எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 21, 2017

என்னோட பெயரும் வந்திருக்கே! :)

என்னோட பெயரும் அச்சில் (ஹிஹிஹிஹி) வந்திருக்கு. மே 5 ஆம் தேதி "தீபம்" இதழில் நான்   பஹுசரா மாதா  வைப் பற்றி எழுதிய பதிவைச் சுருக்கமாக அரைப்பக்கத்துக்குப் போட்டிருக்கார் இளைய நண்பர் செங்கோட்டை ஶ்ரீராம் அவர்கள். உடனே தகவல் தெரிவிக்க வேண்டி என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். நான் அம்பேரிக்காவில் இருப்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. நானும் சொல்லவில்லை! :( பின்னர் மெசஞ்சர் மூலம் செய்தியைத் தெரிவித்து விட்டு வாட்சப்பின் மூலம் அந்தப் பக்கத்தை ஸ்கான் செய்து அனுப்பி உள்ளார்.

 அடுத்ததாக ஓர் இனிய அதிர்ச்சி மார்ச் 22-3-17 தேதியிட்ட குமுதத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள் அக்கார அடிசில் பற்றிக் குறிப்பிட்டு விட்டு அதன் செய்முறை பற்றி விவரிக்கையில் நான் மரபு விக்கியில் எழுதிய அக்கார அடிசில் குறிப்பை என் பெயருடன் பகிர்ந்திருக்கிறார். அதை எனக்கு அனுப்பி வைத்தது நம்ம ஏடிஎம் என்னும் "அப்பாவி தங்கமணி"! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கட்டுரையை முழுசும் கொடுக்கலை. என்னோட பெயரை அவர் குறிப்பிட்டிருக்கும் இடத்தின் பக்கத்தை மட்டும் ஸ்கான் செய்து அனுப்பி உள்ளார். ஆக மொத்தம் என்னோட பெயரும் அச்சில் வந்து நானும் பிரபலமான எழுத்தாளியா ஆயிட்டேன்!  :P:P:P:P:P:P:P:P  (எழுதிட்டாலும்) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அடைப்புக்குறிக்குள்ளாக என்னோட ம.சா.ங்க. ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கு! :)


இதை ரகசியமா வைச்சுக்கணும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். அப்புறமா என்னமோ தோணித்து! போட்டுட்டேன். :) ஆனாலும் கொஞ்சம் வெட்கம் , கொஞ்சம் தயக்கம்! :))))

35 comments:

  1. //ஆக மொத்தம் என்னோட பெயரும் அச்சில் வந்து நானும் பிரபலமான எழுத்தாளியா ஆயிட்டேன்!//

    எங்களைப் பொறுத்தவரை நீங்கள் ஏற்கனவே பிரபல எழுத்தாளிதான்.

    இருப்பினும் அச்சினில் இப்போதுதான் அடையாளம் காணப்பட்டுள்ளீர்கள்.

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வைகோ சார், இந்த நடு இரவில் கூட விழித்திருந்து முதல் முதல் உங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தமைக்கு நன்றி. இது இரண்டுமே என் முயற்சி ஏதும் இல்லாமல் வந்திருக்கு! :) செங்கோட்டையார் அவராக எடுத்துப் போட்டிருக்கார். அதே போல் சாரு நிவேதிதாவும்! :)

      Delete
    2. //இது இரண்டுமே என் முயற்சி ஏதும் இல்லாமல் வந்திருக்கு! :) //

      மொத்தத்தில் உங்கள் காட்டில் நல்ல மழை பெய்கிறது. :) கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

      இங்கு திருச்சியில் வெயில் தாங்க முடியாமல் உள்ளது. என்னதான் ஏ.ஸி.யும் ஃபேனும் சேர்ந்தே ஓடினாலும் நள்ளிரவு ஆகியும் எனக்கு ஏனோ தூக்கமே வருவது இல்லை. :)

      Delete
    3. நீங்க வேறே! மழையும் இல்லை! எதுவும் இல்லை! ஏதோ திடீர் அதிர்ஷ்டம்! :) நீங்க எப்போவுமே தாமதமாகத் தான் தூங்குவீங்க போல! ராத்திரி சீக்கிரம் தூங்கப் போகப் பழக்கப்படுத்திக்கணும்! :) ஆனால் சீக்கிரம் தூங்கப் போனாலும் எனக்குத் தூக்கம் என்னமோ தாமதமாத் தான் வருது! :( காலம்பரயும் சீக்கிரம் விழிப்பு வந்துடும்.

