எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 17, 2018

ஏழுமலையானுக்கு கோவிந்தா கோவிந்தா! பயணம் 4

திருப்பதி க்கான பட முடிவு

ஆசை தீரப் பார்க்க லட்டுகள். ஆனால் எங்களுக்கு இந்த லட்டு கிடைக்கவில்லை! :(

ஓட்டல் ஊழியரை அழைத்துத் தேநீர் கொண்டு வந்து தரும்படி சொல்லி எங்கள் ஃப்ளாஸ்கைக் கொடுத்தோம். அருமையான தேநீர் வந்தது. அதைக் குடித்தபின்னர் மீண்டும் கை, கால் சுத்தம் செய்து கொண்டு கோயில்களுக்குச் செல்லத் தயாரானோம். கீழே சென்று ஓட்டல் வரவேற்பில் இருந்தவரிடம் நாங்க போக வேண்டிய இடங்களைச் சொல்லி ஒரு ஆட்டோ ஏற்பாடு செய்து தரச் சொன்னோம். கோவிந்தராஜப் பெருமாள் கோயில், அலமேலு மங்காபுரம், ஶ்ரீநிவாச மங்காபுரம் ஆகிய கோயில்களே நாங்க செல்ல வேண்டியது.  ஆட்டோக்காரர் வந்தார். அறுநூறு ரூபாயில் ஆரம்பித்து பேரம் பேசிக் கடைசியில் ஓட்டல்காரர்கள் சத்தம் போடவே நானூறு ரூபாய்க்கு இறங்கி வந்தார். ஆனாலும் கோவிந்தராஜப் பெருமாளைத் தரிசனம் செய்ய முடியாது என்றார்.

அங்கே திருப்பணி வேலைகள் நடப்பதால் கோவிந்தராஜப் பெருமாளை பாலாலயத்தில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்ட நேரமே தரிசனம் என்றும் சொன்னார். சரினு ஒத்துக் கொண்டு அப்போதே மாலை மணி ஆறு ஆகிவிட்டபடியால் முதலில் ஶ்ரீநிவாசமங்காபுரம் போகச் சொன்னோம். அது கிட்டத்தட்டப் போக வர 25 கிலோமீட்டர் இருக்கும். அலமேலு மங்காபுரம் வேறு திசை! அது ஒரு ஐந்து+ஐந்து =பத்து கிலோமீட்டர். கோயில்கள் ஒன்பது வரை இருக்கும் என்பதால் கவலை இல்லை. முதலில் ஶ்ரீநிவாசமங்காபுரமே செல்லச் சொன்னோம். ஆட்டோ கிளம்பியது.

இதற்கு முன்னால் கடைசியாகத் திருப்பதி வந்தபோது  ரயிலில்      ரேணிகுண்டாவிலிருந்து கீழத்திருப்பதி வரை ரயில்பாதையின் இருபக்கமும் வறண்ட நிலங்களாகவும் காய்ந்தும் வறட்சியாகவும் காணப்பட்டது. இப்போதோ! இருபக்கமும் தொழிற்கூடங்கள்! வழி எங்கும் நல்ல மரங்கள் வளர்க்கப்பட்டு நிழல் தரும் சாலைகள்! ரேணிகுண்டாவில் இருந்து திருப்பதி வரும் போது இந்தக் காட்சிகளைக் கண்டு வியந்தோம். எவ்வளவு முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது ஆந்திரா என்னும் வியப்புத் தான்! நம் பக்கமோ நேர்மாறாகக் காட்சி அளிக்கும். அதோடு தமிழ்நாட்டில் இருந்து வெளியேறினாலே எங்கும் கட்சிக் கொடிகளோ, தலைவர்களின் கட் அவுட்டுகளோ காணவும் முடியாது. வட மாநிலங்களில் லக்னோவில் மாயாவதி ஏற்படுத்திய யானைகள் பிரம்மாண்டமாகக் காட்சி அளிக்கும். மற்றபடி வேறெங்கும் காண முடியாது.

அதே போல் இங்கே கீழத்திருப்பதியிலும் எங்கும் கட்சிக் கொடிகளோ, தலைவர்களின் திருவுருவப் படங்களோ, கட் அவுட்டுகளோ இல்லை. வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் இருந்த சாலை முழுதும் நூறடிச்சாலையாக நல்ல தரத்துடன் போடப்பட்டு ஆட்டோ கூடக்குலுங்கல் இல்லாமல் சென்றது. இரு பக்கமும் அடர்ந்த மரங்கள்! தெருக்களிலும், சாலைகளிலும் எங்குமே ஒரு மாடோ, நாயோ சென்று பார்க்கவில்லை. குப்பைகளையும் காணமுடியவில்லை. ஒரு சில முக்கிய நாற்சந்திகளில் என்.டி.ராமாராவின் சிலை மார்பளவில் அமைக்கப் பட்டிருந்தது. மற்றபடி வேறெங்கும் தலைவர்களின் சிலைகளைப் பார்க்க முடியவில்லை. இதற்கு முன் இந்தச் சாலையைப் பார்த்தவர்கள் இப்போது வியப்பின் எல்லைக்கே போவார்கள். ஶ்ரீநிவாசமங்காபுரம் போய்ச் சேர்ந்தோம். கோயிலுக்குள் செல்ல முக்கிய வாயில் வழி ஆட்டோ செல்ல முடியவில்லை என்பதால் முக்கியச் சாலையில் இருந்த பக்கவாட்டு வழியாகவே சென்றோம். ஆட்டோ டிரைவர் கீழே இறங்கி வழி காட்டினார். திரும்ப இந்த வழியிலேயே வரும்படியும் சொன்னார். நாங்கள் இறங்கிய வழி புஷ்கரணிப் படிக்கட்டுகள் உள்ள இடம். அங்கிருந்து புஷ்கரணியைச் சுற்றிக் கொண்டு மறுபக்கப் படிக்கட்டுகள் வழியாகக் கோயிலுக்குள் ஏறினோம்.

