எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 24, 2010

பெண்ணே! உன் கதி இதுதானா? :(

ம்ஹும் இவங்கல்லாம் திருந்தவே மாட்டாங்க! என்னத்தைச் சொல்றது? மத்தியானம் வேலை எல்லாம் முடிச்சுட்டுப் பாத்திரம் ஒழிச்சுப் போட்டுட்டு, வேலை செய்யற பொண்ணு வரதுக்காகக் காத்துட்டு இருந்தேன். அவள் புயல் மாதிரி, எப்போ வேணா வருவா, விடிய விடிய என் பொண்ணு வயசு இருப்பா. கிட்டத்தட்ட பத்து வருஷங்களுக்கும் மேலே அவ அம்மா, பொண்ணுனு மாத்தி மாத்தி வேலை செய்யறதாலே அவ அடிக்கடி போடற லீவைக்கூட சகிச்சுக்கத் தான் வேண்டி இருக்கு. இன்னிக்கு வருவாளா? மாட்டாளா? எங்க ரெண்டு பேருக்கும் ஒரு பட்டி மன்றம் தினமும் நடக்கும். நேத்திக்கு அப்படித் தான் வரமாட்டானு சாயந்திரம் ஐந்து மணிக்கு வாசல் பெருக்கப் போனால் யாரையோ அடிக்கிறாப்போல வேகத்திலே வந்துட்டிருந்தா. அதிர்ஷ்டம் அடிச்சதேனு நினைச்சேன்.

இன்னிக்கும் காலம்பர வந்துட்டுத் தான் போனா. அப்போல்லாம் வாயைத் திறக்கலை. நானும் நாளைக்கு வரப் போற விருந்தினருக்குக் கொடுக்கணுமேனு இட்லிக்கு அரைச்சுட்டு இருந்தேனா! அப்புறமா வேலை சரியா இருந்தது. போறச்சே கூடச் சொல்லலை, சாயந்திரம் வரமாட்டேன்னு, சொல்லிட்டு லீவு போடும் வழக்கமும் கிடையாது. சரினு இன்னிக்கும் பார்த்துட்டு ஐந்து மணிக்குப் பெருக்கறேன்னு நம்ம ரங்க்ஸ் கிட்டே சொல்லிட்டு (இல்லைனா அவர் நான் பெருக்கறேன்னு கிளம்பிடுவார்) உட்கார்ந்துட்டு இருந்தேன் புத்தகம் படிச்சுட்டு, போர் அடிச்சது, கணினியைத் திறந்தா அநன்யா அக்கா. சரினு அப்போ யாரையும் வம்புக்கு இழுக்க முடியலையேனு நொந்து நூலாகிக் கிடந்தேனா? அவங்க மாட்டினாங்க. அவங்களோட ஒரு வழியா டூ விட்டுட்டு கணினியை மூடலாம்னா, வாசல்லே அம்மா, அம்மானு சத்தம்.

வேலை செய்யற பொண்ணு அம்மானு கூப்பிடமாட்டா! அக்கானு தான் கூப்பிடுவா. வெளியே போய்ப் பார்த்தா அவ அம்மா. அட? இவ வராளே? பெருக்க மாட்டேன்பாளேனு நினைச்சுட்டுப் பொண்ணு ஏன் வரலைனு கேட்டேன்? கடவுளே! "பேத்தி பிறந்திருக்கும்மா!" என்றாளே பார்க்கலாம்! தூக்கிவாரிப் போட்டது எனக்குனு சொன்னால் அதிலே கொஞ்சம் கூடப் பொய்யில்லை! "என்னது?" நான் கத்தின கத்தல்லே எதிர்வீட்டு மாமி, பக்கத்துவீட்டு மாமி எல்லாரும் என்னவோ, ஏதோனு பார்த்தாங்க. மெதுவா அந்த ஆயா சொல்றா," பேத்திக்குக் கல்யாணம் ஆயிடுச்சும்மா, அவளுக்குத் தான் பொண்ணு பிறந்திருக்கு!"

