இரண்டு நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி சானல் ஒன்றிரண்டில் மும்பையில் ஓர் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் சாப்பாடு நன்றாக இல்லை என்று சொன்னாராம். இதற்காக அங்கே வேலை பார்ப்பவர் அந்த இளைஞர் மேல் கொதிக்கும் எண்ணெயை ஊற்றுகிறார். அதுவும் துரத்தித் துரத்தி! இதை எல்லாம் பார்த்தால் தப்பைத் தப்புனு சொல்லவே பயமா இருக்கு! நானும் இம்மாதிரிச் சில சம்பவங்களில் மாட்டிக் கொண்டு முழிச்சிருக்கேன். முகநூலிலும் தான்! கண்டமேனிக்குத் திட்டு வாங்கிண்டேன். :) அப்புறமா அவங்களோட தொடர்பையே துண்டிச்சாச்சு! இத்தனைக்கும் உறவினர் தான்! இப்போல்லாம் யார் தப்புப் பண்ணினாலும் ரொம்பவே யோசிச்சு அவங்க கிட்டே முதல்லே பேசிப் பார்த்துட்டு அப்புறமாத் தான் தப்பு, சரினு சொல்லணும் போல! அது போகட்டும். இப்போ சமீப காலமாக இணையங்களிலும் முகநூல் போன்ற பொதுவெளிகளிலும் மும்முரமாகப் பேசப்படும் விஷயம் "லக்ஷ்மி" என்னும் குறும்படம் பற்றி.
முகநூலில் ஒரு குழுமத்தில் இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லி ரொம்பவே சிபாரிசு செய்திருந்ததோடு, ஒப்புமை செய்ய முடியாத அளவுக்கு அருமையான காதல் என்றெல்லாம் சொன்னார்கள். இப்படியான காதல் குறிஞ்சி மலர் போலத் தான் என்றோ வரும் என்றும் சொன்னார்கள். ஆனால் நான் படம் பார்க்கவில்லை. கதையை மட்டும் புரிந்து கொண்டேன். திருமணம் ஆகி எட்டு, பத்து வயசுக்கு ஒரு பையன் இருக்கும் ஓர் தம்பதிகள். கணவன் சேகர், மனைவி லக்ஷ்மி! இருவருக்கும் வழக்கமான இயந்திரத்தனமான வாழ்க்கை ஓடுகிறது. இதில் தமிழ்ப் படம் என்பதால் வழக்கத்தை மீறாமல் கணவனுக்கு ஓர் ஆசை நாயகி அல்லது சிநேகிதி! உறவு எல்லை மீறிப் பழகும் அளவுக்கு! இதனால் வெறுத்துப் போன லக்ஷ்மிக்கு வேலைக்குச் செல்லும்போது (?) ரயிலில் பழக்கம் ஆகும் கதிர் ஈர்க்கிறான். கதிரும் லக்ஷ்மியை அவள் அழகை, அவள் திறமையைப் பாராட்டுவதோடு அவளுக்குப்புதிய அலங்காரம் அறிமுகம் செய்து அவளுக்குச் சமைத்துப் போட்டு அவளைத் தன் பால் மேலும் ஈர்க்கிறான்.
கதிர் வீட்டுக்கு முதல்முறை செல்லும்போதே லக்ஷ்மியைப் படுக்கைக்கு அழைத்துச் சென்று விடுகிறான். கணவனைப் பழிவாங்குவதாக (?) நினைத்தோ என்னமோ லக்ஷ்மியும் உடன்படுகிறாள். பின்னர் அவள் வீட்டுக்குத் திரும்பும் போது ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுவதால் பேருந்தில் பயணிக்க நேருகிறது. அப்போது லக்ஷ்மி அவனிடம், "தான் இன்னும் சில நாட்களுக்காவது பேருந்தில் பயணிக்கும்படி இருக்கும்!" என்று சொல்வாளாம்! இந்தப் படம் முதலில் லக்ஷ்மியின் வாழ்க்கையைக் குறிக்கும்போது கறுப்பு, வெள்ளையில் ஆரம்பித்துப் பின்னர் கதிரின் அறிமுகம் ஏற்பட்டு இருவருக்கும் தொடர்பு ஏற்படும் வரை வண்ணத்தில் வருகிறதாம். இது லக்ஷ்மியின் வாழ்க்கையின் வண்ணமயமான பகுதியாம். பின்னர் முடியும்போது மீண்டும் கறுப்பு, வெள்ளையில் வருவதால் இனி உன்னுடன் தொடர்பு இருக்காது என்பதைக் குறிப்பாக லக்ஷ்மி சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அதற்காகத் தான் தான் இனி ரயிலில் வரமாட்டேன் என்று சொல்கிறாளாம். எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் லக்ஷ்மி தன் வீட்டுக்கே திரும்பிப் போகிறாளாம்.
இந்தப் படம் நான் பார்க்கவில்லை. பலரும் பகிர்ந்ததில் இருந்து போட்டிருக்கேன். உண்மையில் இது ஓர் ஆங்கிலப் படத்தின் தழுவல். Unfaithful என்னும் பெயரில் 2002 ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னர் The Unfaithful Wife என்னும் பெயரில் ப்ரெஞ்ச் மொழியில் 1969 ஆம் ஆண்டிலும் வந்த இரு படங்களின் கதை! இதில் முதலில் சொல்லப்பட்ட ஆங்கிலப் படத்தில் இன்னொரு ஆணோடு தன் மனைவிக்கு இருக்கும் நீடித்த உறவைக் கண்டு பிடித்த கணவன் அந்த நபரைக் கொன்று விடுகிறான். அதன் பின்னர் இது த்ரில்லராகப் போகும். ஃப்ரெஞ்ச் படத்தில் எப்படினு தெரியலை!
ஆனால் மேலே குறிப்பிட்ட லக்ஷ்மி என்னும் பெயரிலேயே வந்திருக்கும் இந்தத் தமிழ்க்குறும்படம் பல விருதுகளை வாங்கி இருக்காம். இத்தனைக்கும் கணவன் தவறான உறவு வைத்திருப்பது போல் எல்லாம் காட்டவே இல்லை என்கின்றார்கள். ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு அவர் சிநேகிதியிடமிருந்து வருவதை வைத்து இப்படி முடிவு கட்டுகிறார்கள். கணவனின் உறவு இயந்திரத்தனமாக இருப்பதாக நினைக்கும் லக்ஷ்மிக்கு அதே உறவு வேறொரு ஆணிடம் சந்தோஷத்தைத் தருவதாகத் தோன்றுகிறது! என்னத்தைச் சொல்வது! கணவன், மனைவிக்குள்ளே அலுப்பு, சலிப்பு என்பது வரத் தான் செய்யும். அதை இருவரும் பேசி மாற்ற முயற்சிக்க வேண்டும். இத்தகைய தவறு மன்னிக்கவே முடியாத தவறு செய்து விட்டால் சரியாயிடுமா?
கணவனோடு வாழப் பிடிக்கலைனால் விவாகரத்துப் பெற்றுப் பின்னர் இன்னொரு வாழ்க்கையையோ இன்னொரு ஆணையோ பற்றி சிந்தித்திருக்கலாம். அப்படியானும் இந்தக் கதிர் என்பவனாவது லக்ஷ்மியின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் தருபவனாக இருக்கிறானா? இல்லை! அவன் பழகியதே லக்ஷ்மியுடனான இந்தத் தகாத உறவுக்குத் தான் என்று புரிகிறது. கடைசியில் ஏமாந்தது லக்ஷ்மி தான்! ஆனால் இதைப் போய் தெய்விகக் காதல் என்றும் எங்கும் எப்போதும் கிடைக்காத ஒரு மனத் திருப்தி லக்ஷ்மிக்குக் கிடைத்ததாகவும் இது ஒன்றும் முறைகேடான நட்பு அல்ல என்றும் இது தான் பெண் சுதந்திரம் என்றும், இத்தகைய சுதந்திரமே பெண்களுக்கு இப்போது தேவை என்றும் சொல்கிறார்கள். முறைகேடான உறவாக இருந்தாலும் பெண்களுக்கு இத்தகைய உறவு வைத்துக் கொள்வதே பெண்ணுக்கு சுதந்திரம் என்றும் பேசுகிறார்கள்.
