எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 14, 2012

அப்பாவி! எங்கிருந்தாலும் ஓடி வருக!


Posted by Picasa 


ஸ்ரீராமர் புண்ணியத்திலே நேத்திக்கு ராத்திரி சாப்பிட்ட ரசம் சாதம், அரிசி அப்பளம் நெய்யில்லாமல், எண்ணெயில்லாமல் மைக்ரோவேவ் புண்ணியத்தோடு  சாப்பிட்டது நான்கு நாட்களுக்குப் பின்னர் தேவாமிருதமாக இருந்தது என்றால் இன்னிக்குக் காலையிலே செய்த இட்லியும் அப்படியே.  திரும்பச் சாப்பிட முடியுமா? சாப்பிட்டால் ஜீரணம் ஆகுமானு பயந்துட்டு இருந்தேன். :D இன்னிக்கு இட்லி பற்றிக் குறிப்பிட அப்பாவி தான் காரணம்.  சாப்பிடறச்சேயே இட்லியைக் கஷ்டப்பட்டுக் குடிக்கும் அப்பாவி கோவிந்த் தான் நினைவில் வந்தார்.   இட்லியை ஃபோட்டோ கூட எடுத்திருக்கணும்.  அப்போத் தோணவே இல்லை.  இது ஒரு திடீர் போஸ்ட்! :D

இட்லி செய்முறை ஃபார் அப்பாவி: பச்சரிசி, (உங்க கனடாவில் கிடைக்கும் லாங் க்ரெயின் ரைஸ், இட்லி புழுங்கலரிசி, இரண்டும் ஒரு ஒரு கப் சமமாக எடுத்துக்கொண்டு கால் கப் உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்தே நனைத்துக் கொண்டு நன்கு கழுவிக் களைந்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.  எல்லாவற்றையும் சேர்த்தே மிக்சியில் அல்லது கிரைண்டரில் நன்றாக அரைக்கவும்.  புளிக்க வைக்கவும்.  பின்னர் இட்லியோ, தோசையோ ஜமாய்க்கவும்.

இது ஆப்பம் செய்வதற்கான ரெசிபி.  இம்மாதிரி நைஸாக அரைத்துக் கொண்டு மாவைப் புளிக்க வைத்துக் கொஞ்சம் மாவில், தேங்காய்ப் பால் ஊற்றிக் கரைத்துக்கொண்டு மதுரை ஸ்பெஷல் ஆப்பம் செய்வேன்.  இப்போவெல்லாம் இரும்புச் சட்டியைத் தூக்கிச் சுழற்றும் அளவுக்கு முடியறதில்லை.  சுழற்ற ஆட்களும் கிடைக்கிறதில்லை! :P அதனால் தோசைக்கல்லிலேயே ஊற்றித் தோசையாக வார்த்துவிடுவேன்.  நன்றாகவே இருக்கிறது.  ஒரு நாள் அந்த மாவு கொஞ்சம் மிஞ்சிப் போனதைச் சத்தமில்லாமல் இட்லியாக வார்த்துப் பார்க்க, அதன் சுவையைப் பார்த்துவிட்டு இப்போ சத்தம் போட்டுக்கொண்டே இப்படித் தான் செய்யறேன்.  இரண்டு பேருக்குனுக் கொஞ்சமா அரைக்கவும் வசதி! சாப்பிடறவங்களைக் கடவுள் காப்பாத்துவார்னு சிம்பாலிக்காக் காட்டத்தான் ராமர் படம்! :)))))))))

23 comments:

  1. கீதா நம்ம பக்கம் வரலியே இதே இட்லியை கொஞ்சம் மேக் அப்பெல்லாம் செய்து உப்மாவா போட்டிருக்கேனே?

    ReplyDelete
  2. நிச்சயம் ராமர் காப்பாத்துவார்.

    ReplyDelete
  3. சுருக்கு வழி ரெசிப்பிகளா....அப்பாவிக்கு மட்டும்தானா.... நாங்களும் சத்தமில்லாமல் படித்து விட்டு ட்ரை பண்ணப் போறோம்! குறிப்பாக ஆப்பிட்லி!

    ReplyDelete
  4. வாங்க லக்ஷ்மி, நிச்சயமா வரேன். உடம்பு இன்னும் சரியாகலை; அதோடு நேரப் பற்றாக் குறைதான். ஒண்ணு, ரெண்டு பேரோட பதிவுகளை ரீடரில் படிக்கிறதோடு சரி. இன்னும் சரியா ஆரம்பிக்கலை. மன்னிச்சுக்குங்க. விரைவில் வரேன்.

    ReplyDelete
  5. வாங்க விச்சு, நல்லாவே இருக்காக்கும்! :))))))

    ReplyDelete
  6. வாங்க ஸ்ரீராம், ஆப்பமாவும் சாப்பிட்டுப் பாருங்க. ரொம்ப டேஸ்டி. ஆப்பத்துக்கு மட்டும் தேங்காய்ப் பால் சேர்க்கவும். ஒரு சிலர் தேங்காயைப் போட்டு அரைக்கிறாங்க. அது டேஸ்ட் தனி. தேங்காய்ப் பால் சேர்த்தால் அந்த டேஸ்ட் தனி! ரெண்டு முறையிலேயும் சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க! :)))))))

    ReplyDelete
  7. Jail jaali uncle Ben parboiled nu podallai.antha arisi potta kadavulae!, sari athu eppadi irukkumnu solvaanaen. Pattavaalukku theriyumayirukkum:(

    ReplyDelete
  8. சத்தமில்லாமல் இட்லியாக வார்த்துப் பார்க்க, அதன் சுவையைப் பார்த்துவிட்டு இப்போ சத்தம் போட்டுக்கொண்டே இப்படித் தான் செய்யறேன்.

