எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, March 09, 2020

ஊருக்கு வந்த கதை!

எங்களைச் சக்கர நாற்காலியில் உட்கார்த்தி அழைத்துச் சென்ற இரு பெண்மணிகளும் அருமையாக ஒத்துழைத்தார்கள். எங்கள் மருமகள் குழந்தையை ஸ்ட்ராலரில் வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தாள். அவளுக்கும் அவ்வப்போது உதவினார்கள். விமானம் ஏறும் வாயில் அருகே போனதும் பயணிகளை அழைக்கும் நேரம் நெருங்கி விட்டிருந்ததால் காத்திருந்து எங்களை உள்ளே அழைத்துச் சென்று விமானத்தின் நுழைவாயில் வரைகொண்டு விட்டார்கள். வசதியாக இருந்தது. ஆனால் குழந்தையின் ஸ்ட்ராலரை வாங்கிக் கார்கோவில் போட்டுவிட்டார்கள். துபாயில் தேவைப்படுமே என்றதற்கு அங்கே complimentry strawler கிடைக்கும், ஒன்றும் பிரச்னை இல்லை என்றார்கள்.  விமானப் பயணத்தில் குறிப்பிடும்படி எதுவும் இல்லை. திரைப்படம் பார்க்கும் வசதி இருந்தாலும் மனம் பதியாததால் படங்கள் பார்க்கவில்லை. குஞ்சுலு அதோட கார்ட்டூனைப் பார்த்துக் கொண்டு வந்தது. அதை அணைத்துவிட்டு அதைத் தூங்க வைக்கக் கொஞ்சம் நேரமானது. பின்னர் அது தூங்கி விமானத்தில் எல்லோரும் தூங்கினாலும் எனக்குத் தூக்கம் வரவில்லை. அன்றைய பயணம் முடிந்து துபாயின் மாலை நேரத்தில் விமானம் துபாயை நெருங்கியது.

துபாயில் விமானம் தரை இறங்கியதும் நாங்கள் வெளியே வந்தோம். அதிகாரிகள் சக்கரநாற்காலியில் உட்கார வைக்க வேண்டிய பயணிகளின் பட்டியலில் இருந்து எங்கள் பெயரைக் கேட்டு உறுதி செய்து கொண்டு சக்கர நாற்காலியில் உட்கார்த்தி வைத்துவிட்டுக் கிளம்பினார்கள். மருமகளுக்கும் காம்ப்லிமென்ட்ரி ஸ்ட்ராலர் கிடைத்தது. அதில் குழந்தையை வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தாள். சக்கர நாற்காலியைத் தள்ளிய  இரண்டு ஊழியர்களில்  ஒருவர் பிலிப்பைன்ஸ் காரர். இன்னொரு இளைஞர் பாகிஸ்தானி. 25 வயதுக்குள் இருக்கும் இருவருக்கும். மிகவும் அன்பாகப் பேசிக் கொண்டு வந்தனர். எங்கள் மனதைப் புரிந்து கொண்டு நடந்தனர் என்றே சொல்லலாம். ஒரு இடத்திலும் எங்களைக் கீழே இறங்கவே விடவில்லை. பாதுகாப்புச் சோதனையின் போதும் பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு அவர்களே போய்ச் சொல்லி எங்களை அதிகம் சோதனை செய்யாமல் அனுமதிக்க உதவி செய்தனர்.  அங்கே விமானம் ஏறும் வாயிலில் இறங்கித் தான் உள்ளே செல்லவேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் அங்கே சென்றதுமே அங்கிருந்த ஓர் அதிகாரி எங்களை விமான வாயிலில் கொண்டுவிடும்படி அந்த இளைஞர்களிடம் சொல்ல அவர்களும் அப்படியே கொண்டு விட்டனர். இரண்டு இடங்களிலும் நாங்கள் முறையே டாலரிலும், தினாரிலும் பணம் டிப்ஸாகக் கொடுத்தோம். அதிலும் அவர்களுக்கு சந்தோஷம்.