      Delete
    4. //நீங்க வேறே! மழையும் இல்லை! எதுவும் இல்லை! ஏதோ திடீர் அதிர்ஷ்டம்! :)//

      சுக்ரதசையாக இருக்குமோ என்னவோ!

      //நீங்க எப்போவுமே தாமதமாகத் தான் தூங்குவீங்க போல! ராத்திரி சீக்கிரம் தூங்கப் போகப் பழக்கப்படுத்திக்கணும்! :)//

      எல்லாம் இந்த வலையுலகம் என்றால் வலையில் மாட்டியதால் வந்த வினை. நேரத்திற்குத் தூங்கி நேரத்திற்கு எழுந்திருக்கும் வழக்கமே காணாமல் போய் விட்டது.

      //ஆனால் சீக்கிரம் தூங்கப் போனாலும் எனக்குத் தூக்கம் என்னமோ தாமதமாத் தான் வருது! :( //

      எனக்கு அதே கதைதான். ஸ்ரீரங்கம் பள்ளிகொண்ட பெருமாள் போல மெத்தையில் படுத்துக்கொண்டே கம்ப்யூட்டரில் எப்போதும் டைப் அடித்துக்கொண்டு இருக்கிறேன். தூக்கம் வந்தால் தானே :(

      //காலம்பரயும் சீக்கிரம் விழிப்பு வந்துடும்.//

      அதுதான் உங்களை மிகப்பெரிய வெற்றியாளராக ஆக்கியுள்ளது. உலகில் உள்ள அனைத்துத் துறை வெற்றியாளர்களும் அதிகாலை சீக்கரமாக எழுந்திருப்பவர்கள் மட்டும் தானாம்.

      எனக்கு அதிகாலை 3 மணிக்குத்தான் தூக்கம் வரவே ஆரம்பிக்கிறது. பிறகு நான் எழுந்து குளிக்க பகல் 10 மணி அல்லது 11 மணி ஆகிவிடுகிறது. அதன்பிறகு டிபன் / காஃபி / சாப்பாடு எல்லாம் முடித்துக் கொண்டு மீண்டும் கம்ப்யூட்டர் பக்கம் வர அப்படியும் இப்படியும் பகல் 12 அல்லது 1 மணி ஆகி விடுகிறது. :(

      இதேபோலவே வழக்கமாகி விட்டது. என்ன செய்வது?

      Delete
    5. நேற்று நள்ளிரவு கொஞ்சம் தூக்கக்கலகத்தில் இருந்ததால் மேலேயுள்ள என் பின்னூட்டத்தில் ஒரு சின்ன தவறாகியுள்ளது. தயவுசெய்து மன்னிக்கணும்.

      எல்லாம் இந்த வலையுலகம் என்றால் வலையில் மாட்டியதால் வந்த வினை. = தவறு

      எல்லாம் இந்த வலையுலகம் என்ற வலையில் மாட்டியதால் வந்த வினை. = சரி

      Delete
    6. அடுத்தடுத்த கருத்துக்களுக்கு நன்றி வைகோ சார். காலை நாலரை மணிக்கு எழுந்திருப்பது என்பது பத்து வயதில் இருந்து வந்திருக்கும் பழக்கம்! விட முடியலை! இப்போல்லாம் உடனே எழுந்து கொள்ளாமல் படுக்கையிலேயே படுத்திருந்து விட்டுப் பின்னர் ஐந்து மணிக்குப் பின்னர் எழுந்து கொள்கிறேன். :) மற்றபடி நான் வெற்றியாளர் இல்லை என்பது எனக்கே தெரியும்! :) உங்கள் பெரிய மனசு என்னைப் பாராட்டச் சொல்கிறது!

