எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 09, 2013

ராமனுக்கு ஏது மோதிரம்? சீதைக்கு ஏது சூடாமணி?

கவிநயா அக்கா அநுமன் பத்தின பதிவு ஒண்ணு எழுதி இருக்காங்க. அதிலே
 (http://kavinaya.blogspot.in/2013/01/blog-post_8.html)லிங்க் என்னமோ போகலை சரியா! :( அந்தப் பதிவின் பின்னூட்டத்திலே சூரி சார் கேட்ட கேள்விக்குப் பதில் இருக்குனு நினைச்சுத் தேடினப்போ சூடாமணி பத்திய ஒரு பதிவு கிடைச்சது.  அதை மீள் பதிவாப் பதிகிறேன். சூரி சாரின் கேள்வி இது:

ஒன்றிரண்டு கேள்விகள் வருகின்றன. 

ராமன் தன்னிடம் அடையாளச்சின்னமாக ஒரு கணையாழியை தந்திருப்பதாகச் சொல்லி அதை அசோக வனத்தில்
இருக்கும் சீதையிடம் தருகிறான் ஹனுமன். அந்தக் கணையாழியிலும் ராம என்ற எழுத்துக்கள் இருப்பதாக சீதை
பார்க்கிறாள். இந்த கணையாழி எப்படி ராமனிடம் வந்தது ? அவர்தான் எல்லாவற்றையும் துறந்து தானே காட்டுக்கு
கிளம்பினார் ? 

இது ஒரு ஐயமே. இன்னும் இது தீர்ந்த பாடில்லை. அது ஒரு புறமிருக்கட்டும்.சூடாமணியின் கதை!

வல்லி எழுதின சுந்தரகாண்டம் பத்திய பதிவிலே "சூடாமணி கொடுக்கும் படலம்" பற்றி எழுதிட்டு அவங்க அது என்ன ஆபரணம் தெரியலைன்னு சொல்லி இருந்தாங்க. மதுரையம்பதி சொன்னது ஓரளவு சரின்னாலும், அம்பி அதை நான் தான் சீதைக்கு வாங்கிக் கொடுத்தேன்னு குறிப்பிட்டிருந்தார். எனக்கு மறந்தே போச்சு! :D எப்போ வாங்கிக் கொடுத்தேன்? அவரும் அதைப் பார்த்திருக்காரேன்னு நினைச்சுக்கிட்டு, ராமாயணம் புத்தகத்தைப் புரட்டினேன். அம்பி, எல்லாம் ஸ்டாக் கொண்டு வந்திருக்கேன் கையோடு. இங்கே வந்து பதில் சொல்லலாம்னு தான் முன்னாடி பேசாமல் இருந்தேன். புரியுதா?

வால்மீகி, கம்பர், துளசிதாசர் எல்லாருமே "சூடாமணி" பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும் அது யார் சீதைக்குக் கொடுத்தது? அது என்ன ஆபரணாம் என்று விவரிப்பது வால்மீகிதான். முதலில் கம்பரைப் பார்ப்போம்.
"சூடையின்மணி கண்மணி ஒப்பது, தொல்நாள்
ஆடையின் கண் இருந்தது, பேர் அடையாளம்;
நாடி வந்து எனது இன்ுயிர் நல்கினை, நல்லோய்!
கோடி என்று கொடுத்தனள், மெய்ப்புகழ் கொண்டாள்!"
என்னுடைய கண்ணின் மணி போன்ற இந்த ஆபரணத்தை என் புடவையில் முடிந்து வைத்திருந்ததை உன்னிடம் தருகிறேன்." என்கிறாள். அது தலையில் சூடிக் கொள்ளும் ஆபரணம் என்று சொன்னாலும் அது எந்த மாதிரி என்பது வால்மீகியில் தெரிகிறது.

