புதுசாப் பதிவு எழுதணும்னு முயற்சித்தால் எரர் காட்டுது கூகிள். இந்தப் பக்கத்துக்கு சப்போர்ட் இல்லைனு சொல்லிட்டு இருக்கு. இத்தோட நான்காம் முறையா ஆரம்பிக்கிறேன். எழுதி வைச்சுட்டுக் காப்பி, பேஸ்ட் பண்ணினால் வருமோ! தெரியலை! நான் அப்படியே நேரடியாகவே எழுதிட்டு வருவதால் என்னிடம் வேர்ட் டாகுமென்டில் எல்லாம் இது வராது. தொடர்களாக எழுதினால் அவற்றை மட்டும் வேர்டில் எழுதிக் கொண்டு இங்கேயோ அல்லது குறிப்பிட்ட பதிவிலேயோ காப்பி, பேஸ்ட் பண்ணுவேன். இது தொடராக எழுதினாலும் சின்னத் தொடர் தானே! ஆகவே நேரடியாகவே தட்டச்சுகிறேன்.
ஃபெப்ரவரி மாதம் 25 ஆம் தேதி போலக் காணாமல் போனேன் அல்லவா! அப்போத் திருமலைக்குப் போயிருந்தோம். சுமார் பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன திருமலைக்குப் போய்! பையர், அவர் மனைவி இருவரும் போனாலும் அப்போ இருந்த கூட்டத்தில் எங்களால் வெகுநேரம் நிற்க முடியாது எனக் கூட்டிச் செல்லவில்லை. நாங்களும் கொஞ்சம் தயக்கத்துடனேயே இருந்தோம். ஆனால் இப்போது சந்திரபாபு நாயுடுவின் அரசு மூத்த குடிமக்களுக்காகத் தனியான தரிசன சேவை ஏற்படுத்தியதும் அதைக் குறித்த விபரங்களைப் படித்ததும் செல்லும் ஆசை ஏற்பட்டது என்னமோ உண்மை. ஆனால் மாமியாரின் ஆப்திகம் முடியக் காத்திருந்தோம். முதலில் குலதெய்வம் கோயிலுக்குத் தானே செல்லணும். அங்கே போயிட்டு வந்தோம். அப்புறமாப் பெரிய ரங்குவையும் பார்த்தோம். மதுரையும் செல்ல நினைத்திருந்தோம். முடியவில்லை. அதற்குள்ளாகத் தான் ஆயிரக்கால் மண்டபத்தில் தீ விபத்து.
ஆனால் திருப்பதி செல்லப் பயணச்சீட்டு இங்கிருந்து பல்லவனிலும், சென்னை சென்றதும் அங்கிருந்து சப்தகிரியிலும் முன் பதிவு செய்திருந்தோம். தெரிந்த நண்பர் மூலமாக மலையில் ஓர் மடத்தில் அறைக்கும் ஏற்பாடு செய்திருந்தோம். 26 ஆம் தேதி காலை பல்லவனில் கிளம்பினோம். எழும்பூர் சென்று அங்கிருந்து சென்ட்ரல் போய் சப்தகிரியைப் பிடிக்கணும். நல்லவேளையாக் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிட்டது சப்தகிரி! ஒரே ஒரு பெட்டி மட்டுமே குளிர்சாதனப் பெட்டி! நல்லவேளையா அதிலே இடம் கிடைத்திருந்தது. மாலை சுமார் ஆறு மணி அளவில் கீழத்திருப்பதி போய்ச் சேர்ந்தோம். எனக்கு அங்கேயே தங்கிட்டுக் காலை மேலே ஏறலாம் என்று எண்ணம். ஆனால் நம்ம ரங்க்ஸ் இரவே அங்கே போயிடணும் என்று முயன்றார்.
சோதனை போலக் கீழத்திருப்பதி போனதுமே என்னோட அலைபேசியும் அவரோட அலைபேசியிலும் நெட்வொர்க் வேலை செய்யவில்லை. அங்கிருந்த ஒரு அலைபேசிக் கடைக்காரரிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டதில் சரி செய்து கொடுத்தாலும் எங்களால் அழைக்க முடியவில்லை. அழைப்பவர்களுக்கு மட்டும் பதில் கொடுக்க முடிந்தது. ஒரு மாதிரியாக மேலே போய் வியாசராஜ மடத்தில் தங்குமிடம் ஏற்பாடு செய்திருப்பதைத் தெரிந்து கொண்டு மேலே ஏறினோம். அதற்குள்ளாக இரவு ஆகிவிட்டபடியால் அனைவரும் அரசுப் பேருந்திலேயே பயணிக்கும்படி ஆலோசனை சொன்னார்கள். ஆகவே பேருந்திலேயே போனோம். பேருந்தில் நாங்க இரண்டு, மூன்று பேர் மட்டுமே! மேலே சாமான்கள் வைக்கும் பகுதியில் ரங்க்ஸ் சாப்பாடு கொண்டு வந்த பாத்திரங்கள் உள்ள பையை வைத்திருந்தார். வண்டி மேலே ஏறும் இடம் வந்ததும் பயணிகள் அனைவரும் கீழே இறங்கி பாதுகாப்புச் சோதனையை மேற்கொண்டு மீண்டும் வண்டிக்கு வந்தோம்.