      Delete
  2. வாழ்த்துகள் தோடரட்டும் .....

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  3. அடடே... வாழ்த்துகளும், பாராட்டுகளும். வைகோ ஸார் சொல்லியிருப்பது போல நீங்கள் வலையுலகில் எப்போதுமே பிரபலம்தான்.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். 22 April, 2017

      //வைகோ ஸார் சொல்லியிருப்பது போல நீங்கள் வலையுலகில் எப்போதுமே பிரபலம்தான்.//

      மிகவும் கரெக்ட் ஸ்ரீராம்! இதோ அதற்கான சில அத்தாட்சிகள்:

      http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

      1) சிறுகதை விமர்சனப்போட்டி 2014 - இல் 15 முறை வெற்றிகள். இருமுறை முதல் பரிசுகள், எட்டுமுறை இரண்டாம் பரிசுகள், ஐந்துமுறை மூன்றாம் பரிசுகள் வென்று குவித்துள்ளார்கள்.

      2) ’நடுவர் யார்? யூகியுங்கள்’ போட்டியிலும் வென்று பரிசு பெற்றுள்ளார்கள்.

      3) ’ஜீவி-வீஜி விருது’ வென்று அதற்கான பரிசினையும் பெற்றுள்ளார்கள்.

      4) சாதா அல்லது சோதா விருது அல்லாத ‘கீதா விருது’ வென்று அதற்கான பரிசினையும் பெற்றுள்ளார்கள்.

      5) ஹாட்-ட்ரிக் பரிசினையும் விடாமல் வென்றுள்ள சாதனையாளர் ஆவார் இவர்.

      மேலும் இவர்கள் இவ்வாறு தன் எழுத்துலக சாதனைகளால் வென்ற பரிசுத்தொகைகளை வைத்தே திவ்ய க்ஷேத்ரமான ஷகரில் ஓர் மிகப்பெரிய COSTLY FLAT வாங்கியுள்ள தகவல் வெளியே கசியாமல் இருக்க நெளடால் பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது என்பதை இதோ இந்தப் பதிவினில் கடைசியில் போய்ப் பார்த்தால் உங்களுக்கே தெரியவரும். :)

      http://gopu1949.blogspot.in/2014/10/8.html

      Delete
    2. ஹாஹாஹா, ஶ்ரீராம், ரொம்ப நன்றி.

      Delete
    3. வைகோ சார், அசராமல் பாராட்டு மழை பொழியும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி. ஹிஹிஹி, நான் வென்ற பரிசுத் தொகையில் வாங்கின குடியிருப்புக்குத் தான் நீங்க வந்தீங்க! :)

      Delete
  4. Paarattugal. First time G+ usage landed me in your blog.
    Long time I read any blogs except posting on solar energy in Karkai Nandre. Why my condolence on sh.Asokamitran did not appear in your post? You may be finding more time in USA to write :-))

    ReplyDelete
    Replies
    1. நன்றி கபீரன்பன். பல ஆண்டுகள்(?) கழித்து உங்களை இங்கே பார்ப்பதில் மகிழ்ச்சி. சித்தப்பாவைப் பற்றிய உங்கள் செய்தி எதுவும் எனக்கு வந்து சேரவில்லை! இப்போ நீங்க சொன்னப்புறமா ஸ்பாமில் கூடப் போய்ப் பார்த்துட்டேன். அப்புறம் இங்கே நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது என்பதே உண்மை! :) அதோடு குழந்தை இருப்பதால் கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் குழந்தையுடன் பொழுது போய் விடுகிறது! :)

      Delete
  5. வாழ்த்துக்கள் அக்கா! என்னதான் இணையத்தில் எழுதினாலும், அச்சில் நம் படைப்பை பார்ப்பது சந்தோஷம்தான். மகிழ்ச்சி தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. நான் வை.கோ. சாருக்கு அடுத்து கமெண்ட் அனுப்பி இருந்தேன். ஏன் பப்லிஷ் ஆகவில்லை என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. வெளியிடுவதில் கால தாமதம் ஆகி இருக்கும்.