இது வெளியே தெரிந்தால் லக்ஷ்மிக்கு என்ன மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்? அவள் கணவனோ அல்லது மகனோ இதை ஏற்றுக் கொள்வார்களா? வாழ்க்கை சண்டை, சச்சரவின்றி நகர்வதையே பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கையில் கணவனின் சின்னச் சின்னச் செயல்களுக்கும் அர்த்தம் தேடிக் கொண்டு தன்னைப் புகழவில்லை, தன் அழகை வர்ணிக்கவில்லை! தன் சமையலைப் பாராட்டவில்லை! தனக்குச் சமைத்துப் போடவில்லை என்றெல்லாம் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டு இன்னொரு ஆணின் உறவை ஏற்றுக் கொள்பவள் எத்தனை நாட்கள் அவனோடு தாக்குப் பிடிக்க முடியும்? நாளாவட்டத்தில் அவனுக்கும் அலுக்க ஆரம்பிக்கும்? அப்போது இந்த லக்ஷ்மி என்ன செய்வாள்? இப்போதெல்லாம் பெண்கள் இப்படி நடந்து கொள்வது சகஜம் என்றெல்லாம் சொல்கிறார்கள். மனசு கொதிக்கிறது! வேதனை தாங்கவில்லை!
மொத்தத்தில் கலாசாரச் சீரழிவு என்பது எப்போதோ தொடங்கி விட்டது! நாம் தான் இதைப் புரிந்து கொள்ளவில்லை!
இங்கே English Picture
இங்கே French Picture
தங்களது ஆதங்கம் சரியானதே கலாச்சாரம் மாறவில்லை அது உருவமற்றது நாம்தான் பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அதன் வழித்தடங்களை மாற்றி விட்டு சமூகம் கெட்டு விட்டது என்ற ஒற்றை வரியில் பிறரின் மீது பழி போடுகிறோம்.
ReplyDeleteநாம்தான் கலாச்சாரம், கலாச்சாரம்தான் நாம்.
குறும்பட விமர்சனம் மிகவும் அருமை நான் என்ன சொல்ல நினைத்தேனோ... அதையே தாங்களும் எழுதி இருக்கின்றீர்கள் துளியளவும் நான் இதில் குறை சொல்ல வரவில்லை.
கணவனை பழி வாங்கி விட்டாள் சரி
லட்சுமி மீண்டும் திரும்பி விட்டாள் சரி
இப்பொழுது இவள் புனிதமாகி விட்டாளா ?
என்ன இது அர்த்தமற்ற விளக்கானம் ?
கேக்கிறவன் கேனப்பயலாக இருந்தால் எலி ஹெலிகாப்டர் ஓட்டுமாம்.
கற்பு என்பது இருபாலருக்குமே உள்ளது என்பதும் எமது கருத்து.
வாங்க கில்லர்ஜி, சரியான கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி. அந்த லக்ஷ்மிக்கு இந்தத் தகாத உறவால் என்ன தான் கிடைச்சது? ஒண்ணும் புரியலை! :) இதைப் போய் விருதுகளெல்லாம் கொடுத்துப் பெருமைப் படுத்தி இருக்காங்க. கேட்டால் பெண் சுதந்திரமாம்! :(
Deleteநல்ல பகிர்வு. படம் பார்க்கவும் இல்லை. பார்க்கத் தோன்றவும் இல்லை.
ReplyDeleteநிறைய பேர் இந்தப் படம் எழுதிக் கொண்டிருப்பதாலேயே படம் பார்க்கத் தோன்றவில்லை.
நானும் பார்க்கவில்லை வெங்கட். சிநேகிதி ஒருத்தர் எழுதி இருந்த விமரிசனமும், மற்ற விமரிசனங்களும் படித்ததில் எழுதினது தான்! படம் பார்க்கணும் போல் இல்லை. ஆபாசமான காட்சிகள் இருந்ததாகவும் இப்போ அவற்றை எடிட் செய்து மறு வெளியீடு செய்திருப்பதாகவும் சொல்கின்றனர்.
Deleteஉருப்படியான டாபிக்இல்லாமல் இந்தமாதிரி குறும்படம் பார்த்து விமரிசனம் எழுத ஆரம்பிச்சாச்சா? வாழ்க.
ReplyDeleteஉங்களோட கருத்தை ஆக்ஷேபிக்கிறேன். முதல்லே இது உருப்படியான தலைப்பு இல்லைனு யாரு சொன்னாங்க? ஆதாரமாய் இருக்க வேண்டிய பெண் இன்று போகப்பொருளாய் மாறி வருவதோடு தன்னைத் தானே அப்படி ஆக்கிக் கொண்டும் வருகிறாள். இவ்வளவு கீழ்நிலைக்குப் பெண் போனது சரியென்றா சொல்கிறீர்கள்? முகநூலில் யாரைப் பார்த்தாலும் இதைத் தான் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். அப்படி ரசிக்க என்ன இருக்கிறது இதில்?
Deleteஅடுத்த ஆக்ஷேபம், நான் இந்தப் படம் பார்த்தேன் என எங்கே சொல்லி இருக்கேன்? மறுபடியும் பதிவைக் கூர்ந்து கவனித்துப் படிக்கவும். அதான் உங்களுக்கு தண்டனை! :)
Deleteநெல்லைதமிழன் இதை உருப்படியான தலைப்பு இல்லை என்று சொல்வது மிக ஆச்சிரியமாக இருக்கிறது. இந்த படத்தை அப்படியே பார்த்து கடந்து விடக் கூடாது..நிச்சயம் பெண்கள் இதை பார்த்து கண்டிப்பாக விமர்சனம் செய்ய வேண்டும் தங்கள் மனத்தை திற்ந்து காட்ட வேண்டும் இல்லையென்றால் இதுவும் சரியென்று போய்விடும். லட்சுமி செய்வது சரியா தவறா என்று பேசுவதைவிட கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இது தீர்வாகாது
வாங்க அவர்கள் உண்மைகள். உங்கள் கருத்து சரியானதே!
Deleteகீ.சா மேடம்... ம.தமிழன் - இந்த மாதிரி டாபிக்கைப் படிப்பதற்கே மனது வரவில்லை. நான் பல வருடங்களாக இந்த மாதிரி விஷயங்களைக் கேள்விப்பட்டுவருகிறேன். பெண்கள் மட்டும்தான் குடும்பம் என்னும் கலாச்சாரத்தைத் தாங்கிப்பிடிக்கமுடியும். அப்படி அவர்கள் தாங்கிப்பிடிக்கவேண்டும் என்று ஆண்கள் எண்ணவேண்டும். 'எப்படி வேணுமானாலும் வாழலாம்' என்று எண்ணினால், 'சகதியில் மாட்டிக்கொண்டவனின் கால்களைப் போன்றது'. மீளுவது கடினம்.
Deleteநான் பொதுவா எதிர்மறை விஷயங்களைப் பார்க்காமல் போய்விடவேண்டும் என்று நினைப்பவன்.
நெ.த. எல்லோரும் எதிர்மறை விஷயங்களைப் பார்க்காமல் போய்விட்டால் பின்னர் அவை சரியாக நடப்பது எப்போது? பிரச்னைகளை எதிர்கொள்ளத் தான் வேண்டும்! தவிர்த்தால் இல்லைனு ஆயிடுமா? இங்கே பெண் குலத்தையே பெண் சுதந்திரம் என்னும் பெயரில் இழிவு செய்திருக்கின்றனர். அதுவும் பாரதியாரின் பெயரைச் சொல்லி! அவர் சொன்ன நிமிர்ந்த நன்னடையும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இதிலே இருக்கா என்ன? பாரதியின் பாடலைச் சொல்லி அந்தப் பெண்ணை வியப்பில் ஆழ்த்தி வீழ்த்துகிறானாம்! பாரதி கற்பு நிலை என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்றும் சொல்லி இருக்காரே! அதை ஏன் சொல்லவில்லை?