வண்டியின் வேகத்தாலும் கொண்டை ஊசி வளைவுகளாலும் மேலே உள்ள பையிலிருந்து சாமான்கள் சிதறத் தேடித் தேடிப் பொறுக்கிக் கொண்டோம். மலைக்குப் போனதும் பேருந்து நிலையம் வரும் முன்னரே பேருந்துகள், தனிப்பட்டவரின் கார்கள், வான்கள் போன்றவை வழி இல்லாமல் நிறுத்தப்பட்டிருக்க நாங்க வந்த வண்டியும் நின்றது. நீண்ட நேரம் ஆகும் எனத் தோன்றியதால் அங்கே இருந்து இறங்கிக் கொஞ்ச தூரம் போனதும் ஒரு டாக்சி வர அந்த டாக்சி ஓட்டுநரிடம் நாங்க போகவேண்டிய மடம் பெயரைச் சொல்லிக் கோயிலுக்குப் பின்னால் இருப்பதாகவும் கூற அவர் 50 ரூ வாங்கிக் கொண்டு எங்களை மடத்தின் வாயிலில் இறக்கி விட்டார். என்றாலும் உடனே செல்லாமல் எங்களுக்கு அறை கிடைக்கிறதா எனப் பார்த்துத் தெரிந்து கொண்டு சாமான்களையும் இறக்கி உதவி விட்டுச் சென்றார். அறைக்குச் சென்றோம். மாலை கொஞ்சம் டிஃபன் சாப்பிட்டிருந்ததால் அந்த நேரம் இரவு ஒன்பது மணிக்கு உணவு வேண்டாம் எனத் தீர்மானித்துக் கொண்டு ஃப்ளாஸ்கைக் கொடுத்துப் பால் வாங்கி வரச் சொன்னோம். விடுதி ஊழியர் வாங்கி வந்தார். பாலைக் குடித்துவிட்டுப் பழங்களைச் சாப்பிட்டு விட்டுப் படுத்தோம். காலை மூன்று மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. ஆனால் நாலரைக்கு அப்புறமாத் தான் விடுதியில் வெந்நீர் கொடுப்பார்கள் என்று சொல்லி இருந்ததால் காத்திருந்தோம்.

திருப்பதிக்கு நானும் தொடர்ந்து வருகிறேன்...
ReplyDeleteஅடுத்து காலையில் தியேட்டரில் அடைபட்டு இருந்தீர்களா ? இல்லை சிறப்பு தரிசனமா ?
வாங்க கில்லர்ஜி! அதெல்லாம் இல்லை. எழுதறேன், படிங்க! :)
Deleteவியாசராஜா மண்டபத்தில் தங்குனீங்களா? தரிசனம் முடிஞ்சு (அதுக்கும் ஆட்டோலதான் போயிருப்பீங்க), லட்டு வாங்கும் பகுதிக்குப்போய், பிறகு உணவு கிடைக்கும் பகுதிக்கு (இலவச உணவு) சென்று, இல்லைனா திரும்பவும் தங்குமிடம் போய் என்று மிகுந்த நடை இருக்கும் திருப்பதியில். நான் சில மாதங்களுக்கு முன்னால் போகும்போதும் அப்படித்தான். கால்வலி அதிகம். உங்களுக்கு இன்னும் சிரமமாக இருந்திருக்கும்.
ReplyDelete//வியாசராஜா மண்டபத்தில்// ஆமாம், நெ.த. வியாசராஜ மடத்தில் தங்கினோம். ஆட்டோவெல்லாம் அங்கே அதிகம் பார்க்கலை. டாக்சியில் போனோம்னு எழுதி இருக்கேன் பாருங்க. அப்புறமா இந்த இலவச உணவு எங்கே கொடுக்கிறாங்க என்பதே தெரியாதே! :)))) தரிசனம் முடிச்சு லட்டு வாங்கிக் கொண்டு விட்ட செருப்பை எடுத்துக் கொண்டு பதினொன்றே முக்காலுக்கெல்லாம் அறைக்குத் திரும்பிக் கீழே இறங்கிட்டோம். :)
Deleteநாங்க கீழ்த்திருப்பதில தங்கி, தாயாரை தரிசனம் செய்து (அப்படியே லட்டு பிரசாதமும்), நேரமிருந்தால் கோவிந்தராஜ சுவாமி கோவில் போய் தரிசனம் செய்து பிறகு மேல் திருப்பதிக்கு 300 ரூ டிக்கட் நேரத்துக்குப் போய் பெருமாளை தரிசனம் செய்து, லட்டு வாங்கிக்கொண்டு, திரும்பி கீழ்த்திருப்பதி வந்து கிடைத்த வண்டியில் சென்னை திரும்புவோம். சென்ற முறை இலவச உணவும் உண்டோம். ஆனால் ரொம்ப அலைச்சல்.
