எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, April 04, 2020

விளக்கு ஏற்றப் போகும் மக்களுக்கு!

நாடு மட்டுமல்ல, உலகம் முழுதும் கலங்கிக் கிடக்கிறது. ஆங்காங்கே மக்கள் தவிக்கின்றனர். குறிப்பாய் இத்தாலி, ஸ்பெயின் இரண்டும். மற்றவையும் சளைக்கவில்லை. இவற்றோடு போட்டி போட்டுக்கொண்டு அம்பேரிக்காவும். மனதைக் கலங்க அடிக்கிறது. அங்கே ஊரடங்கைக் கொண்டு வருவது இயலாத காரியம் என அதிபர் ட்ரம்ப் சொல்கிறார். ஆனால் மக்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள் என நம்புகிறேன். அப்படி இருந்தும் நாளுக்கு நாள் நோயாளிகளும், இறப்பும் அதிகரித்து வருகிறது கவலைக்குரிய விஷயம் தான். இன்னும் இதற்கான மருந்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் மலேரியாவுக்கான மருந்துகளால் கட்டுப்படுத்த முடிகிறதாகவும் சொல்கின்றனர்.

இந்தியாவில் குறிப்பிடத் தக்க அளவுக்குக் குறைவான நோயாளிகளே இருக்கின்றனர். அதற்கு எல்லோரும் சொல்லும் காரணம் சோதனை சரியாகச் செய்யப்படவில்லை. சரியான சோதனை செய்தால் இன்னும் நோயாளிகள் அதிகமாகக் காணப்படுவார்கள் என்பதே. இந்தக் கொரோனா நோய் சுமார் பதினைந்து நாட்கள் உடலில் இருக்கும் எனவும் அதன் பின்னர் கடுமையான தாக்குதல் இருந்தால் நோயாளிக்கு இறப்பு ஏற்பட்டு விடும் என்றும் சொல்கின்றனர். அப்படி இருந்தால் இந்தியாவின் மக்கள் தொகையில் இதுவரையிலும் லக்ஷக்கணக்கான மக்கள் செத்திருப்பார்களே! அப்படி ஏதும் நடக்கவில்லை என்பதால் கணக்கெடுப்பு சரியானதாகவே இருக்க வேண்டும்.  பதினைந்து நாட்களுக்குள்ளாக பாதிப்புத் தெரிந்து விடுகிறது என்பதால் இங்கே கொரோனாவினால் கஷ்டப்படுபவர்கள் எண்ணிக்கை அரசு கொடுத்திருக்கும் அளவில் தான் இருக்க வேண்டும். ஆனால் சமீபகாலங்களில் அதாவது 2,3 நாட்களாகத் தமிழ்நாட்டில் அதிகம் கொரோனா பாதிப்பு ஆகி இருக்கிறது. சுமார் 800 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.  இரவும் பகலும் சுகாதாரத் துறை கண் விழித்து வேலை செய்கின்றார்கள். ஆனால் அதற்கு மக்கள் ஒத்துழைப்பும் தேவை.

பிரதமர் கைதட்டச் சொன்னதற்கும் எதிர்ப்பு அதிகமாகக் காணப்பட்டது. அதே சமயம் வாத்தியங்களை முழக்கி ஊர்வலமாகப் போனவர்களும் உண்டு. இப்போது நாளை இரவு ஒன்பது மணிக்குப் பிரதமர் அனைவரையும் விளக்கு ஏற்றச் சொல்லி இருக்கிறார். ஒரு விதத்தில் இதைப் பார்த்தால் முதலில் ஒலி, இப்போது ஒளி! அடுத்து நீர், நெருப்பு என்றும் வரலாமோ? ஆனால் இப்போது பிரதமர் சொல்லி இருப்பதற்குச் சிலர் அறிவியல் ரீதியான காரணங்களைச் சொல்லி இருக்கின்றனர்.  அதில் ஒன்று கீழே! எங்கள் குடியிருப்பு வளாகத்தில் நாளை ஏற்றுவதற்காக அகல்கள் கொடுத்திருக்கின்றனர்.

திரு. Gnana Kumaran R சார் பதிவிலிருந்து

இந்த பிரபஞ்சம் முழுவதும் அணுக்களின் தொகுப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.. இந்த உலகில் உயிருள்ள, உயிரற்ற அனைத்துமே அணுக்களால் ஆனதே.

அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரானால் வடிவம் பெற்றது, இதில் எலக்ட்ரான் அசையும் தன்மை கொண்டது.

இந்த அசையும் தன்மையால் நிச்சயம் ஒரு உராய்வு இருக்கும் அந்த உராய்வின் காரணமாக ஒளி, ஒலி நிகழ்வு நிச்சயம் நடக்கும். (எ.கா. மின்னல், இடி ), இது ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் இயங்கும். இதை Frequency (Hz) என்று சொல்வார்கள்.

நம் உடலில் தோராயமாக 80 லட்சம் கோடி செல்கள் இருக்கும், இந்த ஒவ்வொரு செல்லிலும் 100 லட்சம் அணுக்கள் இருக்கும். அப்படி பார்த்தால் இந்த பிரபஞ்சம் முழுவதும் யோசித்து பாருங்கள்.

இப்போது வைரஸ்களும் இந்த அணுக்களின் தொகுப்பு தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வைரஸ்க்கு என்று ஒரு அணு தொகுப்பு இருக்கும் அல்லவா, அது தெரிந்தால்தான் அதை சமநிலை படுத்த அதற்கான மருந்தின் மூலக்கூறு உருவாக்க முடியும்.

அல்லது அந்த வைரஸின் அணுக்களில் உள்ள அந்த எலக்ட்ரான் அலைவரிசையை மாற்றினாலும், அதன் தன்மையை மாற்ற முடியும். இது Frequency Healing எனப்படும். இதை தான் எல்லா மருத்துவ முறைகளும் செய்கின்றன.

ஒரு மூலிகை அல்லது உலகில் உள்ள அனைத்து மருந்துகளும் ஒரு வைரஸின் அலைவரிசையை மாற்றி, நமது உடலில் உள்ள செல்களை அலைவரிசையை சமன் செய்கிறது. இதனால் அந்த நோய் குணமாகிறது.

இப்போது வைரஸின் மூலக்கூறு தெரியவில்லை என்றாலும் , அதன் அலைவரிசையை மாற்றி அதன் வீரியத்தை குறைக்க முடியும்.

இதற்கு நாம் ஒளி, ஒலி மூலம் அந்த அலைவரிசையை மாற்றி அமைப்பதே எளிய சிகிச்சை ஆகும்.

ஆன்மிகத்தில் விளக்கு ஏற்றுவது, சூடம் காட்டுவது, மணி அடிப்பது , மந்திரங்கள் ஓதுவது போன்று.

அறிவியலில் Infrared, Ultraviolet, Ultrasound, Chemotherapy, etc. என்ற பெயரில் இது தரப்படுகிறது.

இதை தான் நமது பாரத பிரதமர் ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் கை தட்ட சொல்லி "ஒலி" மூலம் Frequency யை மாற்றி அமைத்தார்.

இப்போது "ஒளி" மூலம் அதாவது விளக்கு ஏற்ற சொல்லி இந்த பிரபஞ்ச அலைவரிசையை மாற்ற அழைப்பு விடுத்துள்ளார்.

முடிந்தால் விளக்கு ஏற்றுங்கள் காரணம் அதில் மஞ்சள் , ஆரஞ்ச் , மற்றும் சிகப்பு நிற அலைவரிசை நோய்களை தீர்க்கும் சக்தி வாய்ந்தது.

இது மூட நம்பிக்கை அல்ல அறிவியலால் ஆழம் காணமுடியாத பிரபஞ்ச உண்மை. இந்த உண்மையை உணர்த்திய நமது பிரதமருக்கு நன்றி..

R.ஞானகுமரன்
Frequency Healing Researcher
Madurantakam

இன்னொரு செய்தியும் கிடைத்திருக்கிறது. ஜோதிட ரீதியாக! அதை நாளை பகிர்கிறேன்.விரைவில் இந்த நோய்த்தொற்று மக்களை விடுவிக்க வேண்டும் என்னும் பிரார்த்தனையுடன்.

45 comments:

  1. நாளை பி.ஜே.பி கட்சி தொடங்கி 40-ஆம் ஆண்டு தொடங்குகிறது இதற்கும் விளக்கு ஏற்றுவதற்கும் பந்தம் இருக்கிறதோ என்னவோ எனக்கு புரியவில்லை.

