எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 14, 2010

அப்புவும் இன்னும் மழலை பேசறதே!

இன்னிக்குக் காலம்பர அப்பு தொலைபேசியில் பேசினதா? பேசும்போது தான் அவ அம்மா கிட்டே அப்புவுக்கு "ர" வராதே, இப்போவும் அப்படியே சொல்றதானு கேட்டேன். என்ன மிஞ்சிப் போனால் ஒரு வயசு தான் கூடி இருக்கு. போன வருஷம் வரச்சே 2 வயசு, இப்போ 3 வயசுதான்னாலும் கொஞ்சம் சந்தேகம். அதுக்குள்ளே மழலை போயிருக்குமா என்ன? இருந்தாலும் சந்தேகம். அவ அம்மா கிட்டே கேட்டதுக்கு "ர" இன்னும் வரலைனு சொன்னா.அப்பாடினு இருந்தது. ஹிஹிஹி, அது "டோரா"வை "டோலா"னு சொல்லும் அழகு எங்கே போயிருக்குமோனு பயம். அதே மாதிரி அப்புவுக்கு "ட"வும் வராது. தாராளமா "த" போட்டுக்கும். உம்மாச்சி கிட்டே கோலத்தை அழிச்சுட்டுப் பாவ மன்னிப்புக் கேட்கறச்சே, "ஐ சோ சாலி, உம்மாச்சி, ஐ டிட் மீன் து" அப்படினு தானே சொல்லும். I did not mean to னு சொல்லணும்னு தெரியாது அப்புவுக்கு. சாரி கேட்கணும், மீன் து சொல்லணும். அவ்வளவே. எவ்வளவு சுலபமா முடிச்சுக்கும்??


இன்னிக்கு என்ன டின்னர்னு ராத்திரி கேட்காது. காலம்பர எழுந்ததும் கேட்கும். இன்னும் அதுக்கு காலம்பர எப்போ, மத்தியானம் எப்போ, ராத்திரி எப்போனு புரியலை. ஹிஹிஹி, நாம காலம்பர காலை உணவு என்னனு சொன்னா குட்டிக் குரலில் "வாவ்"னு சொல்லிக்கும். சப்பாத்தினு சொல்லிட்டாப் போதும், "சொதாப்பி?"னு அதோட மொழியிலே கேட்டு நிச்சயம் பண்ணிக்கும். அதுக்கு ரசமும் சாம்பார் தான், சாம்பார், மோர்க்குழம்பு எல்லாமும் சாம்பார் தான். மற்ற எது சாப்பிட்டாலும் சாம்பார் தான். என்ன சாப்பிட்டேனு யாராவது கேட்டால், "மம்மம், சாம்பார்"னுதான் சொல்லும். சாப்பிட்டது இட்லியா இருந்தாலும், தோசையா இருந்தாலும் அதுக்கு அது மம்மம் தான். அது இங்கே இருந்த வரைக்கும், அதுக்கு அப்புறமும் கொஞ்ச நாட்கள் நாங்களும் மம்மம் தான் சாப்பிட்டுட்டு இருந்தோம். அதையே காலம்பர நினைச்சுண்டு இருந்தேனா?? வருண், அருண்அநன்யாவோட பதிவு கண்ணிலே பட்டது. உடனேயே அப்பு நினைவு வந்தது.