அடக் கடவுளே! போன வருஷம் தான் எங்க பொண்ணு வந்தப்போ இந்தப் பொண்ணு என்ன கிளாஸ் படிக்கிறானு கேட்டுட்டு, பத்தாவதுனு சொன்னதும், புத்தகங்கள் வாங்கிக்கோனு பணம் கொடுத்துட்டுப் போனா. நானும் பொங்கலுக்கு அந்தப் பொண்ணுக்குனு சல்வார், குர்த்தா தைச்சுக்கனு துணி வாங்கிக் கொடுத்திருந்தேன். அப்போல்லாம் கூட வாயே திறக்கலை. குழந்தை பிறக்கறதுனா சும்மாவா? பத்துமாசம் வயித்திலே சுமக்கணுமே? எப்படி தெரியாமல் போச்சு? கல்யாணம் ஆனதையும் சொல்லவே இல்லையே? ஏன்னு கேட்டா "நீ சண்டை போடுவே, திட்டுவே, அதான்ம்மா சொல்லலை, க்காங்க், நல்ல இடமா திகைஞ்சது, கல்யாணம் முடிச்சாச்சு, அப்புறமும், மாப்பிள்ளையும், பொண்ணும் இங்கே தான் இருந்தாங்க, ஏழாம் மாசம் வளைகாப்பு முடிச்சுத் தான் அனுப்பினோம். மார்வாடி கிட்டே கடன் வாங்கி சீரெல்லாம் செஞ்சு அனுப்பி இருக்கோம். பேத்திப்பொண்ணைப் பார்க்க நானும் வரேன்னேன், வேண்டாம்னுட்டு இவ மட்டும் போயிருக்காம்மா!" கிழவியின் குரலில் பெருமையும் ஆதங்கமும்.

95-ம் வருஷம் பிறந்த இந்தப் பெண்ணுக்குப் பதினைந்து வயசு முடியலை. எங்க வீட்டுக்கு வேலைக்கு வந்தாலே நான் படிக்கப் போனு விரட்டிடுவேன். வீட்டு வேலைக்கு அனுப்பாதேனு சொல்லிட்டு இருப்பேன். இவரும் கத்துவார். இப்போ?? பத்து கிளாஸ் கூட முடிக்காமல் கல்யாணம், உடனே குழந்தை?? அந்தக் குழந்தை எப்படித் தாங்கினது?? என்னோட மனசு இன்னும் சமாதானமே ஆகலை. இந்த வாரமே கண்ணீர் வாரமாப் போச்சு! இவங்களை எல்லாம் யார், எப்படித் திருத்தறது? ஒரு வருஷமா என் கிட்டே மூச்சுக் கூட விடாமல் இருந்திருக்கா இந்த வேலை செய்யற பொண்ணு! என்ன நெஞ்சழுத்தம்??? கையாலாகத மனிதர்களாகப் போய்விட்டோமே!

20 comments:

 1. //அந்தக் குழந்தை எப்படித் தாங்கினது?? என்னோட மனசு இன்னும் சமாதானமே ஆகலை. இந்த வாரமே கண்ணீர் வாரமாப் போச்சு! இவங்களை எல்லாம் யார், எப்படித் திருத்தறது? ஒரு வருஷமா என் கிட்டே மூச்சுக் கூட விடாமல் இருந்திருக்கா இந்த வேலை செய்யற பொண்ணு! என்ன நெஞ்சழுத்தம்??? கையாலாகத மனிதர்களாகப் போய்விட்டோமே! ///

  நம்மால் கண்ணீர் விட மட்டுமே முடியும்

  ReplyDelete
 2. இன்னும் பால்ய விவாஹம் அகற்றப்படவில்லை நம் நாட்டில். ரொம்ப வருத்தமா இருக்கு. நிஜம்மாவே நெஞ்சழுத்தம் தான். இத்தனையும் வெச்சுண்டு வேலை எல்லாம் வெளியே காட்டிக்காம பண்ணி இருக்கே? பெரிய கார்யம் தான்!

  ReplyDelete
 3. teenage pregnancy யோட consequences பற்றி உலகு முழுதும் தண்டோரா போட்டுண்டே தான் இருக்கா எழுச்சி இயக்கங்கள் எல்லாம். மண்டைல ஏறினாதானே. நம்ப ஊர்ல நீங்க சொன்ன particular விஷயத்துல அது பெற்றோர்களோட /பண்ணிக்கறவாளோட choice ம் நெஞ்சழுத்தமும் - ஏன்னா பண்ணிக்கற பையன் ( mostly பையர் !!+30 யோ என்னமோ : against the law nu தெரிந்தே!! வெளில சொன்னா தானே!! ஆனா ஹாஸ்பிடல் டாக்டர்க்கு தெரியாம போகுமா? டெலிவெரியும் பாவம் யாரு கிட்டையோ:(((( கல்யாணமும் ஆகி, குழந்தையும் வந்து இப்ப புருஷனையும் தூக்கி உள்ள போட்டா அவ கதி ?அதனால யாரும் ஒண்ணும் செய்யறத்துக்கு இல்லை.பாவம்! இது ஒரு பக்கம்!! டெல்லி பூனால நான் இருந்தபோது எத்தனை குழந்தைகள் 13 - 15வயதில் STD யோட:( ஒரு நல்லுணர்வு அமைப்பின் மூலம், என் சொந்த டைம் ,EFFORTல எத்தனையோ செஞ்சும் ப்ரயோசனம் இல்லை. அதை கெடுக்க ஒரு ஆள் கட்டாயம் இருக்கும்:((((( தினம் வந்து அழுவேன். மனச விட்டு போஹாது:(( இல்லாமையும் நம் இயலாமையும் தான் வேறென்ன ? சின்னக்குழந்தைகள். அங்க இப்படியா ,இங்க அது பெண்களோட சாய்ஸ்!! குடி கும்மாளம் ஹார்ட் ட்ரக்ஸ் !! நல்ல குடும்பம் , பெற்றோர்களும். நெஞ்சுல தீ வைச்சுண்டு படற அவஸ்தை போருண்டா சாமி. எப்ப இவாளுக்கெல்லாம் மண்டைல மசாலா வருமோ! இது இப்படின்னா அடுத்தது சைல்ட் பாண்டட் லேபர் !! தளைலேந்து விடுவிச்சா கொலையே பண்ண வந்துடும் ஜனங்கள் பீஹார்ல. நம்ம ரங்க்ஸ் க்கு வண்டி வண்டியா அனுபவங்கள்!!:(( ஸாரே ஜஹாம் சே அச்சா... ஓட மற்ற பக்கம் !!!

