எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 26, 2013

உபயகுசலோபரி!

ஹிஹிஹி, அந்தக் காலத்து ஆனந்தவிகடனிலே ஆசிரியர் வாசகர்களுக்குக் கடிதம் எழுதறப்போ உபயகுசலோபரினு போட்டு இரண்டு பக்கத்துக்கு போல்ட் அச்சில் வரும். உபயகுசலோபரின்னா, நானும், செளக்கியம், நீயும் செளக்கியம்தானேனு அர்த்தம்னு நினைக்கிறேன்.  அப்படித்தான் பெரியவங்க சொல்லிக் கேட்டிருக்கேன்.  இன்னிக்கு இதைப் பத்தி மின் தமிழிலே ஒரு இழை ஓடிட்டு இருக்கிறதைத் தற்செயலாப் பார்த்தேன்.  ஹாஹா, தற்செயலாத்தான்.   இன்னும் கணினியில் முழுசா செட்டில் ஆகலை.  அதுக்குள்ளே நம்ம ரசிகப் பெருமக்கள் எங்கேயானும் தீக்குளிச்சு, அலகு குத்திண்டு, நெருப்புக்காவடி, பாம்புக்காவடினு எடுக்கப் போறாங்களேனு அவசரம் அவசரமா காலம்பர வந்து பார்த்தேன்.  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு ஈ /காக்காய் என்னனு கேட்கலை!  என்னத்தைச் சொல்றது!  அதுங்களுக்கெல்லாம் வலைப்பதிவு எப்படிப் படிக்க வரும்? சரியான மு.மு. நான்னு மனசைத் தேத்திண்டு, நம்ம தொண்டர் கூட்டம்/ரசிகப்பெருமக்கள்,  சரி, சரி, அவங்களுக்கு நாம ரொம்ப பிசினு தெரிஞ்சு தான் தொந்திரவு பண்ணலை;  தொந்திரவு பண்ணினா தலைமைக்குப் பிடிக்காதுனு புரிஞ்சு வைச்சிருக்காங்கனு மனசைத் தேத்திண்டேன்.  :)))))))))


ஒரு வாரமா நெருங்கிய உறவினர் வருகை, அவங்களோட ஊர் சுற்றல், சுத்தி முடிச்சு வீட்டுக்கு வரச்சே நோ மின்சாரம். அதிகப்படியான ஊர் சுற்றலினால் உடம்புப் படுத்தல், அப்படியும் விடாமல் நேற்று மாலை வரை சுத்தி முடிச்சுட்டு இன்னிக்குத் தான் வீட்டிலே உட்கார்ந்து கொண்டோம். இப்படிப் போயிடுச்சு ஒரு வாரத்துக்கும் மேலே.  கொஞ்ச நாட்களாக மத்தியானமெல்லாம் இப்போ நோ மின்சாரம்.  ஆகவே கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோனு அன்பா ரங்க்ஸ் உபசரிக்க சரினு படுத்தா! ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்........ தொலைபேசி அழைப்பு.  எழுந்து வந்து எடுக்கறதுக்குள்ளே கட்.....மறுபடியும் படுக்கை. இப்போ செல்பேசி அழைப்பு, டின்டுடின்டு டின்டுங்க் அப்படினு கூப்பிட எடுக்கறதுக்குள்ளே அதுவும் நின்னு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.  அப்பாடானு ஒரு வழியா மூணாம் முறை படுக்கையிலே செட்டில் ஆகறதுக்குள்ளே, அம்மா, அம்மா, னு அழைப்பு.  போறததுக்கு அழைப்பு மணி வேறே "ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம்!" னு கூப்பிட எழுந்து பார்த்தால்   குடியிருப்பு வளாகத்தின் பொதுவிடங்களைச் சுத்தம் செய்யும் வேலைக்காரப் பெண்மணி, கையெழுத்து வாங்க வந்திருக்காங்க.  மனசுக்குள் திட்டிட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்து நாலாம் முறையாப் படுத்தால்,  கீழே இருந்து டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் னு ஜெனரேட்டர் ஓட ஆரம்பிக்க, வாழ்க்கையே வெறுத்தது.  காய்ந்த துணியை மடிக்கலாம்னு பார்த்தால், ஹிஹி, துணி உலர்த்தவே மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!

நல்லவேளையாப் போச்சு போனு ஒரேயடியா எழுந்துட்டேன்.  வாஷிங் மெஷினிலே இருந்து துணிகளை எடுத்து உலர்த்திட்டு வந்தால் மின்சாரம் வந்துட்டேனு சொல்லவே இப்போ, இந்த நிமிஷம் இதிலே உட்கார்ந்திருக்கேன். எத்தனை நேரம் இருக்கும்னு சொல்ல முடியலை.  இப்போல்லாம் எப்போ வேணாப் போகுது;  எப்போ வேணா வருது! ஒண்ணும் சொல்றதுக்கில்லை.