"சூடா" என்றால் சம்ஸ்கிருதத்தில் "உச்சி முடி" என்று அர்த்தம் ஆகும். உச்சி முடியின் மீது அணிகின்ற இந்த ஆபரணம் ஒரு சங்கிலியில் கோர்க்கப் பட்டிருக்கும். அதன் முடிவில் ஒரு பதக்கம் போன்ற அமைப்பு இருக்கும். அந்தப் பதக்கம் போன்ற அமைப்புப் பெண்களின் "ச்ரீமந்தம்" என்று சொல்லப் படும் உச்சிப் பொட்டு வைக்கும் இடத்தில் வந்து முடியும். இது தாய்வழிச் சீதனமாய்க் கொடுக்கப் படுகிறது. அதுவும் சீதையின் வார்த்தைகளின் மூலமே வால்மீகி சொல்கிறார்.
சீதை அனுமனிடம் சொல்வதாய் வால்மீகி சொல்கிறார்:
"இந்த நகையைப் பார்த்ததுமே ராமருக்கு நீ என்னைப் பார்த்துவிட்டுத் தான் வருகிறாய் என்பது புரியும். ராமருக்கு என் நினைவு மட்டும் இல்லாமல் தன் தந்தையாகிய தசரத மஹாராஜாவின் நினைவும், என் தாயாரின் நினைவும் கட்டாயம் வரும். ஏனெனில் இது தசரத ராஜாவின் முன்னிலையில் என் தாயார் எனக்குப் பரிசாகக் கொடுத்தது.!" இது வால்மீகி வாக்கு. துளசிதாசர் சூடாமணி என்னும் தலையில் சூடிக் கொள்ளும் ஆபரணத்தைச் சீதை கொடுத்தாள் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்.

டிஸ்கி: பொதுவாகவே வட இந்தியாவில் அநேகக் குடும்பங்களில் இன்றும் திருமணத்தின் போது இத்தகைய ஆபரணங்களைத் தாய்வீட்டுச் சீதனமாய்ப் பெண்கள் அணிவது உண்டு. அங்கே இதற்கு மங்கலசூத்திரத்தின் முக்கியத்துவம் கொடுக்கப் படும்.

இது சூடாமணியின் கதை.  கணையாழி குறித்த கேள்விக்கு என்னோட பதில் ஜனகர் ராமனுக்குக் கல்யாணப் பரிசாக அளித்த மோதிரமாக இருந்திருக்கலாம்.  அல்லது காட்டிலேயே அநசூயை சீதைக்கு அளித்த ஆபரணங்களிலே அந்த மோதிரம் இருந்திருக்கலாம்.  இருவரிடமும் ஆபரணங்கள் இருந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு.  சில முக்கிய ஆபரணங்களைக் கழட்டுவதில்லை.  உதாரணமாகப் பெண்கள் நெற்றியில் அணியும் ஆபரணம், மூக்குத்தி, மங்கலசூத்திரம், கைவளையல்கள், கால் மெட்டி, கொலுசு போன்றவை.  அப்படியே ராமனின் மோதிரமும் இருந்திருக்கலாமோ?

இல்லைனா எப்படி?? டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு! :))))

12 comments:

 1. அட, இப்படி ஒரு விவாதம் ஓடியிருக்கா அங்கே...!

  ReplyDelete
 2. சுவாரசியமான பதில். நானும், சூடாமணியைப்பற்றி சுந்தர காண்டம் படிக்கும் பொழுது தெரிந்து கொண்டிருக்கிறேன். ராமருடைய கணையாழி பற்றி தான் தெரியவில்லை.

  ReplyDelete
 3. வாங்க ஶ்ரீராம், விவாதமெல்லாம் ஒண்ணும் ஓடலை. சொல்லப் போனால் என் கமென்டே இன்னும் பப்ளிஷ் ஆகலை. கவிநயா அக்கா ஊருக்குப் போறாங்களாம், பப்ளிஷ் பண்ணறாங்களோ இல்லையோ! :))) சும்மா அதைப்படிச்சதும் இது நினைவில் வந்தது. அம்புடுதேன். :))))

  ReplyDelete
 4. வாங்க ராம்வி, வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 5. மோதிரம்ன்னா தங்கத்துலதான் இருக்கணுமா?
  ராமர் என்ன சன்னியாசம் வாங்குண்டா போனார்?
  எந்த கர்மா செய்தாலும் பவித்ர விரலில் மோதிரம் இருக்கணும். அல்லது தர்பை புல்லாலாவது செய்து போட்டுக்கணும். இதைத்தான் பவித்ரம் என்கிறோம்.

