எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 08, 2014

ஶ்ரீராமன் பிறந்தாச்சு, உங்க வீட்டிலே?எங்க வீட்டிலே ஶ்ரீராமநவமிக்கு ராமர் பூ அலங்காரத்தோடு.  இடப்பக்கம் தவழ்ந்த கிருஷ்ணரும், வலப்பக்கம் நம்ம நண்பரும் வீற்றிருக்கிறார்கள்.  ராமர் மேலே பெரிய செந்தாமரைப் பூக்கள் இரண்டு வைச்சிருக்கு.  ஆனால் அது தெரியும்படிப் படம் எடுத்தால் கீழே கண்ணனும், நம்ம ஆளும் வரலை. அதனால் செந்தாமரையோடு தனியே எடுத்துக் கீழே போட்டிருக்கேன்.  பிள்ளையாருக்கு மேலே சலங்கை மாதிரி தெரியறது சிதம்பரம் நடராஜரின் காலில் அணிவிக்கப்படும் மகிழம்பூச் சரம்.  குஞ்சிதபாதம் என்று இதைத் தான் சொல்வாங்க.  எங்க வீட்டுக்கு தீக்ஷிதர் வருகை தரச்சே எல்லாம் புதுசா ஒண்ணு எடுத்து வந்து கொடுப்பார்.


ராமருக்குக் கீழே உள்ள விக்ரஹங்கள்.  இன்னிக்குப் பண்ணிய நிவேதனங்கள்.  பாயசம், வடை, பயத்தம்பருப்புச் சுண்டல், சாதம், பருப்பு, பானகம், நீர்மோர், வெற்றிலை பாக்கு, பழங்கள், தேங்காயோடு. எங்க அம்மா வீட்டில் எல்லாம் வடைப்பருப்பு என்னும் ஊற வைத்த பாசிப்பருப்பில் வெள்ளரிக்காய், மாங்காய் சேர்த்து எலுமிச்சம்பழம் பிழிந்து, கடுகு, பெருங்காயம், பச்சைமிளகாய் தாளித்து உப்புச் சேர்த்துப் பண்ணுவாங்க.  அன்னிக்கு எல்லாருக்கும்விநியோகமும் ஆகும்.  சிலர் இதோடு சேர்த்துத் தென்னை ஓலை விசிறியும் கொடுப்பது உண்டு.  சிலர் புது வருஷத்தன்னிக்குக் கொடுப்பாங்க. தெருவிலே ஆங்காங்கே பெரிய பெரிய பானைகளில் நீர் மோர், பானகம் நிரப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். இன்னொரு பக்கம் ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் வடைப்பருப்பும், சுண்டலும் வந்து கொண்டே இருக்கும். கொடுத்துட்டே இருப்பாங்க. அது ஒரு கனாக்காலம்.ஆங்காங்கே ஶ்ரீராமநவமி பஜனைகள் எல்லாம் நடைபெறும்.
மேலே உள்ள தாமரைப் பூ நல்லாத் தெரியுதா.  நல்லா கவனிச்சுக்கோங்க,  தாமரைப் பூவை. :))))))


கற்பூர ஹாரத்தி ஆனதும் எடுத்த படம். ஆச்சு ஶ்ரீராமநவமியும் வந்துட்டுப் போயாச்சு. இனி அடுத்த வாரம் புதுவருஷம், அப்புறமாக் கொஞ்ச நாட்களுக்கு வெயில் தான் கொளுத்தும். :))) ஏற்கெனவே இங்கே கொளுத்துது. அதோடு மின்வெட்டு, இணையச் சொதப்பல்னு ஒரே கல்யாணம் தான் போங்க! 

16 comments:

 1. எங்கள் வீட்டில் நீர்மோரும் பானகமும் மட்டும்! பூஜை சிம்பிள்! என் பாஸ் ராமர் கோவிலில் போய் சேவை செய்து வந்தார்.

  ஆமாம், உங்க ஆண்டாளுக்கு என்ன கோபமாம் சீனிவாசன் மேல்?

  ReplyDelete
 2. ஆண்டாள்??? ஶ்ரீநிவாசன்??? பிரியலையே?????????

  ReplyDelete
 3. நேற்றுமாலை ஸ்ரீரங்கம் கோவில் யானை ஆண்டாள் வழியில் சீனிவாசன் என்பவர் வீட்டு பம்ப்செட்டில் குளித்து விட்டு அங்கு நின்று தண்ணீர் பீச்சிய உரிமையாளர் சீனுவாசனைத் தும்பிக்கையால் தூக்கி அடித்து, சீனுவாசன் இடுப்பெலும்பு முறிந்து ஆஸ்பத்திரியில் இருக்காராமே...