திங்களன்று கருட சேவை பார்த்தப்புறம் உறவினர்களோட நம்ம பெரிய பெருமாளைப் பார்க்கப் போனால் என்ன ஆச்சரியம்!  கூட்டமே இல்லை.  ஆனாலும் 50 ரூ சீட்டு வாங்கிட்டுத் தான் போனோம்.  உள்ளே போனால் ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா படுத்துட்டு இருக்கார் பெரிய பெருமாள்.  அதிசயமா அன்னிக்கு பட்டாசாரியார்களெல்லாம் போ, போனு விரட்டவே இல்லை.  போறததுக்குத் துளசிப் பிரசாதம் வேறே கிடைச்சதா! மயக்கமே வந்தது.  கடைசியிலே பார்த்தால் நம்ம நம்பெருமாள் இல்லை, நம்பெருமாள் அவர் ஊர் சுத்தப் போனதாலே மக்கள் கூட்டமும் அவரோடு சுத்திட்டு இருக்காம்.  ஆமாம், இல்லையா, பின்னே!  ஏற்கெனவே  அந்நியப் படையெடுப்பிலே மறைஞ்சு வாழ வேண்டி ஊர் ஊராச்சுத்தினவராச்சே.  மறுபடி எங்கேயானும் கிளம்பிடப் போறார்னு எல்லாரும் கூடவே போறாங்க போல! அப்படிச் சுத்தியும் பாருங்க, மழை பெய்ஞ்சால் அவ்வளவு தான்.  குடை எடுத்துட்டு பக்தர்கள் ஓடோடியும் வரதுக்குள்ளே ஓட்டமா ஓடி உள்ளே போய் ஒளிஞ்சுப்பார்;  குடை மட்டும் தனியாகப் பின்னாலே ஓடும். சரினு காலங்கார்த்தாலே சூரிய உதயத்தின் போது வெளியே கொண்டு வரலாம்னா, சூரிய ஒளி துளி மேலே பட வேண்டியது தான்;  கண்ணைக் கூசுதுனு சொல்ல ஆரம்பிக்கிறார்.  உடனே சல்லாத்துணியாலேயோ பந்தல் போட்டோ அந்த ஒளியை மறைக்க வேண்டி இருக்கு.  இல்லைனா வெளியே கிளம்ப மாட்டேன்னு அடம்! :P :P :P :P  சரி, வெயிலும் வேண்டாம், மழையும் வேண்டாம், குளிர் காலம் சரியாயிருக்குமோனு பார்த்தால் மனுஷனுக்கு அப்போத் தான் கம்பளிப் போர்வை, கம்பளிக்குல்லாய் எல்லாம் போட வேண்டி இருக்கு.  இவரைப் பார்த்துட்டுப் பெரிய பெருமாளும் எல்லாம் கேட்க ஆரம்பிச்சாச்சு.  ரங்கநாயகித் தாயாரும் கேட்க ஆரம்பிச்சாச்சு.  அவ்வளவு ஏன்?  வாசல்லே காவல் காக்கிற ஜய , விஜயர்கள் கூடக் கேட்கிறாங்கன்னா பாருங்களேன்.

இதோடு மட்டுமா?  வைகுண்ட ஏகாதசி சமயத்திலே ஆழ்வார்களுக்கு அருளிச் செய்தாப்போல், மற்றப் பொது ஜனங்களுக்கும் அருள் பாலிக்கிறாராம்.  அதுக்காகப் பள்ளிகள் எல்லாம் இந்தத் தை மாசம் பூபதித்திருநாளப்போ அவரை அவங்க பள்ளிகளுக்குக் கூப்பிட்டுச் சாப்பாடு போட்டு அனுப்பறாங்க.  அவரும் எல்லாப் பள்ளிகளுக்கும் போயிட்டு மாணவ, மாணவிகளை எல்லாம் பார்த்துப் பேசி, விளையாடி, விளையாட்டுக் காட்டிட்டு, சாப்பாடும் சாப்பிட்டுட்டு வரார்.  இவரை என்னனு சொல்றது?  இத்தனையும் பண்ணும்போது முகத்திலே அந்தச் சிரிப்பு ஒண்ணு ஓடும் பாருங்க.  அதுக்காக இந்த உலகத்தையே கொடுக்கலாம்.  எல்லாம் தெரிஞ்சும், தெரியாதவர் மாதிரியான ஒரு அப்பாவி முகத்தை வைச்சுட்டு, குறும்புச்சிரிப்போடு உலாவரும் இவர் நம்பெருமாள் இல்லாமல் வேறே என்ன?  என்ன நாஞ்சொல்றது?

