ஒரு வாரமாய்க் கடுமையான ஆஸ்த்மா தாக்குதல். இம்முறை பலமாகத் தன் வீரியத்தைக் காட்டி உள்ளது. போன ஞாயிறன்று இரவு லேசாய்த் தொண்டை வலிக்கையிலேயே கொஞ்சம் பயமாகவே இருந்தது. திங்களன்று முழு ஓய்வும் எடுத்துக் கொண்டேன். என்றாலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. புதனன்று மருத்துவரிடம் செல்லும்படி ஆகி விட்டது. அன்றும், மற்றும் வெள்ளிக்கிழமையும் நெபுலைசர் வைத்துக் கொண்டு வந்தாச்சு. நேற்று மறுபடி போயிருக்கணும். திடீர் விருந்தினர் வரவால் போக முடியவில்லை. இன்று காலை போகணும். கணினி பக்கமோ, முகநூலோ, பதிவுகளோ எதுவும் பார்க்கவில்லை. தலையே தூக்க முடியவில்லை. நேற்று மாலையிலிருந்து கொஞ்சம் பரவாயில்லை. அதோடு ஜூரம் வேறு! நேற்று இரவு ஒரு நிமிடம் கூடக் கண் அசரவில்லை. ஒரே இருமல் மயம்! விதவிதமான சப்தங்களில் வெவ்வேறு சுருதிகளில் என்னோடமூச்சுக்காற்று என்னையே பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
நானும் எழுந்து உட்கார்ந்து பிராணாயாமம் எல்லாம் பண்ணிப் பார்த்தேன். பண்ணிச் சிறிது நேரம் வரைக்கும் பேசாமல் இருக்கிறது அப்புறமாத் தன் வேலையைக் காட்டுகிறது. வீட்டில் எல்லாம் போட்டது போட்டபடி இருக்கு. சமையலறை மட்டும் தலைகீழா மாறி இருக்கு! ஹிஹிஹி, ரங்க்ஸ் கைவண்ணம்! காஃபி மட்டும் தான் நான் போட்டேன். அவர் போட்டால் குடிக்கிறதுக்கு ஆள் தேடணுமே! மெல்ல மெல்லச் சரியாகிக் கொண்டு வருகிறது. ஆனால் யாருமே நான் எங்கேனு தேடலை! அப்பாடானு நினைச்சிருப்பாங்க! ஹிஹிஹிஹி! இல்லைனா வம்புக்கு பதில் சொல்லணுமே! ஆனாலும் விடுவேனா என்ன? வந்துட்டேனே!
நானும் எழுந்து உட்கார்ந்து பிராணாயாமம் எல்லாம் பண்ணிப் பார்த்தேன். பண்ணிச் சிறிது நேரம் வரைக்கும் பேசாமல் இருக்கிறது அப்புறமாத் தன் வேலையைக் காட்டுகிறது. வீட்டில் எல்லாம் போட்டது போட்டபடி இருக்கு. சமையலறை மட்டும் தலைகீழா மாறி இருக்கு! ஹிஹிஹி, ரங்க்ஸ் கைவண்ணம்! காஃபி மட்டும் தான் நான் போட்டேன். அவர் போட்டால் குடிக்கிறதுக்கு ஆள் தேடணுமே! மெல்ல மெல்லச் சரியாகிக் கொண்டு வருகிறது. ஆனால் யாருமே நான் எங்கேனு தேடலை! அப்பாடானு நினைச்சிருப்பாங்க! ஹிஹிஹிஹி! இல்லைனா வம்புக்கு பதில் சொல்லணுமே! ஆனாலும் விடுவேனா என்ன? வந்துட்டேனே!
உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளவும். மன்னிக்கவும், நீங்கள் வரவில்லை என்பதை நான் கவனிக்கவில்லை. சாதாரணமாய் நினைத்து விட்டேன். ரொம்ப நாள் கழிச்சு வருதோ? இடைப்பட்ட நாட்களிலும் இதற்கான மருந்துகள் எடுத்து வந்தீர்களா? சாப்பாடு வெளியில் ஆர்டர் கொடுத்து விட்டீர்களா? மாமா பாவம், எப்படி ஒண்டியாய்ச் சமாளித்தார்?