Deleteஇந்த மாதிரி விடயங்களைக்குறித்து கலந்து பேசும் போது தான் நாம் எப்படிப்பட்டவர்களுடன் நட்பாயிருக்கின்றோம் அவர்களின் உள்ளான சிந்தனை எப்படியானதாயிருக்கின்றதென புரிந்து கொள்ள முடிகின்றது. ஒருவகையில் இம்மாதிரியான பதிவுகளும் விவாதங்களும் கட்டாயம் அவசியமே, கடந்து போகின்றோம் எனில் நஞ்சுண்ட கண்டனால் தொண்டையில் அத்தனையையும் அடக்கி வைத்திருக்கும் பலரை இனம் காண தவறி விடுகின்றோம்.
Deleteநெருப்பெனில் வாய் வேகுமா எனில் வேகாது தானே அப்படித்தான் பல நெகடிவ் விவாதங்களையும் அவசியமான தலைப்புக்களையும் நாம் கண்டு கொள்ளாமல் செல்வது சமுதாயத்தில் நல்லது கெட்டதை பலர் புரிந்து கொள்ள முடியாமல் செய்தும் விடுகின்றது. எழுத்திலும் மாற்றம் வரும், எழுத்தும் சரி தப்பை உணர்த்தும்.
படம் பார்க்கவில்லை. பார்க்கும் ஆசையும் இல்லை.
ReplyDeleteம்ம்ம்ம், கிட்டத்தட்ட ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் ஓர் பகுதி எனலாமோ? அதிலே முடிவில் சிவகுமார் செத்துப் போவார்! இதிலே அப்படி நடந்ததாகத் தெரியலை! :)
Deleteஇரண்டு பேர் வேலை பார்க்கும் குடும்பங்களில் பிரச்சனைகளும் சலிப்புகளும் வருவது இயற்கையையே அந்த பிரச்சனைகளை எப்படி பேசி தீர்த்து சந்தோஷமாக வாழ வழி சொல்வதைவிட பிரித்து சிரழித்து வாழ வழி சொல்லி தருகிறது இன்றைய உலகம்
ReplyDeleteஎனக்கு தெரிந்த நீயூஜெர்ஸியில் வாழும் தமிழ் குடும்பத்தில் இந்த கதையில் அதே வரும் பிரச்சனைதான் என்ன இந்த இரண்டு பேரும் ஐடியில் வேலை பார்க்கிறார்கள். ஆனால் இந்த பெண் லட்சுமி மாதிரி வேறு ஒரு ஆடவனை தேடி போகவில்லை..... பொருத்து பார்த்த இந்த் பெண் விவகாரத்து முடிவை எடுத்து இருக்கிறார். இரண்டு குழந்தைகள் இருக்கும் இவர்களை கூட்டி வைத்து அவர்களது மனதை மாற்றி சந்தோசமாக வாழ வழிவகைகளை சொல்வதைவிட இவர்கள் பிரிந்து வாழத்தான் வழி வகைகளை காட்டுகிறார்கள் அதில் முக்கியமாக இவர்களுக்கு தெரிந்த நீயூஜெர்ஸி தமிழ் சங்கத்தில் உள்ளவர்கள். அந்த பெண்ணுடன் வேலை பார்க்கும் மனைவி இதை கேட்டதும் ஆபிஸில் இருந்து போன் செய்து ஓவென்று அழுதேவிட்டார். எனக்கோ அவர்களை மிக அதிகம் தெரியாது இருந்தாலும் அவர்களுக்கு சென்று பிரியாமல் இருக்க ஆலோசனை சொல்லவேண்டுமென்று நினைத்து நான் செல்வதற்குள் காரியம் முற்றிவிட்டது போல இருக்கிறது. எனக்கு தெரிந்த வரையில் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் நல்லவர்களாக இல்லை என்றுதான் தோன்றுகிறது எல்லாம் இந்த தமிழ் சங்கங்களில் சேர்ந்து கூத்தும் கும்மாளமும் போடும் ஆட்களாக இருக்கிறார்கள் ஹும்ம்ம்ம்
நல்லவேளை நான் இந்த தமிழ் சங்கங்கள் பக்கம் தலையெடுத்து வைப்பதே இல்லை
வாங்க அவர்கள் உண்மைகள். என்ன சொல்ல முடியும்! அவரவர் வாழ்க்கை! அவரவர் தான் தீர்மானிக்கணும் என்றாலும் தப்பான முடிவு எடுக்க விடாமல் நம்மால் இயன்றவரை தான் தடுக்கலாம்! கை மீறிப் போனபின்னர் ஒண்ணும் பண்ண முடியாது! :(
Deleteநானும் இன்னும் பார்கவில்லை ஆனால் என் தோழி பகிர்ந்தார்கள் அநியாயம் பாரேன் என்று ஆரம்பித்து truth குட இதை பற்றி கொடுத்திருந்தார் பார்க்கவில்லையா பெரிய கமென்ட்(குமுறல்) கொடுத்து இருக்கிறேன் பாருங்க கண்டிப்பாய் சிஸ் அதைத்தான் இங்கும் கொடுக்கவேண்டும் நீங்களும் உங்கள் குமுறல்களை தெளிவாய் கொடுத்து இருக்கீங்க இதற்க்கு விருது வேறா விளங்கிடும் நாடு இளஞ்சிகள் எல்லாம் வாதிட்டுவார்கள் இதில் என்ன தப்பு அவன் செஞ்சுருந்தா பார்த்திட்டு போயிருப்பிங்க அப்படித்தான் அதே பெண் செய்தால் மட்டும் வரிஞ்சு கட்டிக்கிட்டு வருவீங்களா குற்ற பத்திரிகை வாசிக்க என்று சுதந்திரம் என்பது பழிவாங்களா
ReplyDeleteவாங்க பூவிழி. அவரோட பதிவைப் படிக்கலை. முகநூலில் பகிர்ந்திருந்தார். பார்த்தேன். பதிவிலும் போய்ப் பார்க்கிறேன். சுதந்திரத்தின் உண்மையான பொருளே இப்போது மாறிக் கொண்டு வருகிறது.
Deleteஇந்தப் படம் பற்றி உங்கள் பதிவு மூலம் தான் அறிகிறேன். பெண் உரிமை என்று சொல்லிக் கொண்டு இப்போது வேறு ஒரு ரூபத்தில் வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கி சமூகத்தைச் சீரழித்துக் கொண்டு இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. கணவன் மனைவி உறவுக்குள் விரிசல் என்றால் நீங்கள் சொல்லி இருப்பது போல் பிரிந்து வேறோரு நல்ல ஆணுடனான வாழ்க்கையையோ அல்லது பெண் தன் காலின் நின்று தைரியமாக நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம். இது ஆணுக்கும் சேர்த்துத்தான். ஆனால் இப்படியான ஒன்றை காதல் என்று சொல்லி எப்படி விருதுகள் பெறுகிறார்கள் அல்லது அந்த ஜுரியும் எப்படி இதை ஜஸ்டிஃபை பண்ணி விருது கொடுக்கிறார்கள்? விருதுகளும் கேவலப்படுத்தப்படுகின்றன...
ReplyDeleteபடம் பார்க்கவேண்டும் என்று சுத்தமாகத் தோன்றவில்லை.
நல்ல பதிவு கீதாக்கா
கீதா
வாங்க கீதா/தில்லையகத்து! முகநூலில் நீங்கள் இல்லை என்பதால் தெரியவில்லை! இதிலே லக்ஷ்மி என்று பெயரைத் தேர்ந்தெடுத்ததோடு இல்லாமல் இருபக்கங்களிலும் யானை துதிக்கையைத் தூக்கிக் கொண்டு கஜலக்ஷ்மிக்கு இருக்கிறாப்போல் வேறே வருதாம்! :( என்னத்தைச் சொல்ல! இதுக்கெல்லாம் விருது கொடுக்கிறவங்களைத் தான் சொல்லணும்!
Deleteபடத்தைப் பார்க்கவில்லை. ஆதலால் கருத்து கூற இயலா நிலை.
