எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 26, 2018

கலப்பைக்கு வந்த சோதனை!

என்ன என்னமோ மாஜிக் எல்லாம் செய்யுதே நம்ம கணீனி! திறக்கும்போதே தகராறூ செய்யும்.  பாஸ்வேர்ட் போடத் திறக்க முடியாது.  அப்படியே வந்தாலும் பாஸ்வேர்ட் போடுவதற்கான ஆப்ஷனில் போடவே முடியாது. மீண்டும் மீண்டும் முயல வேண்டும்.   அப்படி இருக்கையில் இன்று திடீரென இ கலப்பை காணாமல் போய்விட்டது. தமிழில் தட்டச்சவே முடியலை! என்னனு புரியலை. கணினியை என்னைத் தவிரத் தொடுபவர்கள் யாரும் இல்லை. பிள்ளை, பெண் இருந்தால் அவங்க பார்ப்பாங்க. இப்போ என்னைத் தவிரக் கணினிக்கு வரவங்க யாரும் இல்லை! கருத்துச் சொல்ல முடியலை! கருத்துச் சொன்னால் ஏற்கெனவே காணாமல் போய்க் கொண்டிருந்தது. திடீர்னு மவுஸில் உள்ள ஆரோ மார்க் காணாமல் போயிடுது! திரும்பத் திரும்ப மவுசை மூடி மூடிமூடி த்திறந்து திறந்து திறந்து ஆரோ மார்க்கைக் கொண்டு வரதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது. கணினி என்னமோ புத்தப் புதுசு! 2016 டிசம்பரில் தான் வாங்கினது! கொஞ்சம் பார்த்துட்டுப் பழைய மடிக்கணினியை எடுத்துட வேண்டியது தான்னு நினைக்கிறேன்.


இ கலப்பை கூர்மை போய்விட்டதா என்னனு தெரியலை! இன்னிக்கு அதோடு போராட்டம். திரும்பத் திரும்பத் திரும்பத் தரவிறக்கினாலும் சரியா வரலை! ஆன்டி வைரஸ் ஒத்துக்கலை. இத்தனை நாட்கள் ஒண்ணும் பிரச்னை இல்லை ஆனால் இன்னிக்கு என்னனு தெரியலை! திடீர்னு ஷார்ட் கட், ஒத்துக்க மாட்டேன்னு சொல்லுது. சரினு புதுசாத் தரவிறக்கினால் அதுவும் ஏத்துக்கலை. சரினு அழகி தரவிறக்கினால் அம்மா என்பதில் கடைசி மா வராமல் ம விழவே இல்லை. வெறும் கால் வாங்கியது மட்டும் வருது. அம்மா என்று முழுதும் வரவில்லை. இ கலப்பையில் தட்டுத் தடுமாறித் தட்டச்சலாம் எனில் கீ போர்டே வரலை. முதலில் ஒரு கீ போர்டு வந்தது. அதில் எழுத்துப் பிழைகள் நிறையவே வந்தன. றா என்பது வரவில்லை. ணு வராமல் ணூ என்றே வருது. று வராமல் றூ என்றே வந்தது. ணி போட்டால் ணீ என வருது.   சரி, இன்னிக்கு அவ்வளவு தான் என நினைக்கிறேன். இது சுரதா மூலம் தட்டச்சுகிறேன். இதிலேயும் hihiஎன்பது   கிகி என்றே வரும். ஃகி ஃகி என்றே சிரிக்கணும். :P என்னத்தைச் சொல்லறது போங்க! ஏற்கெனவே துர்க்குணி அதிலும் கர்ப்பிணி என்றொரு சொல் வழக்கு உண்டு. அது போல் ஏற்கெனவே சில மாதங்களாகச் சரியாகப் பதிவுகள் போட முடிவதில்லை. ஏதோ ஒப்பேத்தறேன். ட்ராஃப்ட் மோடில் நிறைய இருக்கு. இ கலப்பையில் தட்டச்சுவதில் உள்ள சௌகரியம் வேறே ஏதுவும் இல்லை. ஆனால் அது என்னமோ தகராறு செய்யுதே! நாளைக்கு முயன்று பார்த்துட்டுப் பின்னர் மறுபடி கணினியில் தரவிறக்கிப் பார்க்கணும். இத்தனைக்கும் வின்டோஸ் 10 க்கு உள்ளதைத் தான் தரவிறக்கினேன். ஏற்கெனவே இறக்கியது எங்கே என்றே காணோம்.

