எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 29, 2020

ஜீ பூம்பா!

 
அம்பேரிக்காவில் எடுத்த சில படங்களைப் பகிரலாம்னு நினைச்சால் அவற்றை எல்லாம் ஏற்கெனவே போட்டிருக்கேன். ஆகவே வேறே படங்கள் தேடித்தான் போடணும். நண்பர் ஒருத்தர் அவருடைய புத்தகம் ஒன்றை பிடிஎஃப் ஆக அனுப்பி இருக்கார். அதைப் படிச்சு முடிக்கணும். பாதி படிச்சேன். அப்புறமா படிக்க நேரமே சரியா வரலை. ஏற்கெனவே சித்தப்பாவின் "ஒற்றன்" புத்தகம் மறுபடி படிச்சு முடிச்சேன்.  சித்தப்பா 73 ஆம் வருடம் ஐயோவா/(மினியாபொலிஸ் அருகே) போனப்போ நடந்த நிகழ்வுகளை வைத்து எழுதியது. மறுபடி படிக்கக் கமலா சடகோபனின், "கதவு" "பொன்னியின் செல்வன்" (லக்ஷம் தரம் இருக்கும்) எடுத்து வைச்சிருக்கேன். அதுக்கு நடுவில் ஸ்ரீரங்கம் பற்றித் தொகுக்க மீண்டும் "திருவரங்கன் உலா" வை அவ்வப்போது எடுத்துப்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு நடுவில் "பலே பாண்டியா!" படத்தை வேறே கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எல்லாம் அந்தப் பாடல் காட்சி ஒன்றுக்குத் தான். "அத்திக்காய், காய்!" பாடலுக்காக. இன்னும் அந்தப் பாடல் வரவில்லை. ஜிவாஜி, தேவிகா எல்லாம் குண்டு குண்டாக ஆடிப்பாடும்போது இதை அந்தக் காலத்தில் எப்படி ரசித்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

இதுக்கு நடுவில் வீட்டு வேலைகள், சமையல், சாப்பாடு போன்றவை. இந்த ஊரடங்கு நீடிக்கப் போவதாய்ச் சொல்கின்றனர். தமிழ்நாட்டுக்குப் பேருந்துகள் சேவையோ, ரயில் சேவையோ வேண்டாம் என முதலமைச்சர் சொல்கிறார். ஆனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ரயில் வண்டிகள் ஓடிக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றில் தொழிலாளர்கள் பயணித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் நடந்து செல்பவர்கள் நடந்து சென்று கொண்டே இருக்கின்றனர்.  இதை எந்த அரசும் செய்யச் சொல்லவில்லை என்றாலும் காத்திருந்து ரயிலிலோ அல்லது பேருந்துகளிலோ பயணித்துப் போவதற்கு நடந்து செல்லலாம் என முடிவு செய்திருப்பார்கள் போல. இத்தனைக்கும் ஆங்காங்கே காவல்துறையினர் கன்டெயினர் லாரியில் பயணிப்பவர்களை எல்லாம் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பிப் பேருந்திலோ, ரயிலிலோ போகச் சொல்கின்றனர். ஆனாலும் அவர்கள் போவதில்லை.

வழிப்பயணம் செல்பவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை என்கிறார்கள். அவர்கள் செல்லும் வழியைத் தெரிந்து வைத்துக் கொண்டு உணவுப் பொட்டலங்கள் எடுத்துக் கொண்டு சென்றாலும் அவர்கள் அந்த வழியிலேயே சென்று கொண்டிருப்பார்களா நிச்சயம் இல்லை. வடக்கே செல்லும்  எல்லாச் சாலைகளிலும் இவர்களை எதிர்பார்த்துக் கொண்டு உணவுப் பொட்டலங்களோடு தொண்டர்கள் தான் தயாராக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ என்னமோ புரியலை. ஆனால் எல்லாவற்றுக்கும் அரசு தான் காரணம் என்று எளிதாகச் சொல்லி விடுகிறார்கள். இந்த அழகில் சில மாநில அரசுகள் திரும்பி வருபவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று வேறே சொல்கின்றன. இப்படி ஒரு நிலைமை வந்ததால் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள புலம் பெயர் தொழிலாளர்கள் பற்றி நமக்குத் தெரிய வந்திருக்கிறது. இல்லைனா தெரியவே போவதில்லை. அவ்வளவு ஏன்? அந்த அந்த மாநில அரசுகளிடமே இதற்கான சரியான கணக்கு இல்லை.

இப்போப் புதிய பிரச்னை வெட்டுக்கிளி. அதுக்கும் மத்திய அரசையும் பிரதமரையும் காரணம் சொல்கின்றனர். 20 லக்ஷம் கோடிப் பணம் எனத் தவறாகச் சொல்லிவிட்டார். 20 லக்ஷம் கோடி வெட்டுக்கிளிகளைத் தான் பிரதமர் கொடுத்திருக்கிறார் எனக் கேலி செய்துக் கருத்துப்படங்கள் மூலமும் பதிவுகள் மூலமும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். நாட்டை இப்போது பிடித்திருக்கும் கொரோனா பிரச்னையிலிருந்தும் இன்னமும் நாடு முழுவதுமாக விடுதலை அடையவில்லை. அதனால் ஏற்பட்ட ஊரடங்கால் பொருளாதாரப் பிரச்னை. அண்டை நாடுகளின் தொல்லைகளினால் எல்லைப் பிரச்னை எனப் பல்வேறு பிரச்னைகளை இப்போது நாடு எதிர் கொண்டிருக்கிறது. இந்த அழகில் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தொற்று நோய் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது.  தமிழக அரசும் பொது விநியோகப் பொருட்களோடு பணமும் 3 மாசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. வரப்போகும் ஜூன் மாசமும் கொடுக்கப் போகிறது. மத்திய அரசும் புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் அட்டை இல்லாமலேயே அரிசியோ கோதுமையோ பருப்போடு வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறது. அதைத் தவிரவும் அடித்தட்டு மக்களுக்கு ஜன் தன் திட்டத்தின் மூலம் அவரவர் சொந்த வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்டுள்ளது,. விவசாயிகளுக்கும் இரண்டு தவணைகளாகப் பணம் கொடுத்துள்ளது. குன்னியூரில் விவசாயம் செய்யும் என் பெரியம்மா பையர் (தம்பி) இரு தவணைப் பணமும் தனக்கு வந்து சேர்ந்ததையும் மற்றவர்களுக்கு வந்திருப்பதையும் உறுதி செய்கிறார்.

