எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 09, 2010

புகையே வராத கொசுவத்தி!

ஒரு சின்ன கொசுவத்தி சுத்தலாம்னு தோணிச்சு. வல்லி தன்னோட பதிவிலே தீப்பெட்டிப் படங்கள் சேர்ப்பது பத்தி எழுதி இருந்தாங்க இல்லை?? அன்னிலேருந்து இதே நினைப்பு. ஆனால் வேலை அதிகம். இணையத்திலே வந்தால் எழுதி வச்ச பதிவுகளை அவசரமாப் பதிவு போடறதுக்கும், முக்கியமான மடல்கள் பார்க்கவுமே சரியாயிடும். நேரம் இல்லை. எழுதி வச்சது எல்லாம் தீர்ந்து போச்சு. இனி எழுதணும், அதுவரைக்கும் கொசுவத்தி சுத்துவோம். இது லேட்டஸ்ட் கொசுவத்தி. வல்லியோடது மாதிரி அதிகம் புகை வராது. லேட்டஸ்ட் குட்நைட் கொசுவத்தி!
***********************************************************************************
வல்லி சொன்னாப்போல் தீப்பெட்டிப் படங்கள் மட்டுமில்லாமல் கோலிக்குண்டுகளும் சேர்க்கறதுண்டு. மயிலிறகு சேர்க்காதவங்களே இருக்கமுடியாது. அது குட்டி போட்டிருக்கானு தினம் தினம் திறந்துபார்க்கிறதும், திறந்தா குட்டி போடாதுனு சொல்லுவதும் எல்லாருக்கும் நடந்திருக்கும். கோலிக்குண்டுகள் இருவகையில் இருந்தன. மாவுக்குண்டு ஒண்ணு, கண்ணாடிக் குண்டு இன்னொண்ணு. கண்ணாடிக் கோலிக்குண்டுகளுக்கு மதிப்பு அதிகம். மாவுக்கோலிக்குண்டுகளை யாருமே சீந்த மாட்டாங்க. அடிச்சு ஆடும்போது உடைஞ்சும் போயிடும். மேலும் கண்ணாடிக் கோலிக்குண்டு வச்சிருந்தால் தான் பணக்காரங்களாவும் மதிக்கப் படுவோம்.

கோலிக்குண்டுகளை வைச்சு விளையாடி இருக்கீங்களா?? குறி பார்த்து அடிக்கணும். கல்லாட்டம் ஆடிப் பழக்கம் இருந்ததாலே, இதிலேயும் ஆடலாம். இந்த ஆட்டத்துக்குப் பேரு கூட உண்டு. மறந்துட்டேன்! தம்பியைக் கேட்கணும்! அவனுக்குச் சரியா ஆட வராது. தம்பிக்காக நான் ஆடிக்கொடுப்பேன். ஹிஹிஹி.ஆனால் வெளியே போயிருக்கும் அப்பா வராமல் இருக்கணும். ஏற்கெனவே தம்பியை ரொம்ப சாது, நீ தான் எல்லாம் கத்துக்கொடுக்கிறேனு சொல்லிட்டு இருப்பார். தம்பிக்கு நாலும் தெரிஞ்சுக்க வேண்டாமா?? :))))))) தம்பியைத் தைரியசாலி ஆக்குவது என் பொறுப்புனு எடுத்துக்கிட்டேன்.

அப்போ எல்லாம் பொன்னியின் செல்வன் முதல்பாகம் படிச்சுட்டு இருந்த நாட்கள். கல்கியிலே முதல்லே எப்போ வந்ததுனு தெரியலை. ஆனால் அப்பா பள்ளி நூலகத்திலிருந்து எடுத்துட்டு வருவார். கல்கியிலே இருந்து எடுத்துத் தொகுத்துப்பைண்ட் செய்யப் பட்ட புத்தகங்கள். அதிலே வர குந்தவையா என்னை நினைச்சுப்பேன். ஆனால் சோழ ராஜகுமாரிங்கறது மட்டும் கொஞ்சம் இடிக்கும். அப்போவே பாண்டிய நாடுதான் உசத்திங்கற எண்ணமெல்லாம் நிறையவே உண்டு. (யாருக்குத் தெரியும்? தஞ்சாவூர்க்காரரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு எல்லாம்? மதுரையை விட்டே போகக்கூடாதுனு நாங்க சிநேகிதிங்க எல்லாம் கூடிப்பேசிப்போம், இன்னிக்கு யார், யார் எங்கே இருக்கிறாங்கனே தெரியலை! :D)

