எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 15, 2015

சுதந்திரமாம், சுதந்திரம்

அப்புவைத் திரும்ப மும்பைக்கு அனுப்பி வைச்சாச்சு. அப்புவுக்குச் சொல்ல முடியாத வருத்தம். காலையில் எழுந்ததில் இருந்து அது சிரிச்ச முகமாவே இல்லை. அதோடு பண்ணிக் கொடுத்திருந்த சாப்பாட்டையும் மறந்து இங்கேயே வைச்சுடுத்து. நானும் கவனிக்கலை. அவ அம்மாவும் கவனிக்கலை! :( அவங்க கிளம்பிப் போய் அரை மணி கழித்துத் தான் நான் பார்த்தேன். காலையிலிருந்து சாப்பாடுப் பார்சலைக் கையில் கொடுத்து எடுத்து வைக்கச் சொன்னபோதெல்லாம் அப்பு பேசாமல் இருந்து விட்டது. :( என்னவோ போங்க!

அப்புவுக்கு இங்கே வரும்போது இந்தியா பிடித்திருந்தது. இப்போது இந்தியா பிடிச்சிருக்கா, பிடிக்கலையானு சொல்ல முடியலை! என்று சில சமயமும், பிடிக்காவிட்டாலும் இங்கே வந்து உங்களை எல்லாம் பார்த்துட்டுப் போவேன் என்று சில சமயமும் சொல்கிறது. ஏன் இந்தியா பிடிக்கலை என்றால் ஒரே குப்பை, கூட்டம், சத்தம்! என்றெல்லாம் சொல்கிறது.

எங்க வீட்டிலேயே நான் கொஞ்சம் சத்தமாய்த் தான் பேசுவேன். வெளியே இருந்து பார்க்கிறவங்க/கேட்கிறவங்க நான் ஏதோ சண்டை போடுவதாய்க் கூட நினைக்கலாம். :) ஆனால் அதுக்காகவெல்லாம் என்னோட தொண்டையின் சுருதி குறைவதில்லை. இதுக்கே இப்படின்னா ஊரிலே உள்ள மத்தவங்களுக்குக் கேட்கணுமா?

ஆனால் நான் சொன்னேன், எப்படி இருந்தாலும் இது எங்க இந்தியா! எனக்கு இந்தியா தான் பிடிச்சிருக்கு! என்று அப்புவிடம் சொன்னேன்.   ஏனெனில் இது நம் தாய் நாடு. என்ன நடந்தாலும் நாம் விட்டுக் கொடுக்க இயலாது. நாட்டிற்காக ஒன்றுபடுவோம்!
**************************************************************************************


தேசியக் கொடி க்கான பட முடிவு


கடந்த பாராளுமன்றக் கூட்டத்தொடரில் ஒரு நாள் ஒரு மணி நேரம் கூட கூட்டத் தொடரை நடத்தவிடாமல் தேசியக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் கட்சி, சுதந்திரம் வாங்கித் தந்ததாகப் பீற்றிக்கொள்ளும் கட்சி பெரு முயற்சி எடுத்துத் தடுத்துவிட்டது. கடைசியில் அவங்களோடு கூட்டுச் சேர்ந்தவங்களுக்கே அவங்க நடவடிக்கை பிடிக்கவில்லை! ஆனாலும் அந்த தேசியக் கட்சி திருந்தவில்லை. காரணம்?

பொறாமை தான்!

பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் ஈட்டித் தரும், தரப்போகும் அந்நிய முதலீட்டைக்குறித்த பொறாமை,

பல தேசங்களிலும் இந்தியாவின் வலுவான ஸ்திரத் தன்மையையும், அதன் இறையாண்மையையும் பலப்படுத்தியதைக் கண்டு ஏற்பட்ட பொறாமை,

நில மசோதாத் திட்டம் நிறைவேறினால் உண்மையிலேயே சிறு விவசாயிகள் பலனடைந்துவிட்டால் அதன் மூலம் தங்கள் கையாலாகாத் தன்மை வெளிப்பட்டுவிடுமோ என்னும் பொறாமை

எல்லா மாநிலங்களையும் ஒன்று போல் கருதி எல்லா மாநிலங்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் குறித்த பொறாமை

வட கிழக்கு மாநிலங்களுக்குக் கொடுக்கப்படும் தனிப்பட்ட முக்கியத்துவம் குறித்த பொறாமை