அவ அக்காவை அங்கே குழந்தையா வச்சுத் தாலாட்டறதாம், பாட்டில்லே பால் எல்லாம் கொடுக்கிறதாம், இங்கே இருந்தவரைக்கும் எனக்குச் செய்துண்டு இருக்கும். அழணும்னு சொல்லும். அதுவே அழுது காட்டும், இப்படி அழணும்னு. நாம் அழுதால்(விளையாட்டுக்குனு புரியுமோ என்னமோ) சிரிக்கும். வேணும்னு பிடிவாதம் பிடிச்சுண்டு நாம மேலே அழுதால் அதுக்கு என்ன செய்யறதுனு புரியாது. திகைச்சுப் போயிடும். அப்புறமா அதுவே அழ ஆரம்பிச்சுடும். பாவமா இருக்கும். நாம தூக்கிண்டு சமாதானம் பண்ணணும். உதடு பிதுங்கிப் பிதுங்கி வரும். துக்கம் தொண்டையை அடைக்கும். அதைப் பார்த்தும் நாம சும்மா இருப்போமா? இன்னிக்குக் காலம்பர அது சாப்பிடற பழங்களை எல்லாம் சொன்னது. எங்கே எங்கே வெகேஷனுக்குப் போயிட்டு வந்தோம்னு எல்லாம் சொல்லத் தெரிஞ்சு போச்சு. எஃபண்ட், (ஆனை), டைனோசர் எல்லாம் பார்த்ததாம். Baby Giraffee பார்த்ததாம். மனசுக்குள்ளே தான் என்னமோ பெரிய மனுஷினு நினைப்பு. பேச்சு நிறைய வந்திருக்கு இப்போ. முன்னே எல்லாம் இந்தியா வரியானு கேட்டால், வரேன்னு சொல்லும், இல்லாட்டி அம்மாவோட வரேன்னு சொல்லும், இப்போ நீ வானு எங்களைக் கூப்பிடத் தெரிஞ்சிருக்கு. இன்னும் கொஞ்ச நாட்கள்/மாதங்கள் போனால் "ர"வும் வந்துடும், "ட"வும் வந்துடுமே! டோலாவை, டோரானும், மீன் து வை மீன் டுனும் சொல்ல ஆரம்பிச்சுடும் இல்லையா??? :(

18 comments:

 1. திவ்யா எதாவது தப்பு பண்ணா உடனே சாரி கேட்ருவா.. அவளுக்கு எதுவா இருந்தால் ரசம் மம்முதான் . அப்புறம் மறுபடியும் கேட்டா தோசி மம்மம் அப்படின்னு சொல்லுவா

  ReplyDelete
 2. அருமை

  குழல் இனிது யாழ் இனிது என்பர் (அல்கா)
  சொல் கேளாதோர்

  we made this banner in city centre.


  குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள்
  மழலை சொல் கேளாதோர்

  ReplyDelete
 3. அச்சோ, அப்புவின் பேச்சு, அழகோ அழகு! டோலாவும் மீன் துவும் செம்ம க்யூட். ஆமா எல்லாம் போயிடும். இங்கே வருணுக்கு ஷ வராது. ஸவர், வெஸனம், ஸேம்பூ இப்படித்தான் சொல்லும்! இந்தப்பேச்சைத்தான் வீடியோ எடுத்து வெச்சுக்கணும். ரொம்ப சீக்கிரமே தெளிவா பேச ஆரம்பிச்சுடுவாங்க!

  ReplyDelete
 4. ம‌ழ‌லை மொழியிலேயே ப‌திவும் வ‌ந்திருக்கு...அழ‌காக‌ இருக்கு.

  ReplyDelete
 5. இன்னும் கொஞ்ச நாட்கள்/மாதங்கள் போனால் "ர"வும் வந்துடும், "ட"வும் வந்துடுமே! டோலாவை, டோரானும், மீன் து வை மீன் டுனும் சொல்ல ஆரம்பிச்சுடும் இல்லையா??? :(//

  ஆமாம் அப்புறம் இந்த சார்ம் போயிடும். :-|

  ReplyDelete
 6. வாங்க எல்கே, திவ்யா பேசறதை முடிஞ்சப்போ ரிகார்டு பண்ணி வைங்க, வளர்ந்ததும் போட்டுக் கேட்கச் சொல்லலாம், இனிமையான அநுபவங்கள்! வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. வாங்க ராம்ஜி, எந்த ஊரிலே பானர்?? படம் போட்டிருக்கலாமோ? நன்றிப்பா.

  ReplyDelete
 8. வாங்க அநன்யா அக்கா, பொழுது நல்லாப் போகுதுனு நம்பறேன் வருண், அருணோட, நல்லா எஞ்சாய் பண்ணுங்க. திகட்டாத சுகம் இது!