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா, நானும் படத்தைப் பார்க்கவில்லை. எல்லோரும் எழுதினதை வைத்துத் தான் சொல்லி இருக்கேன்.
DeleteJust aping western culture தான் பெண்ணியம் என்னும் கருத்து தவறானது தவறான புரிதல்களே காரணம்
ReplyDeleteவாங்க ஐயா, நீங்க சொல்வது சரியே!
Deleteகீதாக்கா எனக்கு கைகள் துடிக்கின்றன, உதடுகள் நடுங்குகின்றன.. வாய் உளறுகிறது.. அறிவு சொல்கிறது பேசாமல் இரு உனக்கிண்டும் சந்திராஸ்டமம் தொடர்கிறது என:).. ஆனாலும் மனசு கேட்குதில்லை:).. இதில் விவாதிக்க எல்லாம் நான் வரப்போவதில்லை.. ஒருசில கருத்துக்களை மட்டும் சொல்லிவிட்டு ஓடிவிடுகிறேன்ன்... என்னை ஆரும் திட்டப்போறீங்க எனில்.. சிரிச்சுச் சிரிச்சுத் திட்டுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:).. ஏனெனில் சிரிச்சுக்கொண்டு திட்டினால் நான் நினைப்பேன் அன்பா ஏதோ சொல்கிறார்கள் என.
ReplyDeleteபடம் பற்றியோ, வீடியோ பற்றியோ எதுபற்றியும் நான் இங்கு பேசவில்லை, ஆனா, ஒரு பெண்ணை ஒரு ஆணை நம்பி மணம் முடித்து ஒப்படைக்கும்போது, அப்பெண்ணை முழுவதும் பொறுப்பேற்று, அவவை சந்தோசமாக வைத்திருக்க வேண்டியது அந்தக் கணவனின் கடமை, அப்படி எனில்தான் அவர் கணவன்...
ஆணின் துடிப்பு அடங்கிவிடும்.. பெண்ணின் துடிப்பு தொடர்ந்துவிடும்.. அது பிபிசில சிட்டுவேஷன் சோங் போகுது:)..
ஆனா லக்ஸ்மி விசயத்தில், லக்ஸ்மி ஒரு மெஷின் ஆகவே பார்க்கப்படுகிறா.. கணவன் தன் தேவைக்கு மட்டும் மனைவியைப் பயன்படுத்துகிறார், மற்றும்படி மனைவியை ஒரு வேலைக்காரியாகவே நடத்துகிறார்... இருவருக்குள்ளும் பேச்சு வார்த்தை குறைவு, ஒரு ஃபோன் கோல் வந்தால், அது யார் எனக் கேட்பது நோர்மல், அதுக்கு தப்பில்லாத கோல் எனில் சாதாரணமாகப் சொல்லலாமே.. அதை ஒளிக்கும்போது மனைவிக்கு இன்னும் சந்தேகம் அதிகமாகும்... வீட்டில் ஆதரவு கிடைக்காதபோது வெளியே ஒரு குட்டி ஆதரவு கிடைச்சாலும் நம்மை அறியாமல் மனம் அலைபாயும்.. எல்லோரும் மனிதர்கள்தானே...
அதற்காக எல்லை மீறுவது ஏற்க முடியாதது, உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள ஒரு தோள் கிடைக்கும்போது, மனம் அப்பக்கம் சாய்ந்துகொள்கிறது. கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசும் தன்மை இல்லாதபோது பிரச்சனைகள் வரத்தான் செய்யும்... இது ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்கும் பொருந்தும்.
காதலில் விழும் பிள்ளைகளுக்கும் இக்கருத்தைத்தானே சொல்கிறார்கள், வீட்டில் பாசம் காட்ட யாருமில்லாதபோது, வெளியில் பாசம் காட்டுபவரோடு ஒட்டி விடுகிறார்கள் என.. அது மனித இயல்பு..
ஆண் மட்டும் எப்படியும் வாழலாம் ஆனா பெண் இப்படித்தான் வாழ வேண்டும் எனும் மனநிலை மாற்றப்பட வேண்டும்.. ஒழுக்கம் இருவருக்கும் ஒரேமாதிரியானதே...
ஒரு மனைவிக்கு கணவனுக்கு செய்ய வேண்டிய பல முக்கிய கடமைகள் இருக்கிறதுபோல, கணவனுக்கும் மனைவிக்குச் செய்ய வேண்டிய முக்கிய கடமைகள் இருக்கின்றன... அதில் யாராவது உணர்ந்து செய்யத் தவறும்போது குடும்பத்தில் குழப்பம் வரத்தான் செய்யும்... இதில் ஆண் தவறு பெண் தவறு என்றெல்லாம் பக்கம் பார்த்துச் சொல்ல இடமில்லை...
வண்டி ஓடச் சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்... அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்???:).
கீதாக்கா கொஞ்சம் எங்கள் புளொக் போய் என் கொமெண்ட் பாருங்கோ அது உங்களுக்கு...:)
அதிரா, நீங்க இந்தப் படம் பார்த்தீங்களானு தெரியலை! லக்ஷ்மியின் கணவனுக்கு ஒரு தோழி இருப்பதாகத் தான் ஒரே ஒரு ஃபோன் கால் மூலம் காட்டி இருப்பதாகச் சொல்கின்றனர் படம் பார்த்த நண்பர்கள். அதை வைத்து முடிவு கட்ட முடியுமா? பத்து வயசுக்கு உட்பட்ட மகன் வேறு இருக்கிறான் இருவருக்கும். பொதுவாகக் குழந்தைகளுக்கு அந்த வயசு வரும்போது பெற்றோரின் கவனிப்பு பிள்ளைகளிடம் தான் இருக்கும். பத்திலிருந்து பதினெட்டு வயதுக்குள்ளாகப் பிள்ளைகளைக் கவனிக்கவில்லை எனில் அவர்கள் தவறான வழியில் செல்லும் வாய்ப்புகள் உண்டு. அப்போது தம்பதிகளுக்குள்ளே பேச்சு வார்த்தைகள் குறையலாம். அவரவர் விருப்பத்திற்கேற்பச் செய்து வந்ததும், கவனிப்பும் குறையலாம். மேலும் வாழ்க்கையின் நிதரிசனம் என்பது தினமும் உன் சமையல் நன்றாக இருக்கிறது என்று கணவன் சொல்லுவதும், நீ அழகாய் இருக்காய் என்று சொல்லுவதிலும் இல்லை. இதெல்லாம் சினிமாக் கதாநாயக, நாயகிகளிடமே எதிர்பார்ப்பது. சினிமாக்களில் மனைவி காலையில் எழுந்து குளித்துவிட்டுத் தலையில் துணியோடு சுவாமிக்கு தீபாராதனை காட்டிச் சாம்பிராணி போட்டுக் காஃபியை எடுத்துக் கொண்டு கணவனை எழுப்பி பெட் காஃபி கொடுப்பாள். ஆனால் நிஜத்தில் காலைப் பால் காஃபிக்கு வேண்டும் எனில் கணவனோ, மனைவியோ பால் போடுபவரிடம் சொல்லி ஏற்பாடு செய்யணும். இல்லைனா அவங்களே போய் பால் வாங்கிட்டு வரணும்! நிஜத்தில் எந்த மனைவிக்கும் காலையில் எழுந்து குளிக்க நேரம் இருந்தாலும் காஃபியை எடுத்துக் கொண்டு கணவனிடம் கொடுத்துக் கொஞ்ச நேரம் இருக்காது! காலை வேளையின் அவசரங்கள் அப்படி! மாலை வந்தால் வேறு மாதிரி இருக்கும். ஆகவே இதை அவர்கள் தனியாகப் பேசித் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும். அதை விட்டு விட்டுப் பாசம் காட்டுகிறான் என்பதற்காக வேறொருவனிடம் அவன் வீட்டுக்குப் போன அன்றே படுக்கை அறைக்குள் நுழைவது என்பது சற்றும் ஏற்க முடியவில்லை. கணவனின் கடமைகளை மெல்ல மெல்ல மனைவி உணரச் செய்ய வேண்டும். இன்னொருவனோடு பேசும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு தன் கணவனிடம் தனக்கு உரிமையானவனிடம் ஏன் பேசி இருக்கக் கூடாது? மனம் விட்டுப் பேசியும் அவன் மாறவில்லை எனில் பிரிந்து போக முடிவெடுத்திருக்கலாமே தவிர இன்னொருவனைத் தேடிப் போய் ஒரு நாள் அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதில் திருப்தி என்றும் பெண் சுதந்திரம் என்றும் சொல்ல முடியுமா? இது தெரிந்தால் அவள் கணவனிடம் அவளுக்கு என்ன மதிப்பு இருக்கும்? பிள்ளை என்ன நினைப்பான்? குற்ற உணர்வு இல்லாமல் அவளால் இனி பழகவோ பேசவோ முடியுமா? சமூகம் என்ன சொல்லும்? மற்ற ஆண்களும் இப்படி உரிமை எடுத்துக்க முடிவு செய்தால்? ஒரு வேளை சமைத்துப் போட்டால் போதும்! இவள் அழகுனு சொன்னால் போதும், இணங்கி விடுவாள் என நினைத்தால்?