துபாய்ப் பயணம் நான்கே மணி நேரத்தில் முடிந்து பயண நியமங்களின் படி சனிக்கிழமை அதிகாலை/ (வெள்ளிக்கிழமை இரவு) ஒன்றே முக்காலுக்கெல்லாம் சென்னையை அடைந்து விட்டோம். அங்கே விமானத்தில் இருந்து வெளியே வருவதே கஷ்டமாக இருந்தது. குஞ்சுலு வேறே அதோட "பேபி"யைக் கீழே எங்கோ போட்டுவிட்டு அழுதது. பிறகு பின்னால் இருப்பவர்களிடம் உதவி கேட்க ஒருத்தர் தேடிக் கொடுத்தார். நல்லவேளை என நினைத்துக் கொண்டேன். வெளியே வந்ததும் சக்கர நாற்காலிக்கான உதவியை நாட ஒரு பெண் சற்றுக் காத்திருக்க வேண்டும் என்றாள்.அதற்குள் பாட்டரி கார் வர அதிலே போகலாம் என்றால் அது குறிப்பிட்ட தூரம் தான் போகும். அப்புறமா நடக்கணும் என்றார்கள். சரினு குஞ்சுலுவையும் அவ அம்மாவையும் அதில் வரச் சொல்லிவிட்டு (ஸ்ட்ராலர் சாமான்கள் எடுக்கும் இடத்தில் தான்கிடைக்கும்.) நாங்க சக்கர நாற்காலிக்குக் காத்திருந்தோம். அன்னிக்குனு பார்த்து சுமார் 50 பயணிகள் சக்கர நாற்காலி கேட்டிருக்கிறார்கள். ஆகவேகொஞ்சம் தாமதமாக வந்தது சக்கர நாற்காலி. அதில் ஏறி அமர்ந்து கொண்டு இமிகிரேஷனுக்கு வந்தோம். மருமகள், குழந்தைக்கு ஓசிஐ என்பதால் அவங்க வேறே பக்கம் போய் விட்டார்கள். அங்கே கூட்டமே இல்லை. ஆனால் இங்கே எங்களுக்கு முன்னால் சுமார் 40 பேர்கள் அவர்களுக்கான உதவி நபர்களுடன் நின்றிருந்தனர். அனைவருமே சக்கர நாற்காலிப் பயணிகள்! இத்தனை கூட்டத்தில் நாம் இமிகிரேஷன் முடிக்கச் சுமார் இரண்டு மணி நேரமாவது ஆகும் என நினைக்க, எப்படியே எங்கள் சக்கர நாற்காலியைத் தள்ளியவர்கள் ஒருத்தர் எங்க இருவரையும் நகர்த்திக் கிடைத்த இடைவெளி வழியாக முன்னே கொண்டு போய்விட்டார். ஆனாலும் அரை மணிக்கு மேல் ஆகிவிட்டது.

அதற்குள்ளாக செல்லை எடுத்து மொபைல் டாட்டாவில் தானாகப் போயிருந்ததால் எல்லோருக்கும் வந்து சேர்ந்ததையும், இமிகிரேஷனில் காத்திருப்பதையும் தெரிவித்து வாட்சப் செய்தி கொடுத்தேன். எங்களுக்காக வந்து காத்திருக்கும் கார் ஓட்டுநரைத் தொடர்பு கொள்ள வாட்சப் இல்லாததால் தொலைபேசி அழைப்புக் கொடுத்தேன். அவர் எடுப்பதற்குள்ளாகத் தொடர்பு துண்டித்து விட்டது. என்னனு பார்த்தால் செல்லில் சார்ஜே இல்லை. 12 சதவீதம் தான் இருந்தது. ஆனால் அதற்குள்ளாக அந்த ஓட்டுநரே எங்களைத் தொடர்பு கொள்ள நானும் காத்திருக்கச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மீண்டும் தொடர்பு அறுந்தது. இமிகிரேஷனை முடித்துக் கொண்டு பெட்டிகளைப் பார்த்து எடுத்துக் கொண்டோம். அதற்கு அந்த நபர்கள் இருவரும் மிகவும் உதவி செய்தார்கள். சாமான்கள் வைக்கும் 2 டிராலியையும் ஒருவர் தள்ளிக் கொண்டு வர, மற்ற இருவர் எங்கள் இருவரையும் தள்ளிக் கொண்டு வந்தார்கள். வெளியே வந்து விட்டோம். மருமகளின் அப்பாவைப் பார்த்துவிட்டோம். நம்ம ரங்க்ஸ் டிரைவர் பெயரைச் சொல்லிக் கூப்பிட அவரும் வந்து விட்டார். அதன் பின்னர் எங்கள் சம்பந்தி எங்களுக்காகக் கொண்டு வந்தா காபியைக் கொடுக்க வண்டியில் போய்ச் சாப்பிடுகிறோம் என வாங்கி வைத்துக் கொண்டேன். குட்டிக் குஞ்சுலுவின் முகம் சுண்டிப் போயிருந்தது. முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டது. டாடா, பை சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டது. அதைத் தொட்டேன்,கையைத் தள்ளி விட்டது. பின்னர் அவங்க காரில் அவங்க ஏறிக்கொள்ள எங்க காரில் நாங்க ஏறினோம்.  காலை சுமார் எட்டரை மணி அளவில் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தோம்.