அப்போது கோயிலில் சாயரட்சை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தால் திரை போட்டிருந்தார்கள். பக்தர்கள் காத்துக் கொண்டிருந்தனர். மாடக் கோயில் போலும். சுமார் பத்து, இருபது படிக்கட்டுகள் மேலே ஏறித் தான் போகணும். அங்கெல்லாம் பக்தர்கள் அமர்ந்திருக்க நாங்க பிரகாரத்திலேயே ஓர் மரத்தடியில் அமர்ந்து கொண்டோம். நம் முன்னோர்கள் வந்து விளையாட்டுக்கள் காட்டி அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தார்கள். நல்லவேளையாகத் தேங்காய், பழம் ஏதும் வாங்கிச் செல்லவில்லை! சிலரின் தண்ணீர் பாட்டில்களைப் பிடுங்கிக் கொண்டு குடிக்கத் தெரியாமல் தவித்தனர் சில முன்னோர்கள். சிலரோ அழகாய் பாட்டிலைத் திறந்து குடித்தனர். புஷ்கரணி ஜலத்தை ஏன் குடிக்கலைனு புரியலை.

அரை மணி நேரம் கழிந்த பின்னர் பட்டாசாரியார்கள் நிவேதனத்தை எடுத்துக் கொண்டு சுற்றி கோஷ்டத்தில் இருக்கும் கடவுளருக்கும் காட்டிவிட்டுச் சென்றனர். அதன் பின்னர் திரை திறந்து தீபாராதனை சமயம். எல்லோரையும் உள்ளே விட்டனர். முடிந்தவரை தீபாராதனை பார்த்தோம். கூட்டம்! மறைத்தது! பின்னர் வரிசையில் சென்றோம். ஐந்து ரூபாய்ச் சீட்டு என நினைக்கிறேன்.
திருப்பதி க்கான பட முடிவு
பெருமாள் அலர்மேலு மங்கையுடன் திருமணம் முடிந்த பின்னர் இங்கே தங்கி இருந்தாராம். திருப்பதி பெருமாளின் ஜெராக்ஸ் காப்பி! அங்கே சரியாக தரிசனம் செய்யலை எனில் இங்கே தரிசித்துக் கொள்ளலாம். அதே மாதிரி காட்சி அளிக்கிறார். கல்யாண வேங்கடேசப் பெருமாள் என அழைக்கின்றனர். திருமணம் ஆகாத பிரமசாரிகள் இங்கே வந்து தரிசனம் செய்தால் திருமணம் ஆகும் என்னும் நம்பிக்கை!  உள்ளே போய் நன்றாக தரிசனம் செய்து கொண்டோம். பின்னர் மீண்டும் வந்த வழியில் திரும்பி ஆட்டோவில் ஏறிக் கொண்டோம். ஆட்டோக்காரர் அலமேலுமங்காபுரம் நோக்கிக் கிளம்பினார்.  ஶ்ரீநிவாசமங்காபுரத்திலிருந்து அலமேலு மங்காபுரம் சுமார் பத்து கிலோமீட்டர் இருக்கலாம். கொஞ்சம் போக்குவரத்து நிறைந்த பாதை! ஆகவே நாங்கள் கோயிலுக்கு வரும்போதே ஏழரை மணி ஆகிவிட்டது.

அலர்மேலு மங்கை க்கான பட முடிவு
படங்களுக்கு நன்றி கூகிளார்!

குங்கும அர்ச்சனை சேவையில் கலந்துக்கணும் என்னும் நினைப்புடன் வந்தோம். ஆனால் அந்த சேவை முடிந்து விட்டதாகச் சொன்னார்கள். இங்கேயும் சிறப்பு தரிசனச் சீட்டு வாங்கிக் கொண்டே சென்றோம். உள்ளே போய் அலர்மேலு மங்கையைக் கண் குளிரத் தரிசனம் செய்தோம். அப்போது தான் குங்கும அர்ச்சனை நேரம் முடிந்திருந்ததால் ஒரு சில ஆந்திரப்பெண்மணிகள் பூக்கள், குங்குமம் இவற்றோடு காட்சி அளிக்க நமக்குக் கேட்டால் கொடுப்பாரா எனத் தயக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பெண்மணி திடீரென என்ன நினைத்தாரோ என்னைப் பார்த்து அம்மா, அம்மாயி என அழைத்துக் குங்குமத்தை என் நெற்றியில் வைத்ததோடு அல்லாமல் என்னையும் தனக்கு வைக்கச் சொன்னார். உடனே மற்றச் சிலரும் வந்து அம்மாதிரி வைத்துவிட்டுத் தாங்களும் வைத்துக் கொண்டு சென்றனர். அந்த நிமிஷம் வயதில் பெரியவளாய் இருப்பதன் மகிமையும் புரிந்தது. (ஹிஹிஹி, அதுக்காக என்னை வயசானவள் கோஷ்டியில் சேர்க்க வேண்டாம். நான் இன்னும் பிறக்கவே இல்லை! தெரியுமா?)

பின்னர் அங்கிருந்து கிளம்பி ஓர் அரைமணி நேரத்தில் ஓட்டலுக்கு வந்து விட்டோம். மேலே சென்றுசற்று அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்ட பின்னர் கீழே வந்து உணவகத்தில் டிஃபன் சாப்பிட்டோம். அதே 147 ரூபாய் இரண்டு பேருக்கும். இம்முறை காஃபி சாப்பிடாமல் பால் சாப்பிட்டிருந்தோம். அவ்வளவே வேறுபாடு! பொதுவாகவே டிஃபன்கள் விலை பக்தர்களால் கொடுக்க முடிந்ததாக இருக்கணும் என ஓட்டல்காரர்களுக்குச் சந்திரபாபு நாயுடு அரசு கட்டளை போட்டிருப்பதாகச் சொல்கின்றனர். என்றாலும் அதை மீறாமல் இவ்வளவு பெரிய ஓட்டல் குறைந்த கட்டணமே வாங்குவது ஆச்சரியமாகத் தான் இருந்தது. அறைகள் தான் குளிரூட்டப்பட்டவை. உணவகம் குளிரூட்டப்படவில்லை. அதனாலோ! தெரியலை. என்றாலும் குளிரூட்டப்படாத உணவகங்கள் பலவும் சென்னை, திருச்சியில் அதிகமான விலையே வைத்து விற்கின்றனர் என்பதையும் கண்டு வருகிறேன்.