எல்லோரும் மத்திய, மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள், கீழ்த்தட்டு மக்கள் அனைவருக்கும் 7,500 ரூபாய் ( 7500 ரூ? அது என்ன கணக்கு?) கொடுக்கணும்னு சொல்கிறார்கள். நோட்டை அடிச்சால் போச்சுனு நினைக்கறாங்க போல.  அதோட இந்தப் பணம் எத்தனை நாட்களுக்கு? அவங்களுக்கு நிரந்தரமாக ஓர் வருமானத்துக்கு அல்லவோ ஏற்பாடு செய்யணும்? எதிர்க்கட்சித் தலைவர்கள் இப்படி நடந்து செல்லும் தொழிலாளர்களோடு தெரு நடைமேடைகளில் அவங்களும் உட்கார்ந்து படம் பிடித்துப் பத்திரிகைகள், முகநூல், டிவிட்டர் எனப் பகிர்கிறார்கள். மத்திய அரசின் இயலாமையை எடுத்துச் சொல்கிறார்களாம்! ஏன் இவங்களுக்குப் பொறுப்பு இல்லையா? கட்சி நிதியிலிருந்தும் அனைவரின் சொந்த சொத்துக்களில் இருந்தும் நிதி அளிக்கக் கூடாதா? பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யக் கூடாதா? இன்னொரு தலைவி ஆயிரம் பேருந்துகளை ஏற்பாடு செய்யறேன்னு சொல்லிட்டுக் கடைசியில்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வேண்டாம்!

இத்தனை பேர் போகும்போது யார், யாருக்கு எங்கே, எந்த மாநிலத்தில் எந்த ஊருக்குப்  போகணும்னு யாரால் கண்டுபிடிக்க முயலும்? ஏதோ ஒரு பத்து இருபது பேரிடம் கேட்கலாம். சாரிசாரியாக வரும் நபர்களிடம் எப்படி விசாரிப்பது? அனைவரும் ஒரே ஊருக்கா போகிறார்கள்? அனைவரும் ஒரே மாநிலத்தில் இருந்தா வந்திருக்கிறார்கள்? அவர்களிடம் ஆதார் அட்டையோ ரேஷன் அட்டையோ இருந்தாலும் கண்டுபிடிக்கலாம். அதெல்லாம் இருந்தால் தான் அவங்க காத்திருந்து பொறுமையா அரசு ஏற்பாடு செய்யும் ரயில்களில் முன்பதிவு பண்ணிக் கொண்டு போகலாமே! அதெல்லாம் இல்லாததால் தானே நடந்தே போகிறார்கள். உள்ளூர பயம்! எங்கே நம்மைப் பிடித்து வைத்துக் கொண்டு விடுவார்களோ என! ஆகவே நடந்தே செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறார்கள்.  இவர்களில் ஒரு சில வெளிநாட்டவர்களும் இருப்பதாய்ச் சொல்கிறார்கள். ரயில்களில் போகிறவர்களும் போய்க்கொண்டே தான் இருக்கிறார்கள். நடந்து செல்பவர்களும் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து உபி, பிஹாருக்குச் செல்லும் மக்கள் அதிகம். அங்குள்ள அரசாங்கங்கள் மத்திய அரசு தான் இதற்குக் காரணம் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றன.  யாரிடமும் ஒரு தெளிவான கணக்கு இல்லை என இப்போது அரசைக் குறை கூறுபவர்கள் அரசு கணக்கெடுக்கும்போது முறையான விபரங்களைக் கொடுக்கக் கூடாது என்று மக்களிடம் வலியுறுத்திச் சொன்னவர்கள் தான்!

மத்திய அரசு எதற்குத் தான் பொறுப்பேற்கும்? இந்த மாநிலங்களின் வேறு எந்த விஷயத்திலும் மத்திய அரசு தலையிட்டால் இது மாநிலச் சுதந்திரம், மத்திய அரசு தலையீடு என்பார்கள். சட்டம், ஒழுங்கு மாநில அரசின்பொறுப்பு என்பார்கள். ஆனால் இப்போதோ? எல்லாம் மத்திய அரசு தான் பொறுப்பு என்று சொல்லிக் கை கழுவி விடுகின்றனர்.  ரயில்களும் கன்னா, பின்னாவென ஓடுகின்றன. பிஹாருக்குச் செல்ல வேண்டிய ரயில் ஒடிசா போய் அங்கிருந்து பிஹாருக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. இம்மாதிரிப் பல ரயில்களும் திசைமாறிப் பயணிக்கின்றன. விபத்து இல்லாமல் போகிறதே ஒரு பெரிய விஷயம். ஆங்காங்கே கிடைக்கும் சிக்னல்களினால் இந்தப் பிரச்னை. ரயில்களில் சரியான சிக்னல்கள் கிடைக்கும்படி சிக்னல் தொழிலாளர்கள் இன்னமும் வேலைக்கு வரவில்லை போலும். இப்படி எல்லா விஷயங்களிலும் பிரச்னை நுணுக்கமாக ஊடுருவி இருக்கும்போது ஒரே இரவில் அனைத்தையும் சரி பண்ண, "ஜீ பூம்பா!" தான் வரணும்.

ஜீ! பூம்பா!

Pattanathil Bhootham [1967] Tamil Movie Full Details | Antru Kanda ...

87 comments:

 1. அந்த ஜீபூம்பாவை வந்து கொரோனாவை மட்டும் கூட்டிட்டு போய்ட சொல்லணும் மற்றதெல்லாம் நம்ம மக்கள்  அவங்கவங்களே பார்த்துப்பாங்க :)எப்படி பரவுது எங்கிருந்து பரவுதுன்னு புரியுமா மனுஷங்க படற பாட்டை சொல்லி முடியாது ..எங்கூரில் ரிலாக்ஸ்  ஆகப்போது லாக் டவுன் .அதை நினைச்சா பகீர்ங்குது ..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், அதே, அதே, கொரோனாவைக் கூட்டிட்டுப் போயிடட்டும். அப்புறமா எந்தப் பிரச்னையும் இருக்காது.

   Delete
  2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இது அநியாயம், அபச்சாரம், அநீதி, ஒரு அப்பாவிப்பிள்ளை நீண்ட நாட்களுக்குப் பின் சொப்பொங் போன நேரம் பார்த்து, இப்பூடி ஓடிவந்து மீ த 1ஸ்ட்டாகக் குதிச்சிட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஜீபூம்பா.. ஜீபூம்ம்பா:))

   Delete
  3. ஹாஹாஹாஹா!