Deleteகீதாக்கா நான் பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்ன்.. நான் மதுரைத்தமிழன் பக்கம் படம் பார்த்தேன்.. பேஸ்புக் பக்கம் எதுவும் தெரியாது, அவரின் போஸ்ட்பார்த்தே அறிஞ்சேன், ஆனா எதுக்கு இதுக்குள் மூக்கை நுழைக்கோணும்.. கொஞ்சம் யோசிப்போம் என நினைப்பதற்குள் அவர் அடுத்த போஸ்ட் போட்டு விட்டார் ....விட்டு விட்டேன்.
Deleteஇப்போ நீங்க தைரியமாக அதை விமர்சனம் எழுதுறீங்க.. இப்படி எழுதத் துணிஞ்ச நீங்க முதலில் படம் பார்த்து விட்டுத்தான் அதுபற்றி விமர்சிக்க வேண்டும், போய்ப் படத்தை ஒரு தடவை பாருங்கோ. பார்க்காமல்.. அவர் சொன்னார் இவர் சொன்னார் எனச் சொல்லிச் சண்டைக்கு வரப்பூடா கர்ர்:)
படம்பார்ப்பதனால் ஒன்றும் நாம் கெட்டவர்கள் என ஆகிடாது, அதேபோல படம் பார்க்காமல் இருப்பதனால் பார்க்காதோர் நல்லவர்கள் எனவும் ஆகிடாது..
மேலே ஸ்ரீராமுக்கு சொல்லியிருக்கிறீங்க... ரோஜாப்பூ ரவுக்கைக்காரிபோல என.. அப்படி இல்லை. அதில் வரும் கணவன் முழுக்க முழுக்க மனைவியத்தலையில் வைத்து தாங்குகிறார்.. உயிரையே மனைவிமேல் வச்சிருப்பார்... அப்படிப்பட்ட கணவனுக்கோ மனைவிக்கொ ஒரு ஆணோ பெண்ணோ துரோகம் செய்தால்.. அவர்களை நடு ரோட்டில் வச்சு துவக்கில் மருந்துபோட்டுச் சுடோணும்...
இப்படத்தில் வரும் மனைவி நடந்த விதம் முழுக்க முழுக்க தப்புத்தான் அதை நியாயப்படுத்த முடியாது. நம் நெருங்கிய நண்பராயினும், வீட்டில் மனைவி இல்லை எனில், பின்பு வருகிறேனே என வாசலிலேயெ திரும்பி விடுவதுதான் நம் பண்பாடு.
ஆனா இங்கு காட்டப்படுவது, முதல் தரம் பேசிய உடனேயெ அதுவும் தனியே இருக்கும் அவர் வீட்டுக்குப் பெண் போகிறார்.. இது கற்பனையில்கூட சாத்தியமில்லாத ஒரு விசயம்.. எந்தப் பெண்ணாவது அப்படிச் செய்வாவோ?.... அதனாலதான் நான் சொன்னேன் மேலே, படத்துக்குள் நான் நுழையவில்லை என.
ஆனா இப்படம் சொல்லவரும் கருத்தை மட்டுமே நான் பொறுக்கிக் கொண்டேன். என் புத்திக்கு எட்டியபடி, இதன் கரு என்னவெனில்....
ஆதிகாலத்தில் பெண்கள் வீட்டில் இருப்பார்கள், ஆண்கள் உழைத்து வருவார்கள்.. பெண்களின் வேலை, ஆணைக் கவனிப்பது வம்சத்தை விருத்தி செய்வது. அதனால் வீட்டுச் சாப்பாடு சரியில்லை எனில் ஹோட்டலுக்குப் போய் விடுவார்.. முந்தானையில் முடிஞ்சு வை எனச் சொல்லிக் கொடுத்தார்கள்.
ஆனா அக்காலம்போல இல்லை இக்காலம்.. அதனால, முன்பு பெண்ணுக்கு மட்டும் சொன்னார்கள்.. இப்போ ஆண்களுக்கும் சொல்கிறார்கள்.. கணவன் சரியாக மனைவியை நடத்தத் தவறினால், மனைவிமாரும் தப்பான வழிக்குத் தள்ளப்பட வாய்ப்புண்டு .... என்பதையே இவ்வீடியோ வில் காட்டப்பட்டிருப்பதாக நான் உணர்கிறேன்.
ஆனா இத்தனைக்கும் அடிப்படைக் காரணம்.. இருவரும் மனம் திறந்து பேசமைதான்... புரிந்துணர்வின்மை.. இதுக்கு மேல் லக்ஸ்மி செய்தது சரி என 200 வீதமும் ஞாயப்படுத்த முடியாது.. முடியாதூஉ.. முடியாதூஊஊஊ... எனத் தீர்ப்பளிச்சு என் பேனாவை உடைக்கிறேன்ன்ன்:)..
அந்த காலம் இந்த காலம் பெண்கள் பற்றி இப்போ கமெண்ட் போஸ்ட் பண்ணினேன் அதே கருத்தை பூஸ் சொல்லியிருக்காங்க
Deleteஅதிரா, நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனாலும் நீங்க சொல்வது போல் அந்தப் பெண் முதல் முறையிலேயே இன்னொரு ஆண் இழுத்த இழுப்புக்குச் செல்கிறார் என்பதைத் தான் என்னாலும் ஒத்துக் கொள்ள முடியவில்லை. மற்றபடி கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பேசித் தங்கள் பிரச்னையைத் தீர்க்க முயல வேண்டும். புரிந்து கொண்டு நடக்காதது கணவன் தப்பு மட்டும் இல்லைனு நினைக்கிறேன். லக்ஷ்மியும் சுமார் பத்து வருஷமாவது வாழ்ந்திருப்பாள் கணவனோடு! அந்த உரிமையில் பேசி இருக்கலாம். எப்படி ஆனாலும் இதை என்னால் நியாயப் படுத்த முடியவில்லை. அதுவும் இந்தக் காலத்தில்! :( பெண்களுக்குத் தவறான வழிகாட்டுதலையே இது செய்யும்.
Deleteஏஞ்சலின், அந்தக் காலமும், இந்தக் காலமும் மாறித் தான் விட்டது! ஆனாலும் காமாட்சி அம்மாவின் கதையில் வந்தாப்போல் அந்த லக்ஷ்மி மௌனமாகக் கணவனுக்கு தண்டனை கொடுத்திருக்கலாம்! இப்படிக் கீழே இறங்கி இருக்க வேண்டாம்!
Deleteசர்ச்சையில் பேசப்படும் என்றதும் சில இடங்களில் மட்டும் பின்னூட்டங்களை வாசித்தேன் ..இப்போ நீங்கவிவரமா சொல்லிட்டீங்க இனிமே பார்க்க வேண்டிய அவசியம் இல்லை .. :) வாழ்க்கையில் நானா செஞ்ச உருப்படியான காரியம் முகப்புத்தகத்தை விட்டு வந்ததுன்னு நினைக்கிறேன் ஹாஹ்ஹா :) இல்லைனா இந்த செய்திகளை அது பற்றிய வாக்குவாதங்கள் எல்லாம் கண்ணில் பட்டு கியூரியசில் பார்த்திருப்பேன் ..