பின்னர் சென்று படுத்துத் தூங்கிக் காலையில் காஃபி வாங்கிக் குடித்துவிட்டுக் குளித்துத் தயாராகிக் கீழே வந்து காலை உணவை எளிமையாக முடித்துக் கொண்டோம். நான் பூரி+கிழங்கு+சப்போட்டா மில்க் ஷேக். ரங்க்ஸ் இட்லி+சட்னி, சாம்பார்+பைனாப்பிள் பழச்சாறு. இவற்றுக்கு நூறு ரூபாய்க்குள் தான் ஆயிற்று. அதோடு நாங்க ரயிலில் குடிக்க என்று எங்க ஃப்ளாஸ்கிலும் இரண்டு தேநீர் வாங்கிக் கொண்டோம். மொத்தமாக 110 ரூபாய்க்குள் ஆனது. பின்னர் அறையைக் காலி செய்து கொண்டு அங்கிருந்த வரவேற்புப் பெண்ணிடம் எங்கள் நன்றியைத் தெரிவித்து விட்டு எதிரேயே இருக்கும் ரயில் நிலையத்துக்கு நடக்க ஆரம்பித்தோம். அங்கே முதல் நடைமேடையின் லிஃப்ட் மூலம் மேலே சென்று இரண்டாம் நடைமேடைக்கான லிஃப்டில் சென்று அங்கிருந்து கீழே இறங்கி மூன்றாம் நடைமேடையில் எங்களுக்காக வரவேண்டிய சப்தகிரிக்காகக் காத்திருந்தோம். சரியாகப் பத்து மணிக்கு சப்தகிரி வந்து நாங்களும் ஏறிக் கொண்டு கிளம்பினோம் சென்னையை நோக்கி. சென்னைக்குச் சரியாக ஒரு மணிக்கு வந்தது சப்தகிரி. அங்கிருந்து எழும்பூர் வரத்தான் பிரச்னை! ஆட்டோக்காரர்கள் அருகிலிருக்கும் இடம் என்பதால் மறுக்க, சிலர் அதிகத் தொகை கேட்க, ஒரே ஒரு ஆட்டோக்காரர் இரக்கப்பட்டு ஏற்றிக்கொள்ள அதுக்குள் பொறுக்க முடியாமல் பின்னே நின்ற வண்டிக்காரர்கள் அவசரப்படுத்த எங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு கிளப்பினார் அந்த ஆட்டோக்காரர். ரங்க்ஸின் கால் முழுதும் உள்ளே வரலையே என நான் கவலைப்பட மெல்ல மெல்ல உள்ளே நுழைந்தார் ரங்க்ஸ்!

இதான் சென்னை! ஆந்திராவில் ராஜ மரியாதை! இங்கே சொந்த மாநிலத்தில்! :))))))  படங்கள் எதுவும் எடுக்க முடியலை! எடுக்க விடலை. அலைபேசியை தங்கும் அறையிலேயே வைத்துப் பூட்டிச் செல்ல நேர்ந்தது. ஆகவே படங்கள் இல்லை. எனினும் கூகிளாரிடம் கேட்கிறேன்.

சிறப்பான ஏற்பாடுகள். பக்தர்களுக்கான வசதிகள். தரிசனக் கட்டணம் வாங்கினாலும் அதற்காக பக்தர்கள் யாருமே ஏமாற்றம் அடையாவண்ணம் தரிசனம். எப்போதுமே திருமலா-திருப்பதிப் பயணம் இந்த விதத்தில் ஓர் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது. அதுவும் கடந்த இருபது வருடங்களாகவே இம்மாதிரி வசதிகள். அறுபதுகளில் சென்றபோதெல்லாம் மேலே ஏறவே நாட்கணக்கில் காத்திருக்கணும். உள்ளே போயும் நாட்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்திருக்கோம். அப்போப் பள்ளி மாணவி. அண்ணா+தம்பியின் உபநயனம் அங்கே தான் நடந்தது. சாமான்கள், அடுப்பு, பாத்திரங்கள் எனத் தூக்கிக் கொண்டு நடந்து சென்று மைசூர் மஹாராஜா சத்திரத்தை அடைந்து அறை எடுத்துத் தங்கிச் சமைத்துச் சாப்பிட்டு நடுவில் தரிசனமும் செய்து அண்ணா+தம்பிக்குப் பூணூலும் போட்டு அது ஓர் மறக்கமுடியா நிகழ்வு. 

63 comments:

  1. எனக்கு திருப்பதியில்தான் உபநயனம் நடந்தது.

    கோவிந்தராஜப் பெருமாள் வரலாறும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன் (உங்கள் அபிமான தலைவர், நடிகர் உலக்கை நாயகன் தசாவதாரம் முதல் காட்சி). நல்ல பிரம்மாண்டமான மூலவர்.

    அலர் மேல் மங்கைத் தாயார் சன்னிதியில் லட்டு வாங்கினீங்களா?

    என்னவோ... தமிழகத்தில் ஆந்திரா போல் மாற்றங்கள் நிகழவில்லை (ஒருவேளை இலவச மானிலம் என்பதால் இருக்குமோ?)