18 comments:

 1. நான் இதுவரை இகலப்பை உபயோகப்படுத்தியதில்லை. ஒண்ணு பூபாளம் தமிழ் ஃபாண்ட் உபயோகிப்பேன். சில வருடங்களாக அழகி உபயோகிக்கிறேன். எப்பவாச்சும் தகராறு செய்தால் கணிணியை மீண்டும் ஆஃப் ஆன் பண்ணினால் சரியாயிடும்.

  இது பதிவு போடாததற்கு சாக்கு இல்லையே? ஹா ஹா ஹா

  ReplyDelete
 2. எப்படியோ ஒரு பதிவு தேற்றி விட்டீர்கள் எனக்குத்தான் இப்படியெல்லாம் தோனமாட்டுது.

  ReplyDelete
 3. கலப்பை தமிழில் எழுதவா... நான் ஆரம்பத்திலிருந்தே என் எச் எம் ரைட்டர்தான் உபயோகிக்கிறேன் பிரச்சனை இல்லை

  ReplyDelete
 4. நெல்லைத் தமிழன் சொல்வது போல் எப்பவாச்சும் தகராறு செய்தால் கணிணியை மீண்டும் ஆஃப் ஆன் பண்ணினால் சரியாயிடும்.

  என் எச் எம் ரைட்டர்தான் முதலில் இப்போது அழகி.

  ReplyDelete
 5. என்ன போங்க டிடி! பல மாசங்கள் கழித்து வருகை! ஆனாலும் தெரியலைனு சொல்லிட்டீங்க! :(

  நெ.த. பதிவு போடாததற்குச் சாக்கு எனில் இந்தப் பதிவு ஏன் போடணும்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  கில்லர்ஜி, நீங்களுமா? :(

  வாங்க ஜிஎம்பி சார், எல்லாரும் சொல்றாங்க, அதையும் பார்க்கிறேனே!

  கோமதி அரசு! பகல் முழுக்க இதான் வேலை! ஒண்ணும் நடக்கலை. இப்போ ஏற்கெனவே இன்ஸ்டால் பண்ணினதை எல்லாம் எடுத்துட்டுப் புதுசா இன்ஸ்டால் பண்ணினாலும் அதே தான்.

  ReplyDelete
 6. McAfee Anti Virus is not agreeing eKalappai! :( I do not know why! Expecting technogists opinion and help!

  ReplyDelete
 7. நான் முதலில் தொடக்கத்தில் இகலப்பையை பயன்படுத்தி வந்தேன்; அதில் பிரச்சினை வரவே NHM ரைட்டரை ரொம்பகாலம் பயன்படுத்தி வந்தேன்; அதிலும் பிரச்சினை வரவே இப்போது இகலப்பைதான். இதுவும் எவ்வளவு காலம் வரும் என்று தெரியவில்லை. பொதுவாக கம்ப்யூட்டரில் settings இல் automatic downloads - On இல் இருந்தால் இந்த பிரச்சினைகள் வரத்தான் செய்யும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுபற்றி நானும் 'என்னே கம்ப்யூட்டருக்கு வந்த சோதனை?' என்ற தலைப்பில் சொல்லி இருக்கிறேன்.

  ReplyDelete
 8. கீதா என்கிற பெயருக்கே நேரம் சரியில்லை போல!!!

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா ஸ்ரீராம் ரைட்டூ!!! இப்ப பாருங்க ரெண்டுபேரும் வந்துட்டோம் ஹா ஹா ஹா

   கீதா

   Delete
 9. நான் இகலப்பை எல்லாம் உபயோகிப்பதே இல்லை. அலுவலகத்தில் சிலகாலம் அழகி உபயோகித்ததுண்டு. இப்போதும் அவ்வப்போது உபயோகிப்பேன். நான் எப்போதுமே ஜிமெயிலில் டைப் செய்து பேஸ்ட் செய்து விடுகிறேன். கொஞ்ச காலம் என் ஹெச் எம் வைத்து முக நூலில் கூட தமிழில் நேரடியாக அடித்ததுண்டு. இப்பல்லாம் இப்படித்தான்!