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, தமிழ் இளங்கோவின் "எனது எண்ணங்கள்" பக்கம் போயிருக்கணும். :) எடுத்துட்டீங்களா, நன்றி.

      Delete
  8. மனமார்ந்த வாழ்த்துகள்! சகோ/கீதாக்கா...

    உண்மைதான் வலையில் எழுதினாலும், பிரபல எழுத்தாளர் குறிப்பிட்டு எழுதுவதும், நம் படைப்புகள் இதழ்களில் வருவதும் மகிழ்ச்கியான விஷயமே!! மேலும் இது தொடர்ந்திடவும் வாழ்த்துகள்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி துளசிதரன்/கீதா! தொடருமா என்னனு தெரியலை! நான் அதிகம் பத்திரிகை உலகுடன் தொடர்பு வைச்சுக்கலை! :)

      Delete
  9. உங்களைப் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள். (நன்றி தெரிவிக்கவேண்டாம். அதற்குப் பதிலாக ஸ்ரீரங்கத்துக்கு வரும்போது அக்கார அடிசலைச் செய்துதாருங்கள்.. எனக்கு மட்டுமல்ல... பாராட்டுபவர்கள் எல்லோருக்குமே)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா, அக்கார அடிசில் பண்ணறது பெரிய விஷயமா என்ன? தாராளமாப் பண்ணி வைக்கிறேன். :)

      Delete
  10. அன்பு கீதா.மனசுக்கு மிக சந்தோஷம். ரொம்ப நாட்கள் முன்னால் ஷைலஜா எங்களை அறிமுகப்படுத்தி கலைமகளில் கொட்த்திருந்தார். அதை நன்றியுடன் இப்போது நினைக்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள் மா. அப்பாவிக்கும் ஸ்ரீராமுக்கும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வல்லி. என்னையும் திருப்பூர் கிருஷ்ணன் சொல்லிக் கொண்டே இருந்தார். நான் தான் வேண்டாம்னு இருக்கேன். :)

      Delete
  11. கீதா உங்களுக்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும். நீங்கள் பாராட்ட வேண்டிய பன்முக எழுத்தாளிதான். அச்சில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு ,பத்திரிக்கைகளில் வந்தால் பின்னும் யாவருக்குமே மனது மகிழ்ச்சி கொள்கிறது. மேலும் பிரபலம் பெறுக வாழ்த்துகிறேன். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா. உங்கள் வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும் நன்றி.

      Delete
  12. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா!.. என்னைப் பொறுத்தவரை, நீங்க எப்பவுமே வலையுலக ஸ்டார் எழுத்தாளர்!!!.. என்னைப் போல் எத்தனையோ பேர் உங்களை ரோல் மாடலா வச்சிருக்காங்க..எந்த விஷயம்னாலும் ஆழமான புரிதலோட இருக்கும் உங்க எழுத்துக்களுக்கு பெரிய ரசிகர் வட்டமே இருக்குங்கறதுக்கு இதெல்லாம் அத்தாட்சி!!.. மேலும் மேலும் பல சிறப்புகள் பெற வாழ்த்துகிறேன்!..

    ReplyDelete
    Replies
    1. நன்றி பார்வதி. அதிகம் பார்க்க முடியலை உங்களை! ரசிகர் வட்டம் இருக்கோ என்னமோ தெரியலை! :))))))

      Delete
  13. ரொம்ப பிரமாதம். ஆப் எக்கட இருக்கீங்க?

    ReplyDelete
    Replies
    1. வாங்க "இ" சார், இந்த மாதம் 23 ஆம் தேதிக்கு இந்தியா வரணும். இங்கே யு.எஸ். வந்தது ஒரு கதைன்னா வந்தப்புறமா நடந்தது வேறே கதை! எப்படியோ ஆறு மாசத்தைக் கழிச்சுட்டு ஓடி வரணும்னு பார்க்கிறோம். :))))) ஹூஸ்டனில் இப்போப் பெண் வீட்டில் இருக்கேன். அடுத்த வாரம் பையர் வீடு!

      Delete