    உலக மக்கள் அனைவரும் கொரோனாவின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் இதுவே எனது ஆசை.

    ReplyDelete
    Replies
    1. உலக மக்கள் இந்தக் கொடூரத்தாக்குதலில் இருந்து விடுபட வேண்டும் என்பதே அனைவரின் ஆசையும் கூட. மற்றபடி குற்றம் சொல்லுவதென்றால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். இந்த மாதிரிக் கட்சி தொடங்கிய விழாவை மின் தீப ஒளியால் கோலாகலமாக அல்லவோ கொண்டாட வேண்டும். இம்மாதிரியான ஒரு காலநிலையில் விளக்குகளை அணைத்துவிட்டுக் கொண்டாடச் சொல்லுவார்களா? மேலும் இம்மாதிரி தீப வழிபாடு அஞ்சலிகளில் மட்டுமே செய்வார்கள். கொண்டாட்டத்திலுமா? :(

      Delete
    2. பாஜபாவின் அப்பா ஜனசங்கத்தின் தேர்தல் சின்னம் அகல் தீபம். அப்பாவுக்கு அஞ்சலி. பிஜேபி பிறப்புக்கு கொண்டாட்டம்!!!! கில்லெர்ஜீ அதைத்தான் சொல்கிறார் போலும்.
       Jayakumar

      Delete
    3. பிடிக்கலை எனில் எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஏன் ஒன்பது நிமிடம் மட்டும் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதற்கான காரணங்களுக்கு என்ன சொல்லுவீர்களோ? கட்சி சார்பான கொண்டாட்டங்களுக்காக இது எனில் எந்த சானலும் வாயை மூடிக் கொண்டு இருக்காது. பிரதமரையும் ஆளும் கட்சியையும் கிழி கிழினு இத்தனை நேரம் கிழிச்சிருக்கும்.

      Delete
  2. நலமே விளையட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நல்லது நடக்க வேண்டும். தொடராமல் இருந்தால் போதும்.

      Delete
  3. இந்தியாவில் அதிகம் இல்லை என்பதுதான் இன்றைய நிலை அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. வாங்க மதுரைத் தமிழரே, இந்தியர்களின் எதிர்ப்பு சக்தியும் ஒரு காரணம் என்கின்றனர். ஆனால் இங்கேயும் பரவ ஆரம்பித்திருக்கிறதே! :(

      Delete
  4. மின்வாரியம் கூறுவது சரிதான்... ஒரே நேரத்தில் மின்சாரத்தை OFF செய்து பின்னர் ஒரே நேரத்தில் ON செய்தால் High frequency under frequency ஆக மாறுகிறது... அதனால் load despatch centreகளில் grid line triping ஆகும்போது Generation பகுதிகளில் ஜாம் ஆகிவிடும்...!

    பிறகு recovery ஆகி Normalise ஆக மூன்று நாட்கள் ஆகும்... இது Grid lock என அழைக்கப்படுகிறது அல்லது Grid separation என்றழைக்கப்படுகிறது...

    எ.கா : ஒரு Grid தொகுப்பில் உள்ள மின் கம்பிகளில் மின்சாரம் Export-ம் import-ம் நடை பெறுகிறது. அதில் அனைத்து மாநில மின் உற்பத்தி நிலையங்களும், மத்திய மின் உற்பத்தி நிலையங்களும், தனியார் மின் நிலையங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் Solar wind enrgy-யும் அடங்கும்.

    10.50க்கு தமிழக உற்பத்தி போக தேவை 200M.W. என்றிருக்கும் அப்போது அந்த மின்கம்பிகளில் import ஆகும்...

    10.54க்கு தேவை போக அதிக உற்பத்தியை 140 M w.Export ஆகும் இது automatic-க்காக செயல்படும்.

    Same volt, same sequency, same phase, same frequency இருந்தால் அனைத்தையும் Tie up செய்வார்கள். இதன் பெயர் synchornas method. இந்த கட்டமைப்பே Grid என அழைக்கப்படுகிறது...

    தென்மாநிலங்களின் southern Grid ராமகுண்டம் ஆகும்.
    இதிலிருந்துதான் தென்மாநிலங்கள் Connect செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, கயத்தார் ஆகியவைகளில் major grid station கள் உள்ளன.