   Delete
 2. எத்தனையோ புத்தகங்கள் வாங்கி வைத்திருந்தும் எனக்கு அதை எல்லாம் கையில் எடுத்தால் படிக்க ஓடவில்லை.  குறிப்பாக ஜெமோவின் விஷ்ணுபுராணம்!  அதேபோல மிக விரும்பி வாங்கிய முகிலின் அகம் புறம் அந்தப்புரம் புத்தகம்...   நானும் பழைய புத்தகங்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம், நான் புத்தகங்கள் வாங்கினதே இல்லை. தெய்வத்தின் குரலும், அறிவுக்கனலே! அருட்புனலே புத்தகமும் மட்டும் ஆன்மிகக் கண்காட்சியில் ஒரு தரம் வாங்கிக் கொண்டேன். ஆனால் அடிக்கடி பார்ப்பதால் இணையம் மூலமே பார்க்கிறேன். புத்தகங்களை எடுப்பதில்லை. பழைய புத்தகங்களின் ருசி நம்ம அம்மா சமையல் போல! மணக்கும். ருசி அபாரமா இருக்கும்.

   Delete
  2. அம்மா சமையலை யாரேனும் விரும்பினால் கொடுப்போமே தவிர பழைய புத்தகங்ஙளை அல்ல - என்று ஶ்ரீராம் சொல்லுவாரே

   Delete
  3. நெல்லைத் தமிழரே, உங்களிடம் உள்ள அந்த இமயமலைத் துறவிகள் எழுதின புத்தகங்களை உங்க வீட்டுக்கு வந்து எடுத்துட்டு வரணும்னு ஓர் எண்ணம் உள்ளூர இருக்கு! கேட்டால் கொடுப்பீங்களோ, மாட்டீங்களோ! நான் படிச்சுட்டு பத்திரமாத் திருப்பிடுவேன்.

   Delete
  4. ஹா... ஹா... ஹா...

   Delete
  5. கீசா மேடம்... மூன்று புத்தகங்கள் இருக்கு (ஏற்கனவே சொன்னதுபோல் 1கிலோ 180 ரூபாய் கொடுத்து என் நூற்றுக்கணக்கான புத்தகங்களை சென்னைக்கு அனுப்பாமல் அங்கேயே தமிழ் மன்றத்திற்குக் கொடுத்துவிட்டேன். அதில் நான் கவனிக்க மறந்தது, மீண்டும் அந்தப் புத்தகங்களை எங்கு தேடி வாங்கமுடியும் என்பது. ). இதயகுரு, சுவாமி ராமாவின் புத்தகம், சுவாமி ராமாவின் சீடர் எழுதிய புத்தகம் இவை என்னிடம் இருக்கு. வாய்ப்பு வரும்போது தருகிறேன்.

   Delete
  6. காத்திருக்கேன். முடிஞ்சால் கூரியரில் அனுப்புங்க! To Pay போட்டு அனுப்பினா நான் பணம் கட்டி வாங்கிக்கொள்கிறேன். இப்போதைக்கு இங்கே ப்ரொஃபஷனல் கூரியர்ஸ் மட்டும் வேலை செய்கிறது.

   Delete
 3. பலே பாண்டியா...   அப்போதெல்லாம் எல்லோருமே குண்டாகத்தான் இருந்தார்கள்.  கொடியிடை, இட்டிருக்கிறதா இல்லையா என்றெல்லாம் கவிஞர் தேவிகா, சாவித்ரியைப் பார்த்துதான் பாடினார்!!!  அப்போது அது சகஜம்.  இப்போதைய நிலையுடன் அதை கம்பேர் செய்யக்கூடாது.

  ReplyDelete
  Replies
  1. இப்போதைய படங்களைப் பார்த்தால் தானே ஒப்பிடுவதற்கு முடியும் ஸ்ரீராம்? பார்ப்பதே இல்லை. 2016-17 ஆம் ஆண்டில் அம்பேரிக்கா போனப்போ தனுஷின் கொடி பார்த்தேன். இன்னொரு படம் ராஜ்கிரண் நடிச்சது பார்த்தேன். இரண்டுமே நன்றாக இருந்தன.

   Delete
  2. ஆனாலும் ஜிவாஜி டூயட்டில் ரொம்பவே சிப்பு மூட்டினார். :)))))

   Delete
  3. நான் ரொம்ப முன்பு கொடி படம் பார்த்தபோது அனுபமா பரமேஸ்வரன் ரசிகனாகி விடலாமா எனத் தோன்றியது.

   Delete
  4. அது யாரு அனுபமா பரமேஸ்வரன்? புதுப் பெயரா இருக்கே? திரிஷா தான் அதிலே பார்த்தேன். வில்லி!

   Delete
  5. தனுஷின் காதலி. கோழி முட்டை வியாபாரி!

   Delete
  6. தனுஷின் காதலியா? ம்ம்ம்ம்ம்ம்?????? நினைவில் இல்லையே! இந்தத் திரிஷா தான் தனுஷ் (கொடி)க்குக் காதலியாக வந்து அவரைக் கொல்வார். நீங்க சொல்வது அந்த இன்னொரு தனுஷுக்கோ? மறந்துட்டேன்.

   Delete
 4. ஆரம்பத்தில் சில படங்கள் நெட்ப்ளிக்சிலும், அமேசான் ப்ரைமிலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அப்புறம் மூட் இல்லை.  இப்போதோ பகலில் வெய்யில் கொளுத்துகிறது.  இரவில் புழுக்கமும் வெம்மையும் படுத்துகிறது.  புத்தகம் எங்கே படிக்க, சினிமா எங்கே பார்க்க...

  ReplyDelete
  Replies
  1. இஃகி,இஃகி,இஃகி, ஸ்ரீராம், நான் இப்போத் தான் 2 நாட்களாக இந்தப் படத்தைப் பார்க்க முயன்று கொண்டிருக்கேன்! :)))) காலையில் இங்கே எட்டு மணி வரை வெயில் தெரியாது. அப்புறமா 3,4 மணிக்கு வெயில் தாழ்ந்து மோடம் போட்டுக்கும். பெரிசா மழை கொட்டும்னு நினைச்சால் ஏழுமணிக்கெல்லாம் வெளிவாங்கிடும். அபூர்வமாக் காத்து வேகமா அடிக்கும். இப்போக் கொஞ்ச நாட்களாக பருவக்காற்றின் வேகம் குறைஞ்சிருக்கு.