  ReplyDelete
 6. முதலில் சூடாமணி: நெத்திச்சூடி-னு சொல்கிறதையே சூடாமணி என்று அறிந்திருக்கிறேன். நீங்க சொல்கிற மாதிரி, சீதைக்கு தாய்வழிச் சீதனம். எனவே அவள் அதைக் கழற்றாமல் அணிந்திருந்தாள் என்றும், இராமனுக்கு விருப்பமானது அது எனவே கழற்றாமல் அணிந்திருந்தாள் என்றும் இருவிதமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னுமொரு சுவையான செய்தியாக, அனுமன் அதைக் கொண்டு வந்து காட்டும்போது, இலக்குவனுக்கு அதை அடையாளம் தெரியவில்லையாம். ஏனெனில், நிமிர்ந்து தன் தாயனைய அண்ணியை ஒருமுறை கூட நோக்கியதில்லையாம்;-(

  அடுத்து கணையாழி: இது இராமனின் பெயர் பதித்த மோதிரம். (signet ring) http://www.valmikiramayan.net/kishkindha/sarga44/kishkindharoman44.htm . In this page, please look for: "Rama's Ring" . தன் மற்ற விலையுயர் அணிகளைக் கழற்றிய இராமனுக்கு, சீதை தனக்கு அணிவித்த‌ மோதிரத்தைக் கழற்ற விருப்பமில்லை என்கிறார்கள்.

  ReplyDelete
 7. கீதா, எங்கள் அத்தை கணவர் வால்மீகிராமாயண உரை பதிப்பிட்டார்.
  அதில் இந்தக் கணையாழி பற்றி இருக்கிறது. இந்த மோதிரம் ஜனகர் தன் மாப்பிள்ளைக்கு இட்ட ராம என்று பெயர் பொரித்த மோதிரம். இதைவைத்துக் கொண்டு நதியில் விளையாடியதையும் சீதை சொல்கிறாள்.நீந்திக் களைத்து சீதை பாறையில் அமர்கிறாள்.ஓ நீ தோற்றுவிட்டாய் என்று ராமர் கேலி செய்ய,சீதை பொய்க் கோபம் கொள்கிறாள்.அவள் கோபத்தைப் போகா ராமர் ''ஓ, மோதிரத்தைக் காணோமே என்று சொல்ல, சீதை உடனே நீரில் பாய்ந்து அதை எடுத்து அவர் கையில் பொருத்தி அழகு பார்க்கிறாள். ஊடல் முடிகிறது அழகாக.:)

  ReplyDelete
 8. வாங்க வா.தி. பவித்ர விரலில் மோதிரம் இருக்கணும்னு நீங்க சொல்வதை நானும் கேள்விப் பட்டிருக்கேன். நன்னி ஹை!

  ReplyDelete
 9. வாங்க கேபி, ரொம்ப நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் கழிச்சு இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கிறாப்போல இருக்கு! :))))

  //இன்னுமொரு சுவையான செய்தியாக, அனுமன் அதைக் கொண்டு வந்து காட்டும்போது, இலக்குவனுக்கு அதை அடையாளம் தெரியவில்லையாம். ஏனெனில், நிமிர்ந்து தன் தாயனைய அண்ணியை ஒருமுறை கூட நோக்கியதில்லையாம்;-( //

  இது காலக்ஷேபங்களில் கூடக் கேட்க முடியும். நிறையக் கேட்டு படிச்சிருக்கேன். :)))))