என்ன கேட்கறீங்க?  ஊர் சுற்றல் பத்தியா?  வரும், வரும், மெல்ல வரும். கொஞ்சம் உடம்பு சரியாகட்டும்.  செரியா?20 comments:

 1. /காய்ந்த துணியை மடிக்கலாம்னு பார்த்தால், ஹிஹி, துணி உலர்த்தவே மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!//
  சுத்தம்!

  ReplyDelete
 2. வாங்க வா.தி. செளக்கியமா? அது எப்படித் தெரிஞ்சுண்டீங்க? சுத்தமாத் தோய்ச்சிருக்கேன்னு! தம்பின்னா இப்படி இல்லை இருக்கணும். தாங்கீஸ், தாங்கீஸ்! :))))))

  ReplyDelete
 3. உடல்நிலையில் கவனம் வைத்துக் கொள்ளுங்கள். மெல்ல வாங்க.

  ReplyDelete
 4. எத்தனை அருமை அருமையாய் நம்பெருமாளை ரசித்து ரசித்து எழுதி இருக்கிறீர்கள், கீதா! உங்கள் எழுத்துக்களில் அவரது புன்முறுவல் அப்படியே கண்ணுக்குள் தெரிந்தது நிஜமோ நிஜம்!

  நல்லாஓய்வு எடுத்துகிட்டு பிறகு எழுதுங்கள் உங்கள் ஊர் சுற்றலை.
  காத்திருக்கிறோம்.

  உங்களை எப்படி 'follow' செய்வது?

  ReplyDelete
 5. இத்தனையும் பண்ணும்போது முகத்திலே அந்தச் சிரிப்பு ஒண்ணு ஓடும் பாருங்க. அதுக்காக இந்த உலகத்தையே கொடுக்கலாம். எல்லாம் தெரிஞ்சும், தெரியாதவர் மாதிரியான ஒரு அப்பாவி முகத்தை வைச்சுட்டு, குறும்புச்சிரிப்போடு உலாவரும் இவர் நம்பெருமாள் இல்லாமல் வேறே என்ன?

  நம்பெருமாள் முன்னால் அழைத்து நிறுத்தியதுபோல் பாந்தமாக இருக்கிறது ...பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோங்க! :)

  ஸ்ரீரங்கத்துல திருவிழாவுக்கென்ன குறைச்சல்... நமக்கு நேரமிருந்தா 365 நாளும் பெருமாள் நமக்காகவே காட்சி தர தயாரா இருக்கார். நேற்று முதினம் கூட தைத்தேர்.... நேற்று சமயபுரம் மாரியம்மன் கொள்ளிடத்திற்கு வந்து காட்சி கொடுத்தார்.... நல்ல நேரம் போகும்...

  ReplyDelete
 7. அதென்னங்க நெருப்புக்காவடி, பாம்புகாவடி கேள்விபட்டதே இல்லை.

  //தொந்திரவு பண்ணினா தலைமைக்குப் பிடிக்காதுனு புரிஞ்சு வைச்சிருக்காங்கனு மனசைத் தேத்திண்டேன். //
  ஹஹஹஹா!

  பதிவு ரொம்ப ரொம்ப சுவாரசியமா எழுதி இருக்கீங்க. ரசிச்சு படிச்சேன். ஊர்சுற்றல் பத்தியும் எழுதுங்க ஆனா மெதுவா. அதுக்கு முன்னாடி உடம்பை பாத்துக்கங்க.

  ReplyDelete
 8. //இத்தனையும் பண்ணும்போது முகத்திலே அந்தச் சிரிப்பு ஒண்ணு ஓடும் பாருங்க. அதுக்காக இந்த உலகத்தையே கொடுக்கலாம். எல்லாம் தெரிஞ்சும், தெரியாதவர் மாதிரியான ஒரு அப்பாவி முகத்தை வைச்சுட்டு, குறும்புச்சிரிப்போடு உலாவரும் இவர் நம்பெருமாள் இல்லாமல் வேறே என்ன? என்ன நாஞ்சொல்றது?// ஆஹா....

  அதிர்ஷ்டகாரர்,மாமி நீங்க டக் என்று நம்பெருமாளை பார்க்க முடிகிறது. நாங்க எல்லாம் எங்கேயோ இருக்கோம்.
  உடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்க ஓய்வு எடுத்துக்கோங்க.

  ReplyDelete
 9. வாங்க ஸ்ரீராம், இரண்டு நாட்களாகக் காலை, மாலை கூடத் தெரியாமல் ரெஸ்டோ ரெஸ்ட் தான்! எழுந்துக்கவே முடியலை.. இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லை. :))))

  ReplyDelete
 10. வாங்க ரஞ்சனி, பாராட்டுக்கு நன்றி.