   Delete
  2. ஒரு வாரமா மாலைல மேகமூட்டம், அனேகமா நல்ல காத்துடன் மழை என்று போகிறது. இரவில் நான் மட்டும் பால்கனுல படுக்கறேன். ரொம்ப சுகம், குளிர், காலைல 4 1/2க்கு எழுந்துக்க கஷ்டமா இருக்கு.

   சென்னைல இது அபூர்வம்.

   Delete
  3. இங்கேயும் மேக மூட்டம் தான். காற்றுத் தான் குறைந்துவிட்டது. பால்கனியிலே படுத்தாலும் கீழே தரையிலே படுக்காதீங்க! போர்வையும் வேண்டும்.

   Delete
  4. சென்னையில் வெக்கை தாளவில்லை. பதினோரு மணி முதல் மாலை நாலு மணிவரை வெயில் எரிகிறது.

   Delete
  5. இங்கே சூடு குறைந்து விட்டது.

   Delete
  6. ஒரு வாரத்தில் சென்னையில் மழை ஆரம்பித்துவிடும். பிறகு நல்லாத்தான் இருக்கும் ஶ்ரீராம். சென்னையில் மரங்கள் சூழ இருந்தாலும் வெக்கை படுத்தி எடுக்கும்.

   Delete
  7. வழக்கமான வெக்கை பழகி இருப்பது!  இது ஸ்பெஷல்!  எனவே மழை வந்து வெக்கை கொஞ்சம் தணிந்தால் சுகம்தான்!

   Delete
  8. இங்கே மறுபடி சூடும் மோடம் போடுவதுமாக இருக்கு. மோடம் போட்டால் புழுக்கம் அதிகம் ஆகிவிடுகிறது.

   Delete
 5. புலம் பெயர்த்தோர் பிரச்னை அரசியலாக்கப்படுகிறது.  ஆனாலும் அவர்களின் பிரச்னைகளை சரியாகப் புரிந்து கொள்வோர் யாருமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.  இலவசமாகத் தரப்படும் அரிசியை இந்நிலையிலும் வாங்கிச் சமைக்க நிறைய பேர் தயாராய் இல்லை.  அதற்கு அதன் தரம் காரணமா, மக்களின் மனநிலையா, தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் தந்து ஈரோடு, திருப்பூர், சேலம் போன்ற நகரங்களின் முதலாளிகள் பாதுகாப்புடன் வைத்திருந்தார்கள். அதுவும் அங்கே இருப்பவர்களே சொன்னார்கள். ஆனால் அவர்கள் மனதில் உள்ளூர உயிர் பயம் வந்து சொந்த ஊருக்குப் போகும் எண்ணம் பலமாக எழுந்துவிட்டது. அதோடு எல்லோருக்கும் தமிழ் புரியவில்லை. நமக்கோ ஹிந்தி சுத்தம். அதுவும் பாதி பிரச்னை.

   Delete
  2. நாளைய பா செ பாருங்கள்!

   Delete
  3. வரேன். காலம்பரச் சீக்கிரமா இப்போல்லாம் வர முடியறதில்லை.

   Delete
 6. குறைந்த சம்பளத்தில் வேலை வாங்கத் தெரிந்த முதலாளிகள், ஆபத்து காலத்தில் அவர்களைக் கைவிட்டு விடுகிறார்கள் என்பதும் உண்மை.

  ReplyDelete
  Replies
  1. அப்படி எல்லாம் இல்லை ஸ்ரீராம், முதலாளிகள் அவர்களைப் போகவேண்டாம், லாக்டவுன் முடிந்ததும் திரும்ப வேலை ஆரம்பிக்கும் என்றே சொல்லி இருக்கிறார்கள். ஏனெனில் குறைந்த சம்பளம், நிறைந்த வேலை என்பது முக்கியக் காரணமும் கூட!

   Delete
 7. வெட்டுக்கிளி முடிந்து இதே சௌதி அரேபியாவில் காக்கைகள் ஆயிரமாயிரமாக பறக்கிறது.

  எங்கிருந்துதான் வருகிறதோ ? இனி இந்தியாவுக்கும் வந்தால் அவைகளுக்கு உணவு போடுவது யாரு ? ஏதோ உலகுக்கு கெட்டகாலம் நெருங்கி விட்டது...

  ReplyDelete
  Replies
  1. வெட்டுக்கிளி இன்னமும் முடிஞ்சதாத் தெரியலை. இந்தக் காக்கைகள் படை எடுப்பு அம்பேரிக்காவில், ஹூஸ்டனில் என்று வாட்சப்பில் தி/கீதா போட்டிருந்தார். ஆனால் இந்த வருஷம் மோசமான வருஷம் தான். முகநூலில் ஸ்ரீராமின் மாமா பஞ்சாங்க பலன்கள் போட்டிருந்தார். அதில் வெட்டுக்கிளி படை எடுப்பில் இருந்து எல்லாமும் சொல்லி இருக்காங்க.

   Delete
  2. நான் இந்த வெட்டுக்கிளிகளை பெருங்களத்தூரில் பார்த்திருக்கேன், பத்து இருபது என. தமிழகத்துக்கு கூடிய விரைவில் இந்தப் பிரச்சனை வரும்.

   Delete
  3. வெட்டுக்கிளிகள், ஈசல்கள் பலவிதமான அளவுகளில் பார்த்திருக்கோம். இங்கேயும் வெட்டுக்கிளிகள் மாடியில் நிறையப் பறக்கும்.

   Delete
  4. தமிழ்நாடு இப்போதே வெட்டுக்கிளிகளை ஒழிக்க முன்னேற்பாடுகள் செய்ய ஆரம்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் யார் விவசாயத்துறை மந்திரி?

   Delete
  5. தெரியலையே! விஜயபாஸ்கரும், எடப்பாடியும் தான் தினம் தினம் தொலைக்காட்சியில் தரிசனம். அவ்வப்போது செங்கோட்டையன் இன்னிக்குப் பரிக்ஷை இல்லை என்பார்.

   Delete
  6. கமலா சடகோபன் எழுதிய கதவு கதை கலைமகளில் பரிசு பெற்ற நாவல் என்று நினைக்கிறேன். அரைகுறையாக படித்திருக்கிறேன். ஆன் லைனில் கிடைக்கிறதா? 