    தமிழக மின்பாதை 49.5 Hz
    கேரளம் 49.0
    ஆந்திரம் 50.0
    கர்நாடகா 49.6
    புதுவை 49.4
    இந்த frequency யில்தான் மின்சாரம் பெறுவதற்கும் அனுப்பவும் முடியும் ! அதை சரிவர செய்யவில்லை என்றால் penaulty உண்டு...!

    நன்றி : முன்னாள் மின்வாரிய ஊழியர் அன்பழகன் லஷ்மணன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன். எனக்கும் வாட்சப்பில் வந்திருக்கிறது.

      Delete
  5. ஒரு சிலருக்கு 14 நாட்களுக்குள் காட்டாமல் அதன் பின்னரும் காட்டுகிறது. இப்போது கேரளத்தில் வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு 28 நாட்கள் தனித்த்ருக்கச் சொல்வதாக அறிந்தேன். என் தங்கை கணவர் அமெரிக்காவிலிருந்து வந்தவருக்கு முதலில் 14 நாட்கள் அப்புறம் இப்போது கூட 14 நாட்கள் நீட்டிப்பு.

    விளக்கேற்றும் தகவல்கள் அறிந்து கொண்டேன் கீதாக்கா.

    எது எப்படியோ தொற்று வெகு விரைவில் நீங்க வேண்டும். மலேரியா மருந்து பயன்படுத்தலிலும் சில தயக்கனள் மருத்துவர்களிடையே இருப்பதாகவும் தெரியவருகிறது. சரியாகத் தெரியவில்லை. மருந்து இப்போதைக்குக் கண்டறிவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிகிறது. உகலம் இயல்புவாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.

    செப்டம்பர் வடை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று செய்தி வருகிறது. உண்மையா என்று தெரியவில்லை.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அப்படியா கீதா? நான் பதினைந்து நாட்கள் தான் என நினைத்தேன். எந்த மருந்துக்காவது கட்டுப்பட்டால் பரவாயில்லை. இது மஹா பெரிய சோதனையான கால கட்டம். இறைவனே துணை. அவன் தான் அனைவரையும் காத்து ரக்ஷிக்க வேண்டும்.

      Delete
  6. வணக்கம் சகோதரி

    பயனுள்ள பதிவு. நீங்கள் கூறுவது அனைத்தும் சரியே..! திரு. ஞான குமரன் அவர்களின் கட்டுரையை படித்து அறிவியல் காரணங்களை அறிந்து கொண்டேன்.

    2000 ல் இப்படித்தான் உலகம் ஏதோ ஒரு அழிவில் சிக்கி திணறப் போகிறது என ஒரு பீதி வந்தது. அப்போது நாங்கள் திருமங்கலத்தில் இருந்தோம். மகள் படித்த பள்ளியில் கூட இம்மாதிரி அனைவரும் இரவில் மெழுவர்த்தி விளக்கேற்றி ஒரு குறிப்பிட்ட நேரத்தில். பிரார்த்தனை செய்யச் சொன்னார்கள். அந்த சோதனை காலகட்டம் இப்போது இருபது வருடம் கழித்து கண்கூடாக வந்துள்ளது. கடவுள் இந்த பிரார்த்தனைகளுக்கு செவி சாய்த்து இந்த வைரஸின் தாக்கத்தை மட்டுப்படுத்தி அதை முழுமையாக ஒழிக்க வேண்டுமென பிரார்த்தனை செய்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா. ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்கின்றனர். மனம் நமக்கு ஏற்புடையதை மட்டும் தானே ஏற்றுக்கொள்ளும்.ஆனால் பொதுவாக விளக்கேற்றிப் பிரார்த்தனை என்பது புதிதல்ல. கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டு ஊர்வலமாகப் போவார்களே! இது வீடுகளில் குறிப்பிட்ட நேரம் ஏற்றச் சொல்கிறார்கள். அந்த நேரத்தில் ஏற்றுவது சிறப்பு என்பதால் இருக்கலாம்.

      Delete
  7. அருமையான கண்ணோட்டம்
    பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. யாழ்பாவாணன். இதையும் அரசியலாக்கிப் பதிவுகள், கருத்துகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

      Delete
  8. அருமையான விளக்கம். இது போல விஞ்ஞானம் பதில் சொன்னால் மறுப்பதற்கு
    ஏதும் வழி இல்லை.
    திருவண்ணாமையில் ஒளிதீப வழிபாடு செய்வதும் இதற்காகத் தானே.
    எல்லோரும் இந்த தீப வழிபாட்டைச் செய்து
    நலம் பெறலாம்.

