எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 24, 2009

பிள்ளையார் வாஆஆஆஆஆஆரம்!

அதிசயமா அம்பி இந்தக் கண்ணடிக்கும் பிள்ளையாரை அனுப்பி வைச்சார். ஏற்கெனவேயே இந்தப் பிள்ளையார் எத்தனை முறை எத்தனை பேரால் அனுப்பப் பட்டதுனு தெரியலை. :D ஆனால் இப்போ அம்பி அனுப்பி வச்சதுக்கு அப்புறமா இன்னிக்கு வரைக்கும் இதோட எனக்குப் பல பிள்ளையார் படங்கள், சித்திரங்கள் வந்துவிட்டன. பிள்ளையாரை எனக்குப் பிடிக்கும்னு வலை உலகமே அறிந்து வைத்திருக்கு போல! ஹிஹிஹி, நான் அவ்வளவு பிரசித்தி அடைஞ்சுட்டேனா? இல்லை, பிள்ளையாரா?? தெரியலை எனக்கு!இது "ஹா ஹா ஹாஸ்யம் எழுதும் கோமாராஜன் அனுப்பி இருக்காங்க. அவங்க பதிவுக்கு முதல் முதலா வல்லி-ராமலக்ஷ்மி-கோமா என்று போனேன், சில மாதங்களுக்கு முன்னால். அதுக்கு அப்புறம் மறந்தே போச்சு. அப்புறமா எப்போவாவது திடீர்னு தோணிப் போவேன். அந்த மாதிரி நேத்திக்கு(???) போனதுக்கு அனுப்பி இருக்காங்க போல. படங்களுக்கு ஏற்றாற்போல் பாட்டு கேட்டிருந்தாங்க. ஏற்கெனவே ஒரு பதிவில் அவங்க "காணிநிலம் வேண்டும்" னு கேட்டுட்டாங்க. அதனால் திரும்பக் காணிநிலம் தராமல் வேறே பாட்டுகள் எழுதினேன். முன்னணிப் பாடகினு எல்லாம் சொல்லிட்டு, (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) ஆனா ஸ்டாரை மட்டும் வேறே யாருக்கோ கொடுத்திருக்காங்க. என்ன அநியாயம் இது? அதான் படத்தை இங்கே பப்ளிஷ் பண்ணிட்டேன்.

இது தவிரவும் சில பிள்ளையார் படங்கள் வந்திருக்கு. அதிலும் ஒருத்தர் முழுக்க முழுக்கப் பிள்ளையார் படங்களாவே அனுப்பி இருக்கார். அடுத்த வருஷப் பிள்ளையார் சதுர்த்திக்காக வச்சிருக்கேன் அதை எல்லாம். இப்போவே போட்டால் அப்புறம் அது பழசாகிடுமே! கண்ணன் வந்துட்டே இருக்கான். கொஞ்சம் பெரியவனா ஆயிட்டானா? சட்டுனு வர மாட்டேங்கறான். குழந்தைனா தூக்கிண்டு வந்துடலாம்.

15 comments:

 1. புள்ளையார்ன்னதும் வந்தேன்.

  இது வருகைப் பின்னூட்டம்.

  அப்புறமா முழுசும் படிச்சுட்டுச் சொல்றேன்.

  ReplyDelete
 2. கையூட்டு நிறையவே வருது போல....
  :-))

  ReplyDelete
 3. வாங்க துளசி, புள்ளையார்னதும் வந்தீங்க, அப்புறம் என்ன ஆளே காணோம்? ம்ம்ம்ம்?? உயில் நினைப்பிருக்கட்டும், நடு நடுவே ஞாபகப் படுத்த வேண்டி இருக்கு! :))))))

  ReplyDelete
 4. வாங்க திவா, தேர்தல் சமயம் இல்லை, எல்லாம் வேட்பாளர் பட்டியலில் பேர் இருக்கானு பார்க்கத் தான் கையூட்டுக் கொடுக்கிறாங்க போல! நாமளும் ஊட்டம் அதிகமாய்ப் போனா நல்லது தானேனு நினைக்கிறோம்! :))))))))

