வேப்பமரம் அதன் வழக்கம்போல் தெருவுக்கே நிழல் கொடுத்துட்டு இருக்கு!
ம்ம்ம்ம், இது பழைய மடிக்கணினியில் சேமித்து வைக்கப் பட்ட படம். புதுக் கணினியிலே திடீர்னு மவுஸ் வேலை செய்யலை. எனக்குக் கையால் இயக்கும்போது வேகம் வரலை என்பதோடு கையும் தகராறு செய்யும்! ஆகவே பழைய மடிக்கணினியை எடுத்து வைச்சுட்டு இருக்கேன். அதிலே தான் இப்போ வேலை செய்யறேன். சரியா வருதானு பார்க்கத் தான் இந்தப் பதிவு!
படங்களும் போன வருஷம் காமிராவில் எடுத்தது!
//கண்ணில் ரத்தம் வருது//
ReplyDeleteவாடகைக்கு இருப்போருக்கு இதன் வலி புரியாது.
வாங்க கில்லர்ஜி! ஆமாம், இது உண்மையே! நாங்க அரசாங்கக் குடியிருப்பையே சுத்தமாக வெள்ளை அடித்து வைச்சுண்டோம்! :(
Deleteஇது என்ன அநியாயமா இருக்கு. நிறைய இடத்துல உரிமையாளர் சரியில்லை (எதுவும் மாத்த மாட்டாங்க, எல்லாப் பிரச்சனையும் வாடகைக்கு இருக்கறவங்க தலையில). சில இடங்கள்ல உரிமையாளர் நல்லா இருப்பாங்க, வாடகைக்கு இருக்கறவங்க வீட்டை நல்லா வச்சுக்க மாட்டாங்க, போகும்போது மின்சார பில் பாக்கி வச்சுட்டு கம்பி நீட்டிடுவாங்க. என்ன பண்ண?
ReplyDeleteஆமாம், இந்த இரண்டு படங்களையே நான் குறைந்த பட்சம் 5-6 இடுகைகள்ல பார்த்த ஞாபகம். At least, கலரையாவது மாற்றி வெளியிடுவதுதானே :)
வாங்க நெ.த. ஏற்கெனவே போட்டது தான்! இது பழைய மடிக்கணினியின் சேமிப்பில் இருந்தது. புதுசிலே மவுஸ் என்னமோ தகராறு செய்யவே இதை எடுத்தேன். அதிலே படங்களைப் பார்த்தப்போ இந்தப் படங்கள் கண்ணில் பட்டன. இப்போத் தான் வாடகைக்கு இருப்பவரிடம் தண்ணீர் நிலவரம் பற்றியும்கேட்டறிந்தோம். ஆகவே அந்த நினைப்பிலே இதைப் போட்டேன். அதோடு இல்லாமல் இது கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சு இந்த மடிக்கணினியை எடுக்கிறேன். சரியா இருக்கா! பதிவு போகுதா என்று பார்க்கவும் பழைய படங்களையே பயன்படுத்திக் கொண்டேன். அதோடு வெள்ளை அடிக்கையில் நாங்க இருக்கவில்லை! அவங்க என்ன அடிச்சாங்களோ அந்தக் கலர் தான்! படங்களில் கலரை மாற்றும் வித்தை எனக்குக் கைவராத ஒன்று! :) பிகாசா இருக்கிறச்சே ஓரளவுக்கு ஏதோ பண்ணுவேன். இப்போ பிகாசா இல்லை!
Deleteஇப்போ இருக்கறவங்க காலி பண்ணிட்டாங்களா? மறுபடி புது ஆள் வாடகைக்குத் தேடணுமா?
ReplyDeleteமடிக்கணினியில் எங்கள் பிளாக் உடனே வரக்காரணம் எடை குறைவுதான்!!!!! அந்தக் கணினியில் ஹிஸ்டரி டெலிட் பண்ணுங்க.. அதிலும் வரும்!
வாங்க ஶ்ரீராம், இல்லை காலி எல்லாம் பண்ணலை! வாடகை தான் 1,000 குறைக்கச் சொல்லிக் கேட்டார். அப்போத் தண்ணீரே இல்லைனு நாங்களும் ஒத்துண்டு குறைச்சோம். இப்போதைக்கு அவர் தான் இருக்கார்! அந்தக் கணினியில் சில, பல பிரச்னைகள்! அதோடு அதிலே இணையம் தொடர்ந்து வராமலும் இருக்கிறது! ஆனால் இதிலே இணையம் தொடர்ந்து வருது! ஆனால் கணினி அடிக்கடி தானாகவே அணைந்து விடுகிறது. பாட்டரியை சார்ஜ் செய்து கொண்டே வேலை செய்தால் அணைவதில்லைனு நினைக்கிறேன். அதையும் சரி பார்க்கணும். முக்கியமா மவுஸால் இயக்க முடியலை! அம்புக்குறி நகரவே மாட்டேன் என்கிறது. மவுஸுக்குப் புது பாட்டரியும் போட்டுப் பார்த்தாச்சு! என்ன செய்யறதுனு மண்டை காய்ந்து போகிறது! :)
Deleteமழையால் பாதிப்பு இருக்கிறதா வீட்டை விற்று விட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன் வாடகைக்கு விடும்போது வருபவர்கள் கணக்கிட வேண்டும் அதுவும் நாம் அருகில் இல்லாவிட்டால் இன்னும் கவனம் தேவை