ReplyDelete// ஒப்புமை செய்ய முடியாத அளவுக்கு அருமையான காதல்// அடக்கடவுளே !!!
இந்த கதையை பார்க்கவில்லை பார்க்கும் யோசனையுமில்லை .
புருஷன் ஹெல்ப் பண்ணலைன்னு தடம் மாறுவாராம் பெண் அது அருமையான ஒப்புமை செய்ய முடியாத அளவுக்கு காதலா :(
ஆனா இப்படிப்பட்ட படங்களுக்கு விருது கொடுத்து தவறான முன்னுதாரணத்தை வைக்கிறாரகள் .இப்போல்லாம் நினைச்சா டைவோர்ஸ் என்ற நிலை இருக்கும் காலத்தில் அரைகுறை தெளிவில்லாதவங்க இந்த மாதிரி ஆளாளுக்கு துவங்கினா என்னாறது . நடக்காதுன்னு உத்திரவாதம் தர முடியுமா முடியவே முடியாது சில வருடங்கள் முன் சில அறிவுஜீவி பெண்கள் தங்கள் கணவன்மாருக்கு இரண்டாம் திருமணம் அவர் விருப்பம்னு செஞ்சி வச்சாங்களாம் எல்லாம் தொலைக்காட்சி சீரியல் மகிமையால்தான் .அவள் விகடன் போன்ற புக்சில் படிச்சேன் ...அடுத்தது நான் சொல்வது அவர்களின் அப்பாவி பிள்ளைகளின் நிலை . வெளிநாட்டினர் தங்கள் பிள்ளைகளை எல்லாவற்றுக்கும் தயார் செஞ்சே வளர்க்கிறாங்க அவங்க எத்தனை கல்யாணம் செஞ்சாலும் அதை புரியும் மனப்பாங்கு அவங்க பிள்ளைங்களுக்குண்டு .எங்க சமூகம் வேறு எங்கள் சிந்தனைகள் வேறு
என்னைப்பொறுத்தவரை கணவன் மனைவிக்குள் புரிதல் வேண்டும் நல்ல ஆண்மகனை உருவாக்குவது அந்த தாயிடத்தில் தான் இருக்கு லக்ஷ்மியை பார்த்து வளரும் அவள் மகன் நிலை பரிதாபமும் கேள்விக்குரியதே :(
எங்கள் வீட்டில் வாரம் ஒரு நாள் கணவரும் மகளும் சமையல் :) உப்பு மசாலாவெல்லாம் பாட்டிலோட என் கிட்ட வரும் அளவு டவுட் கேட்டு ஆனாலும் சில நேரம் கிச்சனில் நான் சேர் போட்டு மேற்பார்வை செய்ய சமையல் நடக்கும் .சந்தோசம் என்பது நம்மக்கிட்டதான் இருக்கு அதை தொலைக்காம பாதுகாக்க வேண்டியது நாம் தான்
ஆனா ஒண்ணுக்கா சில பெண்களை புரிந்து கொள்ள முடியாம இருக்கு :) ஒரு பாரதியார் கவிதை சொன்னதும் சுலபமாக வசமாகிவிடுவார்களா அப்படிப்பட்ட ஒன்றை தெய்வீகக்காதல்னு சொல்றவங்க பரிதாபத்துக்குரியோரே
பெண் சுதந்திரம் என்றால் ஆண்களுக்கு சரிசமமான தம் அடிக்கிறது குடிக்கிறது clandestine affair வச்சிக்கிறது இதுதான்னு தவறா புரிஞ்சிக்கிறாங்க நிறையபேர் இது தரித்திரம் அதுங்களே போய் விழுற தரித்திரக்குழி .
அந்த அக்காலத்திலாவது பெண்கள் படிக்கலை கணவனை சார்ந்தே அவர்களின் வாழ்க்கை இருந்தது இப்போ அப்படியில்லையே கணவனை பிடிக்காட்டி தனியே பிரிஞ்சி சொந்த காலில் நிற்பவளாக அல்லது படுக்கைக்கு அழைத்த பரதேசியில் முகத்தில் பளாரெனெ அறைபவளாகவோ லக்ஷ்மியை காட்டி இருக்கலாம்
@ஏஞ்சலின், கதைப்படி லக்ஷ்மியும் வேலைக்குச் செல்கிறாள் என நினைக்கிறேன். ஆகவே வாரம் ஒரு நாளாவது சாப்பாடை வெளியே இருந்து வாங்கி வரலாமே! கணவனுக்கு சமையல் தெரியாமல் இருக்கவும் வாய்ப்பூ உண்டு இல்லையா? லக்ஷ்மி தன் மகனை நினைத்துப் பார்த்திருக்க வேண்டாமோ!
Deleteசந்தர்ப்பங்கள் கிடைத்தால் நல்லவனும் கெட்டுப்போகிறான்(ள்) மனம் என்பதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றுதான் ஆண் தெரிவிக்கிறான் பெண்கள் அப்படிச்செய்வதில்லை நடத்தையில் காட்டுகிறாள் எதையும் யாரலும் நியாயப்படுத்த முடியாது எனக்கு தெரிந்த தம்பதியினர் குழந்தைகள் எல்லாம் பெற்றெடுத்து இன்னும் மனதளவில் சேராதவர்களாக இருக்கிறார்கள்
ReplyDeleteவாங்க ஐயா, ஒரு சில தம்பதிகள் அப்படித் தான் குழந்தைகளுக்காகவே வாழ்கின்றனர். அதையும் தான் பார்க்கிறோம்.
Delete//அதேபோல படம் பார்க்காமல் இருப்பதனால் பார்க்காதோர் நல்லவர்கள் எனவும் ஆகிடாது.. //
ReplyDeleteஇதுக்கு மேலேயும் அமைதியா இருக்க முடியாது இருங்க படத்தை பார்த்திட்டு என் கருத்த சொல்றேன்ன்ன் miyaav
ஏஞ்சலின், இன்னும் படம் பார்க்கவில்லை. இன்னும் 2,3 நாட்களுக்குப் பார்க்கவும் முடியாது! பார்த்தப்புறமும் என் கருத்து மாறும் எனத் தோன்றவில்லை! :)
Delete
ReplyDeleteஎப்போதடா யார் வீட்டுக் கதவு திறக்கும்..நாம் நுழையலாம் என அலைவது பொறுக்கிகளின் வேலை..இயல்பு. நல்லகுடும்பத்து ஆணோ, பெண்ணோ இப்படித் திரிவதில்லை. தங்கள் கஷ்டங்களை, தனிமைகளை அவர்கள் நேர்கொண்டு சந்தித்து நேர்மையான வழியில் கடக்கிறார்கள். எத்தனைத் துன்பம் வந்தும் தங்களை செம்மைப்படுத்திக்கொண்டு மேலும் நன்றாக வாழ்வார்கள் அவர்கள்.
பிரச்சினை அது இது என சாக்குச்சொல்லி கணவனை, குடும்பத்தை புறந்தள்ளி, கண்டவனுடன் சேர்வது, அதில் நியாயம் காணப் பார்ப்பது, கீழ்மையை மேன்மை என எண்ணிக்கொள்வது – இவள்தான் புதுமைப்பெண், இதற்குப் பெயர்தான் பெண்ணீயம் எனச் சொல்லிப் படமெடுப்பார்கள்; அதற்கு இத்தகைய பின்னணியில் வந்தோரே விருதும் கொடுப்பார்கள். இப்படியெல்லாம் நமக்கு சான்ஸ் வராதா என ஏங்கி நாக்கைத் தொங்கப்போட்டு அலைபவர்கள் இதற்குக் கைதட்டுவார்கள்! என்ன ஒரு சமுதாயச் சீர்கேடு ? நானும் இப்படம்பற்றி மீடியாக்களின் அலம்பல்களைப் பார்த்தேன். நமது மீடியா புகழ்கிறதென்றால் அது அபத்தமாகத்தான் இருக்கவேண்டும். ‘மீடியா’ என்கிற பெயரில் அங்கு உட்கார்ந்திருக்கும் ஆட்களின் தராதரம் அப்படி. இவர்கள்தான் சராசரி மக்களுக்கு பெண்ணீயம், காரீயம், புதுமை, புரட்சிபற்றி சொல்லித்தரும் சிந்தனையாளர்கள்.முற்போக்கு மூதேவிகள்… தமிழ்நாடு போகும் பாதை. கலாச்சாரம் என்ற பெயரில் அபச்சாரம். What is immoral is considered moral !