   Delete
  7. வாங்க பானுமதி, கிடைக்கிறதே! கதவு என்றே கூகிளில் தேடவும். ஒரத்தநாடு கார்த்திக்கின் வலைப்பக்கம் அநேக புத்தகங்கள் கிடைக்கும். இப்போ என்னமோ அங்கே போய்த் தரவிறக்கம் செய்ய முடிவதில்லை. உறுப்பினர்கள் மட்டும் என்கிறது.

   Delete
  8. உணவுத்துறை மந்திரி காமராஜ் என தினசரியில் பார்த்தேன். விவசாய மந்திரியைத் தான் உணவுத்துறை மந்திரினு சொல்றாங்களோ?

   Delete
 8. அம்பேரிக்காவில் எடுத்த படம்னு நீங்க சொன்னாலே அந்தப் பெண்ணின் பின்பக்க போஸ்தான் மனதில் வருது... ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. இது டாலஸில் எடுத்த படங்கள். நவம்பரில் பெண், மாப்பிள்ளை, பேத்தியுடன் அங்கே போய்ச் சுற்றிப் பார்த்தோம். மழை கொட்டிக் கொண்டிருந்தது.

   Delete
 9. நாட்டில் திடீர் பொருளாதார மேதைகள், நிபுணர்கள், மக்கள் நலனையே தன் நலனாக எண்ணுவதாக்க் காட்டிக்கொள்ளும் எதிர்கட்சி அரசியல்வாதிகள், ஆட்டோ, வேன்களின் ரெஜிஸ்ட்ரேஷன் எண்களைக் கொடுத்து ஆயிரம் பஸ்கள் என்று பிலிம் காட்டும் காங்கிரஸ் என்று பெருகிவிட்டது.

  இதில் இவர்களைப்பற்றிப் பேசிப் பயன் என்ன?

  ReplyDelete
  Replies
  1. பலன் ஒன்றும் இல்லை தான்.ஆனால் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆயிரக் கணக்கில் கூட இல்லை, கோடிக்கணக்கில் இடம் பெயர்ந்திருப்பார்கள் போல! இது கணக்கு வைத்துக் கொள்வது என்பது ஆதார் அடையாளம் இருந்தால் தான் முடியும்.

   Delete
 10. அத்திக்காய்ப் பாட்டுக்காக படத்தையே பார்க்கிறீங்களே கீசாக்கா:), என்னிடம் சொல்லியிருந்தால், வட்சப்பில பாடி அனுப்பியிருப்பேனாக்கும்:)) சரி சரி ஜஸ்ட்டூ மிஸ்ட்டூ.. நீங்கள் பாருங்கோ..

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, பெதும்பையா நீங்க? பாட்டினு நினைச்சேன். போகட்டும், சும்மாப் படம் பார்க்கணும்னு ஒரு ஆசை! நான் யூ. ட்யூபில் அதிகம் படங்கள் பார்த்தது இல்லை. அதான் பார்த்தேன்.

   Delete
 11. அந்தக்காலத்தில் ஆர் மெல்லிசாக இருந்தார்கள் குண்டுகளை ரசிக்காமல் போவதற்கு... கே ஆர் விஜயா சாவித்திரி எல்லாம் பார்த்தால், இக்காலத்தில் கதா நாயகியாக விடுவினமோ.. அம்மா வேடம் தான் கொடுப்பினம், அப்படி ஆகிவிட்டதே இக்காலம்...

  ReplyDelete
  Replies
  1. அம்மா வேடமா, பாட்டி வேடத்துக்குக் கூட லாயக்கில்லை. ஆனாலும் ஏகத்துக்கு குண்டு!

   Delete
 12. அங்கு டொமெஸ்ரிக் பிளேன் சேவை ஆரம்பித்து விட்டதாமே ஆனா ரிக்கெட் விலை உயர்ந்திருக்குது.. என்ன பண்ணுவது, மக்களும் போய் வரத்தானே வேண்டும்..

  இன்று எங்களுக்கும் மூன்றாம் கட்டமாக, லொக்டவுன் தளர்த்தியிருகினம், வெளியே நண்பர்களை மீட் பண்ணலாம் என, அதனால ரோட்டெல்லாம் சனம்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அத்தோடு சூப்பர் வெயில்.. 23 இல் எறிக்குது.. நல்லாயிருக்குது இங்கு.

  ReplyDelete
  Replies
  1. இந்த லாக்டவுனில் தெருக்களில் அதிகக் கூட்டம், போக்குவரத்துனு பார்க்காமல் இருந்துட்டு திடீர்னு பார்த்தால் கஷ்டமாய்த் தான் இருக்கும். வெயில் அடிக்குதா அங்கே? ஹை! ஜாலி! மறுபடி வத்தல், வடாம் போடுங்க!

   Delete
 13. அங்கு மக்கள் பாவம் தான்.. கொரோனா, புயல், வெட்டுக்கிளி.. இவற்றிலிருந்தெல்லாம் தப்பி வாழ்வது என்பது பெரிய போராட்டம்தானே, விபசாயிகள் பாவம்... வெட்டுக்கிளிகளுக்கும் தெரிஞ்சிருக்கு கொரோனாவால மக்கள் வெளியே வரமாட்டினம், வாகனப் புகை, சத்தம் இருக்காது என:))

  ReplyDelete
  Replies
  1. எங்குமே மக்கள் பாவம் தானே! அதில் நாமும் தானே அடக்கம்.

   Delete
 14. பாதிப்போஸ்ட்டுக்கு மேல கீசாக்கா அரசியல் பேசுறா கர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஜீபூம்ம்பா:))

  ReplyDelete
  Replies
  1. இது அரசியல் இல்லை, பெதும்பை, நாட்டு நிலைமை! எங்கெங்கு பார்த்தாலும் இந்தப் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றியே எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் அவங்களுக்கு உதவிகள் செய்பவர்கள் அமைதியாகச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

   Delete
 15. வணக்கம் சகோதரி

  நல்ல அலசலான பதிவு. அரசியல் விஷயங்களில் உள்ளவற்றை நல்ல சிறப்பான முறையில் பதிவில் தொகுத்தளித்து உள்ளீர்கள்.படித்து தெரிந்து கொண்டேன். இதில் யாரை குற்றம் சொல்வது எனத் தெரியவில்லை. அரசையும், மக்களையும் சொல்ல முடியாது. நடப்பதையும் நடந்து கொண்டிருப்பதையும் எவராலும் சரியானபடி கிரஹிக்க இயலாத போது எப்படிச் சொல்வது? கொரோனாவை சொல்லவும் முடியாது. ஏனெனில் அது பிறர் கண்களுக்கே தென்படுவதில்லை.