ReplyDeleteபரவாயில்லை ஶ்ரீராம், சாதம் மட்டும் வீட்டில் வைத்துக் கொண்டு சாம்பார், ரசம், காய் வாங்கி வந்தார். :) மருந்துகள் எப்போதும் எடுத்துக் கொண்டு வருகிறேன். :)
Deleteவிரைவில் பூரண நலம் பெற்று வாருங்கள்..
ReplyDeleteநன்றி மிகிமா!
Deleteஇந்த திடம் போதும்.
ReplyDeleteசமாளித்து விடலாம்
வாங்க ரிஷபன் சார், என்னோட உடம்பு நிலையாவது உங்களை இங்கே வர வைச்சது! நன்றி
Deleteநலம் பெற பிரார்த்தனைகள்
ReplyDeleteநன்றி அவர்கள் உண்மைகள்.
Deleteநலமுடன் கருத்துப்போரிட வாழ்த்துகள்.
ReplyDeleteவந்துடுவோமுல்ல! கில்லர்ஜி! நன்றி
Deleteஅக்கா....முதல்ல உங்கள் ஹெல்த் முக்கியம்!!! ப்ளீஸ் டேக் கேர். உங்களுக்குச் சொல்லணும்னு இல்லை...எங்களை விட அனுபவம் நிறைந்தவர்...சீக்கிரம் குணமாகி மீண்டும் கலக்குவீங்க!!பிரார்த்தனைகள்
ReplyDeleteஉண்மையில் நான் தினமும் உங்கள் பதிவு வந்துருக்கானு பார்த்தேன் ஏன்னா என் கணினியும் தகராறு இல்லையா...ஸோ அப்போ மிஸ் பண்ணிட்டோமானு பார்க்க....மட்டுமல்ல உங்கள் பதிவுகள் பெட்டிக்கும் வராது....ப்ளாகர்ல பார்த்தாத்தான் உண்டு. இப்ப ப்ளாகர் ரீடிங்க் லிஸ்டும் பல சமயத்துல ஓபன் ஆறதில்லை கணினியின் ஓல்டேஜ் பிரச்சனையால்...ஹிஹிஹி..
நீங்க வாட்சப்ல லிங்க் போட முடியாட்டியும் பதிவு போட்டுருக்கேனு ஒரு இண்டிக்கேஷன் கொடுக்க முயற்சி பண்ணுங்களேன் அக்கா...இன்று ப்ளாகர் டீடிங்க் லிஸ்ட் முதலில் ஓபன் ஆயிடுச்சு அதனால உங்க பதிவு வந்ததும் தெரியும்...எங்கள் ப்ளாக் கூகுள்ல அடிச்சப்பவே உங்க ப்ளாக் பெயர் எண்ணங்களும் அடிச்சேன் வந்துருச்சு அதான் தெரிஞ்சுது நீங்களும் போட்டுருக்கீங்கனு...
உடல் நலம் பார்த்துக்கங்க அக்கா. வீடு அப்படியும் இப்படியும் இருந்தால் பரவாயில்லை...சரி செஞ்சுக்கலாமே...ஆனா உடல் நலம்..தான் முக்கியம்....இப்போது மழைக்கு முன் ஜுரம் என்றால் மழை ஓய்ந்த பின் இங்கு ஜுரம் சளி இருமல் என்று ....வருகிறதாம். அங்கு குளிர் தெரிய ஆரம்பித்துவிட்டதா? காலனிலை மாற்றமாக இருக்கலாம் அக்கா. டேக் கேர்
கீதா
@தில்லையகத்து கீதா! எனக்கு வாட்சப்பில் லிங்க் கொடுப்பது, தமிழில் எழுதுவது எல்லாம் இன்னும் சரியாகப் புரியவில்லை! குளிர் ஒண்ணும் பண்ணாது. இந்த இரண்டுங்கெட்டான் மழையும் பெய்யாமல் வெயிலும் அடிக்காமல் ஒரே வியர்வைக்குளியல்! அதான் உடம்பைப் படுத்துது! :)
DeleteTc Amma !!! Come with double power now !!!
ReplyDeleteநன்றி தம்பி
Deleteநான் தேடினேன்... எங்கயோ ஒளிஞ்சு விளையாடறீங்கன்னு நெனச்சேன்... கண்ணனோட குணம் உங்களுக்கும் அப்படியே....
ReplyDeleteவாங்க தமிழ்ச்செல்வி, முதல்வருகைக்கும் என்னைத் தேடினதுக்கும் நன்றி.