  ReplyDelete
 9. வாங்க வடுவூர், ஹிஹிஹி, நானும் குழந்தைதானே? அதான் மழலை! :)))))))))))))))

  ReplyDelete
 10. வாங்க திவா, ஆமாம், நீங்க சொல்றது சரிதான், அப்புறம் அந்த சார்ம் போயிடும்தான். என்ன செய்ய முடியும்??? :(

  ReplyDelete
 11. தலைவி எங்க வீட்டு குட்டிஸ் ஞாபகம் வந்துடுச்சி...;)))


  ஆமா பதிவு முழுக்க குழந்தையை எதுக்கு அது இது அதுன்னு சொல்லியிருக்கிங்க...!கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 12. இது என்னம்மா பெரிய விஷயம்.எங்க மக்கள் திலகம் எழுபது வயதிலும் மழலை தான் பேசினார்.அந்த ரெகார்டை யாரால் முறியடிக்க முடியும்?

  ReplyDelete
 13. எனக்குப் பிடிச்ச சப்ஜெக்ட் ஆச்சே, அதான் வந்துட்டேன்.

  மழலைகள் சூழ அந்த இன்பத்தை சுவைக்க காதுகள் ரெண்டு போதாது.
  நல்ல மூழ்கியிருக்கீங்க, சந்தோசமாயிருக்கு.

  என் மூன்றரை வயதுப் பேரனின் மழலைகள் மாறிக்கொண்டே வருவது பற்றி ஆத்தாத்துப் போயிருக்கிறேன்.

  ReplyDelete
 14. வாங்க பாலா, சிவாஜி ரசிகரா நீங்க?? எனக்கு ரெண்டு திலகங்களையும் பிடிக்காதே? :))))))))))))

  ReplyDelete
 15. வாங்க நானானி, நீங்கல்லாம் வரதுக்காகத் தான் அப்போப்போ இப்படி ஒரு பதிவு போட்டுடறேன் போல! :)))))))) வரவுக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 16. அப்பு"ஐ ப்ராமிஸ்"னு சொல்றதுக்கு, "ஐ தாமஸ்"னு சொல்லும், இப்போ அது சொல்லறதில்லையாம், ரொம்ப வருத்தமா இருந்தது! :(((((

  ReplyDelete
 17. எங்கள் சின்னவன் "பாத்தி பேத்துல உம்மாச்சி தோலம் பேத்திட்டேன்" என்பான் .என் மாமியார் அலறி அடிச்சுண்டு ஓடுவார், தடியா எப்படி டா எடுத்த நேத்திக்கு தான் வாங்கிண்டு வந்த புது பேஸ்ட்-பேஸ்ட் அங்க ரூம் முழுக்க இருக்கும்!!!!!ஜிலேபியா கோலம் போட்டானாம்:(
  நான் என் மாமியாரை பிடிக்க ஓடணும் .வழுக்கி விழுந்துட்டா!அவனுக்கு அது சந்தோஷமா சிரிப்பா இருக்கும்:)))பெரியவனோ ஒரு முனிவர் ரகம்!! ஹெல்மெட் மாட்டிண்டு சேர் மேல ஏறி முதல்ல அடிக்கற ஃபோனை எடுத்துடுவான். ஒண்ணுமே பேசாம எங்கேந்து சத்தம் வருதுன்னு பாத்துண்டு !அடுத்த பக்கத்துல இருக்கறவாளுக்கு அழறமாதிரி போதுண்டா சாமினு ஆகிடும். மெய்னா நம்ப ரங்கத்துக்கு!!:((.கேட்டா தலையை மட்டும் சமாதானமா ஆட்டிட்டு ஃபோனை வச்சிட்டு நிதானமா "ஃபோனித்து நான் வெசம் பன்ல நீ தாச்சி"" அப்பிடிம்பான். ஃபோட்டொஸ் அவா குழந்தைகளுக்கு காண்பிக்கணும் இல்லையா வெச்சிருக்கேன்!:(((

  ReplyDelete
 18. சூப்பர் போஸ்ட் மாமி... மழலை எப்பவும் அழகு தான்....

  ReplyDelete