குஞ்சுலுவை நடுவில் வாட்சப்பில் பார்த்தோம். துக்கம் தொண்டையை அடைக்கிறது. உதட்டைப் பிதுக்குகிறது. தாத்தாவைப் பார்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டது. பின்னர் எனக்கு மட்டும் பை சொல்லிவிட்டு முகத்தை மூடிக் கொண்டு விட்டது. அழுகை வருகிறது. என்ன செய்ய முடியும். அதன் பின்னர் நாங்க மருத்துவரிடம் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்ததால் குஞ்சுலுவைப் பார்க்கவே முடியவில்லை. நாங்க அதைப் பார்க்கவேண்டும் என நினைக்கும் நேரம் அது தூங்கிக் கொண்டிருக்கும். இன்றோ நாளையோ பார்க்கணும்னு நினைக்கிறோம். அது தூங்காமல் இருக்கணும். இன்னும் ஜெட்லாகில் இருந்து அது வெளியே வரலை. சின்னக் குழந்தை தானே!

44 comments:

  1. இப்போது உடல்நிலை எப்படி இருக்கிறது?
    குழந்தைகள் நம் கூட இருக்க முடியாது, நாம் அங்கு இருக்கமுடியாது வேறு என்ன செய்வது ? (அவதிபடும் மனது.)
    பேத்தியின் வருத்தமும், பாட்டியின் வருத்தமும் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, முதல் வருகைக்கு நன்றி. இங்கே சௌகரியமாக வந்து சேர்ந்தோம். ஆனால் கூடவே இந்த வைரஸும் இங்கே இந்தியா வரை வந்துவிட்டதாமே! மருமகள் பயத்தில் வெளியேயே செல்லுவதில்லை. என்னவோ போங்க! :(

      இங்கே வரச் சொல்லி அழைச்சிருக்கோம். ஆனால் நிலைமை சரியாகணும். :( இல்லைனா நாங்க போய்த் தான் பார்க்கணும். கத்தார் இந்திய விமானங்களின் வருகையை நிறுத்தி விட்டதாம். எமிரேட்ஸ் பற்றி இன்று வரை பிரச்னை இல்லை. நல்லபடியாப் போகணும். இப்போதைய கவலை அதான்

      Delete
    2. தங்கை மகன் கத்தாரில் இருக்கிறான் தன் மனைவியை இந்த மாதம் வந்து அழைத்து செல்வதாய் இருந்தான், இப்போது வர முடியாது.
      இந்த வைரஸால் எல்லோருக்கும் கஷ்டம். மகனும் இந்த வருடம் வருவதாய் இருந்தான் இப்போது யோசிக்கிறான்.
      நிலமை சரியாக பிரார்த்தனை தான் செய்ய வேண்டும்.

      Delete
  2. ஆஆஆஆவ்வ்வ் மீதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊ... ஆனா பின்புதான் போஸ்ட் படிப்பேன்:)

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ
      மீ அழுதேன்:)) ஹா ஹா ஹா..