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. அப்பா வீட்டுக் குலதெய்வம் வெங்கடாசலபதியும் தான். மாசாமாசம் உண்டியலில் போடும் பணத்தைத் திருமலை செல்பவர்களிடம் அப்பா கொடுத்து விடுவார். அல்லது அவரே போய்ப் போட்டு விட்டு வருவார். நாங்க குடும்பத்தோடு முதல் முதலாத் திருப்பதி போனது அண்ணா+தம்பி பூணூலுக்குத் தான்! :)))

      Delete
    2. நல்லாவே தெரியும் கோவிந்தராஜப் பெருமாள் கதை! நான் எழுதின "சிதம்பர ரகசியம்" படியுங்க! புரியும். அவரை அதுவும் அர்ச்சாவதாரமான பஞ்சலோக விக்ரஹத்தை அநாயாசமாகத் தூக்கிக் கொண்டு கதாநாயகி(? யாருங்க அது? படம் இன்னி வரை பார்க்கலை! ஹைலைட்ஸ் ஆங்காங்கே பார்த்தது) ஓடோடி வருவா பாருங்க. உலக்கை நாயகரின் அறிவை நினைச்சு வியந்து போயிட்டேன். எங்க வீட்டிலே இருக்கும் ஶ்ரீதேவி, பூதேவி சமேதரான பெருமாள் சுமார் அரையடி உயரம். அவரைத் தூக்கித் தேய்த்துக் குளிப்பாட்டும்போதே சிரமமாக இருக்கும். இதிலே கோவிந்தராஜரைத் தூக்கிக் கொண்டு சமுத்திரத்திலே இருந்து உலக்கை நாயகர் வருவாராமே! கதாநாயகி ஏன் அவரைத் தூக்கிக் கொண்டு ஓடறா? புரியலை! அதெல்லாம் பார்த்தால் தலை சுத்தும்னு பார்க்கலை! அதையும் நிஜம்னு நம்பறவங்க இருக்காங்களே! சார்ஜ் இல்லை மடிக்கணினியில் மிச்சம் அப்புறமா! :))))

      Delete
    3. உங்க கதா நாயகருக்கு, கிடைத்த சந்தர்ப்பங்களில் மற்றவர்களின் உணர்வைப் புண் படுத்தும் பழக்கம். அதுக்கு என்ன செய்யறது? (அவருக்கு அப்போ கருணாநிதி கிட்ட நல்ல பேர் வாங்கணும்னு கட்டாயம். இப்போதானே நவீன பாரதியார் வேஷம் போட ஆரம்பிச்சிருக்கார்)

      Delete
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நெ.த. அவரை எனக்கு ஆரம்ப காலங்களில் இருந்தே பிடிக்காது! எங்க கதாநாயகரா? நல்லா இருக்கே கதை!

      Delete
    5. உங்களுக்கு அவரைப் பிடிக்காது. அதனால்தான் கலாட்டா செய்தேன்.

      Delete
    6. தெரியும் நெ.த. ஶ்ரீராம் ஜிவாஜியை வைச்சுக் கலாட்டா செய்வார். :))) நானும் சும்மா வம்பு பண்ணினேன்.

      Delete
    7. என்னாதூஊஊஊஊஊஊஊஊ கீசாக்காவுக்கு கமல் அங்கிளைப் பிடிக்காதோ?:).. அப்போ அவர் ஆட்சிக்கு வந்தால் முதேல்ல் வேலையா கீசாக்காவை நட்டு கடத்திடுவார்:) எதுக்கும் தேம்ஸ்கரைக்கு கடத்திவிடச் சொல்லுங்கோ:))

      Delete
    8. அதிரடி, உங்க உல(க்)கை நாயகர் நாடு வேணா கடத்தட்டும், நட்டுக்களை வேணாக் கடத்தட்டும். எனக்கென்ன! பிடிக்காதுனா பிடிக்காது தான்! பொதுவா எந்த நடிகர், நடிகைகளின் ரசிகை இல்லை நான். பிடிச்சால் படம் பார்ப்பேன். அப்போ அந்தப் படத்தில் நடிக்கும் நடிகரின் நடிப்பு நல்லா இருந்தால் ரசிப்பேன். அம்புடுதேன்!

      Delete
  2. செல்போன் கொண்டுபோனால், கோவில்களில் வைத்துவிட்டுச் செல்லலாம். நாங்கள் பொதுவா ஆட்டோ காரரிடம் கொடுத்துவிட்டு (மனதுக்குள் திக் திக்) செல்வோம். படங்கள் எடுக்காமல் வந்த்ட்டீங்களே (உங்கள் இருவரையுமாவது கோவில் வெளியே)

    ReplyDelete
    Replies
    1. நெ.த. எல்லாக் கோயில்களிலும் வைக்கும்படியான ஏற்பாடுகள் இல்லை. திருமலையில் கண்டிப்பாக எடுத்துச் செல்ல முடியாது. நாங்க காரில் போனால் காரிலேயே ஒரு பையில் போட்டு மூடிவிட்டு டிரைவரிடம் கொடுப்போம். எடுத்தே செல்லவில்லை என்னும்போது எங்கள் இருவரை மட்டும் கோயிலுக்கு வெளியே எப்படி எடுப்பது?

      Delete
    2. திருமலையில் அருமையான ஏற்பாடு கேமரா, செல்போன், பை, செருப்பு போன்றவற்றிர்க்குச் செய்துள்ளார்கள். நீங்கள் அங்கிருக்கும் பல கவுண்டர்களில் (அதாவது கியூவிற்குப் போவதற்கு முன், அதிலும் 300 ரூ கியூவின் அருகில் அல்லது இலவச தரிசன கியூவின் அருகில்) இதனைக் கொடுத்துவிட்டு ரெசிப்ட் வாங்கிக்கணும். அப்புறம் கோவில் தரிசனம். திரும்ப வெளியில் வரும்போது, பஸ் ஸ்டாண்டுக்கு முன் (கோவில் வெளியே) நிறைய கவுன்'டர்களில் உங்களுக்குரிய கவுன்'டரில் போய் உங்கள் பொருட்களை வாங்கிக்கலாம். அதாவது கொடுக்கும் கவுன்'டர் கோவில் அருகில். வாங்கிக்கொள்வது பஸ் ஸ்டாண்ட் போகும் வழியில். இது நல்ல ஏற்பாடு. இருந்தாலும் கொஞ்சம் நடக்கணும். இதுதான் கஷ்டம். நான் எப்போதும் ஒரு இடத்துக்குப் போனால் வந்ததற்கு ஏதாவது படம் எடுத்துவிடுவேன்.

