எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 05, 2010

எதிர்க் கட்சியினர் சதி! அபி அப்பா கூட்டு?????

ஏன்னா நான் ரொம்ப ஸ்ரிக்டு ஸ்ரிக்டு ஸ்ரிக்டு...//


அபி அப்பா, என்னத்தை இன்கம்டாக்ஸ் ஆபீச்ச்ச்ச்சர் நீங்க?? ஸ்டிரிக்ட் ஸ்பெல்லிங்கே தப்பு. ஆரம்பமே இப்படியா???

கீதாம்மா என குமரனால் குட்டிகரணம் மன்னிக்கவும் //

அப்புறமாக் குமரன் வச்ச பேரு இன்னிக்கு ஊர், உலகத்திலே எல்லாம் பிரபலமாய் இருப்பதைப் பொறுக்க முடியாத உங்கள் இந்த அதிரடி ரெய்டுக்குக் காரணம் எதிர்க்கட்சியினரின் சதி, சதி, திட்டமிட்ட சதி என்பதை நான் அறிவேன்!

உங்கள் பெயரில் இருப்பது மொத்தம் மூன்று கம்பனிகள்.//

ஹிஹிஹி, சொந்தக் கம்பனி மூணுதானா?? ஹையா, ஜாலி, ஜாலி, ஜாலி, இன்னும் இரண்டு கூடத் திறந்திருக்கலாம் போலிருக்கே! ஜாலிலோ ஜிம்கானா!

//தவிர நீங்கள் பங்குதாரராக இருக்கும் கம்பனிகள் மொத்தம் மூன்று. அவை

1. ஆசார்ய ஹ்ருதயம்
2.மதுரை மாநகரம்
தவிர ஒரு வெள்ளைகார கம்பனி அதன் பெயர் Blog Union//

பங்குதாரரா இருக்கிறது அம்புடுதேன். அதிலே ஆசார்ய ஹ்ருதயத்தை இழுத்து மூடியாச்சே? தெரியாது?? அங்கேருந்து வந்துட்டு இருந்த வரவு அம்பேல், அம்பேல், அம்பேல்!

ஹிஹிஹி ப்ளாக் யூனியன் வெள்ளைக்காரக் கம்பனியா?? அடிச்சது அதிர்ஷ்டம்!

நீங்கள் பினாமி பெயரில் எத்தனை கம்பனி நடத்தி வருகின்றீர்கள் என்பதை தோண்டி கொண்டு இருக்கின்றோம்.//ஹிஹிஹிஹிஹிஹி, நல்லாத் தோண்டுங்க, தோண்டுங்க, என்ன கிடைக்குது பார்த்துடலாம்.

ஆக மொத்தம் 979 கோடிகள்//

படிக்கிறச்சேயே ஜாலியாத் தான் இருக்கு, நிஜமாவே 979 கோடிகள் மட்டும் இருந்துடுச்சுன்னா?? ஆஹா, எங்கேயோ போயிடுவேனே! :P

உங்கள் மூன்றாவது கம்பனியின் பெயர் "பக்தி"//

அது சரி, ம்ம்ம்ம்ம் இந்தக் கடைசிப் பக்கத்தை மட்டும் எப்படிக் கண்டு பிடிச்சீங்க? அதான் புரியலை, இப்படியாத் தோண்டிப் பார்க்கிறது? அதுவும் எனக்குத் தெரியாமல்?? நான் தி.வா. எவ்வளவு கேட்டும் சொல்லாமல் ரகசியமா வச்சிருந்தேனே, போச்சு, போச்சு, எல்லாம் போச்சு! அபி அப்பா, இதுக்காகவே உங்களைக் கட்சியை விட்டு ஏன் தூக்கக் கூடாது??


ஆனால் தாங்கள் 276 கோடிகளை கணக்கில் காட்டாமல்//

சேர்த்துட்டோமுல்ல?? அதானே ஆயிரத்துக்கு மேல்னு சொன்னதே! நல்லவேளையா மத்தது உங்க கண்ணிலே படலையோ பிழைச்சேனோ!

தண்டனையை வாசகர்கள் அறிவிக்கவும்........... (ஜோடா ப்ளீஸ்)//

இருந்தாலும் இதுக்காகவே உங்களை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே ஏன் நீக்கக் கூடாது? அதற்குத் தகுந்த முகாந்திரம் சொல்லுங்க! அபி அப்பாவைக் கட்சியை விட்டு உடனடியா ஏன் நீக்கக் கூடாது????

20 comments:

 1. பின்னூட்டமாய்த் தான் கொடுத்தேன், அது என்னமோ தெரியலை, நேத்திக்கு அபி அப்பா கிட்டே சொன்னாப்பல ப்ளாகர் என்னையும் ஒரே திட்டு, ரொம்பப் பெரிசா இருக்குனு, அதான் பதிவாக்கிட்டேன்! ஹிஹிஹி, எஞ்சாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!