ReplyDeleteஇந்த வருஷ மழையில் பாதிப்பு ஏதும் இல்லை என்றே சொல்கிறார்கள் ஐயா! வீட்டை விற்கத் தான் முயன்றோம். ஆனால் வாங்குபவர்கள் பவர் ஆஃப் அட்டர்னி தான் போடுவேன் என்கிறார்கள். சேல் டீட் போட்டால் குறைந்த அளவுத் தொகையே டாகுமென்டில் காட்டுவார்களாம். மற்றப் பணத்தை எல்லாம் காஷாகக் கொடுப்போம் என்கிறார்கள். ஐந்து லட்சம் வாங்கி வைச்சுக்கிறதே பெரிய பாடு! வருமானவரித் துறைக்குக் கணக்குச் சொல்ல என்ன செய்வது? வீடு ஐம்பது லட்சம் எனில் 30 லட்சம் தான் டாகுமென்டில் போடுவாங்க! மீதி 20 லட்சம் கையில் கொடுப்பாங்களாம்! வேறே வினையே வேண்டாம்! வீட்டை விற்கவே வேணாம்னு சில சமயங்கள் தோணுது! எப்படி நடக்குமோ அப்படித் தான் நடக்கும்! நம்மால் மாற்ற முடியாது! பவர் ஆஃப் அட்டர்னி போட்டால் அவங்க ஃப்ளாட் கட்டி விற்கையில் கட்ட வேண்டிய சேல்ஸ் டாக்ஸ் எல்லாம் நம்ம பெயரிலே வரும்! நாம் தான் கட்டும்படி இருக்கும்! அது நாம் வீட்டை விற்று வாங்கிய தொகையில் பாதிக்கு மேல் இருக்கும். ஏற்கெனவே வீடு விற்றுப் பணம் வாங்கினதும் வரியாக காபிடல் கெயின் டாக்ஸ் வேறே கட்டணும். இது வேறே! இதை எல்லாம் பார்த்தால் ஏன் வீட்டைக் கட்டினோம்னு சில சமயங்கள் தோணுது! :)))))))
Deleteகீதாக்கா இதே படம் அண்ட் பதிவு முன்னாடியும் போட்ட நினைப்பு...
ReplyDeleteபராவால்ல மீண்டும் பார்க்கறதுல என்ன இப்ப...இல்லையா..
கீதா
வாங்க தில்லையகத்து கீதா! அது நிறையப் போட்டிருக்கேன். ஆரம்ப காலங்களில் ஃபில்ம் காமிரா மூலம் எடுத்த படங்கள் கூடப் பகிர்ந்திருக்கேன். அப்போ நுழைவாயிலில் இருந்து உள் வாயில் வரை முல்லை, மல்லிக் கொடி இரு பக்கங்களிலும் இருக்கும்! இரண்டு பக்கமும் பூச் செடிகள் நிறைய இருந்தன! :) ஒவ்வொரு மல்லிகையும் பெரிசு பெரிசாப் பூக்கும். மணம் மாலை ஏழு மணியிலிருந்து ஆரம்பிச்சுடும். அத்தோடு இரவில் பவளமல்லியின் மணம் வேறே. கொல்லைப்பக்கம் போனால் பாக்குப் பூக்கள், மாம்பழங்கள் வாசனை மூக்கை நிறைக்கும்!
Deleteஉண்மைதான் அக்கா வாடகைக்குஇருக்கறவங்க பல சமயத்துல ரொம்பவே வீட்டை பாழ் படுத்திட்டு போய்டுவாங்க
ReplyDeleteகீதா
ஒவ்வொருத்தர் காலி பண்ணினதும் சென்னை போய் நாலைந்து நாட்கள் அண்ணா வீட்டில் தங்கி வீட்டைச் சுத்தம் செய்து வாடகைக்கு விட்டு விட்டு வருவோம்! இப்போல்லாம் அலுப்பும், சலிப்பும் வந்தாச்சு! முடியுமானு தெரியலை!
Deleteசில நெருடல்களை தவிர்க்கவே முடியாது சிஸ் ஆள் பக்கத்தில் இருந்தாலே சிலபேர் கவனமாய் பார்த்து கொள்ள மாட்டாங்க தொலைவில் இருந்தால் சுத்தம் சுத்தம்
ReplyDeleteவாங்க பூவிழி, அன்றாடம் பெருக்கிக் குப்பைகளை அகற்றினாலே போதுமானது! அதைக் கூடச் செய்வதில்லை!
Deleteசில இடங்களில் வாடகைக்குக் குடியிருப்போர் வீட்டு சொந்தக்காரர்கள் போல தம்மை நினைத்துக்கொள்கிறார்கள். சரி இருக்கட்டும். வீட்டை கவனமாகப் பார்த்துக்கொள்கின்றார்களா என்றால் அடிப்படையில் அதுகூட இல்லை.
ReplyDeleteவாங்க முனைவர் ஐயா! எல்லோருக்கும் குடி இருக்கும் வீட்டைச் சொந்த வீடு போல் பராமரிக்கும் எண்ணம் வருவதில்லை!
Deleteஅது வாஸ்துப்படி.. வாசலை திசை மாத்தி வைக்கோணுமாக்கும்:).. ஹா ஹா ஹா முறைக்காதீங்க கீதாக்கா.. வேப்பமரமும் வீடும் அழகாத்தான் இருக்கு.
ReplyDeleteஅடக் கொடுமையே.. மழையினாலயா .. ஒரு வருஷத்துக்குள்ள எப்பிடி இப்பிடி ஆக்கினாங்க.. ஹ்ம்ம்
ReplyDeleteரொம்ப வருத்தமா இருக்கு கீதா. எங்களுக்கும் வீட்டை வாடகைக்கு விடப் பிடிக்கவில்லை. நீங்க சொல்கிறபடி நடப்பது நடக்கட்டும்.
ReplyDelete