Deleteஅச்சோ! ஶ்ரீரங்கம் போன பிறகு இந்த தொல்லை இல்லைன்னு நினைச்சேன்! :(
ReplyDelete@திவா, தொந்திரவு இல்லாமல் தான் இருந்தேன். 2016 இல் கல்கத்தா போனப்புறமாத் தொந்திரவு வந்தது. அதுக்கப்புறம் ஒண்ணும் பிரச்னை இல்லை. இப்போக் கொஞ்சம் வீரியமான தாக்குதல்! :(
Deleteபிளாக் எங்கே போய்விடப் போகிறது. முதலில் உங்கள் உடல்நலனை பாருங்கள். விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்.
ReplyDeleteநன்றி வெங்கட்!
Deleteஉடல் நிலையைப் பார்த்துக்கொள்ளுங்கள். இன்னும் குளிர்காலம் இரண்டு மாதங்களாவது இருக்கிறது.
ReplyDelete"அவர் போட்டால் குடிக்கிறதுக்கு ஆள் தேடணுமே! " - இதுதானே வேணாம் என்பது. சமையலறையில் உங்களுக்காக உதவி செய்தால் குறை சொல்லலாமோ? அதுவும்தவிர, ரொம்ப டேஸ்டியா அவர் சமைக்க ஆரம்பித்தால், உங்களுக்கு சீக்கிரம் எழுந்து நாம வேலை செய்ய ஆரம்பிப்போம் என்று தோன்றுமா?
வாங்க நெ.த. நம்ம ரங்க்ஸ் வைக்கும் சாம்பாரைக் குழந்தைங்க ரெண்டு பேரும் இப்போவும் கிண்டல் பண்ணுவாங்க. மேலே ரசம்! அடியிலே சாம்பார்! நல்லவேளையாத் தானுக்கு முருங்கைக்காய், கத்திரிக்காய், முள்ளங்கினு போடாமல்தக்காளியையே போட்டுடுவார். :) குளிர்காலம் என்னை எதுவும் செய்யறதில்லை. கயிலைக் குளிரே தொந்திரவு கொடுக்கலை! கீழே இறங்க இறங்கத் தான் தொந்திரவு செய்தது! :)
Deleteஉடல்நிலையை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.சிலஸமயம் எல்லாவற்றிற்கும் பலனில்லாது திண்டாட வேண்டி இருக்கும். நான் டில்லியை பை சொல்லிவிட்டு நேற்று மும்பை வந்திருக்கிறேன். அவ்விடத்திய பிள்ளை கொண்டு விட்டுப் போனான். எவ்வளவோ பேரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேனே தவிர எதுவும் இல்லை. சீக்கிரம் குணமாக வேண்டுகிறேன். ஆசிகள். அன்புன்
ReplyDeleteநன்றி அம்மா. உங்கள் அன்பான வார்த்தைகள் ஆறுதலாக இருக்கின்றன. மும்பையில் கொஞ்சம் குளிர் குறைவாக இருக்கும். என்றாலும் நீங்கள் நேபாள், ஸ்விட்சர்லாந்து போன்ற இடங்களில் இருந்தவர்! என்றாலும் உங்கள் உடல் நலத்தையும் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.
Deleteலக்ஷ்மி குறும் படத்திற்கு விமர்சனம் எழுதிய பிறகு ஒன்றுமே எழுதவிலையே என்று ரெண்டு நாட்களாக மண்டை குடைச்சல். தினமும் உங்கள் பதிவை திறந்து பார்த்து ஏமாறகிறேன். இன்று ஃபோன் பண்ணி விசாரிக்கலாம் என்று நினைத்தேன். ப்ளாகும் நாங்களும் எங்கும் ஓடிப்போக மாட்டோம். Take care.
ReplyDeleteநன்றி பானுமதி தேடியதுக்கு! கொஞ்சம் தாமதமாகத் தான் மருந்துகள் பலன் தருகின்றன. மெதுவாத் தான் வருவேன். :)
Deleteசிஸ் நீங்கள் கணனி பிராப்லம் செயகிறது அவ்வபோது என்று சொல்லி கொண்டு இருந்திர்கள் அல்லவா அதுதான் நானே நினைத்து கொண்டேன் இப்பொழுது பரவாயில்லையா சிஸ் சீக்கிரம் உற்சாகத்துடன் வர வேண்டிக்கொள்கிறேன்
ReplyDeleteவாங்க பூவிழி! கணினி இன்னும் சரியாகலை. அதையும் பார்க்கணும்! கனிவான விசாரணைக்கு நன்றி
Deleteநான் தேடினேன் :) எப்படி தெரியுமா டெய்லி எங்கள் பிளாக் இடப்பக்க சைட் பாரை பார்ப்பேன் உங்க புது போஸ்ட் வந்திருக்கான்னு போஸ்ட் வராததால் நினைச்சேன் நீங்க பிஸின்னு ..