      Delete
    2. ஹாஹா, நீங்க ஒண்ணும் பர்ஷ்ட்டு இல்லையே, இல்லையே, இல்லையே? அதுக்கா அழறீங்க? இஃகி,இஃகி,இஃகி, நல்லா அழுங்க!

      Delete
    3. பர்ஸ்ட் இல்லை. அபிஷ்டு. அபிஸ்டு அதிரா. அர்த்தம் கீசாக்க சொல்வார்கள். Jayakumar

      Delete
  3. நீண்ட பயணம் - கடினம் தான். நல்லபடியாக திருவரங்கம் வந்து சேர்ந்தாயிற்று. நலமே விளையட்டும்.

    ReplyDelete
  4. பத்திரமா வந்து சேர்ந்தது சந்தோஷம். ஸ்ரீரங்கம் பயணத்தில் உங்களை மிஸ் பண்ணினோம். நல்லா ஓய்வெடுத்துக்குங்க. உடம்பைப் பார்த்துக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசி, ஆதி எழுதி இருந்தார். அதோடு உங்க முகநூல் பதிவுகளிலும் பார்த்தேன். நாங்களும் பேசிக் கொண்டோம். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  5. அன்பு கீதாமா,
    சக்கிர நாற்காலி மிக உதவி.
    குஞ்சுலுவை நினைத்தால்தான் கஷ்டமாக இருக்கிறது.
    பாவம் அதுக்குப் புரியவே நேரமாகும். வெய்யில் வேற படுத்தும்.
    நீங்களும் உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள்.
    மாமாவும் ,நீங்களும் நிறைய ஓய்வெடுத்து
    சுகமாக இருக்க என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, வெயில் குழந்தைக்குக் கஷ்டமாகத் தான் இருக்கும். அதுவும் கரோனா/கொரானா? வைரஸுக்குப் பயந்து மருமகள் உள்ளூர்க் கோயில்களுக்குக் கூடப் போவதில்லை. என்னவோ பொழுது கழிகிறது. நல்லபடியாகத் திரும்பிச் செல்லவேண்டுமே என்ற கவலை இப்போது.. இங்கேயும் குலதெய்வத்தைப் போய்ப் பார்க்கணும். எல்லாம் அந்த மாரியம்மன் காலடிகளில். அவள் தான் எல்லாப் பிரச்னைகளையும் தீர்க்கணும்.

      Delete
  6. ஊரிலிருந்து உங்ககூடவே வந்திருக்கு குழந்தை அதான் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா ..நமக்கே ஜெட் லாக் சரியாக வாரமாகும் குழந்தை பாவம் .நல்லவேளை அதோட பொம்மையை கண்டுபிடிச்சிகொடுத்தீங்க ..உடம்பையும் மனசையும் பத்திரமா பார்த்துகோங்கக்கா 

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஏஞ்சல். எங்களோட வரப்போறதா நினைச்சிருக்கும். என்ன செய்வது? உடல் கொஞ்சம் பரவாயில்லை. ஆனால் மனது தான் அடிச்சுக்கிறதே!

      Delete
  7. பயண அனுபவங்களை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  8. திர்ஹாம்... தினார் இல்லைனு நினைக்கிறேன் unless you had Kuwaiti Dinar as a change

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் நெல்லைத் தமிழரே, எங்களிடம் அந்தப் பணம் கையில் இல்லை. நல்லவேளையாக மருமகளிடம் கொஞ்சம் இருந்தது. இல்லைனா டாலரில் தான் கொடுத்திருப்போம். :))))

      Delete
  9. பேத்தியைப் பிரிவது உங்களுக்கும் மனக்கஷ்டம், அதுக்கும் கஷ்டம். வாட்சப்பிலாவது தொடர்பில் இருங்கள். நம்ம ஊர் வெயில் வேறு குழந்தைக்கு ஒத்துக்கொள்ளணும்.