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு கருத்தும் இருக்கிறது வல்லி. முடிந்தால் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

      Delete
    2. வல்லிம்மா..... தாங்க முடீல... ஹா ஹா.... தீபம் எங்கே.... டார்ச் லைட் எங்கே....

      மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடலாமா?

      Delete
    3. டார்ச் விளக்கு, செல், மெழுகுவர்த்தி எதுவானாலும் வெளிச்சம் போட்டால் அதன் சூடு தாக்கும் இல்லையா? அது தான் யோசிக்க வைக்கிறது. வெப்பம் தாக்கினால் கொரோனா கிருமி அழியும் என்கிறார்கள். அப்படி எனில் இரானில் இல்லாத வெப்பமா? யோசிக்க யோசிக்க மண்டை காய்கிறது. எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்னும் நிலைமை. சீக்கிரம் சரியாகப் பிரார்த்திப்போம்.

      Delete
  9. அறிவியல் ரீதியான விளக்கம் - படு பயங்கரமான ஜால்ராவாக இருப்பார் போலிருக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. தெரியலை நெ.த. இது போல இன்னும் சிலவும் வந்தன. இது கொஞ்சம் புரிந்தாற்போல் இருப்பதால் பகிர்ந்தேன். என்னவோ போங்க! :(

      Delete
  10. வாட்சப்பில் பாஜக கட்சி தொடங்கிய நாள் என்பதால் விளக்கு ஏற்றச் சொல்கிறார் எனவும் வந்தது

    ReplyDelete
    Replies
    1. வாட்சப் மட்டுமில்லை, பலரும் மோதியை முட்டாள், மடையன் எனத் திட்டி இருப்பதோடு கட்சியின் 40 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இது எனச் சொல்லியும் பதிவுகளே போட்டிருக்கின்றனர். பலருக்கும் மோதி கீழ்த்தட்டு மக்களைக் கவனிக்கவில்லை என்பது பெரிய குறையாக உள்ளது. கீழ்த்தட்டு மக்களுக்கு சேவாபாரதி அமைப்பின் மூலமும் இன்னும் சில தொண்டு நிறுவனங்களும், தனியார்கள் சிலரும் உணவு, உடை அளித்து வருகின்றனர். இது சத்தமில்லாமல், விளம்பரமில்லாமல் செய்யப்படுகிறது. சேவாபாரதியின் அத்தகைய அமைப்பு ஒன்றைக் கேரளாவில் எதிர்க்கட்சிக்காரர்கள் உடைத்து நொறுக்கி நாசமாக்கி இருக்கின்றனர். எத்தனையோ பேர்களுக்குப் போய்ச் சேர வேண்டியவை எல்லாம் வீணாக்கப் பட்டிருக்கின்றன.

      Delete
  11. எனக்கு வந்த உருப்படியான தகவல், பேன், ஏசிக்களை மட்டும் ஆன் செய்து வைக்கணும், லைட்டை ஆஃப் செய்யலாம், இல்லைனா மின்சார க்ரிட் ப்ராப்ளம் வரும் என. அது லாஜிகல்

    ReplyDelete
    Replies
    1. மத்திய மின்சாரத் துறை அமைச்சர் இத்தகைய பிரச்னைகள் வராது என விளக்கி இருக்கிறார். நேற்றே அது தொலைக்காட்சிகளிலும் சொல்லப்பட்டது. ஆனால் கர்நாடகாவில் ஓர் துணைப் பொறியாளரும், தமிழ்நாட்டில் ஒருவரும் பிரச்னைகள் வரும் என்கின்றனர். என்ன நடக்கும் என்பது இனி தான் தெரியும். ஆனால் இத்தகைய பிரச்னைகள் வரும் எனத் தெரிந்து கொண்டே பிரதமர் இப்படிச் சொல்லி இருப்பார் என எதிர்பார்க்கிறவர்கள் பிரதமரை முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்களே!

      Delete
    2. கடைசியிலே எந்தப் பிரச்னையும் எங்கேயும் இல்லை. ஒருத்தரைப் பிடிக்கலைனா அவர் சொல்லுவதற்கு எப்படி எல்லாம் அர்த்தம் கண்டுபிடிக்கலாம், அல்லது குற்றம் சொல்லலாம்னு காத்திருக்காங்க! என்ன செய்ய முடியும்?