  //அடுத்து கணையாழி: இது இராமனின் பெயர் பதித்த மோதிரம். (signet ring) http://www.valmikiramayan.net/kishkindha/sarga44/kishkindharoman44.htm . In this page, please look for: "Rama's Ring" . தன் மற்ற விலையுயர் அணிகளைக் கழற்றிய இராமனுக்கு, சீதை தனக்கு அணிவித்த‌ மோதிரத்தைக் கழற்ற விருப்பமில்லை என்கிறார்கள்.//

  ஆமாம், இதைக் குறித்த கதை, கீழே வல்லி சொல்வது போல ஒரு தீபாவளி மலரில் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே படிச்ச நினைவு. எப்போனு நினைவில் இல்லை. அரசல் புரசலா லேசா நினைவு. :))))))

  ReplyDelete
 10. வாங்க வல்லி, நீங்க சொல்லி இருக்கும் சம்பவத்தைப் பிரபலமான ஓவியர் எழுதிய ஓவியங்களோடு கூடிய படக்கதையாக ஏதோ ஒரு தீபாவளி மலரில் படிச்ச நினைவு. எப்போ, எங்கே, எந்த வருஷம்ங்கறதெல்லாம் நினைவில் இல்லை. :((( வால்மீகியில் மறுபடி பார்க்கிறேன். கல்பட்டு சார் கொடுத்திருக்கும் ராமாயணத்தில் கூட இருக்கலாம். அதிலும் தேடிப் பார்க்கிறேன். :)))) தகவலுக்கு நன்றிம்மா.

  ReplyDelete
 11. //அடுத்து கணையாழி: இது இராமனின் பெயர் பதித்த மோதிரம். (signet ring) http://www.valmikiramayan.net/kishkindha/sarga44/kishkindharoman44.htm . In this page, please look for: "Rama's Ring" . தன் மற்ற விலையுயர் அணிகளைக் கழற்றிய இராமனுக்கு, சீதை தனக்கு அணிவித்த‌ மோதிரத்தைக் கழற்ற விருப்பமில்லை என்கிறார்கள்.//

  அனுஜா அவர்களுக்கு நமஸ்காரம்.

  நீங்கள் குறிப்பிட்டிருந்த வால்மீகி ராமாயண கிஷ்கிந்தா காண்டத்தில் இருக்கும் ச்லோகத்தை படித்தேன். ஹனுமனிடம் கணையாழியை
  (மோதிரத்தை) இராமன் கொடுத்ததாகத்தான் ஸ்லோகம் சொல்லுகிறது. அது எப்படி இராமனிடம் வந்தது என்பதை கடைசியில் இருக்கும்
  குறிப்பில் இருக்கிறது என்று எழுதியிருந்ததால், அங்கும் சென்று படித்தேன். இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக போயிருக்கிறது என்றும்
  திருமண தினத்தன்று மணப்பெண் தன்னை வரிப்பவருக்கு போடும் மோதிரம் ஒரு மாங்கல்யம் போன்று புனிதமானதால் அதை எந்தக்காரணத்தை முன்னிட்டும் ( மனைவி முழுமையாக பிரிந்தால் அன்றி ) கணவன் கழற்றக்கூடாது என்று அந்த யுகதர்மம் இருக்கலாம் என்று சொல்கிறது.

  கேள்வி இது அல்ல. இந்த ஊகம் தவறு என்று சொல்லவும் நான் வரவில்லை. இந்தக் கருத்துக்கு பெரிதும் மதிப்பு அளிக்கிறேன்.
  இருந்தாலும், என் மனதிலே உள்ள ஐயம் இதுவே.:

  வால்மீகி எழுதிய ஸ்லோகங்கள் அனைத்துமே இன்று நாம் காண்பதில்லை. இரண்டாவது அவரது காவியம் வெல் இன்ட்க்ரேடட். அதாவது
  அந்தக் காவியத்தில் சொல்ல மறந்து போன அல்லது சொல்லாத விஷயங்கள் , படிப்பவர்கள் ஊகித்துக்கொள்ளட்டும் என்று விடப்பட்ட
  விஷயங்கள் எதுவுமே இல்லை என்று தான் சொல்வர். அப்படி இருக்கையில், எங்காவது ஒரு இடத்தில் வால்மீகி இதை சொல்லியிருப்பார்
  என்றே தெரிகிறது.

