எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 28, 2010

எல்கே பிணைத்த சங்கிலித் தொடர்!

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அட?? சொந்தப் பெயர், அசல் பெயர் தான் அது. வேணும்னா ஜாதகப் பெயர் சீதாலக்ஷ்மினு வச்சிண்டிருக்கலாமோ??

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ஆமாம், இது தான் பதிவு செய்யப் பட்ட பெயர். நான் வலை உலகுக்குப் புரட்சி செய்ய வந்தப்போ இன்னொரு கீத்ஸ் மட்டும் இருந்தாங்க. நம்ம அதியமானோட சிநேகிதி அவங்க. அதனால் வித்தியாசம் தெரியறதுக்காக கீதா சாம்பசிவம்னு வச்சிண்டேன். நான் வந்ததுமே அவங்க பயந்து ஓடியே போயிட்டாங்க. இப்போப்பாருங்க இரண்டு கீதா வந்து மிரட்டறாங்க. ஒருத்தர் கீதா அச்சலாம், (க்ர்ர்ர்ர்ர்ர்ர்) இன்னொருத்தர் கீதா சந்தானமாம். யாரானும் புதுசாப் பார்க்கிறவங்க நான்னு நினைச்சு அவங்க பதிவிலே போய்ப் பின்னூட்டப் போறாங்க, நமக்கு என்ன வம்பு? :))))))))

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

ஹிஹிஹி, அன்னிக்குத் தான் தமிழ் எழுத்தாளர் உலகில் புதியதொரு உதய சூரியன் உதயம் ஆயிற்று. எங்கு பார்த்தாலும் தா(யா)னைத் தலைவி வாழ்க, தாயுள்ளத்தோடு எங்களை உய்விக்க வந்திருக்கும் பெருமாட்டி(இது சரியா???யாரானும் சொல்லுங்கப்பா) வாழ்க! னு போஸ்டர் ஒட்டித் தோரணம் கட்டி, எடைக்கு எடை பொன்னும், வெள்ளியும் கொடுத்து, மண்சோறு சாப்பிட்டு, அலகு குத்திண்டு, தீ மிதிச்சு, காவடி எடுத்துனு எல்லாம் செய்தாங்க வலை உலக சிஷ்யகோ(கே)டிகள்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

இது என்ன ரகசியமா?? அதெல்லாம் ஒண்ணும் இல்லை. கொஞ்ச நாளைக்கு மொக்கை போஸ்டா போடணும். அதே!

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

ம்ம்ம்ம்ம்??? கொஞ்சம், கொஞ்சம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதிகம் பிரயாணங்களும் , அதன் சாதக, பாதகங்கள் பற்றியும். ஒரே ஒரு முறை கொஞ்சம் போல் பகிர்ந்துகொண்டேன், இதே போல் ஒரு சங்கிலித் தொடருக்காக. அதிலே சிலது எனக்கே பிடிக்கலை. அப்புறமா எடுத்துட்டேன். என்னது லிங்கா? ஹிஹிஹி, அது இதிலே இல்லை. வேறே இடத்தில் ரகசியமா வச்சிருக்கேனே!

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுதும் போகுது, சம்பாதிக்கவும் முடியுது. நண்பர்களோடு பழகுவதில், சாட்டுவதில், ப்ரவுசிங் செய்து பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியறதில் பொழுது நல்லாவே போகுது. சம்பாதிச்சிருக்கிறது உலக அளவில் நண்பர்களை. இப்படி ஒரு நட்புக் கூட்டம் நான் அழுதால் அழவும், சிரித்தால் சிரிக்கவும், அன்பு செலுத்தவும், ஆதரவு தெரிவிக்கவும் ஏற்பட்டதை விடப் பெரிய சம்பாதனை வேறே என்ன வேண்டும்?