  இதில் வெட்டுகிளிகள் இப்போது பார்த்து இந்தியாவுக்குதான் வர வேண்டுமா? நேரந்தான்! இதில் காக்கைகள் வேறு படையெடுப்பா ? எல்லா பிரச்சனையும் தீர்ந்து பழையபடி உலகம் நல்ல விதமாக, பழையபடி உள்ள ஏராளமான சின்ன சின்ன பிரச்சனைகள் மட்டும் எப்போதடா வரப்போகுதுன்னு இருக்கு..! எல்லாமே அக்கரைப் பச்சைதான். விதி என்ன நினைக்கிறதோ தெரியவில்லை. ஜீபூம்பா நல்லபடியாக எல்லாவற்றையும் தீர்த்து வைத்து விட்டால் அவரை பயன்படுத்திக் கொள்ள உலக நாடுகளுக்குள் சண்டை வேறு வரும்.

  நீங்கள் புத்தகம் படித்து, பழையகால படம் பார்த்து கவனங்களை திருப்புவது சிறப்பான விஷயம். உங்களின் நல்லதோர் முயற்சிக்கு பாராட்டுகள். உங்கள் திறமையான எழுத்துக்கள் மூலம் எங்களுக்கு ஸ்ரீ ரங்கம் பற்றிய பதிவுகள் வந்தால் அனைத்தையும் படித்து தெரிந்து கொள்வோம். பதிவுகளுக்காக காத்திருக்கிறேன். . பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, உண்மை தான். யாரையும் குற்றம் சொல்ல முடியாது என்பது உண்மை. யாராலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைக் கணிக்க முடியவில்லை. இன்று ஒரு பஞ்சாங்கம் பார்த்தேன். அதில் வெட்டுக்கிளி தாக்கும் என்பதை எல்லாம் போட்டிருக்கிறார்கள். ஆடி மாதத்தில் கிழக்கே ஒரு ப்து நக்ஷத்திரம் தெரியுமாம். அதனால் வான் வழிப் போக்குவரத்துக்குக் கஷ்டமாம்! என்னவோ போங்க! ஒண்ணும் புரியலை. திடீர்னு இப்படி ஆகிவிட்டதே உலகம்! ஏற்கெனவே இருந்த மனக்கஷ்டம், குறைகள், பிரச்னைகள் எல்லாத்தையும் எதுவுமே இல்லைனு பண்ணிட்டு இந்தக் கொரோனா முன்னுக்கு வந்திருக்கிறதே!

   Delete
  2. ஶ்ரீரங்கம் பதிவுகள் என்னுடைய ஆன்மிகப் பயணம் பக்கங்களில் நீங்க படிக்கலாம். கிட்டத்தட்ட அரங்கனைக் கண்டு பிடிக்கப் போகும் நிகழ்வுகள் வந்து விஜயநகர சாம்ராஜ்யம் தலை தூக்கியதோடு நிறுத்தி இருக்கேன்.

   Delete
  3. http://aanmiga-payanam.blogspot.com/ இங்கே போய்ப் பாருங்க! சுட்டியைக் கொடுக்கும்போது / இந்த டாஷை நீக்கிவிட்டுக் கொடுக்கவும்.

   Delete
 16. இந்த வருடம் ஏன் இப்படி ஒன்று மாற்றி ஒன்று படுத்துகிறது என்று தெரியவில்லை. கடவுளை பிரார்த்திப்போம். 

  ReplyDelete
  Replies
  1. கடவுள் தான் நமக்கு ஒரே அடைக்கலம். பாதுகாப்பு எல்லாம். தினம் தினம் பிரார்த்தனைகள் செய்வோம். வேறே என்ன செய்ய முடியும்! இந்தப் பதிவுக்கு உடனே வந்ததுக்கு நன்றி பானுமதி!

   Delete
  2. வருமுன் காப்போம் என்ற ஒரு மந்திரத்தை நாம் காக்காவிட்டால் வருவதெல்லாம் தரித்திரமே!

   கொரோனா, நமக்கு நிறைய நேரத்தை தந்தது. உஹானில் கண்டுபிடிக்கப்பட்டபோதே உஷாரான தைவான் சவுத் கொரியா போன்ற நாடுகள் கொரோனாவினை தவிர்த்தன. இதை லேசாக எடுத்துக்கொண்ட அமெரிக்க ஐரோப்பா இந்தியா போன்ற நாடுகள் தவிக்கின்றன.

   வெட்டுக்கிளி.. இதன் வருகை இந்த வருடம் இந்த மாதத்தில் என்று ஆஃப்ரிக்க மற்றும் வளைகுடா பகுதியில் அதன் வருகையை வைத்தே கணக்கிட்டு இருக்கலாம். அதிலும் கோட்டை விட்டோம்.

   சரி.. இதுவும் கடந்து போகும் என்று விட்டுவிட்டாலும்.. இந்த வருடம் கடைசியில் வர இருக்கும் பொருளாதார நெருக்கடியை நினைத்தாலே நடுங்குகின்றது. நவம்பர் மாதத்தில் நாம் அனைவரும் பணத்திற்காக படும் பாடு.. அய்யகோ..!

   Delete
  3. தென் கொரியா, ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளில் மீண்டும் நோய்த்தொற்று பரவி இருப்பதாகச் சொல்கின்றனர். ஆனாலும் உலகமே "சீனா" உட்பட நோய்த்தொற்றில் இருந்து மீளும் வழி தெரியாமல் தவிக்கையில் இந்தியாவை மட்டும் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பது ஏற்புடையதில்லை. இப்போது நாம் செய்யவேண்டியது அரசின் கட்டுப்பாடுகளுக்கும் அது போடும் நிபந்தனைகளுக்கும் ஒத்துப் போவது ஒன்றே. டாஸ்மாக் விஷயத்தில் அந்த அந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு சொல்லி இருந்தாலும் உச்சநீதி மன்றம் டாஸ்மாக் திறப்பதில் மாநில அரசுகளுக்குக் கொடுத்திருக்கும் ஆதரவையும் மறக்கக் கூடாது. உயர்நீதி மன்றம் போட்ட தடையை நீக்கியது உச்சநீதி மன்றம்.