      Delete
  12. நம் பிரார்த்தனைகளை இறைவன் ஏற்பான்.

    ReplyDelete
    Replies
    1. பிரார்த்தனை ஒன்று தான் பலிக்கும் முனைவர் அவர்களே! கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.

      Delete
  13. //இந்தக் கொரோனா நோய் சுமார் பதினைந்து நாட்கள் உடலில் இருக்கும் எனவும் அதன் பின்னர் கடுமையான தாக்குதல் இருந்தால் நோயாளிக்கு இறப்பு ஏற்பட்டு விடும் என்றும் சொல்கின்றனர். //

    தவறு. நோயாளிக்கு 15 நாட்களுக்குள் கொரோனா பிடித்த அறிகுறிகள் தென்படும் என்பதே சரி. அதாவது அறிகுறிகள் இல்லாமலேயே கொரோனா வைரஸ் 15 நாட்கள் வரை உடம்பில் வாழலாம். 

    கோரோனோ பிடித்தவர்கள் எல்லோரும் சாவதில்லை. இறப்பு விகிதம்  5% வரை தான். 

    மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை போல பலர் கொரோனா ஒழிப்பு முறைகள் சொல்லி வருகின்றனர். அவரில் ஒருவர் தான் 
    R.ஞானகுமரன்
    Frequency Healing Researcher
    Madurantakam

    நீங்கள் உங்களுடைய தீர்ப்புகளை என்றும் விட்டு  கொடுக்க மாட்டீர்கள் என்பது தெரியும். ஆனாலும் கொமெண்ட் போடுவது எனது உரிமை.
     Jayakumar

    ReplyDelete
    Replies
    1. உங்களோட கருத்துக்கு (என்னைக் குறித்த) மிக்க நன்றி. அவரவருக்கு அவரவர் கருத்துத் தான் ஏற்க முடிந்த ஒன்று. நீங்கள் மற்றவர் கருத்துகளோடு இணைந்து போகிறவரானால் என்னுடைய கருத்துகளோடு ஒத்துப் போயிருக்கலாம் அல்லவா? ஆனால் அது முடியாது! எனக்கும் என் கணவருக்குமே/எனக்கும் என் பிள்ளை, பெண்ணிற்குமே கருத்துகள் ஒத்துப் போனதில்லை. நாங்கள் அதை எதிர்பார்த்ததும் இல்லை. கருத்து வேற்றுமை சிந்தனைக்கு வழி வகுக்கும். பின்னால் நல்ல முடிவு எடுக்கச் சொல்லும்.

      Delete
    2. மற்றபடி 20 நாட்களுக்குப் பின்னரும் கொரோனா அறிகுறிகள் வரும் எனவும் நோய் பாதிப்பு ஏற்படலாம் என்பதும் தெரிந்த ஒன்றே. அனைவரும் சாகவில்லை என்றாலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவில் கொத்துக் கொத்தாகச் செத்து விழுகின்றனர். இத்தனைக்கும் சுத்தத்துக்குப் பெயர் போன நாடுகள் அவை! ஆனால் 80 வயதுக்கு மேல் ஆனவர்கள் கூடப் பிழைக்கின்றனர். இதற்கு என்ன சொல்ல முடியும்? ஞானகுமரன் சொல்லி இருப்பது பௌதிக உண்மைகளோடு ஒத்துப் போவதால் அதைப் பகிர்ந்தேன். எல்லோரையும் ஏற்க வேண்டும் என எங்குமே சொல்லவில்லை. ஏற்பவர்கள் ஏற்கலாம். இல்லை எனில் விலகலாம்.

      Delete
  14. It’s your prerogative to turn the light off or on.just faith based. ... only. Please don’t drag science into this.
    Rajan

    ReplyDelete
    Replies
    1. நன்றிதிரு ராஜன் அவர்களே. விஞ்ஞானம் மட்டுமில்லை, கோள்கள் கூட இதற்குக் காரணம் எனச் சொல்லுபவர்கள் உண்டு. உண்மை எங்கோ ஒளிந்திருக்கிறது. அது வெளி வரவேண்டும்.