      Delete
    3. நெ.த. மதுரையில் செருப்பு வைக்கும் கவுன்டரில் அப்படி ஓர் ஏற்பாடு இருக்கிறது. திருமலையில் முன்னால் சென்ற போதெல்லாம் எங்களிடம் எவ்விதமான ஃபோனும் இல்லை. சுமார் பத்து வருடங்கள் கழித்து இப்போத் தான் செல்ஃபோன் எல்லாம் எடுத்துக் கொண்டு பயணம். அதோடு நாங்க பணம் கட்டிப் பார்க்கவும் இல்லை. அதுவும் இப்போதெல்லாம் ஆன்லைனில் செய்துவிடுவதால் கவுன்டர்களுக்குப் போகும் தேவையும் இல்லை. இங்கே ஶ்ரீரங்கத்தில் க்ளோக் ரூம் இருக்கு. அங்கே வைத்துச் செல்லலாம். அது மாதிரித் திருமலையில் இருந்தால் சரி. ஆனால் இது குறித்து எங்களுக்கு அதிகம் தெரியாததால் ரிஸ்க் எடுக்கவில்லை.

      Delete
    4. உங்கள் தகவலுக்கு. திருமலையில் நுழையும்போது வலது புரத்தில் வைகுண்டம் காம்ளக்ஸ் என்று இருக்கும். அங்கு கியூவில் நின்றால், டெபாசிட் பண்ணினால், பூட்டு சாவி தருவார்கள். அந்த லாக்கரில் நம் உடைமைகளை வைத்துவிட்டு, தரிசனம் முடிந்தபின்பு, சாமான்களை எடுத்துக்கொண்டு, பூட்டைத் திருப்பிக்கொடுத்து அட்வான்ஸை வாங்கிக்கொண்டுவிடலாம். ஆனால் இதுக்கெல்லாம் நடக்கணும்.

      நான் மலைக்கு நடந்து செல்லும்போது முதலில் இங்கு வந்து, உடமைகளை வைத்துவிட்டு, குளித்து புது உடைகளை அணிந்து நேரே தரிசனத்துக்குச் சென்றுவிடுவேன்.

      Delete
    5. இது குறித்துத் தெரியும். தேவஸ்தான அலுவலகம் வழியா இருமுறை போனப்போவும் கூட வந்த ஒருங்கிணைப்பாளர்களே எல்லாவற்றையும் வாங்கித் தனித்தனியாக வைத்து டோக்கன் கொடுத்தார்கள். அப்போ லட்டுகளும் அவங்களே வாங்கிக் கொடுத்தார்கள். பெரிய லட்டுகளே கிடைத்தன. என்னன்னா அவங்க அழைத்துச் செல்லும் நேரம் ரொம்பவே இக்கட்டான நேரமாக இருக்கு! வெறும் திருப்பதி-திருமலை மட்டும் எனில் இன்றிரவு ஒன்பது மணிக்குக் கிளம்பி 12 மணிக்கு மேலே போய் ஒரு அறையில் தங்க வைப்பனர். இரண்டு மணிக்கெல்லாம் எழுப்பிக் குளித்து தரிசனத்திற்குத் தயாராக வேண்டும். தரிசனம் முடித்து ஆறு மணிக்கு வந்ததும் காஃபி+லட்டு. அதன் பின்னர் மெதுவாகக் கீழே இறங்கிக் காலை ஆகாரம் தேவஸ்தான ஓட்டலில் (நல்ல ஓட்டலாகவே இருக்கும்.) முடித்துக் கொண்டு கோவிந்தராஜர், அலமேலுமங்கா, ஶ்ரீநிவாஸமங்காபுரங்கள் போயிட்டுப் பின்னர் மதிய உணவு முடித்துக் கொண்டு சென்னை திரும்பணும். இதிலே காளஹஸ்தியும் சேர்ந்திருந்தால் முதல் நாள் சீக்கிரமே கிளம்புவார்கள்.

      Delete
    6. எல்லோருக்கும் இந்த வசதி இருக்கிறது என்பது குறித்துத் தெரிந்திருக்கவில்லை. அதோடு நாங்க திருமலையிலேயே தங்கியதால் ஓட்டல் அறையிலேயே பாதுகாப்பாக வைத்தோம்.

      Delete
    7. முக்கிய கோபுரம் வழியாகவெல்லாம் நுழையலையே! நேரே கூண்டு வழியாகப் பிரகாரம். கூண்டே பிரகாரத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்திலிருந்து உள்ளே நுழையும் முதல் வாயில். பின்னர் அங்கிருந்து நேரே சந்நிதி! அதிகம் நடையே இல்லை!

      Delete
  3. என்னை வயசானவள் கோஷ்டியில் சேர்க்க வேண்டாம். - பயப்பட வேண்டாம். அந்தக் கோஷ்டியில் சேர்க்கமாட்டோம். ஆமாம், திருப்பதியில் வயதானவர்களுக்கான வயது வரம்பு 70ஆ 75ஆ? சும்மா ஒரு தகவலுக்குக் கேட்டேன். ஹி ஹி ஹி (உடனே அவருக்கு உதவியாளாகச் சென்றேன் என்று அவரைப் போட்டுக் கொடுக்காதீர்கள்)

    ReplyDelete
    Replies
    1. நறநறநறநறாநறநறாநறா

      Delete
  4. இது மாதிரி பேரம் பேசிவிட்டு ஏறினால், செல்லும்போதெல்லாம் ஏதோ குற்ற உணவுடன் இருப்பது போலத்தோன்றும் எங்களுக்கு! பின்னர் முடியும்போது தகராறு செய்வாரோ என்கிற சந்தேகமும் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அநேகமாப் பேரம் பேசித் தான் ஆட்டோ பிடிக்கிறோம். அதனால் பழக்கம் ஆகி விட்டது. அவர் 400க்கு மேல் கேட்கலை. ஆனால் ரங்க்ஸ்தான் 50 ரூ சேர்த்துக் கொடுத்தார்.