  அந்த ஸ்லோகம் எதுவும் யாரேனும் தெரிந்தால் சொல்லவும்.

  இரண்டாவது பவித்ரம் வேற. சம்ஸ்காரங்களுக்காக எப்பொழுதுமே போட்டுக்கொள்ளக்கூடிய மோதிரம் அது. தர்ப்பையிலும் இருக்கலாம்.
  தங்கத்தில், பஞ்ச லோகத்திலும் இருக்கலாம். ஹனுமனிடம் கொடுத்து அனுப்பிய்து பவித்ரம் அல்ல. ராம சீதா திருமணத்தின் போது
  சீதை இராமனுக்கு அணிவித்த மோதிரம். இதைப்பற்றி தான் இங்கு பேசுகிறோம்.

  திருமதி அனுஜா அவர்கள் குறிப்புக்கு மறுபடியும் நன்றி.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 12. கீதாம்மா, உங்கள் பதிவுகளை எப்பவும்போல் ரீடரில் படிக்கிறேன். நன்றி.

  சூரி ஐயா, தயவுசெய்து நமஸ்காரமெல்லாம் சொல்ல வேண்டாம். வயதிலும், அறிவிலும் சிறியவள் நான். 'சீதை எப்பிடி குளிக்காம இருந்தாங்க'னு சின்னப்பவே கேட்டம்ல:-) கணையாழி பற்றிய கேள்வி எனக்கும் உண்டு - எனவே நான் அறிந்ததைப் பதிகிறேன்.

  இது கணையாழி, பவித்ரமன்று என்பது என் எண்ணம். தங்கம் என்றே வால்மீகி சொல்லிவிடுகிறார். ஆனால், வால்மீகி ராமாயணத்தில், இராமன் வைதேஹி திருமணத்தின்போது தங்கநகை பரிசுகள் லிஸ்டில் இந்த மோதிரம் இல்லை. இன்னும், குறிப்பிட்ட இணைய தளத்தில், சூடாமணிக்கு: cuuDaa maNi a circular jewel at bun of hair from which a gold sheet dangles till the end of braid, on which all zodiac signs are engraved என்று பொருள் தந்திருக்கிறார்கள். நான் இதை நெத்திச்சூடின்னு நினைச்சேன், மறைந்த என் அத்தையிடம் இணையதளத்தில் சொல்வதுபோன்ற பொருள் இருந்ததுனு கேள்வியும்பட்டிருக்கேன்: ராக்கோடி+தங்கத்தாழம்பூ மாதிரி போல:-)

  கணையாழியை சீதை ராமனுக்கு அணிவித்தாள் என்பது கேள்வியே தவிர நாமறிந்த வால்மீகி ஸ்லோகங்களில் இருக்கிறாற்போல தெரியவில்லை. சூரி ஐயா சொல்வது போல் வால்மீகி ஸ்லோகங்கள் எல்லாம் கிடைக்கவில்லை, சில இடைச்செருகல்கள்/பாடபேதங்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படிச் சொல்வதும் கணையாழி பற்றிய கேள்விக்கு நேரடியான பதில் தருவதில்லை.

  இங்கே அயோத்யா காண்டத்தில் 37வது சர்க்கத்தில் சீதை தன் பட்டாடைக்கு மேல் மரவுரி தரிக்கிறாள், ஆபரணங்களையும் அணிகிறாள் (2-39-17). எதுக்கும் இருக்கட்டுமென்று அதையும் இங்கே பதிகிறேன். 37வது சர்க்கத்தில், இராமன் தன் ஆடைகளைக் களைந்து மரவுரி தரிக்கிறான். அரசகுமரன் என்ற அடையாளம் இல்லாவிடினும், ராமன் தன் முடியைத் துறந்த போதும் தன் பெயர் பொறித்த மோதிரத்தை அணிந்திருந்ததில் எந்தத் தவறும் காணவில்லை.

  ReplyDelete