ReplyDeleteம்ம்ம்ம் கீழே நாங்களும் தங்கினோம்.
Deleteஎத்தனை அடிப்பட்டு நொந்தாலும் திருப்பதிக்கா நான் வரலைன்னு சொல்ல யாருக்குமே தோணாது
ReplyDeleteஉண்மை ராஜி, அனுபவபூர்வமான வார்த்தைகள்.
Deleteநாங்கள் திருப்பதி சென்று 16 வருடங்கள் ஆகிவிட்டன. செல்லவேண்டும்! அங்கு அடைபட்டுக் கிடைக்கும் நேரத்தை நினைத்தாலே அலர்ஜி ஆகிறது. இப்போதெல்லாம் புதிய வழிமுறைகள் வந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். எங்கள் அலுவலகத்திக்கிலேயே ஒருவர் மாதம் ஒருமுறை சென்று வருகிறார்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், சென்னையில் இருந்திருந்தால் இத்தனை வருடங்களில் இரு முறையாவது போயிருப்போம்.
Deleteதிருப்பதி லட்டு மட்டும் மாதா மாதம் கிடைத்து விடுகிறது! முன்பு போல அதில் ருசி இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
ReplyDeleteதிருப்பதி லட்டு அதுவும்பெரிய லட்டு அரிதாகவே கிடைக்கிறது. சின்ன லட்டில் ருசி குறைவு தான். பெரிசு கொஞ்சம் பரவாயில்லை ரகம்.
Deleteதிருப்பதி சென்று 28 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அங்கே செல்ல ஏனோ முயற்சி செய்யவில்லை. போகவேண்டும் எனத் தோன்றவும் இல்லை....
ReplyDeleteஉங்கள் மூலம் திருப்பதிக்குப் பயணிக்கிறேன்.
வாங்க வெங்கட், வந்து பாருங்க! அவன் அழைக்கணும். அழைத்தால் நீங்களும் போவீங்க! :)
Deleteஅனேக நமஸ்காரங்கள். திருப்பதி சென்று திரும்பி வந்ததற்கு.
ReplyDeleteவியாசராஜ மடம் கொஞ்சம் தள்ளி இல்லையோ.
2011 இல போனது. பிறகு SVBC CHANNEL தரிசனம் தான்.
மஹா பொறுமை வேண்டும் அம்மா. அவரைப் பார்த்து,
அவர் நம்மைப் பார்த்து, ஜெருகண்டி தள்ளப்பட்டு. கோவிந்தா.
வாங்க வல்லி, வியாசராஜமடம் ரொம்ப ஒண்ணும் தள்ளி இல்லை. நடந்து வர தூரம் தான். எங்களுக்கு நடக்க முடியலை என்பதால் டாக்சி! ஜரிகண்டி எல்லாம் இப்போ இல்லவே இல்லை! :)
Deleteதிருப்பதி லட்டு புரட்டாசி மாதம் வெங்கட்நாராயணா ரோடில் திருப்பதி தேவஸ்தான கோவிலில் சனிக்கிழமை தோறும் கிடைக்கிறது. இக்போ அளவு சிறிது, ருசியில் அவ்வளவு மாற்றமில்லை. உங்களுக்குத்தெரியுமா லட்டு ஒன்று அடக்கவிலை 37 ரூபாய்களாம். அதை 25 ரூபாய்க்கு தராங்களாம்.
ReplyDeleteவாங்க நெ.த. அங்கே கிடைக்கிறது என்பது எனக்குப் புதுச் செய்தினு நினைக்கிறேன். ஆனாலும் லட்டு ருசி முன்னைப் போல் இல்லை என்பதே உண்மை! பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
Deleteநெல்லை எனக்கு அந்த ரோட்டில் குறிப்பாகச் சனிக்கிழமை போகவே கொஞ்சம் கடினமாக இருக்கும் என்பதால் சனிக்கிழமை கோடம்பாக்கம் செல்ல நேர்ந்தால் அந்தச் சாலையைத் தவிர்த்து வேறு வழியாகத்தான் செல்வேன்....