7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஹிஹிஹி, எல்லாமே தமிழ் வலைப்பதிவுகள் தான். பீட்டர் எல்லாம் விடறதில்லைனு வச்சுட்டேன். எத்தனைனு சொன்னால் திருஷ்டி பட்டுடுமே! ரகசியமாவே இருக்கட்டுமே! :)))))))))))))

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

எல்லார் கிட்டேயும் கோபம் வருமே! நாம மொக்கை போட்டும், மெயில்கொடுத்து அழைச்சும், வந்து பின்னூட்டம் போடலைனா கோபம் வராமல் என்ன செய்யும்? கோபம் வரும் தான். அந்தப் பதிவர்களில் முக்கியமானவங்கனு பார்த்தா திராச சார், திவா அவர்கள். ஹிஹிஹி, ரெண்டு பேரும் அசைஞ்சே கொடுக்க மாட்டாங்க! (நறநறநறநறநறநற)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


சூப்பர் சுப்ரா. மறக்கவே முடியாது. கடைசியிலே(முதல்லே இருந்துதான், ஆனால் எனக்குத் தான் அப்புறமாத் தெரிஞ்சது) அவரும் மதுரை, மேல ஆவணி மூல வீதி. நாங்க இருந்த வீட்டிற்கு நாலைந்து வீடு தள்ளி இருந்திருக்கார். நேரிலே பார்த்தால் புரியுமோ என்னமோ! பாராட்டுன்னா, ஊக்கம் கொடுத்தார்னு சொல்லலாம். கிட்டத் தட்டப் பதிவுகளின் போக்கையே மாற்றினார்னும் சொல்லலாம். நன்றியும், பாராட்டும் அவரையே அடையணும்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.

என்னத்தைச் சொல்றது? எல்லாருக்கும் எல்லாமே தெரியுமே? இருந்தாலும் எல்லாரும் மண்டையைப் பிச்சுக்கற ஒரு விஷயம் என்னன்னா, எனக்கு என்ன வயசுங்கறது தான். :)))))))))))))))))ஆளாளுக்குக் கற்பனை பண்ணிட்டு இருக்காங்க. அதைச் சொல்றதுக்குனு ஒரு திட்டம் வச்சிருக்கேன். அப்போ இறை அருளும், நேரமும், காலமும் கூடி வந்தால் சொல்லிடுவேன்.


நான் யாரையுமே கூப்பிடலைப்பா. எல்லாருமே பிசியா இருப்பாங்க. அதான் தொந்திரவு பண்ணவேண்டாமேனு விட்டுட்டேன். யாருக்குப் பிரியமோ அவங்க எழுதுங்க. வாழ்த்துகள். எல்கேவுக்கு நன்றி.

30 comments:

 1. maami detailed comment koncha nerathula podaren

  ReplyDelete
 2. நீங்க மறுபடி lk தொடர சொல்லுங்க

  ReplyDelete
 3. அருமையான விளக்கம்

  ReplyDelete
 4. //சீதாலக்ஷ்மினு வச்சிண்டிருக்கலாமோ/

  அழகான பெயர்

  //யாரானும் புதுசாப் பார்க்கிறவங்க நான்னு நினைச்சு அவங்க பதிவிலே போய்ப் பின்னூட்டப் போறாங்க, நமக்கு என்ன வம்பு? :))))))))/

  ஹிஹிஹ்

  //எடைக்கு எடை பொன்னும், //

  ரொம்ப கஷ்டமாச்சே

  ReplyDelete
 5. // இப்படி ஒரு நட்புக் கூட்டம் நான் அழுதால் அழவும், சிரித்தால் சிரிக்கவும், அன்பு செலுத்தவும், ஆதரவு தெரிவிக்கவும் ஏற்பட்டதை விடப் பெரிய சம்பாதனை வேறே என்ன வேண்டும்///

  மிகவும் சரி


  //ரகசியமாவே இருக்கட்டுமே! :)))))))))))))//

  எனக்குத் தெரியுமே

  //அப்போ இறை அருளும், நேரமும், காலமும் கூடி வந்தால் சொல்லிடுவேன்.
  ///

  அந்த நேரம் சீக்கிரம் வரட்டும்

  என் அழைப்பை ஏற்று பதிவு போட்டதற்கு நன்றி

  ReplyDelete
 6. தலைவி அடிக்கடி பின்னூட்டம் போட முடியல...ஆனால் தொடர்ந்து படிச்சிட்டு தான் இருக்கேன் ;))

  இந்த வரலாறு எல்லாம் தெரிஞ்சது தானே நமக்கு ;))

  ReplyDelete
 7. என்னது லிங்கா? ஹிஹிஹி, அது இதிலே இல்லை. வேறே இடத்தில் ரகசியமா வச்சிருக்கேனே!