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் அழைக்கும் சமயம் குழந்தை முழிச்சிண்டு இருக்கணும். அது விளையாடிக் கொண்டிருக்கும் நேரம் மருமகள் கூப்பிட்டால் நாங்க அந்தச் சமயம் தயாரா இருக்கணும். :)))))

      Delete
  10. பயணம் சுகமாக அமைந்தது மகிழ்ச்சி. நல்லவேளை சினிமா எதுவும் நீங்க பார்க்கலை. (ஃப்ளைட்ல). இல்லைனா விமர்சன இடுகை வந்திருக்குமே....

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, போகும்போது ஊரி, ஸ்ரீமான் ஸ்ரீமதி இன்னொரு படம் ஆக மூன்று பார்த்தேன். இப்போது என்னமோ தெரியலை, உங்க அதிர்ஷ்டமோ? மனசே பதியலை! அது சரி, என்னோட விமரிசனம் அவ்வளவு மோசமாவா இருக்கு? இப்படிப் பயப்படறீங்க? :)))))))

      Delete
  11. எப்படியோ சக்கர நாற்காலியை இறுக்கிப் பிடிச்சபடி கீசாக்கா நலமே வந்து சேர்ந்துவிட்டா..

    ஆவ்வ்வ் பிலிப்பைன்ஸ் காரருக்குப் பதில் சைனீஸ்காரர் கீசாக்காவில் நாற்காலியைத் தள்ளியிருந்தால்ல்ல்ல்ல்?:)) ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. இல்லை பிஞ்சு, எனக்குச் சக்கரநாற்காலியைத் தள்ளியவர் பாகிஸ்தானி. மாமாவுக்குத் தான் பிலிப்பைன்ஸ். நாங்க ஹிந்தியிலேயும் மாமா ஆங்கிலத்திலேயும் அவங்களோடு பேசிக்கொண்டு வந்தோம். சீனாக்காரராக இருந்தாலும் தள்ள அனுமதிச்சிருக்க மாட்டாங்களே! :)

      Delete
  12. ஓ நீங்க நேரே ஸ்ரீரங்கம் வந்துவிட்டீங்களோ? அது தூரமில்லையோ? நான் நினைச்சேன் சம்பந்தி வீட்டுக்குப் போய்க் களைப்பாறிவிட்டுத்தான் உங்களிடம் வருவீங்கள் எண்டு, அப்படி எனில் குஞ்சுலுவுக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும், சரி சரி களைப்பாறிவிட்டு குஞ்சுலுவைப் போய்ப் பாருங்கோ.. கூட்டி வாங்கோ ...

    மனிதராகப் பிறந்திட்டால்.. எப்பவுமே பிரிவு.. கவலை இருந்துகொண்டே இருக்குது கீசாக்கா, நாம் தான் மனதை டைவேர்ட் பண்ணி, நம்மை நாமே மகிழ்வாக வைத்திருக்கோணும்.

    அதுசரி மாமா சந்தைக்குப் போகத் தொடங்கிட்டாரோ..

    ReplyDelete
    Replies
    1. சென்னையிலிருந்து ஸ்ரீரங்கம் நான்கு மணி நேரம் தான் பிஞ்சு. போக்குவரத்தைப் பொறுத்து அரை மணி நேரம் கூட ஆகலாம். அன்னிக்கு சனிக்கிழமை அதிகாலை என்பதால் அதிகம் போக்குவரத்து இல்லை. ஞாயிறன்று ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை போனால் காரில் நான்கரை மணி நேரத்தில் அம்பத்தூருக்கே போயிடல்லாம். சாலை அவ்வளவுக்கு வெறிச்சோடி இருக்கும்.

      Delete
    2. இஃகி,இஃகி,இஃகி, சந்தைக்குப் போகாமலா? அதெல்லாம் போயாச்சு. அதிலும் மருத்துவரைப் பார்க்கப் போன தெரு சந்தைக்கு மிக மிக அருகே. அங்கே இருந்து மாவடு வந்தாச்சு, போட்டுச் சாப்பிடவும் ஆரம்பிச்சாச்சு. ஒரு கட்டுக் கொத்துமல்லி காத்திருக்கு என்னை என்ன செய்யப் போறேனு கேட்டுட்டு! புதன்கிழமையிலிருந்து தினம் தினம் மருத்துவமனை வாசமா? ஆட்டோவில் போயிட்டு வரச்சே இப்படி ஏதானும் வாங்கிட்டு வந்துடுவோம். :))))))

      Delete
    3. //நான்கரை மணி நேரத்தில் அம்பத்தூருக்கே போயிடலாம்// - அது சரி..அம்பத்தூருக்கு நீங்க எதுக்குப் போகணும்? வேப்ப மரம் இருந்த இடத்தைப் பார்க்கவா?