Deleteகீதா
நாங்க எப்போவோ போனது! நினைவில் கூட இல்லை. ரங்க்ஸ் ஒரு தரம் காட்டேஜ் பதிவு செய்யவும், அவங்களே அழைத்துச் செல்லும் திருப்பதி டூர் நிகழ்வில் பங்கெடுக்கப் பதிவு செய்யவும் எனப் போயிருக்கார். மற்றபடி அங்கே அதிகம் சென்றது இல்லை! :))))
Deleteமிஸ் ஆன பதிவுகள் இதோ வாசித்துவிட்டு வருகிறோம்...
ReplyDeleteவாங்க, வாங்க ஒண்ணும் அவசரமே இல்லை!
Deleteதுளசி: நாங்கள் இரு குடும்பங்களாக ஒரே ஒரு முறை திருப்பதி சென்றிருக்கிறோம். அதன் பின் சென்றதில்லை. இது 8 வருடங்களுக்கு முன். உங்களின் தரிசனம் எப்படி என்பதை அறிய அடுத்த பகுதிக்குப் போகிறோம்.
ReplyDeleteகீதா: அக்கா உங்களுக்கும் ப்ளாகர் சிரமம் கொடுக்குதா...நான் ப்ளாகரில் நேரடியாக அடிப்பதில்லை. வேர்டில் அடித்துவிட்டு அப்புறம் காப்பி பேஸ்ட் தான்...ஏனென்றால் நம் பதிவுகள் ஆஃப் லைனிலும் எடுக்கலாமே என்பதால். எனக்கு ப்ளாகர் சில பதிவுகளைக் காட்டாமல் படுத்தியது. தளம் திறந்து வைத்திருந்தால் ஒரு வேலை சைடில் உங்கள் தளம் இருப்பதால் தெரிந்த்ருக்குமாக இருந்திருக்கும்..நான் தளத்தில் பதிவு எதுவும் போடாததால் திறக்கவே இல்லை அதனால் அதுவும் தெரியாமல் பதிவு மிஸ் ஆகிவிட்டது. துளசி அனுப்பிய கமென்ட் பார்த்ததும் தான் தெரிந்து கொண்டேன். அவர் இன்னும் அடுத்த பதிவு படிக்கவில்லை என்று தெரிகிறது...
சரி பதிவுக்கு...ம்ம் நான் பொதுவாகவே கூட்டமான கோயில் என்றால் செல்வதில்லை. தள்ளு முள்ளு அதுவும் திருப்பதிக்குச் சென்றிருந்தாலும் கோயிலுக்குப் போகும் ஆசை ஏனோ வரவில்லை. ஆனால் திருப்பதி கோயிலைச் சுற்றி உள்ள இடங்களைச் சொல்லுங்கள் சுற்றுவேன்...ஆனால் கோயிலுக்குள் அதுவும் கடைசி பகுதியில் கருடர் சன்னதி, கொடிமரம் வரும் போது கோயில் என்ட்ரன்ஸில் தள்ளூவார்கள் பாருங்கள் அப்புறம் உள்ளே செல்ல...அதனாலேயே செல்ல விருப்பமில்லாமல் இருக்கிறது...சரி உங்க தரிசனம் பற்றி அறிய இதோ அடுத்த பகுதிக்கு
வாங்க துளசிதரன், இப்போப் போய்ப் பாருங்க! அவ்வளவா சிரமம் இல்லை. எங்க பையர் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்து வருவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டு இப்போத் தான் திங்கள் அன்று (ஏப்ரல் ஒன்பதாம் தேதி) நடந்தே மலைக்குச் சென்றார். மதியம் மூணு மணிக்கு தரிசனம் முடிந்து இரவு ஏழு மணிக்குக் கீழே வந்துட்டாங்க! சென்னையிலிருந்து கிளம்பியது திங்களன்று காலை ஐந்து மணிக்குத் தான்!
Deleteதி/கீதா, எப்போவானும் ப்ளாகர் இப்படிப் பிரச்னை கொடுக்கும். பதிவு எழுதும் சமயங்களில் இது உன்னோடதே இல்லைனு சத்தியம் பண்ணும். கருத்துகளுக்குப் பதில் சொன்னால் நீ என்ன ரோபோவா? இல்லை மனுஷியானு கேட்டுக் கருத்துகளை வெளியிடாமல் அடம் பிடிக்கும். நேற்றுப் பதிவு எழுத எழுத எரர்னு காட்டிட்டே இருந்தது. அப்புறமாக் கணினியை ரீஸ்டார்ட் செய்ததும் சரியாச்சு! :))))
Deleteநாங்கள் திருப்பதி போய் பல வருடங்கள் ஆகி விட்டது.
ReplyDeleteதொடர்கிறேன் பதிவை.
வாங்க கோமதி அரசு, போயிட்டு வாங்க!
Deleteஇப்போதுதான் இந்த பயணத் தொடரை படிகத் தொடங்கினேன். தொடர்கின்றேன்.
ReplyDelete