   Delete
  4. பொருளாதார நெருக்கடி வரப்போகிறது என்னும்போது சேமிப்பின் முக்கியத்துவத்தை உணராமல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, அடிமட்டத் தொழிலாளர்களுக்கு என அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒருவருக்குப் பத்தாயிரம் வரை கொடுக்கச் சொல்லுவது எந்தவிதத்தில் நியாயம்? அவர்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து முன்னெடுத்து நடத்திச் செல்லத் தேவையானவற்றைச் செய்து தருவது தானே நியாயம்? இப்படி இலவசமாகக் கிடைக்கும் பணத்தைப் பெரும்பாலானவர்கள் டாஸ்மாக்கில் தான் செலவழித்து அரசிடமே திரும்பக் கொடுப்பார்கள்.

   Delete
  5. தென் கொரியாவில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.

   Delete
 17. மத்திய அரசு எதற்கு தான் பொறுப்பேற்கும்?

  என்னங்க திடிதிப்புனு இப்படி சொல்லிட்டீங்க. மத்திய அரசு ஒரு குடும்பத்தின் தலைவன் போல..

  என் வூட்டுல நடக்குற அம்புட்டுக்கும் நான் தான் பொறுப்பேற்க்கணும். பொறுப்பை வேணும்னா பிரிச்சி பிரிச்சி கொடுக்கலாம். தலைவன்னு நான் தம்பட்டம் அடிச்சாலும் அம்மணி தான் அம்புட்டையும் செய்யுறாங்க. அம்மணி அம்புட்டு செஞ்சாலும் அதுக்கும் நான் தான் பொறுப்பு.

  என்னுடைய வேலைய நான் ஒழுங்கா செஞ்சி ஒவ்வொரு வெள்ளியும் கூலியை வாங்கியாந்து அவங்கள்ட்ட கொடுக்கணும். அதை நான் செஞ்சா தான் அம்மணி குடும்பத்தைநடத்த முடியும்.

  பசங்க படிப்பு அவங்க வேலை தான். இருந்தாலும் அவர்கள் படிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. சரியான பள்ளியில் சேர்க்கணும். புத்தகம் வாங்கி தரணும்.. நீ சமத்து நீ சமத்துன்னு உற்சாக படுத்தினே இருக்கணும்.

  நீங்க பாட்டுக்கு மத்திய அரசு எதற்கு தன பொறுப்பேற்க்கும்ன்னு கேட்டுபுட்டிங்களே .. அம்புட்டுக்கும் தான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க விசு. என்னதான் நீங்க சொன்னாலும் அவங்க அவங்க பொறுப்பை அவங்க அவங்க சரியாய்ச் செய்யணும். லாக்டவுன் முடியும் முன்னர் தளர்த்த வேண்டாம்னு சொல்லியும் தமிழ்நாட்டில் பல தளர்வுகள். பலனைப் பார்க்கிறீங்க இல்லையா? எல்லாத் தளர்வுகளும் இருக்கு. முக்கியமா டாஸ்மாக்! அது மூலமாக் கொரோனா பரவாதா? இப்படி எல்லாம் செய்துட்டுப் பிரச்னைனா மத்திய அரசே பொறுப்பு என்றால்! எங்களை எல்லாம் படிக்கையில் அப்பாவோ, அம்மாவோ உற்சாகப்படுத்தி எல்லாம் பார்க்கலை. நாங்க பாட்டுக்குப் பள்ளிக்குப் போவோம். பாடங்களைக் கேட்டுப் புரிஞ்சுப்போம். தேர்வுகள் எழுதுவோம். பெற்றோர் எதுவும் சொல்லிக் கொடுத்ததில்லை. எங்கள் கால்களில் நாங்களே நின்றோம்.

   Delete
  2. தங்களின் பதிலுக்கு நன்றி..

   இரன்டு விஷயம்..

   டாஸ்மாக்..

   இதை திறப்பதை ஒவ்வொரு மாநில அரசிடமே விட்டு விடுகிறோம் என்று மத்திய அரசு சொன்னது. இங்கே மாநில அரசின் கஜானாவில் பூனை உறங்கி கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டவுடன் திறந்து விட்டார்கள். மத்திய அரசு மதுக்கடைகள் திறக்கவே கூடாது என்றல்லவா சொல்லி இருக்கவேண்டும்.

   இரணடாவது விஷயம்..

   படிப்பை பற்றி. உண்மையாக சொல்லுகிறேன்.. பள்ளி கூடத்து காலத்தில் என்னை மட்டும் "நீ சமத்து நீ சமத்து" என்று என் அன்னை சொல்லாமல் வளர்த்து இருந்தால் இன்று என் நிலைமை கூட அந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை போல் தான் அமைந்து இருக்கும். குறைவான மதிப்பெண் பெற்ற நான் ரொம்பவும் சமத்து என்று என் அம்மா அன்றொருநாள் அழுதுகொண்டே சொன்னதின் விளைவு தான் நான் என் படிப்பிற்க்கே வித்திட்டது.

   Delete
  3. டாஸ்மாக் விஷயத்திற்கு மேலே பதில் சொல்லி இருக்கிறேன். படிப்பு விஷயத்தில் உங்கள் அம்மா செய்தது உங்கள் வரை சரியாக இருந்திருக்கலாம். இதெல்லாம் அவரவர் குடும்பச் சூழ்நிலை, மனோநிலை ஆகியவற்றைப் பொறுத்து அமையும். நான் அறிந்தவரை தங்கள் குழந்தைகளைக் காரணமே இல்லாமல் உயர்த்திச் சொல்லும் பெற்றோர்கள் பின்னால் ஏமாற்றம் அடையும்படி நேர்ந்துள்ளது. இது ஆளுக்கு ஆள், மனிதருக்கு மனிதர், பெற்றோருக்குப் பெற்றோர் மாறுபடும். அவரவர் சூழ்நிலையும் வளர்ப்பும் கூட ஒரு காரணம் ஆகும்.

   Delete
 18. நல்லதொரு அலசல். விரைவில் சூழல் சரியாகவேண்டும். அது மட்டுமே தேவை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், நன்றி.

   Delete
 19. ஒவ்வொன்றாக கிளம்பிக்கொணடே இருக்கிறது. பொறுப்போம் ....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், புதுசு புதுசாக் கிளம்புகிறது. பொறுத்துக் கொண்டு தான் இருக்கோம். ஆனால் முடியவில்லை.

   Delete
 20. நல்ல அலசல். எத்தனை தவிப்புகள் நம் நாட்டைச் சூழ்ந்திருக்கின்றன:(

  அத்தனை பேரும் பொறுப்பெடுத்துக் கொண்டால் தான்
  பிரச்சினைகள் கொஞ்சமாவது தீரும்.