இப்படியே ஆடி, ஆடி ஒருமாதிரியாத் தம்பி தனியே ஆடும் அளவுக்கு வளர்ந்துட்டான். அவனே ஆட ஆரம்பிச்சுட்டான். ஆனாலும் பம்பரத்திலே அப்பீட்ட் எல்லாம் எடுத்துக் கொடுத்திருக்கேன். அப்படினா பாசம் எவ்வளவு அதிகம்னு புரிஞ்சுக்கோங்க! :D அடுத்த ஆட்டம் கல்லா மண்ணானு ஒண்ணு ஆடுவோம். கண்ணை மூடிக்கொண்டு கல்லைத் தூக்கிப் போட்டு ஆடிக்கொண்டே வரணும். கல்லுனு ஒரு பாகமும், மண்ணுனு ஒரு பாகமும் தெரு நடைமேடையில் நிர்ணயிக்கப் பட்டிருக்கும். அப்புறமா இரண்டு பெண்கள் கையைக் கோர்த்துக்கொண்டு நிற்க நாம அந்தக் கைகளுக்குள்ளே புகுந்து ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததுனு பாடிக்கொண்டே போயிட்டு வரணும், அவங்க எப்போ நம்மைப் பிடிப்பாங்கனு தெரியாது. ஜாக்கிரதையா நாம போகணும், அவங்க அதைவிட உஷாரா இருந்து பிடிப்பாங்க. பிடிச்சுட்டா நாம் தோத்துப் போயிட்டோம். ம்ம்ம்ம்ம்ம் ஏக்கப் பெருமூச்சுத் தான் ஜாஸ்தி வருது! இப்போதைய குழந்தைங்களுக்கு இந்த விளையாட்டெல்லாம் தெரியுமா, புரியுமா?? :((((((

19 comments:

 1. Ennoda favourite game pillayar panthu!!. Appuram pattu poochinu oru velvet maathiri red aa oru poochi irukkum . Mazhaikaalam oru special grass maela irukkum. athai perungaaya pottiyil collect panni valaththu kutti poatta santhosha padarathu. Amma seththudappoarathunnu kaththuva. 2 / 3 kutti pottavudan marupadi grassla vittuduvaen:)).
  aduththathu ponvandu!! moonaavathu butterfly. naalaavathu keezha vizhuntha anil kuttikku saevai!! ippo fish . Fish ai thavira onnum seththupoanathillai. :))

  ReplyDelete
 2. neenga neraya nyabagangalai varavalikareenga... ponniyin selvan nan paati veetla padichenn... kalla manna niraya vilaydi iruken goli kundu, pambaramlam namku otthu varathu, cricketthan

  ReplyDelete
 3. வாங்க ஜெயஸ்ரீ, இப்படி வண்ணாத்திப் பூச்சி, பட்டுப் பூச்சியெல்லாம் பிடிச்சு வச்சுக்க முடியாது. அப்பாவுக்குத் தெரிஞ்சுடும், அப்புறம் திட்டு மட்டுமில்லாமல் அடியும் விழும், ஜீவஹிம்சையானு! :)))))) அதோட நாங்க இருந்த வீட்டிலே இதெல்லாம் வரதுக்கு சான்ஸும் இல்லை, பள்ளியில் தான் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் தோட்டம், காடுனே சொல்லலாம், அங்கே தான் இதை எல்லாம் பார்ப்பேன். பொன்வண்டைக் கூடப் படிக்கும் சிநேகிதிகள் பிடிச்சுண்டு வருவா, பார்ப்பேன். தொடவே உடம்பு சிலிர்க்கும். கையில் ஒட்டிக்கும் பாருங்க ஒரு பூச்சியின் வண்ணம், எது அது?? வண்ணாத்திப்பூச்சி??? அல்லது வெல்வெட் பூச்சி?/ தெரியலை! தேனீயைக் கூடப் பிடிச்சுண்டு வந்து டான்ஸ் ஆடுது பார்னு காட்டுவாங்க! :))))))))))))))

  ReplyDelete
 4. வாங்க வில்லனார் எல்கே, முதல்லே படத்தை மாத்துங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கோலிக்குண்டு, பம்பரம்னா பயமோ?? பம்பரத்தை அப்பீஈஈஈஈட் எடுத்துக் கையில் சுத்த விடணும் பாருங்க! கையிலே பம்பரம் சுத்தும்போது குறுகுறுனு இருக்கும். ஆணி கையைக் கிழிக்குமோனு தோணும்! :))))))))))))

  ReplyDelete
 5. படத்தை மாத்தியாச்சு :) பயமா ??? வாய்ப்பே இல்ல.. நம்ம நண்பர்கள் வட்டாரம் அப்படி.. கிரிக்கெட், கால்பந்து ,அடி பந்து , செவென் ஸ்டோன் இப்படி பட்ட கேம்ஸ் மட்டும்தான் ஆடுவோம் ....

  ReplyDelete
 6. hi ,Geetha maami
  pattam vida maatela? maanjaa nool
  then poon vandu ellam pidikradhu,idhellam malarum ninaivugal

  inum niraya aprom sollren
  epdi irukeal
  meendum varuven
  umagopu

  ReplyDelete
 7. எல்கே, இந்தப் படமும் நல்லா இல்லை, சரியாவே தெரியலை! :( மாத்தச் சொன்னா அடிக்க வருவீங்களோ? :D

  ReplyDelete
 8. அட?? வில்லிவாக்கம் உமாகோபு?? என்ன ஆச்சு இத்தனை வருஷம் கழிச்சு மீண்டும் வரவு?? வாங்க, வாங்க, நல்வரவு.