      Delete
  5. //திருமணம் ஆகாத பிரமசாரிகள் இங்கே வந்து தரிசனம் செய்தால் திருமணம் ஆகும் என்னும் நம்பிக்கை! //

    எங்கே நடக்கிறது? என்னவோ போங்க!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஶ்ரீராம். இப்போதெல்லாம் நடப்பதில்லை என்பது சரியே! ஆனாலும் நம்புகிறவங்க இருக்காங்க இல்லையா?

      Delete
    2. ஸ்ரீராம் - இதற்கு என் மனைவி ஒரு பதில் சொல்வாள். நம்பிக்கை. அதுதான் மிக முக்கியம். இந்தக் கோவிலில் சேவித்தால் கண்டிப்பா நடக்கும் என்று நம்பணும். வேவரிங் மைண்ட் இருக்கக்கூடாது என்பாள். உங்களுக்கு, குறிப்பிட்ட நபரின் வாழ்க்கைத் துணைவியா யார் வரப்போறா என்று கண்டுபிடிக்கத்தான் முடியலை. அந்தப் பெண் ஏற்கனவே பிறந்துவிட்டார். கவலை வேண்டாம்.

      Delete
    3. ​"உங்களுக்கு நம்பிக்கை இல்லை"​

      இது ஒரு சுலபமான பதில் நெல்லை! குமாரிலபட்டர் நினைவுக்கு வருகிறார்! அதே சமயம் ஆர் சுந்தர்ராஜன், செந்தில், கவுண்டர் எல்லாம் இடம்பெற்ற ஒரு நகைச்சுவைக் காட்சியும் நினைவுக்கு வருகிறது!

      Delete
    4. நம்பிக்கை இல்லாமல் இல்லை நெ.த. அந்தக் குறிப்பிட்ட இளைஞர், இளைஞியின் நேரமும் காரணம் இதுக்கு. முன்னால் எல்லாம் 30 வயதுக்குப் பெண்கள் மணமாகாமல் இரண்டாம் மனைவி, மூன்றாம் மனைவி என வாழ்க்கைப் படுவார்கள். இப்போது பையர்கள்! :( காலச் சக்கரம் சுழல்கிறது.

      Delete
    5. இல்லை ஸ்ரீராம்/கீசா மேடம். நாம் எல்லோரும் சாதாரணர்கள். நடக்கும் வரை, கொஞ்சம் மனசுல கவலையும், என்னடா சொன்னதெல்லாம் பண்ணிட்டோமே என்று தோன்றுவது சகஜம். நடக்கும் விரைவில். கவலை வேண்டாம். (பையர்களுக்கு பெண்கள் கிடைப்பது கடினமாத்தான் இருக்கு. ரொம்ப கண்டிஷன்ஸ் கேள்விப்படறேன். அடுத்த ஜெனெரேஷன் எப்படி இருக்கப்போகிறதோ)

      Delete
    6. // நடக்கும் விரைவில். கவலை வேண்டாம். //

      ஆமாம் நெல்லை... பையன்கள் ( !! ) இரண்டு பேர்களுக்கு ​வயது 46 ஐத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது... இன்னமும் பொறுமையுடன், நம்பிக்கையுடன் காத்திருக்கத்தான் காத்திருக்கிறார்கள்!

      :)))))

      Delete
    7. என்னவோ போங்க நெ.த. தம்பி பிள்ளைக்கு 33 வயசு ஆச்சு. சுமார் ஆறு வருடங்களாகப் பார்க்கிறாங்க. பெண் வீட்டுக்காரங்க நெருங்கி வந்தால் அவங்க வீட்டிலே யாரோ ஒரு பெரியப்பாவோ, சித்தப்பாவோ, தாத்தாவோ, பாட்டியோ ஏதேனும் சொல்றாங்க. இத்தனைக்கும் நாத்தனார் எல்லாம் யாரும் இல்லை. எந்தவிதமான பிக்கல், பிடுங்கல் இல்லாத குடும்பம்!

      Delete
    8. இப்போ போட்ட என்னுடைய கமெண்ட் ஒன்று இன்னும் பப்ளிஷ் பண்ணாம வச்சுருக்கீங்க கீதாக்கா... நெல்லைக்கு பதில் சொல்லி இருந்தேன்...

      Delete
    9. ஹாஹாஹா, போட்டாச்சே! :)))))

      Delete
    10. அப்பாடி.... கமெண்ட்ஸ் இரண்டும் காணாமல் போச்சுன்னு சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்!

      Delete
  6. அம்மாயி என்றால் பாட்டி என்றுதானே அர்த்தம்?!! :P

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நறநறநறநறநற

      Delete
    2. ஹையோ கீசாக்காவின் பல்லெல்லாம் போயிந்தி:))

      Delete
    3. அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  7. இது மாதிரி இடங்களுக்குச் செல்லும்போது பின்னர் ஒரு நினைவுக்காகவாவது புகைப்படங்கள் எடுத்திருக்கலாம். அதை மிஸ் செய்துவிட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், இங்கே மட்டுமில்லை, அதுக்கப்புறம் போன இடங்களிலும் ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியலை! எத்தனை இடங்கள் தெரியுமா? மாத்ருகயா, மறுபடி பரவாக்கரை, கருவிலி, திருக்கருகாவூர், வைத்தீஸ்வரன் கோயில், மதுரை, கொளஞ்சியப்பர் கோயில், ஶ்ரீமுஷ்ணம், சிதம்பரம்! போதும், போதும் என்னும் அளவுக்குப் பயணங்கள்! எங்கேயும் படம் எடுக்க முடியலை! :(

