழுறதை எடுத்துவிடுவாங்க...வீட்டு பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு எல்லாம் இவுங்க தான் செய்வாங்க..அதை பார்க்க பாவமாக இருக்கும்!

  ReplyDelete
 23. வாங்க கவிநயா, சங்கிலியிலே எல்லாம் யாரையும் மாட்டலை, முழிப்பாங்க அப்புறம். நானே கை விட்டுடலாம்னு தான் நினைச்சிருந்தேன், திடீர்னு எதிர்வீட்டுக் குழந்தை கை கொடுத்தது. ஊருக்கும் போயிடுத்து! :))))))))

  ReplyDelete
 24. அம்பி,ஹிஹிஹி, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்., வந்ததுக்கும், அருமையான கருத்துக்கும்! :P

  ReplyDelete
 25. வாங்க கோபி, பார்க்கவே முடியறதில்லை ரொம்ப பிசி போல! வந்ததுக்கு நன்றிப்பா!

  ReplyDelete
 26. இது ஒரு கதம்பப் பதிவாக இருக்கே..... சுவாரஸ்யம்தான்!

  ReplyDelete
 27. வாங்க ஶ்ரீராம், ஏது இந்தப்பக்கம். பழசெல்லாம் படிக்கிறீங்க?? இதை ஒரு மீள் பதிவாப் போடலாமோனு யோசனை, என்ன சொல்றீங்க? :)))))

  ReplyDelete
 28. எங்கள் ப்ளாக்குக்கு வாங்க... விவரம் தெரியும்!

  ReplyDelete