  ReplyDelete
 5. அம்பிக்கு அனுப்பிச்சதே நாந்தான்.இருந்தலும் பதிவிலே பின்னி எடுதுட்டீங்க.இது மெய்யா/மொய்யா அல்லது பொய்யா

  ReplyDelete
 6. @திராச சார், எனக்கில்லை வந்திருக்கு?? ஸோ, மொய்தான், பொய்யில்லை, வேட்பாளராய்த் தேர்ந்தெடுக்கணுமே! எல்லாம் தேர்தலுக்காகத் தொண்டர்கள் விண் அப்பம் அனுப்பறாங்க விண் அப்பத்துக்கான தொகையோட! :P:P:P:P

  ReplyDelete
 7. பிள்ளையார் கண்ணே அடிக்கலையே :(

  //கண்ணன் வந்துட்டே இருக்கான்.//

  இப்படியே 'பராக்' சொல்லிச் சொல்லி எத்தனை நாள்தான் ஓட்டுவீங்க?? :(( உங்க பேச்சு 'டூ' 'க்கா' விடப் போறான் கண்ணன். (நானும்!)

  ReplyDelete
 8. \\\அம்பி இந்தக் கண்ணடிக்கும் பிள்ளையாரை அனுப்பி வைச்சார். \\

  அனுப்பி வைச்ச பிள்ளையாரை போட்டுங்க....இந்த பிள்ளையார் எங்க கண்ணுடிக்கிறார்!!???

  ReplyDelete
 9. அதானே, கவிநயா, போட்டுக் கொஞ்ச நேரம் நல்லாவே கண்ணடிச்சார். டெஸ்க் டாப்பிலேயும் கண்ணடிச்சார். ஆனால் இப்போ நிறுத்திட்டார், என்னனு புரியலை, ம்ம்ம்ம்ம்ம்???

  கோபி, என்னனு எனக்கும் புரியலைப்பா! ஒருவேளை கண்ணை நல்லா முழிச்சு எதையாவது பார்த்துட்டு இருக்காரோ?? :(((((

  ReplyDelete
 10. //கண்ணன் வந்துட்டே இருக்கான். கொஞ்சம் பெரியவனா ஆயிட்டானா? சட்டுனு வர மாட்டேங்கறான். குழந்தைனா தூக்கிண்டு வந்துடலாம்..///


  ரொம்ப அடம்புடிக்கிறானா...?

  எல்லாரும் வெயீட்டீஸ்ல இருக்காங்கன்னு ரெண்டு அடியை போட்டு அழைச்சிட்டு வாங்க....! :))

  ReplyDelete
 11. கையூட்டு நிறையவே வருது போல....
  :-))

  அப்படீன்னா என்ன திவா?

  ReplyDelete
 12. இந்த QQQQட்.ட்...ட் பிள்ளையார் இருக்காரே இவர் பக்தர்களுக்காகக் காத்திருக்கிறார்.மும்பை தாதர் பகுதியில் உள்ள கடையில்,செய்து முடித்து காயவைத்து டிஸ்ப்ளேயில் இருக்கிறார்....
  இந்த வார ஸ்டார் நீங்கதான்
  அடுத்தவரை ஊக்குவிப்பவர் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறீர்.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. முதல் வரவுக்கும், வந்ததுமே கொடுத்த இரு பின் ஊட்டங்களுக்கும் நன்னிங்கோ கோமாராஜன்!

  ReplyDelete
 14. பிள்ளையார் என்னைப் பார்த்து மட்டும் கண்ணடிக்கிறாரே??? ம்ம்ம்ம்ம்??? மத்தவங்களுக்குத் தெரியவேண்டாம்னு நினைக்கிறார் போல! :))))))

  ReplyDelete
 15. "ஆயில்"யன், கண்ணனை உதைச்சால் அபி அப்பா அழுதுடுவாரே, பரவாயில்லையா? :)))))))))))

  ReplyDelete