  ReplyDelete
 4. நீங்க வேறே ஶ்ரீராம், நான் உண்டு, என் தொலைஞ்சு போன வெங்காய வடாம் உண்டுனு இருக்கேனா. எதுவுமே தெரியலை! :( ஆண்டாள் இப்படினு எனக்குத் தெரியலை. பழைய பாகன் விட்டுட்டுப் போன அதிர்ச்சி இன்னமும் நீங்கலையோ என்னமோ! :((((

  பாவம் ஶ்ரீநிவாசன், சீக்கிரமாக் குணமாகட்டும்.

  ReplyDelete
 5. உங்கள் வீட்டு ஸ்ர்ராமர் தரிசனமும் கண்டேன். நீங்கள் சொன்ன பூவையும் நன்கு கவனித்துக் கொண்டேன்.மஹாலக்ஷ்மி உறையும் மலரை மறப்போமா என்ன?

  ReplyDelete
 6. பானகம் மட்டும் வைச்சு சிம்பிளா முடிச்சாச்சு எங்க வீட்டு பூஜையை! விரிவான பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 7. ஹிஹிஹி, ராஜலக்ஷ்மி மேடம், தாமரையை யாரானும் மறப்பாங்களா! :)))))

  ReplyDelete
 8. வாங்க தளிர் சுரேஷ், என்னமோ பலரும் சிம்பிளா முடிச்சாச்சுனு சொல்றாங்க. ஒரு சில வேலைக்குச் செல்லும் பெண்கள் இன்னிக்கு ஶ்ரீராமநவமியா, தெரியாதேனும் சொல்லிட்டாங்க. ம்ம்ம்ம்ம்ம் இது எப்படி எடுத்துக்கறதுனு புரியலை. நான் ரொம்பவே பழைய காலத்திலேயே இன்னமும் இருக்கேன் போல! :))))))

  ReplyDelete
 9. இப்போத் தான் ஶ்ரீராமர் சொன்னார்: எனக்கும் 7128 வயசாச்சு, எத்தனை வீட்டில் சுண்டலும், வடைப்பருப்பும், பானகமும், நீர்மோரும் குடிப்பேன், சாப்பிடுவேன். அதான் எல்லாரும் நிறுத்திட்டாங்கனு சொல்றார்.


  இங்கே

  ReplyDelete

 10. ராமன் பேரைச்சொல்லிச் சொல்லி நாமும் உண்போம் அவனை எண்ணி எண்ணி.

  ReplyDelete
 11. ஜிஎம்பி சார், பிரசாதங்கள் பண்ணுவதே விநியோகம் செய்வதற்காக. அன்று பலர் வீட்டில் செய்யாமல், செய்ய முடியாமல் இருக்கலாம். பகிர்ந்து உண்ணலாம். மேலும் நிவேதனம் என்பதே ஓர் அறிவிப்புத் தானே. நீ கொடுத்த இந்தப் பொருள் உன்னுடையது. உன்னுடைய பிரசாதமாக இதை நான் உண்கிறேன். உன்னுடைய கருணையை இந்தப் பிரசாதத்தின் மூலம் கொடு என்னும் வேண்டுதல் தானே. இங்கே எல்லோரும் சொல்லி இருக்கிறாப்போல் நீர்மோர், பானகம் மட்டும் பண்ணினால் கூட ஶ்ரீராமன் ஏற்றுக் கொள்வான். என்னால் முடிந்தது செய்தேன். :)))) எல்லாம் கொஞ்சம் கொஞ்சம்.

  ReplyDelete
 12. முடிவில் கல்யாணம் போன்று சொன்னது... இதைத்தான் அனுபவம் என்று சொல்வதோ...?

  ReplyDelete
 13. கல்யாண அமர்க்களம் தான் டிடி. இப்போத் தான் விருந்தினர் வருகையும். பள்ளிகளெல்லாம் விடுமுறை விட்டாச்சே! :))))

  ReplyDelete
 14. netru thanga karuda sevaikku aandaal varalai...

  ithu thaan kaaranamaa...:(

  ReplyDelete
 15. ஆண்டாள்.... :(((((

  நீர் மோர் பானகம் விநியோகம் - நல்ல விஷயம். தில்லியில் உள்ள [B]பேர் சராய் காமாட்சி கோவிலில் அன்று சண்டி ஹோமம். அன்னை காமாட்சியின் திவ்ய தரிசனம் - கூடவே பிரசாதமும்!

  ReplyDelete
 16. ராமர் பட்டாபிஷேக படத்தை பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது.
  அப்படியே ராமநவமி உற்சவத்திலும் கலந்து கொண்டேன்.

  ReplyDelete