இன்னிக்கு கஜேந்திர மோட்சம். ஆகவே அம்மா மண்டபத்துக்கு நம்பெருமாள் எழுந்தருளி இருக்கார். நம்ம குடியிருப்பு வளாகத்துக்கு அடுத்த மண்டகப்படியில் ஒவ்வொரு வருஷமும் வருவார். போன வருஷம் அம்பேரிக்காவில் இருந்ததால் பார்க்க முடியலை. இந்த வருஷம் நேற்றிலிருந்தே தயாராக இருந்தோம். காலை சீக்கிரமாய் வேலைகளை முடித்துவிட்டுக் கீழே பாதுகாவலருக்கு இன்டர்காம் மூலம் அழைத்துக் கேட்டால் ஒன்பதரைக்கு மேல் ஆகும் என்றனர். சரினு காய் எல்லாம் நறுக்கி வைச்சு சமையலுக்கு எல்லாவற்றையும் தயார் செய்து விட்டுப் பத்து மணிக்கிக் கீழே இறங்கினோம்.
சற்று நேரத்தில் பெருமாள் மூன்று பக்கங்களிலும் திரையால் மூடப் பட்டு வந்தார். வெயில் படாமல் இருக்க இந்த ஏற்பாடு. எப்போதும் மூடு பல்லக்கில் வருவார். அப்போதும் திரை போடப்படுவதால் பெருமாளைப் பார்க்கச் சிரமம் தான். ஒரு பக்கமாக வேறே உட்கார்ந்திருப்பார். எந்தப் பக்கம் என்பது பல்லக்கை இறக்கும்போது தான் தெரியும். ஆனால் இன்று மூடு பல்லக்கு இல்லை. காற்றாட வந்தார். மேலே வெயில் படாமல் இருக்க வேண்டிக் கூடாரம் போல் பட்டுத்திரைகள். மண்டகப்படிக் கட்டிடம் உள்ளே வரும்போது திரையை விலக்குகின்றனர். பின்னர் பெருமாள் உள்ளே வந்ததும் மண்டகப்படிக்காரர்கள் கொடுக்கும் நிவேதனம் மற்றும் மரியாதைகள் பெருமாளுக்குத் தரப்பட்டுப் பெருமாள் தரப்பில் பட்டாசாரியார்கள் மண்டகப்படிக் காரர்களுக்குப் பரிவட்டம் கட்டித் தீர்த்தம், சடாரி சாதித்தனர். அதன் பின்னர் உடனே பெருமாள் அடுத்த மண்டகப்படிக்குக் கிளம்பினார். ஆட்கள் நிறையப் பெருமாளைச் சுற்றி இருந்ததால் என்ன தான் முயன்றாலும் ஓரளவுக்குத் தான் படம் வந்தது. செல்லில் ஜூம் பண்ணுவது எப்படினு தெரியலை. என்றாலும் ஓரளவுக்குச் சுமாராக இருக்கும் படங்கள் போட்டிருக்கேன். கிட்டக்க நம் பெருமாளைப் பார்த்தேன். ரொம்பவே துளியூண்டுக்கு இருக்கார். அந்தச் சிரிப்பும், அழகும் இருக்கே, காணக் கண் கோடி போதாது!
பெருமாளை நானும் தரிசித்தேன் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteபெருமாளை தரிசனம்செய்ய பதிவு தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteகஜேந்திர மோட்சம் - பெருமாள் தரிசனம் - சுகமான விஷயம். இங்கேயிருந்தே நானும் பார்த்து ரசித்தேன்.
ReplyDeleteஅங்கே மீனாக்ஷி, இங்கே ரங்கன். ம்ம்ம். நம் பாடு கொண்டாட்ட,.
ReplyDeleteநன்றி கீதாமா.
எல்லாவற்றிலும் இன்பம்காண்பது நம் வழக்கம்
ReplyDeleteகோடைக் காலத்தில்தான் எத்தனை திருவிழாக்கள்!
ReplyDeleteபெருமாள் தரிசனத்துக்கு நன்றி.
பெருமாள் தரிசனம் கிட்டியது. நன்றி கீசா மேடம்.
ReplyDeleteஅழகர், ஸ்ரீரங்கம் என்று கொண்டாட்டம்தான் போலும் பல தளங்களிலும்!!
ReplyDeleteதரிசனம் கிடைத்தது....
துளசி, கீதா
வணக்கம்,
ReplyDeletewww.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.
இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.
அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற எம் நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.
நன்றி..
Tamil US
www.tamilus.com