      Delete
    2. கடைசியில் அவர் சொன்னது எதற்கு என்பது வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் மக்கள் அனைவரும் ஒன்று கூடி நாட்டுக்காகப் பிரார்த்தனை செய்யச் சொன்னது தான். அதற்குப் பல்வேறு அர்த்தங்கள், பல்வேறு விதமான வெறுப்புகள், கட்சிக்காக, கட்சிக் கொண்ட்டாட்டத்துக்காகனு எத்தனை எத்தனை ஹேஷ்யங்கள்! தேசத்தைப் பற்றி மட்டுமே நினைக்கும் மனிதரை இவ்வளவு ஆழமாய் வெறுக்கும் மக்களை இப்போது தான் பார்க்கிறேன்.

      Delete
  15. விளக்கேற்றுவோம். நேர்மறை எண்ணங்களோடு தேசம், தேச ஒற்றுமை, நமது வலிமை என சில நிமிடங்கள் நினைப்பதில், ஆழ்வதில் என்ன தவறு? அதைத்தானே பிரதமர் வலியுறுத்தினார்?

    அதைவிட்டுவிட்டு இன்று பாஜக-வின் பிறந்த தினமா, இல்லை ஜனசங்கம் தோன்றிய தினமா, ஆர் எஸ் எஸ் ஆரம்பமானது இன்றுதானா, ஒருவேளை தீனதயாள் உபாத்யாயா ஏப்ரல் 5,இரவு 9 மணிக்குப் பிறந்திருப்பாரோ என ஆராய முற்படும் மேதைகளுக்கும் பொழுதுபோகட்டுமே! எவ்வளவு தான் டிவி பார்ப்பார்கள் அவர்களும்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏகாந்தன், ஆறுதலான வார்த்தைகளைக் கொடுத்தமைக்கு நன்றி. பலருக்கும் பலவிதமான கற்பனைகள். பிரதமர் ஏதும் சொல்லாமல் மௌனமாக இருந்தாலும் முதலில் குற்றம் சொல்லப்போவதும் இவர்களே! இப்போது வேண்டுகோள் விடுத்ததுக்கு அவரை முட்டாள்,மடையன் எனச் சொல்லுவதும் இவர்களே!

      Delete
  16. விளக்கு ஏற்றி வழி படுவோம். தினம் ஏற்று வழி படுகிறோம். இது ஒற்றுமையாக கூட்டு வழி பாடு போல! செய்வோம். இறைவன் எல்லோருக்கும் எல்லா நலங்களும் தரட்டும்.
    நம்மை படைத்தவனுக்கு தெரியும் எதை எப்போது தருவது என்று கேட்டு வைப்போம் உலக நலனை அவர் தருவார் என்று நம்புவோம்.


    ReplyDelete
    Replies
    1. இறைவனிடம் கையேந்தினால் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை அல்லவா? நல்லபடி நடக்கட்டும். ஆனால் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கூடிக் கொண்டு போகும் கொரோனா நோயாளிகளை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

      Delete
  17. மக்கள் பழையபடி வாழும் நிலை சீக்கிரம் வரவேண்டும் என்பதே பிரார்த்தனை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அனைவருக்கும் அதான் வேண்டுதல். ஆனால் ஏப்ரலில் நான்கைந்து நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் 28 நாட்கள் ஊரடங்கு வரும் என்கின்றனர்.

      Delete
  18. இது வைரஸ் சம்பந்தப் பட்டதாக அல்லாமல் ஏதோ மின்சாரப் பங்கீடு பற்றிய ஆராய்ச்சியாகவே எண்ணத் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. பொதுவாகவே நம் நாட்டில் மோதி பிரதமர் ஆன பிறகு யாருக்கானும் காலைக்கடன்கள் கழிக்க முடியலைனால் கூட அவரைத் தான் குற்றம் சொல்லி வழக்கம். இப்போதோ நாடு முழுவதும் மின்சார விளக்குகளை அணைக்கச் சொல்லி இருக்கார். அப்போ மின்சார விநியோகம் பாதிப்பு வரும்னு சொல்லலைனா எப்படி? இப்போ ஒண்ணும் பிரச்னை இல்லைனாலும் அதை யாரும் சொல்ல மாட்டாங்க. பயமுறுத்த மட்டும் வருவாங்க!

      Delete
  19. அனைத்தும் நலமாக இருக்கட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி நன்றி.

      Delete