ReplyDeleteடேக் கேர் அக்கா .
ஹாஹாஹா, எஞ்சலின், தேடியதற்கு நன்றி.
Deleteஆஆஆவ்வ்வ் என்னாதூஉ கீதாக்காவுக்கு வீசிங்கா? ஆஆஆ உடனுக்குடன் மருந்தெடுங்கோ.. சிலர் மருந்தெடுக்கப் பயந்து ஒழுங்காக எடுப்பதில்லை... கொஞ்ச நாளைக்கு இருக்கோ இல்லையோ தொடர்ந்து இன்ஹீலர் பாவியுங்கோ.
ReplyDeleteநான் கடந்த 2 நாளாகத்தான் யோசிச்சேன் காணல்லியே என.. நேற்று எங்கள் புளொக்கை உங்களுக்காகவே ரீ பிரெஸ் பண்ணினேன் பல தடவை உங்கள் கொமெண்ட் ஏதும் வந்திருக்கோ என.. ஆனா யாரையும் காணவில்லை எனில், எடுத்தோம் கவிழ்த்தோம் என சுகயீனமாக்கும் என எப்பவும் நினைப்பதில்லை.. ஏதோ பிஸிபோல எனத்தான் நினைப்பேன்.. அதனால அவசரப்பட்டு யாரையும் தேடுவதில்லை.. நீங்கள் இன்னும் 2 நாள் பேசாமல் இருந்திருந்தா தேடியிருப்போம்:) இது குறைமாதக் கொயந்தைபோல:).. அவசரமா போஸ்ட் போட்டிட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.. சரி விடுங்கோ.. குளிர்காலம் ஆரம்பிச்சாலே ஏதோ ஒரு வருத்தம் கூடவே வந்திடும்.. ரேக் கெயார்...
வாங்க அப்பாவி, மருந்துகள், ஊசிகள், நெபுலைசர், அதைத் தவிர்த்து இன்ஹேலர் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறேன். என்றாலும் இன்னும் பூரணமாகக் குணம் ஆகவில்லை. இரண்டு நாட்களாகக் கொஞ்சம் எழுந்து உட்கார முடிகிறது.
Deleteநீங்கள் ஊருக்கு போய் இருப்பீர்கள் என்று நினைத்தேன்.
ReplyDeleteஉடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
சார் ஒத்தாசை செய்வது மகிழ்ச்சி.
தினம் மூச்சு பயிற்சி செய்யுங்கள்.
இங்கும் குளிர் ஆரம்பித்து விட்டதால் ஜலதோஷம், இருமல் என்று வீட்டில் எல்லோருக்கும்.
மருந்துகள் மருமகள் கொடுத்தாள், எடுத்துக் கொண்டும் இருமல் விடாது கஷ்டம் கொடுத்தது. மகனின் நண்பர் வீட்டில் முசுமுசுக்கை, துளசி, ஓமவல்லி வைத்து இருந்தார், அவர் அம்மா இதை போட்டு கஷாயம் போட்டு குடிங்கள் சரியாகும் என்றார் இரண்டு வேளை குடித்து விட்டோம்.பரவாயில்லை.
குளிருக்கு முதுகுவலி, தலைவலியும் வருகிறது.
வாங்க கோமதி அரசு, அவருக்கு முடிஞ்சால் சமையலே பண்ணிடுவார். இப்போல்லாம் முடியறதில்லை. நானும் திப்பிலி, சுக்கு, மிளகு கஷாயம் வைத்துக் குடிக்கணும்னு நினைக்கிறேன்.
Deleteஉடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள்.
ReplyDeleteநன்றி முனைவர் ஐயா!
Deleteநீங்கள் முழு உடல்நலன் பெற எனது பிரார்த்தனை.
ReplyDeleteநன்றி ஐயா!
Delete