      Delete
    4. அம்பேரிக்கா கிளம்பும் முன்னர் போய்ப் பார்த்துட்டு வந்தோம். மனசே ஆறலை. இப்போ வீடுகள் வந்து முடியும் நேரம். எப்படியும் கூப்பிடுவாங்க. நாங்க அங்கே வீடு வேண்டாம்னு சொல்லிட்டோம். இருந்தாலும் கூப்பிடுவாங்க அல்லது பில்டர் எங்களை இங்கே வந்து பார்க்கலாம்.

      Delete
  13. என்ன செய்வது....
    இப்பவும் பேத்தியின் குறும்புகளை வாட்சப்பில் பார்க்கும்போது மனம் கனத்து விடுகிறது...

    அள்ளியெடுத்து உச்சி முகர முடியவில்லையே என்று..

    எல்லாம் நலமாக இருக்க வேண்டிக் கொள்வோம்...
    அது ஒன்றுதான் நம்மால் ஆனது..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், துரை, என்ன இருந்தாலும் கைகளால் தொட்டுக் கொஞ்சுவது போல் வருமா? மனதைத் தேற்றிக்கொள்ளத் தான் வேண்டி இருக்கு. எங்கிருந்தாலும் பூரண ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

      Delete
  14. மற்ற ஊர்களில் சட்சட்டெனக் கிடைத்த சக்கர நாற்காலிகள் நம்மூரில் மட்டும் தாமதமாகவே கிடைத்ததோ...   குழந்தை, நீங்களும் அவளும் சேர்ந்துதான் இருக்கப் போகிறீர்கள் என்று நினைத்திருக்கும்.  அப்படி இல்லை என்றதும் பாவம், ஏமாந்து போயிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், பொதுவாக நம்ம ஊரிலும் விரைவாகவே கிடைக்கும். அன்னிக்குனு பார்த்து சுமார் 50 பேர் சக்கர நாற்காலி கேட்டிருக்கின்றனர். அதிலே சிலர் உடல் நலம் முடியாதவர்கள். ஆகவே தாமதம். ஆமாம், குஞ்சுலு எதிர்பார்க்கவில்லை. நாங்க தனியாக் கிளம்பறோம் என்பதை! அவ அம்மா இருந்ததால் அதிகம் அழவில்லை. ஆனால் துக்கம் தொண்டையை அடைக்கிறது.

      Delete
  15. குஞ்சுலு பேசமாட்டேன் என்று சொல்லிவிட்டதா மனதுக்கு சங்கடம் தான். குழந்தைதானே ஓரிருநாளில் சரியாகும்.

    ReplyDelete
    Replies
    1. நேற்றும் பார்த்தோம் மாதேவி, குழந்தை விளையாடிக்கொண்டிருந்தாள், எங்களை ஓரக்கண்ணால் பார்த்தவண்ணம். அப்பா நினைப்பு அடிக்கடி வருவதாக சம்பந்தி சொன்னார். என்ன செய்வது? நல்லபடி திரும்பிப் போனால் போதும் என இப்போது கவலை!

      Delete
  16. பூலோகமே ஆனாலும் வைகுண்டம் போல்  ஆகுமா? ஊர் எல்லாம் திருவரங்கம் ஆகுமா? ஆமா நீங்க வந்ததால கோவில் பிரசாத ஸ்டால் தீப்பற்றி எரிந்து விட்டதாமே. 

    ReplyDelete
    Replies
    1. என்ன ஜேகே ஐயா... சட்னு இப்படிச் சொல்லிட்டீங்க. விளையாட்டுக்குச் சொல்லியிருந்தாலும் மனசுல பட்டுனு தைக்குது.