  ReplyDelete
 4. இவங்கள எல்லாம் திருத்தவே முடியாது... 15 வயசு.. அதே ஒரு கொழந்த அதுக்கு ஒரு கொழந்தையா... ச்சே பாவம். மனுசதன்மையே இல்லாத ஒரு செயல். கேக்கவே பாவமா இருக்கு

  ReplyDelete
 5. என்ன சொல்றதுன்னே தெரியலை..

  ReplyDelete
 6. எல்கே, எல்லாம் நடந்தும் நேத்திக்குக் காலம்பர வரையிலும் அந்த வேலை செய்யற பொண்ணு மூச்சுக் கூட விடலையே? எப்படி முடிஞ்சது?? அதான் எனக்குப் புரியலை! :((((((

  ReplyDelete
 7. துளசி, என்ன செய்யமுடியும்? :(

  ReplyDelete
 8. வாங்க போர்க்கொடி, :((( இதான் என் பதிலும்

  ReplyDelete
 9. வாங்க அநன்யா,

  பால்ய விவாஹம் அகற்றப் படவில்லை, ஒழிக்கவும் முடியலைதான். என்னவோ, எனக்கு ஒண்ணுமே புரியலை போங்க!

  ReplyDelete
 10. ஜெயஸ்ரீ, என்ன பேசி இனிமே என்ன செய்யறது?? அந்தக் கிழவி என்னமோ பேத்திக்கு குடியரசுத் தலைவர் பதவியே கிடைச்சுட்ட மாதிரி சந்தோஷம்.

  ReplyDelete
 11. அப்பாவி தங்கமணி, என் கிட்டே சொன்னா சண்டை போடுவேன்னு தெரிஞ்சுட்டுத் தான் சொல்லாம இருந்திருக்கா. என்ன பண்ணறது?

  ReplyDelete
 12. வாங்க பாசமலர், ரொம்பச் சின்னக் குழந்தை அது. சின்ன வயசிலே இருந்தே பார்த்துட்டு இருக்கேனே, எனக்குத் தாங்கவே இல்லை. :((((((

  ReplyDelete
 13. கீதா, இங்க எல்லாம் இதான் வழக்கம். கிராமத்திலிருந்து வந்துட்டாப் போதுமா. அதே புத்திதான். படிக்கறதிலை குறைவு கிடையாது. எங்க முனிம்மா பொண்ணுக்கு 14 வயசில கல்யாணம். 4 பிள்ளைகளும் ஒரு பொண்ணும். எல்லாருக்கும் கல்யாணம் ஆயாச்சு. ஒண்ணுக்குள்ள ஒண்ணுக்குள்ள உறவு.20 வயசுப் பேத்திக்குப் பிறந்தது மூணும் பெண்கள்.
  சொல்லித் திருத்துவதற்கு வழியில்லை.:(

  ReplyDelete
 14. வாங்க வல்லி, இவங்க கிராமத்திலே இருந்தெல்லாம் வரலை, இங்கே அம்பத்தூர் தான் பல வருஷங்களாகனு சொல்லி இருக்காங்க. படிச்சிட்டு இருந்த பொண்ணு, இந்த வருஷம் பத்தாவது பரீக்ஷை எழுதி இருக்கணும். அப்போத் தான் வளைகாப்பு, சீமந்தம் நடத்தி இருக்காங்க, அதுவும் தெரியலை. என்னவோ போங்க சில சமயம் ரொம்பத் தெரிஞ்சவங்க, நெருங்கினவங்கனு நினைச்சால் அவங்களே இப்படி நடந்துக்கிறதை நினைச்சால் வேதனை பிடுங்குது! அந்தக் கிழவிக்கு என்னமோ பேத்திக்கு நோபல் பரிசே கிடைச்சாப்பல சந்தோஷம் தாங்கலை, சொல்லிச் சொல்லிப் பூரிச்சுப் போறா!