  ரீடிங் லிஸ்டிலே "ஆட்" னு கொடுத்திருக்கும் பட்டனை க்ளிக் செய்து அங்கே என்னோட ப்ளாகின் யுஆரெல்லைக் கொடுக்கவும். sivamgss.blogspot.in உங்க வேர்ட் ப்ரஸில் அந்த ஃபாலோ அப் இருக்கானு எனக்குத் தெரியலை. அதனால் உங்களுக்கு வருமானும் புரியலை. :)))))

  ReplyDelete
 11. வாங்க ராஜராஜேஸ்வரி, பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 12. வாங்க வெங்கட், தேர் பார்க்கப் போகணும்னு நினைச்சுட்டு ரெண்டு பேரும் படுத்துட்டோம். அசைய முடியலை. :))))))

  ReplyDelete
 13. தீச்சட்டி கேள்விப்பட்டதில்லையா மீனாக்ஷி? :)))) நல்லபாம்பை உயிரோடு பிடிச்சுக் காவடியிலே எடுத்துட்டு வரது தான் சர்ப்பக் காவடி! :)))))))மற்றபடி உடம்பு கொஞ்சம் பரவாயில்லை.

  ReplyDelete
 14. வாங்க ராம்வி, டக்னு எல்லாம் பார்க்கலை.. அவரே தேடி வந்து தரிசனம் தரார். அதான் பார்க்க முடியுது. :)))))

  ReplyDelete
 15. நம்பெருமாள் உலாவரும் காட்சிகள் கண் முன்னே விரிந்து நிற்கின்றது.

  ReplyDelete
 16. 50 ரூ சீட்டு வாங்கிட்டுத் தான் போனோம். உள்ளே போனால் ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா படுத்துட்டு இருக்கார் பெரிய பெருமாள். அதிசயமா அன்னிக்கு பட்டாசாரியார்களெல்லாம் போ, போனு விரட்டவே இல்லை. போறததுக்குத் துளசிப் பிரசாதம் வேறே கிடைச்சதா! மயக்கமே வந்தது. //

  பெரியபெருமாளை பார்ப்பது அப்படி ஒரு அதிசயமாக போய் விட்டது.
  போ போ என்று விரட்டாமல் துளசி பிரசாதம் வேறு கிடைத்தால் இன்ப மயக்கம் ஏற்படத்தான் செய்யும்.
  தன்னைப் பற்றி எழுதும் பக்தைக்கு நல்லபடியாக காட்சிக் கொடுத்த பெருமாள் வாழியவே!

  ReplyDelete
 17. என்ன எல்லாரும் உடம்பு தேவலாமாங்கறா? ஜுரமா? நல்லபடி சரியாக வேண்டிக்கறேன்.உச்சியப்பன் பாத்து நாளாச்சு இந்ததடவை தாயுமானவ ஸ்வாமி, வெக்காளி அம்மன் பிள்ளையாரப்பன் எல்லாம் பாக்க முடியல்ல. உங்க பெரும் ஆள் பெரிய பிசுக்கு பண்ணிண்டதால அம்மா மண்டபம் விட்டு பரமபதம் வாயில் வரத்துக்குள்ள எல்லா கோவிலும் அடைச்சுடறா சனிக்கிழமைல.இனிமே திங்கள் செவ்வாயா பாத்து தான் வரணும் போல!

  ReplyDelete
 18. என்ன எல்லாரும் உடம்பு தேவலாமாங்கறா? ஜுரமா? நல்லபடி சரியாக வேண்டிக்கறேன்.உச்சியப்பன் பாத்து நாளாச்சு இந்ததடவை தாயுமானவ ஸ்வாமி, வெக்காளி அம்மன் பிள்ளையாரப்பன் எல்லாம் பாக்க முடியல்ல. உங்க பெரும் ஆள் பெரிய பிசுக்கு பண்ணிண்டதால அம்மா மண்டபம் விட்டு பரமபதம் வாயில் வரத்துக்குள்ள எல்லா கோவிலும் அடைச்சுடறா சனிக்கிழமைல.இனிமே திங்கள் செவ்வாயா பாத்து தான் வரணும் போல!

  ReplyDelete
 19. வாங்க ஜெயஸ்ரீ, ஸ்ரீரங்கம் வந்துட்டு இங்கே வராமல் போனதை மன்னிக்கவே போறதில்லை. :((( தினம் தினம் பெருமாளைப் பார்க்கக் கூட்டம் தான். செவ்வாய், புதன் மதியம் 3 மணிக்குக் கிளம்பிப் போனால் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருக்கும். உற்சவ காலங்களில் நம்பெருமாள் ஊர் சுத்திட்டு இருந்தாரானால் பெரிய பெருமாளை சுலபமாய்ப் பார்த்துடலாம்.

  ReplyDelete