  ஹா...ஹா...

  நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 8. வாங்க எல்கே, விளக்கமாப் போட்டதுக்கும் பதில் சொல்றேன்.

  ReplyDelete
 9. செளந்தர் வாங்க, முதல் வரவு???? எல்கேயை மறுபடியுமா? சரியாப் போச்சு போங்க! :)))))

  ReplyDelete
 10. அட லதா? அதே லதா தானே? ஆயிரமாவது பதிவிலேயே எதிர்பார்த்தேன், அதுக்கும் முன்னாடி நாலு வருஷம் முடிஞ்ச பதிவிலேயும் வருவீங்களோனு பார்த்தேன், வந்ததுக்கும், சிரிப்புக்கும் நன்றி.

  அது சரி, சிரிப்புக்கு என்ன அர்த்தம்???

  ReplyDelete
 11. வெறும்பயலா இருந்தாலும் விளக்கம் நல்லா இருக்குனு சொல்றீங்க!

  ஹிஹிஹி, எங்க அண்ணா எங்க தம்பியை போடா வெறும்பயலேனு செல்லமாத் திட்டுவார். அந்த நினைப்பு வருது! :))))))))))))

  ReplyDelete
 12. ம்ம்ம்ம் சீதாலக்ஷ்மி னு என்னோட இரண்டு தாத்தாக்களும் தான் கூப்பிட்டுட்டு இருந்தாங்க. போகட்டும், எடைக்கு எடை பொன் தானே கேட்டேன்?? வைரமா கேட்டேன்? கொடுக்கலாமில்லை?? :))))))

  ReplyDelete
 13. எனக்குத் தெரியுமே //

  ஹிஹிஹிஹி, சொல்லி
  டாதீங்க!

  அந்த நேரம் சீக்கிரம் வரட்டும்//

  வரும், வரும், சீக்கிரம் வரும். :))))))))))))))

  ReplyDelete
 14. கோபி, நீங்க நாலு வருஷமாக் கூடவே வரீங்க? இவங்க எல்லாம் புதுசு தானே? அதான் போட்டேன்! :)))))))

  ReplyDelete
 15. வாங்க ஸ்ரீராம், இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்? உங்களுக்கும் தெரியுமா????:))))))))))

  ReplyDelete
 16. அருமையாக பகிர்ந்து உள்ளீர்கள், நன்றிகள்

  ReplyDelete
 17. கீதா விட சீதா தான் சூப்பர் மாமி... மாத்திடுங்கோ... ஒரு டவுட்... அது என்ன ஜாதக பெயர்... நெஜமாவே தெரியாம தான் கேக்கறேன்...

  ReplyDelete
 18. ஆஹா... உதயசூரியனா.... அவங்களா நீங்க... சொல்லவே இல்ல...

  ReplyDelete
 19. //கொஞ்ச நாளைக்கு மொக்கை போஸ்டா போடணும்//

  ஹி ஹி ஹி... சிதம்பர ரகசியம் எல்லாம் இப்படி பப்ளிகா சொல்லலாமோ...

  ReplyDelete
 20. வாங்க ராம்ஜி யாஹூ நன்றிங்க

  ReplyDelete
 21. எடிஎம் ஜாதக பேருன்னா தெரியாதா? பிறந்த பதினோராம் நாள் தொட்டில் போடும்போது உங்க அம்மா உங்க காதிலே சொல்லி இருப்பாங்க, அந்தப் பேர் தான் ஜாதகப் பேர். அது அநேகமா எல்லாருக்கும் ஜாதகத்திலே மட்டும் இருக்கும். கூப்பிட வேறே பேர் வைச்சிருப்பாங்க. சிலருக்குப் பேர் மாத்தி இருக்க மாட்டாங்க, பொதுவா 3 பெயர் வைக்கிறதுண்டு.