      Delete
  8. கோவிந்த ராஜப் பெருமாள் கோவிலில் தான் எத்தனை சன்னிதிகள். அழகான கோவில். தாயார் சன்னிதியில் ,குங்கும அம்மன். பங்காரு அம்மா.
    புண்ணிய தரிசனம் கீதா. லட்டு ஏன் கிடைக்கலை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, கோவிந்தராஜப் பெருமாள் கோயிலுக்கே போகலையே! எங்களுக்குச் சின்ன லட்டு கிடைத்தது வல்லி, ஒருத்தருக்கு நாலு லட்டுக்கள் வீதம் மொத்தம் எட்டுச் சின்ன லட்டுகள். பெரிய லட்டு எங்கே கொடுத்தாங்கனு புரியலை. எங்களுக்கு அதைப் பற்றிய யோசனை இல்லாததால் கேட்டுத் தெரிஞ்சுக்கலை.

      Delete
    2. பெரிய லட்டு, கல்யாண உத்ஸவமுக்கு மட்டும்தான் என்று ஞாபகம். அது தவிர, ஆள் தெரிஞ்சால், கிடைக்கும் (நம்ம ஆள், உள்ளே அதிகாரி ஒருவரிடம் கையெழுத்து வாங்கி வரணும். எனக்கு கூட பல வருடங்கள் முன்னால் வந்தவர், குறிப்பா 300 ரூ டிக்கட் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்னால் நடந்தது, கோவில் வளாகத்திலேயே கையெழுத்து வாங்கப் போனபோது, துரதிருஷ்டவசமாக அந்த ஆபீசர் மீட்டிங்கில் இருந்தார். அதனால் என்னால் வாங்க முடியலை). இது தவிர, சில சமயங்களில் ரொம்பப் பெரிய அப்பமும், வடையும், தோசையும் வாங்கியிருக்கிறேன். (இதைப் பற்றி சில விஷயங்கள், அனுபவங்கள் எழுதலாம்)

      Delete
    3. நெ.த. நீங்க சொல்றாப்போல் மிகத் தெரிந்தவர்கள், விவிஐபிக்கள் ஆகியோருக்கேப் பெரிய லட்டு கிடைக்கிறது என நினைக்கிறேன். எப்படியோ பட்டுக்குஞ்சுலுவால் எங்களுக்கு அதுவும் கிடைத்தது. அவங்க சின்னத்தாத்தா(மருமகளின் சித்தப்பா) போயிட்டு வந்து எங்களுக்காக வாங்கி வந்திருந்தார். பெரிய லட்டு, பெரிய வடை. அப்பம் ஒரே ஒரு முறை சாப்பிட்டிருக்கேன்.

      Delete
  9. //திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்தால் திருமணம் நடக்குமாம்//

    செவ்வாய் தோஷக்காரர்களுக்குமா ? என்று கேட்டால் சண்டைக்கு வருவீர்கள் ஆகவே கேட்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. யாரா இருந்தா என்ன கில்லர்ஜி! செவ்வாய் தோஷக்காரங்களுக்கும் திருமணத்துக்கான நேரம் வந்துட்டால் தானாகத் திருமணம் ஆகும். எனக்குத் தெரிந்து பலருக்கும் சின்ன வயசிலேயே கூடத் திருமணம் ஆகி இருக்கு.

      Delete
  10. சென்ற சனிக்கிழமை, வெங்கட் நாராயணா திருப்பதி தேவஸ்தானத்தில் 2 லட்டு 100 ரூ வீதம் (புது வருடப் பிறப்பன்று) காலையில் தரிசனம் முடித்து வாங்கினேன் (3 பேருக்கு 6 லட்டு). (முன்னால 50 ரூ இருந்தது...6 மாதம் முன்னால). பெரிய லட்டு சாப்பிட்டு 5 வருஷமாச்சு. (அதுல 5 முந்திரி, 2 பாதாம், 4 ஏலக்காய் என்பதுபோல் ஒவ்வொரு லட்டுக்கும் இவ்வளவு இருக்கணும்னு கணக்கு. ஆனா சைஸ் 25 வருடத்துக்கு முன்புபோல் இல்லை. குறைந்துவிட்டது)

    ReplyDelete
    Replies
    1. நெ.த. அங்கே லட்டு கொடுப்பாங்க என்னும் செய்தியே எனக்குப் புதுசு. நான் அங்கே அவ்வளவாச் சென்றதில்லை. அறுபதுகளின் கடைசியிலோ இல்லை எழுபதுகளின் ஆரம்பத்திலோ ஓரிரு முறை போன நினைவு. அப்போல்லாம் ஈயாடும்! யாரும் இருக்க மாட்டாங்க. தேவஸ்தான அலுவலக ஊழியர்கள் மட்டுமே!

      Delete
  11. உங்கள் மூலம் நல்ல தரிசனம்.

    இது போன்ற வாகனத்தில் கேமரா வைத்துச் செல்ல கொஞ்சம் பயம் தான் - அதனால் அனுமதி இல்லாத இடத்திற்கு போகும்போது இது ஒரு தொல்லை.

    லட்டு - எங்களுக்கு திருப்பதி லட்டு அவ்வப்போது கிடைத்து விடுகிறது - திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் கோவில், தில்லியில் வீட்டின் அருகிலேயே இருப்பதில் ஒரு வசதி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட். நீங்களும் ஒரு முறை போய் வாருங்கள். வாகனங்களில் காமிராவை வைத்துச் செல்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை. திருப்பதி லட்டு கிடைப்பது குறித்து சந்தோஷம்!

      Delete
  12. நாங்களும் போன மாதம் தான் இங்க எல்லாம் சென்று வந்தோம்...