  ReplyDelete
 2. உங்கள் மூன்றாவது கம்பனியின் பெயர் "பக்தி"//


  ithu enakuth theriyaathee

  ReplyDelete
 3. ஆகா! சூப்பர். இருங்க கீதாம்மா.ஊருக்கு போய்கிட்டு இருக்கேன். வந்துடுறென்.என்னால ஒரு பதிவு (ஒரு கோடி) கிடைச்சுடுச்சு. வாழ்த்துக்கள்:-)))

  ReplyDelete
 4. வாங்க எல்கே, ரகசியமாத் தான் வச்சிருந்தேன்,எல்லாம் இந்த அபி அப்பா, தோண்டித் துருவி இருக்கார், நான் இல்லாதப்போ! என்ன பண்ணித் தொலைக்கிறது?? :P:P:P:P

  ReplyDelete
 5. அபி அப்பா, உங்களைக் கட்சியிலே இருந்து நீக்கப் போறேன்னதும் ஊருக்குப் போய் ஒளிஞ்சுக்கறீங்க??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 6. வாங்க ராம்ஜி யாஹூ, எது நல்லா இருக்கு? அபி அப்பாவின் அதிரடி ரெய்டா? அப்போ நீங்களும் ப்ரூட்டஸா?? கடவுளே, கடவுளே! :P

  ReplyDelete
 7. என்ன லிங்க்????

  ReplyDelete
 8. இன்வேச்டிகேஷனை பூர்த்தி பண்ணாமல் ஓடும அபி அப்பாவின் நடத்தையை ஆட்சேபிக்கிறேன்.

  எல்கே http://httpbakthiblogspotcom.blogspot.com/
  கூகுள்ள்ளே தேடி இந்த http ன்னு முன்னொட்டு பார்த்ததுமே இதன்ன்னு தெரிஞ்சு போச்சு!

  ReplyDelete
 9. க்ர்ர்ர்ர்ர்ர் தி.வா. வன்மையாகக் கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 10. அபி அப்பாவை இன்னுமா கட்சியில வச்சிருக்கிங்க!!!!!???

  ReplyDelete
 11. \\Blogger கோபிநாத் said...

  அபி அப்பாவை இன்னுமா கட்சியில வச்சிருக்கிங்க!!!!!???\\

  என்னது கணக்கு கேட்டா கட்சியிலே இருந்து நீக்குவீங்களா? கோபி கொஞ்சம் இஸ்ட்டிரிய திரும்பி பார். பின்ன தலைவிக்கு தலைவலி தான். பின்ன நான் முதலமைச்சர் ஆகிடுவேன். என்ன சொல்ற? உடனே தலைவிய பொதுகுழுவை கூட்ட சொல்லு. இல்லாடி இன்னிக்கு இந்தியா முழுக்க பந்த் பண்ணுவேன். நான் சொன்னதை செய்வேன். வேண்டுமானா நாளை இந்தியாவிலே இருந்து வரும் எல்லா பேப்பரையும் படிச்சு பாரு. என் பவர் தெரியும்:-)

  ReplyDelete
 12. \\Blogger கீதா சாம்பசிவம் said...

  அபி அப்பா, உங்களைக் கட்சியிலே இருந்து நீக்கப் போறேன்னதும் ஊருக்குப் போய் ஒளிஞ்சுக்கறீங்க??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\\

  தலைவி! நீங்க கர்ர்ர்ர்ன்னு குறட்டை விட்டு தூங்கும் நேரத்தில் நான் போய் பாரத் பந்த் நடத்திட்டு வந்துட்டேன். உடனே பொதுக்குழுவை கூட்டவும். புது அமைச்சர்கள் பலபேரை சேர்க்க வேண்டி இருக்கு. தம்பி எல்க்கே, தக்குடு,மகளிர் அணி தலைவலி அனன்யா,அடப்பாவிதங்கமணி எல்லாரும் அமைச்சர் பதவி கேட்டு அடம் பிடிக்கிராங்க. எனவே பழைய சீனியர் கோபியை எல்லாம் மேலவை மெம்பர் ஆக்கிட்டு புதுமுகத்துக்கு போஸ்டிங் போடுமாறு கையில் கத்தியுடன் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறேன்.:-)

  ReplyDelete
 13. @கோபி, அதானே??? அபி அப்பா கட்சியிலே இப்போ இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். :)))))))))

  அவர் யாரையானும் கட்சியிலே சேர்த்தால் அதுக்கு அவரே பருப்பு சீச்சீ, பொறுப்பு என்றும் சொல்லிக்கிறேன். :P

  ReplyDelete
 14. ஹாஹா, அபி அப்பா, என்ன நினைச்சீங்க கோபியை?? இப்போ அவர் தான் எனக்கு உளவுப்படைத் தலைமை வகிக்கிறாராக்கும். அதான் உங்க கட்சி விரோதச் செயல்களைக் கண்டு பிடிச்சேனாக்கும்!. ஹிஹிஹிஹி