நாகாலாந்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் குறித்த பொறாமை

மியான்மரில் நடத்திய அதிரடித்தாக்குதல் குறித்த பொறாமை

பொருளாதார முன்னேற்றங்களைக் குறித்த பொறாமை

இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே போகலாம். விரிவாக அலசத் தொடங்கினால் பல பதிவுகள் ஆகிவிடும்.  மொத்தத்தில் பிரதமரையும் ஆளும் கட்சியையும் பலவீனமாக ஆக்கி, செயலற்றவர்களாக ஆக்கி நாட்டை முன்னேற்றப்பாதையில் செல்வதில் இருந்து தடுக்கும் தேசியக் கட்சி காங்கிரஸுக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரியப்படுத்துவதோடு அல்லாமல், தேசத்தின் ஒற்றுமையும், தேசத்தின் சுபிக்ஷத்தையும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் கட்சிகளுக்கு நம் ஆதரவையும் தெரிவித்துக் கொள்வோம்.

உண்மையாக தேசத்துக்கு நன்மை செய்யும் கட்சி எது என்பதைப் புரிந்து கொள்வோம். பிரதமரின் கரங்களை வலுப்படுத்துவோம். இந்தச் சுதந்திர நன்னாளில் தேசத்திற்கும், தேச மக்களுக்கும் ஊறு விளைவிக்கும் வேலைகளைச் செய்யும் கட்சிகளைப் புறம் தள்ளுவோம். நாட்டின் 69 ஆவது சுதந்திர தினத்தை நாட்டை பலப்படுத்தும் விதமாக மாற்றுவதற்கு வேண்டிய உறுதிமொழிகளை எடுப்பதோடு மட்டுமில்லாமல் செயலாற்றுவதிலும் ஊக்கம் காண்பிப்போம்.

ஜெய் ஹிந்த்!

பாரத மாதாவுக்கு வந்தனம்!

21 comments:

  1. அப்பு ஊருக்குப் போன வருத்தம் இருக்கும். வீடு இரண்டு, மூன்று நாட்கள் வெறிச் என்று இருக்கும்.

    இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தினமும் தாத்தாவும், பேத்தியுமாச் சாப்பிடுவாங்க. தாத்தாவுக்குப் பேத்தி இல்லாமல் சாப்பிடவே மனசு வரலை! :( கொஞ்ச நாளைக்கு இப்படி இருக்கும். அப்புறமாச் சரியாகும். பக்கத்தில் இருந்தால் போய்ப் பார்க்கலாம்! அதுவும் இல்லை! :(

      Delete
  2. //பார்க்கிறவங்க/கேட்கிறவங்க நான் ஏதோ சண்டை போடுவதாய்க் கூட நினைக்கலாம். :)// நினைக்கிறது என்ன? அதானே உண்மை?

    ReplyDelete
    Replies
    1. அநியாயமா இல்லையோ! தம்பிங்கறதை நிரூபிக்கிறீங்க? உங்களோட எப்போ சண்டை போட்டேனாம்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  3. என்னதான் கொடுமையா தோணினாலும் பேர பேத்திகள் மேலே பாசம் ரொம்ப வைக்கிறது பிரச்சினையாகத்தான் ஆகும்!
    பாத்து!

    ReplyDelete
    Replies
    1. நீங்க ரிஷி! நிஜம்ம்மான ஞானி! (கொஞ்சம் பொறாமையோடயே சொல்றேன்.) நீங்க என்னதான் அறிவுரை சொன்னாலும் நான் கேட்கிறதே இல்லையே! நான் சம்சாரி தானே தம்பி! :))

      Delete
  4. பச்சை.... ச்சீ... காவி பிஜேபின்னு தெளிவா காட்டிட்டீங்க! ஜெய் ஹிந்த்!