    திருப்பதி மலைக்கு படி வழியே நடந்து ஏறினோம்...

    நல்ல தரிசனம்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க அனுராதா, நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்ததுக்கு நன்றி. மலைக்கு நான் ஏறிச் சென்றதே இல்லை. என் கணவர் மட்டும் ஒரே ஒரு முறை ஏறிச் சென்றிருக்கிறார்.

      Delete
  13. திருப்பதி திருமலைக்கு ஒரு முறை கூட போக வேண்டும் என்பது மனைவியின் விருப்பம் முடிகிறதா பார்ப்போம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி சார், முடிஞ்சால் போயிட்டு வாங்க. நடக்க முடியலைனா வீல் சேர் வசதியும் இருக்கு! மாற்றுத் திறனாளிகள் மோசமான நிலையில் இருந்தவங்க எல்லாம் வந்தாங்க! அவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஊழியர்கள் அழைத்துச் சென்றனர். கூட ஒருத்தர் போகலாம்.

      Delete
  14. தரிசன விவரங்களுடன் பயணம் இனிமை.
    குங்குமம் கிடைத்தது மகிழ்ச்சி.
    மலரும் நினைவுகளையும் , மறக்க முடியாத நிகழ்வுகளைவும் நினைவு படுத்திய பயணம் இனிமைதான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, மிக்க நன்றி.

      Delete
  15. துளசி: உங்கள் தரிசனம் நன்றாகவே நடந்திருக்கிறது. கோயிலில் நல்ல வசதிகள் என்று தெரியவருகிறது. உணவும், ஆட்டோ சார்ஜும் பரவாயில்லை என்று தோன்றியது. கேரளத்தில் இன்னும் சீப் தான். ஆனால் தமிழ்நாட்டை ஒப்பிடும் போது.

    கீதா: கீதாக்கா அலமேலுமங்கா புர லட்டு சூப்பரா இருக்குமே. நன்றாகப் பொடித்துச் செய்திருப்பார்கள். எனக்கும் என் மகனுக்கும் அலமேலுமங்கா புர லட்டு ரொம்பப் பிடிக்கும்.

    ஸ்ரீநிவாசமங்கா புரம் போன்று அக்கா முடிந்தால் நாராயணவரம் புத்தூர் பக்கம் ரயில்னிலையத்திலிருந்து 6 க்மீ தூரத்தில் இருக்கிறது...ரொம்ப அமைதியாக துளிக் கூடக் கூட்டமே இல்லாமல்..அங்கு கல்யாணத்திற்கு மஞ்சள் அரைத்த பெரிய உரல் இருக்கிறது அலமேலு மங்கா சன்னதியில். இங்கும் ஸ்ரீநிவாஸர் ஜெராக்ஸ் தான். அப்படியே...அப்புறம் இங்கு கைத்தறி பார்க்கலாம் பல வீடுகளில். ஒரு வீட்டில் டவல் எல்லாம் விற்கிறார்கள். அப்புறம் ஒரு வீட்டில் சல்வார் மெட்டிரியல் புடவை எல்லாம் விற்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், உண்மையில் ஆட்டோ சார்ஜ் மட்டுமில்லாமல் சாலை வசதி, குடிநீர், கழிவறை வசதி (இது ரொம்ப முக்கியம் இல்லையா) போன்றவை மிகவும் பிரமாதம். முன்னேற்றம் என்றால் உண்மையான முன்னேற்றம் இது தான் என்று சொல்லும்படி! நல்லவேளையாத் திருப்பதி தமிழ்நாட்டில் இல்லை என்று ஆறுதல் பெருமூச்சும் கூட!

      தி/கீதா, எங்களிடம் ஏற்கெனவே எட்டு லட்டுகள் இருந்தன. ஆகையால் அலமேலு மங்காபுரம் லட்டு வாங்கலை. ஆனால் இதற்கு முன்னால் போனப்போவெல்லாம் வாங்கிச் சாப்பிட்டிருக்கோம். நீங்க சொல்லும் ஊர் புதிது. சென்னைப் பக்கம் வந்து அங்கேயும் போக முடிந்தால் போகிறோம். தகவலுக்கு நன்றி.

      Delete
  16. அதுசரி இந்தச் சுற்றுலா எப்போ நடந்தது?.. நீங்கள் தமிழ்நாட்டில்தானே இருக்கிறீங்க? பிறகெதுக்கு ஒரே மூச்சில் கஸ்டப்பட்டு அனைத்தையும் பார்க்கிறீங்க.. மெதுவா ஆறுதலா ஒவ்வொரு விடுமுறைக்கு ஒவ்வொரு இடமாகப் போய் வரலாமே...

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, ப.கு.வுக்காகச் செய்து கொண்ட பிரார்த்தனைகள். :)))))

      Delete
  17. கீழ திருப்பதியில் ஒரு இடத்தில் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் செய்ய முடியும். மேல திருப்பதிக்கு சென்று கல்யாண உற்சவம் செய்ய முடியாதவர்கள் இங்கே நடத்துகிறார்கள். நான் ஒரு முறை என் தோழியோடு அந்த கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டேன். அதுதான் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஸ்ரீனிவாசமங்காபுரமா?

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? எனக்கு இந்தத் தகவல் புதிது பானுமதி! ஒருவேளை இருக்கலாம். விசாரிக்கணும்.

      Delete
  18. நெ.த.சற்று குழம்பி விட்டாரோ? சிதம்பரத்தில் இருக்கும் கோவிந்தராஜ பெருமாளை திருப்பதியில் இருக்கும் கோவிந்தராஜ பெருமாளோடு குழப்பிக் கொண்டு விட்டாரோ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி. நெல்லை குழம்பவில்லை! சரியாகத் தான் சொல்லி இருக்கார். இரண்டு பேருக்கும் சம்பந்தம் உண்டே! :)))) சிதம்பரம் வரலாறு (மூலம்) படிச்சுப் பாருங்க, புரியும்.

      Delete