  ReplyDelete
 9. அப்பறம் உமா கோபு, பட்டம் விட்டதில்லை, அப்பாவுக்குத் தெரிஞ்சுடுமே, இதெல்லாம் வீட்டு வாசல்லேயே விளையாடிடலாம், பட்டம்னா மாடிக்குப் போகணும், பட்டம் விடும் மும்முரத்தில் அப்பா வரது தெரியாமப் போய் மாட்டிக்கணுமே! :)))))))))))))

  ReplyDelete
 10. //எல்கே, இந்தப் படமும் நல்லா இல்லை, சரியாவே தெரியலை! :( மாத்தச் சொன்னா அடிக்க வருவீங்களோ?//

  ada kaduvule.. pesama unga veetuku varen. nengale en digcamla oru photo edutu kodunga pottukaren

  ReplyDelete
 11. ஹிஹிஹி, எல்கே, வாங்க, வாங்க, உங்க டிஜியிலேயே எடுத்துடலாம். நல்லவேளை என்னோடதிலே எடுக்கச் சொல்லலை! :))))))))))) எப்போ வரீங்க?? என்ன பிடிக்காதுனு சொல்லுங்க, அதையே பண்ணி வைக்கறேன்! :P:P:P:P

  இப்போ அம்பி வந்தால் வழுதுணங்காய் மாலை தயாரா இருக்கும், எல்லாப்புகழையும் வழுதுணங்காய்க்கே கொடுத்துடுவேன். அது போல!!!!

  ReplyDelete
 12. பட்டுப்பூச்சி, அணில் , பொன்வண்டு "பாலன்" ஜீவ காருண்யம் தான் !! இல்லைனா அந்த மழைல செத்துடும்!! , இல்லை குளிர்ல செத்துடும்!! இல்லை மிதிபட்டு செத்துடும்!!

  ReplyDelete
 13. ஜெயஸ்ரீ,
  அணில் பிள்ளையை எடுத்து வளர்க்க ஆசைதான். ஆனாலும் கடிக்குமோனு பயம்! பல் எத்தனை கூர்மை! தெரிஞ்சவர் ஒருத்தர் அவரோட மேலதிகாரி அணில்பிள்ளையைத் தன் சொந்தக் குழந்தை மாதிரி வளர்த்துவந்ததைக் குழுமத்தில் எழுதி இருந்தார். கோபம் வந்தால் அழகு காட்டுமாம், அலுவலகக் கோப்பிலிருந்து கடிதங்களை எடுத்துக்கொண்டு மேலே பரணில் போய் ஒளிஞ்சுக்குமாம், அவரோட மனைவி அதைத் தாஜா செய்து, சமாதானம் செய்து திரும்பி வாங்குவாங்களாம், கேட்கவே ஆநந்தமா இருக்கு இல்லை???

  ReplyDelete
 14. பாட்டி, என் சகோதரி வீட்ல தினமும் ,ஒரு காகம், அணில் பின்பு குருவி வந்து உணவு சாப்பிட்டு செல்லும். நேரத்துக்கு உணவு வைக்காவிட்டால், காகம் ஜன்னலை அதன் அலகால் தட்டிகூப்பிடும்

  ReplyDelete
 15. எல்கே,கொள்ளுத்தாத்தா,:P:P:P இங்கே எங்க வீட்டுக்கும் தினமும் காக்கை, குருவி, அணில், மைனா, குயில் குஞ்சு எல்லாமும் வந்து சாப்பிடும், படம் எடுக்கப் போனால் பறந்துடுது தாத்தா! :P:P:P:P

  ReplyDelete
 16. சூப்பர் கொசுவத்தியா இருக்கே. கல்லா மண்ணா எல்லாரும் விளையாடறது. இதில ஒரு சின்னக் கல் மேல ஏறி நின்னா அவுட் செய்ய முடியாதே.

  ஏரோப்ளேன் பாண்டி, கிளித்தட்டு எல்லாம் எங்க போச்சு.
  புளிக்கொட்டை சேத்துவச்சு ஊதி விளையடறது, எல் ஒ என் டி ஒ என்
  லண்டன்:)
  ஐ ஸ்பை எல்லாம் விட்டுட்டீங்களே கீதா:))

  ReplyDelete
 17. வாங்க வல்லி, இப்போத் தானே விளையாடவே ஆரம்பிச்சிருக்கு! ஒண்ணொண்ணாத் தானே விளையாடணும்! :))))))))))

  ReplyDelete
 18. ரொம்ப cute mrs shivam. அன்பும் அழகும் நன்றாகவே காட்டும்!!

  ReplyDelete