பெண்ணோ, ஆணோ - ’தனிமனித ஒழுக்கம்’ என்று ஒன்றுண்டு. இது ஏதோ ’அந்தக்கால’, ‘பழங்கால’ விஷயமல்ல. எந்தக்காலத்திலும் தன்னைத்தானே நேர்படுத்திக்கொண்டு வாழ்பவனுக்கு, நல்வழியில் செல்லும் நேர்மையாளனுக்கு அவசியமானது. இத்தகையை பண்பே நல்ல சமூகத்திற்கு, பண்பால், நேர்மைத்திறனால் உயர்ந்த சந்ததிக்கு வழிசெய்யும்.
இங்கே கதவு திறக்கலை! தானாக வலியப் போகிறாள் போல! அதுவும் முதல் சந்திப்பிலேயே! வாழ்க்கையில் முக்கியமானவை எத்தனையோ இருக்கிறது. இவள் புதுமைப் பெண்ணெல்லாம் இல்லை. சராசரிக்கும் கீழே!
Deleteஒரு விஷயத்தை அதுவும் சர்ச்சைக்குரிய விஷயத்தை பற்றி பேசும்முன் அதை பார்த்து விட்டு பின்பே நான் விவாதத்தில் இறங்கியிருக்கணும் . இப்போ அதிராவின் பின்னூட்டத்தை பார்த்த பின் நானும் அந்த காணொளியை பார்த்தபின் படம் குறித்த பார்வை சற்று மாறிடுச்சு எனக்கு
ReplyDeleteலக்ஷ்மி பற்றி கருத்து
முதல் சீனில் அந்த பெண்ணின் கண்களில்தான் எத்தனை ஏக்கம் ...அந்த புருஷனை பார்த்தபோது தோன்றியது எருமை அந்த பொண்ணு உன் மனைவிதான போயிட்டு வரேன்னு ஒரு சின்ன புன்னகை அட்லீஸ்ட் ஒரு தலை அசைப்பு கூடவா குடுக்க முடியலை .
அட்லீஸ்ட் போயிட்டு வரேன்மா னு சொன்னா குறைஞ்சா போயிருவ ..
ஒரு காட்சியில் இரயில் சந்திப்பு அவன் ஒரு OPPORTUNIST அவன் சொல்லும்
அழகா இருக்கேன்னு ஒரு வார்த்தைக்கு எவ்ளோ சந்தோஷப்படறா அந்த பொண்ணு உண்மையில் பாவம்
தனக்கு ஒன்று தேவை அதை அடையணும் இந்த வெறி மட்டுமே கதிரின் பேச்சிலும் பார்வையிலும் தெரியுது .அது பெரும்பாலான பெண்களுக்கு புரியும் .அதை புரியும் மனநிலையில் லட்சுமி இல்லாமற்போனதுக்கு காரணம் அந்த கணவன் .
அந்த சந்தர்ப்பவாத மிருகங்களுக்கு தான் தனது பசி அது மட்டுமே தெரிந்தது ..
இந்த படத்தில் வரும் லக்ஷ்மி ஒரு சாதாரண குடும்பத்து பெண் ..அவளின் எதிர்பார்ப்பு அன்பான நட்பான ஒரு பார்வை அவளது கணவனிடமிருந்து .ஆனால் எல்லாரும் லக்ஷ்மியை திட்டுகிறார்கள் அந்த மனிதனை ஒண்ணுமே சொல்லலியே ??
ஆனால் லட்சுமி செய்தது சரி என்றோ நியாயம் என்றோ ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன் .ஆண் பெண் இருவரில் தவறு இருக்கு .
இந்த குறும்படம் லக்ஷ்மி புருஷங்களுக்கெல்லாம் ஒரு அலார்ம் அடிச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கும் :)
இந்த படத்துக்கு விருது பற்றி சொல்லியிருக்கீங்க அநேகமா அது அந்த பெண்ணின் நடிப்பிற்கு மட்டுமே கிடைத்திருக்கும் .
கதை என்று ஒன்றுமில்லை முந்தி பாலசந்தர் படங்கள் வந்தப்போ சோஷியல் மீடியா இல்லை இப்போ இருக்கு அவ்ளோதான் வித்யாசம்
//இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்லி ரொம்பவே சிபாரிசு செய்திருந்ததோடு, ஒப்புமை செய்ய முடியாத அளவுக்கு அருமையான காதல் என்றெல்லாம் சொன்னார்கள். இப்படியான காதல் குறிஞ்சி மலர் போலத் தான் என்றோ வரும் என்றும் சொன்னார்கள்//
அந்த கதிர் குள்ளநரி ஒரு அப்பாவி பொண்ணை தன் சபலத்துக்கு தனது தேவைக்கு பயன்படுத்தியிருக்கான்
இதையா அருமையான காதல்னாங்க ஞே ங்கே !!!!!!!!!
ஏஞ்சலின், சிலருக்கு உணர்வுகளை வெளிக்காட்டத் தெரியாது! லக்ஷ்மியின் கணவன் அப்படிப் பட்டவனாக இருக்கலாம் இல்லையா? கணவனை ஏன் திட்ட வேண்டும்? திட்டுவதெனில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட கதிரைத் தான் திட்டணும்! லக்ஷ்மியின் கணவனுக்கு உண்மை தெரிந்தால் எப்படி நடந்துப்பானோ!
Delete//பெண் குலத்தையே பெண் சுதந்திரம் என்னும் பெயரில் இழிவு செய்திருக்கின்றனர். //
ReplyDelete//கலாசாரம் மாறுகிறதா? மாறி விட்ட கலாசாரமா?//
ஆண்-பெண் (வளர்ந்தவர்களை மட்டும்) இறைவனின் படைப்புக்கள் இருவரின் உடலமைப்பில் உள்ள சிறிய வேறுபாடுகளால் தானாகவே வளரும் குணபேதங்களைத் தவிர ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிய வேறுபாடுகள் இல பேனைப்பெருமாளாக்குவது மனித இயல்பு எனவே சிறிய வேறுபாடுகளை பெரிதாக ஊதி ''பெண் குலத்துக்கே இதுதான் குணம்'' என்று பொதுவாக்கி அப்பெண்ணை எங்கே எப்படி வைத்தால் தனக்கு நலம் எல்லாவழிகளிலும் என்று ஆண் செய்தததுதான் கலாசாரம் அல்லது வாழ்க்கைப்பண்பாடு பெண் ஆணுக்காக படைக்கப்பட்டவள் என்பதுதான் அக்கலாச்சாரத்தின் அடிப்படை இக்கலாச்சாரத்தை இறைவன் செய்ததாக வடிவமைத்தது மதவாதிகள்
இக்குறும்படத்தில் வரும் பெண்ணை ஆண் கட்டமைத்த பெண்-மைய கலாச்சாரத்தின் பிரதிநிதியாகப் பார்க்கும்போது கோபம் எழுகிறது தனிநபராக பார்த்தால், அல்லது எக்கலாச்சார கட்டமைப்பின் கீழ் வராத நபராகப் பார்த்தால் - அங்கே வாதத்துக்கே இடமில்லை அவள் செய்ததது எனக்குப் பிடிக்கவில்லை என்று ஒரே வரியில சொல்லிவிட்டு நகரலாம் சினிமா எனப்து அனைத்தையும் காட்டுவது; நமக்குப் பிடித்தது, பிடிக்காதது எல்லாம் அடங்கும்
வாங்க விநாயகம், முதல் வரவு? கலாசாரப் பிரதிநிதி எனக் காட்டுவதினால் தான் கோபமே! சினிமா எல்லாத்தையும் காட்டும் தான்! இல்லை என்று சொல்லவில்லை! ஆனால் சமூகத்தைத் திருத்தும் முறையில் நல்ல கருத்துக்களைச் சொல்லலாமே!