  ReplyDelete
 15. அவங்க வழக்கத்தில் இதுதான் பழக்கம், இன்னமும் 20 வயசு வரை திருமணம் செய்யாமல் இருந்தால் அது அவர்களுக்கு கேவலம் என்பார்கள். சென்னையில் நிறைய தெலுங்கு மக்களிடமும் இதேதான் பிரச்சனை.

  // 15 வயசு.. அதே ஒரு கொழந்த அதுக்கு ஒரு கொழந்தையா... ச்சே பாவம். //

  இப்பாத்தான் இதுபோல எல்லாம் கவலைப்படுகின்றீர்கள். எங்க அம்மாவிற்கு 8 வயதில் திருமணம், 13 வயதில் குடித்தனம் வைத்தார்கள். எந்த டைரக்கடர் ஸ்டார்ட் ஆக்சன் சொன்னாரே, 73 ஆண்டுகள் தாம்பத்திய வாழ்க்கையில் மொத்தம் 11 பிரசவங்கள், அதில் தங்கியது 8, எட்டாவது அதிமேதாவி நாந்தான். எங்க அப்பா எந்தக் குறையும் இல்லாமல் 89 வயதில் ஒரே நாளில் மூளை நரம்பு வெடித்து வலி தெரியாமல், துடிக்காமல் துவளாமல், எந்த நோயும் இல்லாமல் இறந்தார். எங்க அம்மா 89 வயதிலும், பிபி,சுகர்,சக்கரை எதுவும் இல்லாமல் அப்பாவை பிரிந்த வருத்தத்துடன் இருக்கின்றார். இதுக்கு என்ன சொல்ல. அரோக்கியமான வாழ்க்கை, அமைதியான தெய்வ பக்தி வாழ்க்கை, நல்ல உணவு முறை,ரெட்டீன் வேலை என்று இருந்தாலே பாதி ஆரோக்கியம் வந்துவிடும்.

  ReplyDelete
 16. கீதாம்மா, நிறைமாச கர்ப்பிணின்னு சொல்றீங்க. வயிறு காட்டிக்கொடுக்கலையா!!!!

  ReplyDelete
 17. வாங்க பித்தனின் வாக்கு, அந்தக் காலத்தில் என்னோட பாட்டியும் ஐந்து வயதில் திருமணம் ஆனவர் தான். இப்போக் கொஞ்சமானும் படிச்சாத் தானே இவங்களுக்கு நல்லது, கெட்டது தெரியும்?? இன்னொரு இலவசக் குடும்பத்தையே உருவாக்குவதில் என்ன அர்த்தம் இருக்கு? படிப்பு கொஞ்சமாவது சிந்தனையைத் தருமோனு ஒரு எண்ணம்! நல்லாப் படிச்சவங்களும் வக்கிரமா சிந்திக்கிறாங்க தான், அது வேறே விஷயம், ஆனால் இந்த மக்களுக்கு இலவசமாய் எல்லாம் கிடைப்பதாலேயே எல்லாத்தையும் இப்படி எடுத்துக்கறாங்களோனு ஒரு எண்ணம்! :(((((((இவ அம்மாவுக்கே 32, 33 வயசுக்குள்தான். இவளுக்குக் குழந்தை, இவ குழந்தைக்குக் குழந்தை இன்னும் பதினைந்து வருடங்களில் பிறந்துவிடும்!

  ReplyDelete
 18. நிச்சயமாச் சாரல், வயிறு காட்டித் தான் கொடுத்திருக்கும், ஆனால் நாங்க எங்கே பார்த்தோம்?? பொங்கலுக்குத் துணி எடுத்துக் கொடுத்துட்டுப் பொண்ணு நல்லாப் படிக்கிறாளானு கேட்டதுக்குப் படிக்கிறானு பதில் வந்தது அம்மாக்காரி கிட்டே இருந்து! அவங்க வீட்டோட வச்சிருந்து ஏழாம் மாசம்? எப்போனு தெரியலை வளைகாப்பு முடிச்சு மாமியார் வீட்டுக்குப் பரிக்ஷைக்கு முன்னாலேயே அனுப்பியாச்சாம். பிரசவமும் அங்கே தான் நடந்திருக்கு, பொன்னேரியிலே!

  ReplyDelete