      கடை மூடும்போது போடும் சாம்பிராணி புகையில் தூள் பறந்து பற்றிக்கொண்டதா இல்லை மின் கசிவா என்று ஆராய்கிறார்கள்.

      Delete
    2. நன்றி ஜேகே அண்ணா, இப்படிச் சொல்வதன் மூலம் உங்களுக்குக் கொஞ்சமானும் மனம் திருப்தி அடைந்தால் அதுவே போதுமானது. என்னைப் போல்/எங்களைப் போல் பலரும் கடந்த ஒரு வாரத்தில் ஸ்ரீரங்கத்துக்கு வந்திருப்பார்கள். :))))))

      Delete
    3. நெல்லையாரே, இதன் மூலம் அவருக்குக் கிடைக்கும் கொஞ்ச மனத் திருப்தியை நாம் ஏன் கெடுக்கணும்? இதுக்கும் மேலே பலரிடமிருந்தும் கேட்டாச்சு. இது எல்லாம் பழகிடும், கடந்து விடும். படிச்சதும் கொஞ்சம் சுருக் எனத் தைத்தாலும் பின்னர் சிரிப்பே வந்தது.

      Delete
  17. சக்கர நாற்காலி என்று சொல்லாதீர்கள். சக்கரம் தான் உண்டு. கால் இல்லை. அதனால் அதிரா பாஷையில் சக்கர கதிரை என்று சொல்லலாம். அல்லது வீல் சேர் என்று சொல்லலாம். 

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜேகே அண்ணா, தவிர்க்க முடியாத இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் ஆங்கிலச் சொற்கள் பயன்பாட்டைத் தவிர்த்து வருகிறேன். ஆகையால் சக்கர நாற்காலி என எழுதினேன். நன்றி.

      Delete
  18. வணக்கம் சகோதரி

    தாங்கள் அவ்வளவு தூரம் பிரயாணபட்டு நலமுடன் ஊர் வந்து சேர்ந்தது அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். நீண்ட பிரயாணம் என்பது பொதுவாகவே கடினந்தான். அதுவும் விமானத்தில்.. தங்கள் பேத்திதான் பாவம்..அப்புறம் மறுபடியும் அந்த சூழ்நிலை பழகி விடும் என்றாலும் தங்களை காணாது கொஞ்ச நாள் சிரமபடுவாள். தங்கள் மருமகள் மீண்டும் அமேரிக்காவுக்கு கிளம்பும் முன் ஒரு மாதமாவது தங்களுடன் வந்து இருப்பார்கள் இல்லையா? அப்போது மறுபடியும் குழந்தை நன்கு பழகி ஒட்டிக் கொள்ளும். என்ன இருந்தாலும் குழந்தையை பிரிந்து இருப்பது நமக்கும் கஸ்டமாகத்தான் இருக்கும். என்ன செய்வது? நம் குழந்தைகள் வெளிநாடு சென்று தங்குவது மனதுக்கு ஒரு மாதிரிதான் உள்ளது. இதை நானும் அனுபவிக்கிறேன். எப்படி தங்களுக்கு ஆறுதல் சொல்லவென்று தெரியவில்லை.
    தைரியமாக இருங்கள்.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, குழந்தை நன்றாக விளையாடிக்கொண்டு தான் இருக்கிறாள். என்றாலும் கண்களில் அந்தக் குறும்பு! எங்களைப் பார்க்கையிலேயே குறும்புடன் சிரிக்கும். அது தொலைந்து விட்டது. சட்டெனப் பெரிய மனுஷியாகத் தன்னை மாற்றிக்கொண்டு விட்டது. எப்படியோ நல்லபடியாகப் பயணம் முடிந்து திரும்பிச் சென்றால் இறைவனுக்கு நன்றி. இன்னும் வெளியே போகவே ஆரம்பிக்கவில்லை. இந்தத் தொற்றுக்குப் பயந்து கொண்டு குழந்தையை இன்னும் எங்கும் அழைத்துப் போகவில்லை.

      Delete