DeleteShouldn't a woman be an individual and decide and act upon what is good for her? Can't we see Lakshmi of the film as an individual? Why do we expect that she should have behaved to get our approval
ReplyDeleteWhy should she live as a representative of a culture? Whose culture is it anyway?
I don't have any personal view on the film as I've not seen it
விநாயகம் ஐயா, நானும் படத்தை இன்னமும் பார்க்கவில்லை! கலாசாரம் என்று எல்லோருமே சொல்லிட்டு இருக்காங்க! தமிழ் நாட்டுக் கலாசாரம் என்று. அதைத் தான் இங்கே குறிப்பிட வேண்டி இருக்கு! மற்றபடி லக்ஷ்மி என்னும் பெண் எப்படிப் போனால் நமக்கு என்ன? இது ஓர் எடுத்துக்காட்டு எனவும் பாரதியின் புதுமைப் பெண் எனவும் சொல்வதால் பேசும்படி ஆகிறது! :(
Deleteஓ,,,,இயக்குனரே கதாபாத்திரத்தை கலாச்சாரத்தில் உள்ளே வைத்து நம்மை பார்க்கவைக்கிறார் என்கிறீர்கள் எனவே நாமும் ''அட அது நம்ம கலாச்சாரமே! கதாபாத்திரம் சரியாக அதனுள் வருகிறாளா இல்லை உடைக்கிறாளா?'' என்று பார்ப்பது சரிதானே என்கிறீர்கள்--- நன்று பார்க்கலாம்தான் ஆனால இயக்குனர், தன் படைப்பு கலாச்சாரத்திலிருந்து வந்த வெளிப்பாடு; பின்னர் அப்படைப்பு தெறித்து வெளிச்செல்கிறது என்று வைத்தேன் என்று சொன்னால்தான் உங்கள் கணிப்பு சரியாகும் பின்னர் இப்படம் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இயக்குனர் பொதுஇடத்தில் தன்னிலை விளக்கம் கொடுக்கும்போது நமக்கும் தெரியவரும் அது வரை என் ஊகம் அங்கே கலாசாரமில்லை உங்கள் ஊகம் இருக்கிறது
Deleteபாரதியாரின் பாடல்களை எப்படி பயனபடுத்த வேண்டுமென்பது அவரவர் விருப்பம் அவரின் பாடல்கள் தனியார் சொத்தல்ல. கருநாநிதி 50 ஆண்டுகளுக்கு முன்பேயே பாரதியாரின் புதல்விகள் விருப்பத்தினை பெற்று அரசுடைமையாக்கினார் எப்படி ஆளாளுக்கு இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமென்கிறீர்கள் என்று புரியவில்லை ஆனால் ஆதங்கப்படுவதில் தவறில்லை
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்று ஒரு சிறந்த தமிழ்த் திரைப்படம் வந்தது அதில் ஒரு பொறுக்கி ஒரு பெண்ணை ஏமாற்றிக்காதலிக்க பயன்படுத்திக்கொண்டது பாரதியாரின் வரிகளைத்தான் அவன் தன் வலையில் வீழ்த்த விரும்பும் பெண்ணுக்கு அவரின் கவிதைகள் மீது கொள்ளை ஆசை என்று தெரிந்தான் பின்னர் பயன்படுத்துகிறான் (அப்பாஸ்-அவன்; ஐஸ்வர்யா ராய்- அவள்)
பாலச்சந்தரின் தப்புத்தாளங்கள் படத்திலொரு பொறுக்கி ஒரு பெண்ணை வலைவிரிக்கிறான் அவள் வீட்டுக்கு தற்செயலாக வரும்போது, அவளின் தாயைச் சந்தித்து உரையாடுகிறான் தாய்க்கு தமிழ் இலக்கியம் - குறிப்பாக ஜயகாந்தன் போன்ற நவீன எழுத்தாளர்கள் மேல் ஒரு ஈர்ப்பு என்று கண்டறிந்து பின்னர் அவளை ஒரு பல்பொருள் அங்காடியில் சந்திக்கும்போது, சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நாவலை பரிசளிக்கிறான் பின்னர்? பின்னரென்ன? தாயை வீழ்த்தி விடுகிறான் தமிழ் இலக்கியத்தின் பிரபல எழுத்தாளரின் படைப்புக்களையும் அவரைப்பற்றி பேச்சுக்களையும் வைத்து
பெண்ணை பொறுக்குவோர் பெண்ணின் விருப்பு வெறுப்புக்களை ஆய்வர்; பின்னர் தனக்கும் அவற்றில் நாட்டம் அதிகம் இருப்பதாக காட்டிக்கொண்டு அப்பெண்ணை வலையில் சிக்க வைப்பர்
ஆக, இங்கே நாமறிவது: பாரதியாரின் பாடல்கள் அல்ல; ஜயகாந்தனின் நாவலகள் அல்ல; மாறாக எப்படி இலக்கிய ஆர்வத்தைப் பயனபடுத்தி ஒரு பெண்ணை ஒருவன் வீழ்த்துக்கிறான் எனபதே
Please avoid Ayyaa to address me It makes me feel uncomfortable with undeserved addresses.
Pa Vinayagam
https://throughalookingglassalaymanreflects.wordpress.com
/பிரச்னைகளை எதிர்கொள்ளத் தான் வேண்டும்! தவிர்த்தால் இல்லைனு ஆயிடுமா? இங்கே பெண் குலத்தையே பெண் சுதந்திரம் என்னும் பெயரில் இழிவு செய்திருக்கின்றனர். அதுவும் பாரதியாரின் பெயரைச் சொல்லி! அவர் சொன்ன நிமிர்ந்த நன்னடையும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இதிலே இருக்கா என்ன? பாரதியின் பாடலைச் சொல்லி அந்தப் பெண்ணை வியப்பில் ஆழ்த்தி வீழ்த்துகிறானாம்! பாரதி கற்பு நிலை என்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்றும் சொல்லி இருக்காரே! அதை ஏன் சொல்லவில்லை?//
ReplyDeleteஆணித்தரமான, அருமையான கருத்துக்கள்!
Hats off to yo!!
லட்சுமி குறும்படம் இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு கருத்து கூறுவதுதான் முறை. எனவே பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்தேன். ஏற்கனவே தாமதம்(வழக்கம்போல) அதனால் உங்கள் கருத்துக்கு பதில் மட்டும் கூறி விடுகிறேன்.
ReplyDeleteஇதே கதை (rapport இல்லாத தம்பதிகள் , ஒத்த ரசனை கொண்ட முன்றாவது ஆள்) கொண்ட மலையாள சினிமா ஒன்று பார்த்திருக்கிறேன். மம்முட்டி,மீரா ஜாஸ்மின் நடித்தது. தன் இரு குழந்தைகளோடு கணவனை விட்டு விட்டு காதலனை தேடி வரும் மீரா ஜாஸ்மினை மம்முட்டி ஏற்றுக் கொள்வதாக படம் முடிந்திருக்கும். அப்படி ஏற்றுக் கொண்டாலும் அந்த குழந்தைகளின் மனதில் இது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? குறிப்பாக ஆண் குழந்தைகளை பெரிதும் பாதிக்கும்.
இப்படிப்பட்ட படங்கள் மூலம் அந்த படைப்பாளிகள், மனைவியை கொஞ்சம் கவனியுங்கள் என்று ஆண்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்தாக இருக்க முடியாது. பெண்ணுக்கென்று தனி மனமும், உணர்வுகளும் உண்டு. அதற்கு மதிப்பளியுங்கள் என்பதை இப்படி சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
@பா.விநாயகம்: கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் அப்பாஸ் கதாபாத்திரம் பொறுக்கி அல்ல,சுயநலமான சந்தர்ப்பவாதி.
ReplyDelete