  ReplyDelete
 10. இ கலப்பை - நான் பயன்படுத்துவதே இல்லை. NHM Writer தான். எனக்கு இது வரை பிரச்சனை வந்ததில்லை.

  ReplyDelete
 11. Azagi is ok, try once. (I'm using it but my computer is down, waiting for doctor)

  ReplyDelete
 12. கீதாம்மா நீங்கள் உங்கள் கம்பியூட்டரை க்ளீன் செய்யும் நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன்... நீங்கள் உங்கள் கம்பியூட்டரில் உள்ள முக்கியமான டாக்குமெண்ட்டுகளை முதலில் பெண்டிரைவிலோ அல்லது Cloud storageலோ சேமித்து வைத்துவிட்டு அதன் பின் கம்பியூட்டரை பேக்டரி ரீ செட்டிங்க் அப்சனை க்ளிக் செய்துவிடவும். அப்படி செய்த்தால் நீங்கள் புதிதாக வாங்கிய போது கம்பியூட்டர் என்ன நிலமையில் இருந்ததோ அந்த நிலைக்கு வந்துவிடும் அதன் பின் உங்களுக்கு வேண்டிய மென்பொருளை மீண்டும் ரீ இன்சடால் பண்ணுங்க


  அழகி தமிழ் மென்பொருள் டவுன் லோடு செய்தால் அதில் இரண்டி வெர்ஷன் இருக்கும் அதில் உள்ள ஒல்டு வெர்ஷனை க்ளிக் செய்து டவுன் லோடு செய்யவும்.. அதில் டைப்பு செய்வது மிக எளிது எப்போது எதை டைப் செய்தாலௌம் அதை அப்படியே கூகுல் டிரைவில் சேமித்து வைத்து கொள்ளவும்


  முக்கியமாக லேப்டாப் அல்லது எட்ஸ்க் டாப் வைத்திருந்தால் அதில் இருக்கும் ஃபேன் இருக்கும் இடத்தை சிறு பிரஷால் அடிக்கடி க்ளின் செய்யவும்... முடிந்த அளவிற்கு அதிக அளவு ஹீட் ஆகாமல் பார்த்து கொள்ளவும்...  வைரஸ் மென்பொருள் உபயோகித்தால் நார்ட்ன் ஆண்டி வைரஸ் மென்பொருள் உபயோக்கிகவும்.. நிச்சயம் உங்கள் குழந்தைகள் அதை உபயோகிக்கலாம். அவர்கள் ஒரு மென்பொருள் வாங்கினால் 10 டிவைஸில் அதை இன்ஸ்டால் பண்ணலாம் அப்படி அவர்கள் வாங்கி இருந்தால் நெட் மூலம் யூசர் ஐடி பாஸ்வோர்ட் வாங்கி உங்கள் கம்பியூட்டரில் இன்ஸ்டால் செய்து தினமும் ஆட்டோமேடிக் செட்டிங்க செய்து வைத்து ஸ்கேன் செய்யாலாம். அதுமட்டுமல்ல இமெயில் ஒப்பன் பண்ணும் போது அது மூலம் ஏதாவது வைரஸ் வந்தாலும் உடனே அதை தடுத்துவிடும்

  ReplyDelete
 13. Thank You everybody. Trying again again to download and lauch eKalappai. will see.

  ReplyDelete
 14. கீதா: அக்கா அழகி மென்பொருள் ரொம்ப எளிதாக இருக்கிறது எப்போது வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளலாம் ஆஃப்லைனிலும் வேலை செய்யும். நான் அழகிதான் பயன்படுத்துகிறேன். ஓல்ட் வெர்ஷன்…ரொம்ப எளிதாக இருக்கிறது….இதுவரை எந்தப் பிரச்சனையும் செய்ததில்லை அழகி!!! அழகி அழ்கியாகவே இருக்கு!!!

  துளசி: எனக்கு இந்தப் பிரச்சனையே இல்லை. எல்லாம் சென்னை தலமையகத்திலிருந்து வெளிவருவதால்….

  ReplyDelete