    டேஸ்ட்டி பதிவுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  9. வாங்க ஜெயஶ்ரீ, பார் பாயில்ட் அரிசி வாங்கவே கூடாது. மாட்டுப்பொண்ணு வாங்கிட்டு அதிலே இட்லிக்கு அரைச்சுட்டு அப்புறமா முழிச்சேன்னா! :))))))

    ReplyDelete
  10. வாங்க ராஜராஜேஸ்வரி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  11. ஜெய் ஸ்ரீ ராம்!

    ReplyDelete
  12. நன்றி நன்றி நன்றி... இட்லி, தோசை, ஆப்பம், ஆப்லி எல்லாத்துக்கும் நன்றி. ஆனா, இனி அடுத்த மாசத்துல இருந்து இட்லி பிரச்சனை இருக்காதுனு எங்கூர் ஜோசியர் சொல்லி இருக்கார்... ஏன்னா... (தொடரும்)

    ஹி ஹி... கொஞ்சம் சஸ்பென்ஸ் இருக்கட்டுமே... நாளைக்கி ஈமெயில் பண்றேன் மாமி...:)))

    ReplyDelete
  13. By the way, is tea kadai available in srirangam maami? summa therinjukkalame'nu thaan...:)))

    ReplyDelete
  14. இட்லியாலயே அடிங்க அப்பாவி.

    ReplyDelete
  15. மிகச் சுலபமா இட்லி செய்ய சொல்லிக்கொடுத்துட்டீங்க மாமி.
    நானும் இதே அளவுதான் போடுவேன்.உளுந்து மட்டும் கொஞ்சம் ஜாஸ்தியாக போடுவேன்.

    ReplyDelete
  16. அப்பாடி சதம் உள்ள போச்சா. நல்லது. ஒரு ஸ்பூன் வெந்தியம் போறுமா;)
    நான் உளுந்தே இல்லாமல் மெந்திய இட்லியே சாப்பிட்டுக்கறேன்.ஜாக்கிரதையா இருங்கோ. டாக்டரைப் பார்த்தாச்சா.

    ReplyDelete
  17. வாங்க வா.தி. என்ன ராமரைக் கூப்பிட்டுட்டுச் சும்மாப் போயிட்டீங்க? இட்லினா அம்புட்டு பயம்? :P

    ReplyDelete
  18. ஏடிஎம், இனிமே என்ன கலக்குங்க! தினம் தினம் இட்லி கல்யாண வைபோகம் தான்! :)))))

    ReplyDelete
  19. அப்பாதுரை, அதான் செய்யப் போறாங்க. :D

    ReplyDelete
  20. ராம்வி, அரிசியையும், உளுந்தையும் தனித்தனியா நனைச்சு அரைச்சால் நீங்க சொல்லும் காம்பினேஷன் சரியா இருக்கும். இதிலேஎல்லாத்தையும் ஒண்ணா நனைச்சு ஊற வைச்சு ஒண்ணாவே அரைக்கிறேன். கைப்பிடி உளுந்தே போதும். :)))) பலமுறை அரைச்சுப் பார்த்துட்டேன்.

    ReplyDelete
  21. வாங்க வல்லி, சாதம் உள்ளே போனதும் தான் சொர்க்கம் எங்கேனு புரிஞ்சது! :))))

    வெந்தய இட்லிக்கு உளுந்தே போடவேண்டாமே! வெந்தயத்தையே ஊற வைச்சு உளுந்து மாதிரி அரைக்கலாம். அப்புறமா அதிலேயே அரிசியைப் போட்டு அரைக்கலாம். அது வேறே. இது வேறே. இது பார்க்கப் போனால் ஆப்பம் ரெசிபி. ஆப்பத்துக்கு அரைச்ச மாவிலே இட்லியும் நல்லாவே வருது. மல்லிகைப் பூ இட்லின்னா அதான். தொடுத்துத் தலையில் வைச்சுக்கலாம். :)))))))

    ReplyDelete
  22. அரிசியே சேர்க்காமல் வெறும் பாசிப்பருப்பும், வெந்தயமும் மட்டும் ஊற வைத்து அரைத்தும் இட்லி தயாரிக்கலாம் வல்லி. ஏற்கெனவே உங்களுக்குச் சொன்ன நினைவு. இட்லி நிறம் கொஞ்சம் மஞ்சளாய் இருக்கும். மற்றபடி சுவை பாசிப்பருப்பு இட்லினு சொன்னால் தான் தெரியும். ஆனால் நம்ம ரங்க்ஸுக்குத் தான் அது பிடிக்கலை! :))))) ட்ரெடிஷனல் இட்லிதான் வேணும்பார். அதோடு நான் இட்லியை வார்க்கிறதும் துணி போட்டு. அதனாலும் நல்லா வரும்.

    ReplyDelete