  ReplyDelete
 22. கல்யாணப்பத்திரிகையிலே கூட ஜாதகப் பெயரில் தான் அடிப்பாங்க.

  ReplyDelete
 23. ஆஹா... உதயசூரியனா.... அவங்களா நீங்க... சொல்லவே இல்ல...//

  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அக்கிரமமா இல்லை?? :)))))))

  நான் அவங்க இல்லை, இல்லை, இல்லவே இல்லை, போதுமா? :P

  ReplyDelete
 24. ஹி ஹி ஹி... சிதம்பர ரகசியம் எல்லாம் இப்படி பப்ளிகா சொல்லலாமோ...//

  அதானே, ஹிஹிஹி, எல்லாருமே மொக்கைதானே போடறாங்க! :P

  ReplyDelete
 25. romba interesting tag!!!

  azhakaa bathil potturukkael!

  ReplyDelete
 26. ஹா ஹா இங்கேயும் திரும்பிப்பாரா? வெல் டன்!! திராசஅவங்க, , திவாஅவங்களுக்கு அழைப்பு விட்டா நகரமாட்டங்களா!!:)) பாவம் நேரம் இருக்குமோ இல்லையோ இல்லியா?


  " அன்னிக்குத் தான் தமிழ் எழுத்தாளர் உலகில் புதியதொரு உதய சூரியன் உதயம் ஆயிற்று. எங்கு பார்த்தாலும் தா(யா)னைத் தலைவி வாழ்க, தாயுள்ளத்தோடு எங்களை உய்விக்க வந்திருக்கும் பெருமாட்டி(இது சரியா???யாரானும் சொல்லுங்கப்பா "
  :))) பை !! வாஹ்!!கமால் கர்தியா!! ஆப் கி பாத் ஹி அலக் ஹை ஜீ!!
  ரெகுலரா படிக்க ஆரம்பிச்சப்போ முதலில் படிக்க ஆரம்பிச்சது கண்ணன் வருவான் தான். ஆனா அதுக்கெல்லாம் முன்னால படிச்சது ஒரு தடவை அம்பியை கலாட்டா பண்ணி எழுதின பதிவுன்னு ந்யாபகம், அவருக்கு கல்யாணம் ஆன சமயமோ என்னமோ!:)))

  ReplyDelete
 27. திராச சார், திவா அவர்கள். ஹிஹிஹி, ரெண்டு பேரும் அசைஞ்சே கொடுக்க மாட்டாங்க! (நறநறநறநறநறநற)
  நறாயணா! நறாயணா! நறாயணா! நறாயணா!

  ReplyDelete
 28. //ஹா ஹா இங்கேயும் திரும்பிப்பாரா? வெல் டன்!! //

  வாங்க ஜெயஸ்ரீ, ஆமாம், அடிக்கடி திரும்பிப் பார்க்கிறதிலே கழுத்து வலியும் கூட! :))))))))))

  //திராசஅவங்க, , திவாஅவங்களுக்கு அழைப்பு விட்டா நகரமாட்டங்களா!!:)) பாவம் நேரம் இருக்குமோ இல்லையோ இல்லியா?//

  ஆமாம், திராச உலகம் சுற்றிட்டு இருக்கார். :))))))))

  திவா அவரோட ஊரையும், பாடசாலையையும் சுத்திட்டு இருக்கார்! :)))))))))

  நேரம் நிஜம்மாவே இரண்டு பேருக்கும் இல்லைதான்! இருந்தாலும் இப்போ விட்டால் அப்புறம் எப்போ வம்பு வச்சுக்கறது?? :))))))))))

  ReplyDelete
 29. நறாயணா! நறாயணா! நறாயணா! நறாயணா!//

  வாங்க திவா, கரெக்டா உங்களைத் திட்டும்போது வந்தாச்சு! :P:P:P

  ரெண்டு பேரிலே ந(ர)றன் யாரு, நா(ரா)றாயணன் யாரு?? :))))))))

  ReplyDelete