    ReplyDelete
    Replies
    1. ஹெஹெஹெஹெஹெஹெ, அப்படீங்கறீங்க? இருக்கட்டும், இருக்கட்டும்! :)))))

      Delete
    2. இன்னும் சிலது சேர்த்திருந்தேன். அப்புறமா வேணாம்னு தோணித்து எடுத்துட்டேன். அதைப் படிச்சிருந்தா என்ன சொல்லி இருப்பீங்களோனு யூகிச்சுப் பார்த்துட்டேன்! :)

      Delete
  5. பதிவைப் படித்ததும் கருத்து எதுவும் சொல்லாமல் தாண்டிப் போக நினைத்தேன், இருந்தாலும் என் சுபாவத்தை மாற்ற முடியுமா. ?என்ன செய்ய இதில்கூறப்பட்டிருக்கும் பிரதமர் பற்றியோ ஆட்சி பற்றியோ கருத்துக்களில் உடன்பாடு இல்லை. பொறாமையால் அல்ல.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து உங்களுக்கு ஐயா! ஆனால் இதன் உண்மையான பலன் தெரிய இன்னும் ஓராண்டுக்கும் மேல் ஆகும். என்றாலும் ரயில்வே துறையிலும், தபால் துறையிலும் வெளிப்படையான மாற்றங்கள் தெரிகின்றன. எதற்கும் கொஞ்சம் அவகாசம் கொடுக்க வேண்டும் அல்லவா?

      Delete
  6. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்! நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கும் ஆளுங்கட்சிகள் குறைச்சொல்லும்! அதே ஆளுங்கட்சி எதிர்கட்சியானபின் நாடாளுமன்ற முடக்கத்தை செய்யும். மோடியின் ஆட்சியில் விலைவாசி கட்டுக்கடங்காமல் போகிறது! அன்னிய முதலீட்டை நிறைய திறந்துவிட்டிருக்கிறார்! நீங்கள் என்னடாவென்றால் புகழ்கிறீர்களே!

    ReplyDelete
    Replies
    1. விலைவாசி கட்டுக்கடங்காமல் போவதாக நீங்கள் சொல்லித் தான் கேள்விப் படுகிறேன் சுரேஷ், பண வீக்கம் மிகக் குறைந்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் சொல்வதையும், பத்திரிகைகளில் எழுதுவதையும் நீங்கள் படிக்கவில்லையா? மேலும் அந்நிய முதலீட்டினால் நமக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை ஏன் உணரவில்லை? பல பொறியாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். அனைவருக்கும் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது அல்லவா? இதனால் வெளிநாடுகளுக்கு இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காகப் படை எடுப்பது குறையுமே! நம் இளைஞர்களின் மூளைத் திறன் இங்கேயே முதலீடு செய்யப்படுமே! இப்படி யோசித்துப் பாருங்களேன்!

      Delete
    2. உண்மையாகவே விலைவாசி கட்டுக்கடங்காமல் போயிருந்தால் எதிர்க்கட்சிகளோ, ஊடகங்களோ சும்மாவா இருந்திருக்கும்? குறை சொல்ல முடியவில்லை என்பதற்காகத் தானே மோதியின் வெளிநாட்டுப் பயணங்களையும், அவரின் உடைகளையும், அவர் அமைச்சர்களின் மனிதாபிமான உதவிகளையும் குறித்துப் பேசுகின்றனர்! ஆதாரங்களோடு நிரூபிக்க முடிந்ததா? அல்லது நீதிமன்றம் தான் குற்றவாளிகள் என்று சொல்லித் தீர்ப்புக் கொடுத்திருக்கிறதா? எதுவுமே இல்லை!

      Delete
    3. சுரேஷ், பண வீக்கம் மைனஸிலே போயிட்டிருக்குனு தினசரிகளிலே செய்தி வருகிறதைப் பார்க்கிறீங்க தானே? தங்கம் விலை கூடப் பதினெட்டாயிரத்துக்குப் போயிட்டு இப்போ இந்த வாரம் தான் கொஞ்சம் ஏறி இருக்கு! :)

      Delete
  7. தங்களின் நான்கு சக்கர வாகனத்தின் முன் சக்கரத்தில் ஒன்றில் காற்று குறைவாக
    இருப்பதாக தெரிகிறது.

    சுதந்திர தின வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா, முதல் வருகைக்கு நன்றி. எங்களிடம் நான்கு சக்கர வாகனமே இல்லை! அது தேவையில்லை என்று நினைப்பவள் நான். :)))) ஆகவே காற்றுக் குறையவே இல்லை. கவலையே வேண்டாம். :)))) ஹிஹிஹி, நான்கு சக்கர வாகனமா?

      Delete
  8. சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ. வந்தே மாதரம்.

    ReplyDelete