  இல்லாடி இன்னிக்கு இந்தியா முழுக்க பந்த் பண்ணுவேன். நான் சொன்னதை செய்வேன். //

  ஆஹா, பத்தாயிரம் கோடிக்கு இழப்பு ஏற்படுத்திய ஆள் நீங்க தானா?? இதோ வருகிறது, சிபிஐ ரெய்டு! கணக்கா கேட்கிறீங்க கணக்கு?? நீங்க மரியாதையாக் கட்சியிலே இணைஞ்சுட்டா ரெய்டு நடத்தினாலும் கண்டுக்கமாட்டோம். இல்லாட்டி கண்டுப்போம் என்று பெருமையுடன் சொல்லிக்கிறேன்.

  ReplyDelete
 15. தம்பி எல்க்கே, தக்குடு,மகளிர் அணி தலைவலி அனன்யா,அடப்பாவிதங்கமணி எல்லாரும் அமைச்சர் பதவி கேட்டு அடம் பிடிக்கிராங்க. //

  எல்கே கன்சிடர் பண்ணலாம், ஆதரவை வெளிப்படையாத் தெரிவிச்சிட்டு இருக்கார். ஆகவே அவருக்கு முக்கியமான போஷ்டு!

  தாக்குடு?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அவன் கிட்டே இருந்த கு.ப.த. பதவியைத் தானே பறிச்சி அநன்யா அக்காவோட ரங்க்ஸுக்குக் கொடுத்தது?? தாக்குடு வேண்டாம்! அவன் இங்கே உளவு பார்க்கிறதுக்காகச் சேர்ந்திருக்கான்! :P:P:P:P

  அநன்யா அக்கா மகளிர் அணித் தலைவி?? ஓகே,. ஓகே, நோ ப்ராப்ளம், உ.பி.ச.னா கொஞ்சம் யோசிக்கணும், ஏன்னா பழைய உ.பி.ச. எப்போ வேணாலும் வருவேன்னு சொல்லிட்டு இருக்காங்க. அவங்களுக்குத் தானே முன்னுரிமை கொடுக்கணும்! :)))))

  அடப்பாவி தங்கமணி?? ஏடிஎம் இட்லினு மட்டும் வாயைத் திறந்து சொல்லக் கூடாது. அப்புறம் யாரு இட்லியைக் குடிக்கறது? இந்த கண்டிஷனுக்கு ஒத்துண்டால் ஓகே. :P:P:P:P

  ReplyDelete
 16. அய்யோ என் கமெண்ட் காணும். ஆனா அதுக்கு பதில் மட்டும் வந்துகிட்டு இருக்கு. மக்களே தலைவியின் சூழ்ச்சி இப்ப புரியுதா?

  ReplyDelete
 17. அபி அப்பா, உங்க கமெண்டைப் போட்டுட்டேன், இது ப்ளாகரோட சதி, கமெண்ட்ஸ் பக்கத்தை முழுசுமாத் திறந்து பாருங்க full page option ல தான் இருக்கு. அதிலே தெரியும், பதிவுக்குக் கீழே வர மாட்டேங்குது.

  ஹிஹிஹி, இப்போ வந்த கமெண்டையும் பப்ளிஷ் பண்ணினால் ப்ளாகர் போகச்சொல்லு அவரை னு துரத்துது! ஹிஹிஹிஹி, அது சமாதானம் ஆனதுக்கப்புறமாப் போடறேன். நல்லா இருக்கு ப்ளாகர் கூட என் கட்சிதானே, ஜாலி, ஜாலி, ஜாலியோ ஜாலி! :))))))))))))))

  ReplyDelete
 18. //அபி அப்பா has left a new comment on your post "எதிர்க் கட்சியினர் சதி! அபி அப்பா கூட்டு?????":

  அய்யோ என் கமெண்ட் காணும். ஆனா அதுக்கு பதில் மட்டும் வந்துகிட்டு இருக்கு. மக்களே தலைவியின் சூழ்ச்சி இப்ப புரியுதா?//

  அபி அப்பாவோட இந்த கமெண்டை பப்ளிஷ் பண்ணினா விசுவாசம் ஜாஸ்தியாப் போன ப்ளாகர் ஒத்துக்கவே இல்லை. எரர் காட்டுது. சரி, போனால் போகட்டும்னு தாயுள்ளத்தோடு பெருந்தன்மையோடு மன்னிச்சு, காபி, பேஸ்ட் பண்ணி இருக்கேன்.

  அபி அப்பா, பார்த்துக்குங்க, நாங்க யார்னு நினைச்சீங்க? நேர்மையின் சிகரமாக்கும்! :)))))))

  ReplyDelete