  நம் ஊரின் மக்கள் தொகை அப்படி!!
  நீங்கள் எழுதி இருக்கும் ஊக்க செய்திகள்
  மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல்.
  நம் ஊரில் அவனவன் தன் வாழ்க்கையைப் பார்த்து
  அரசியலில் பிழைப்பு பற்றி யோசிப்பார்கள்.

  பஞ்சாங்கம் பற்றிய லிங்க் கொடுக்க முடியுமா கீதாமா.
  நல்ல தரமான செய்தித் தாளை படித்த நிறைவு.

  ReplyDelete
  Replies
  1. பஞ்சாங்கம் முகநூலில் ஸ்ரீராமின் மாமா வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில் உங்களை tag செய்ய முடியுமா எனப் பார்க்கிறேன், கமென்டில்!

   Delete
 21. பலே பாண்டியா படத்தில் எம்.ஆர். ராதா நடிப்பு நன்றாக இருக்கும்.

  எல்லா பாட்டும் நன்றாக இருக்கும்.
  'வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்.  வெட்டுக்கிளி தக்காணபீடபூமியை தாண்டி வர வாய்ப்பில்லை என்கிறது தமிழக வேளாண்துறை.

  1976ல் கி. ராஜநாராயணன் அவர்கள் எழுதிய கோபல்ல கிராமம் நாவலில் இமமாதிரி தாக்குதலைப்பற்றி வருகிறதாம் படித்துப் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு, தொடர்ந்து பார்த்தாலும் கொஞ்சம் இழுத்தடிக்கிறாப்போல் இருக்கு. லாஜிக் என்று பார்த்தால் கதை ஒன்றுமே இல்லை. என்றாலும் பாடல்களுக்காகப் பார்க்கிறேன். வாழ நினைத்தால் வாழலாம் பாட்டெல்லாம் தாண்டிப் போயாச்சு. நேற்றுப் பார்க்கலை. இன்னிக்கு முடிஞ்சா பார்க்கணும்.

   Delete
 22. //எந்த பக்கம் திரும்பினாலும் பட படவென்ற சத்தத்துடன் அதே விட்டில்கள் கோபல்ல கிராமமே ஒரு தேன்கூடு மாதிரியும் இந்த விட்டில்கள் அதில் மொய்க்கும் ஈக்களைஒ போலவும் காட்சி தந்தது .

  கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் மக்கள் அபயக்குரல்கள் கர்ன கடூரமாக ஒலிக்க ஆரம்பித்துதும் ஜனங்கள் நெஞ்சிலும் வாயிலும் அறைந்துகொண்டு அழும் கூக்குறல் கேட்டது, காடுகளில் விளைந்த கம்மங்கதிர்களுக் காவலாக பரணில் இருந்தவர்கள் திகைத்து போய் கீழே வந்து விரட்டினார்கள் கம்புகளல அடித்துப் பார்த்தார்கள், சோ சோ என்று கத்திப் பார்த்தார்கள் கதிர்களை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த விட்டில்
  பிறகு கதிர் காணாமல் விட்டில் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது. ஒவ்வொரு பயிரின் கீழிருந்து உச்சி வரைக்கும் விட்டில்கள் மேயும் சத்தம் நெறுக் நெறுக் என்று காடெல்லாம் ஒன்றுபோலக் கேட்டது. //

  படிக்கும் போது விவசாயிகளின் நிலை வருத்தம் அளிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. அட! ஆமா இல்ல! நானும் 2 நாட்களாக எங்கேயோ எந்தக் கதையிலோ படிச்சோமேனு நினைச்சேன். நீங்க சொல்வது சரி. கோபல்ல கிராமம் நாவலில் தான் நானும் படிச்சிருக்கேன். இப்போ நினைவுக்கு வந்து விட்டது.

   Delete
 23. மீண்டும் ஒரு கொள்கை பரப்பு பதிவு ஆமாம் இருபது லட்சம் கோடி யாமே கண்க்கேல்லாம் சரியா பெரியம்மா பையர் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமா

  ReplyDelete
  Replies
  1. உங்கள் மேலான கருத்துக்கு நன்றி.

   Delete
 24. நாளுக்கு நாள் பிரச்சனைகள் கூடிக் கொண்டே போகின்றன. என்னாகுமோ என்ற நிலைதான். ஒரு வேக் மனநிலை தோன்றுகிறது. விரைவில் இந்த நிலை மாற வேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்திக்கிறோம். பிரார்த்திப்போம்.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், துளசிதரன், இந்தப் புலம்பெயர் தொழிலாளர்கள் பங்களா தேஷ், மியான்மரிலிருந்து வந்தவர்களே அதிகம் என்பதால் எங்கே செல்வது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டு இருப்பதாகக் கேரளத்தில் இருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. நாடு முழுவதும் இப்படி எவ்வளவு மக்கள் இருக்கிறார்களோ! :( விரைவில் நிலைமை சரியாகப் பிரார்த்திப்போம்.

   Delete
 25. கீதாக்கா லாக்டவுன் சொல்லும் முன்னே புலம்பெயர்த் தொழிலாளர்கள் குறித்து கொஞ்சம் ப்ளான் செய்துவிட்டு அறிவித்திருக்கலாமோ என்று தோன்றியதுண்டு. புயல் வரப் போகிறது என்றதும் கடலோரப் பகுதிகளில் உள்ளவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சொல்லுவார்களே அது போல இதற்கும் அந்தந்த் மாநில அரசுகளுடன் பேசி அவர்களின் ஆங்கிளில் யோசித்து அவர்கள் புலம் பெயரும் முன் செய்திருக்கலாமோ என்று தோன்றியதுண்டு. பிரதமரே கூட அப்புறம் வருத்தப்பட்டுச் சொல்லியிருந்த நினைவு.

  நீங்கள் சொல்லியிருப்பது போல் அவர்கள் எல்லோருக்கும் பயம். பாவம் தான்.

  ஜீ பூம்பா இந்தத் தொற்றைக் கொண்டு போய்விட்டால் நல்லது. விரைவில் தொற்று நீங்க வேண்டும். மக்களும் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். இப்போது லாக்டவுன் ரொம்பவே தளர்த்தப்படப் போகிறது. இங்கு ஜூ 8 லிருந்து மால்கள், தியேட்டர்கள் ஹோட்டல்கள் எல்லாமே ஓப்பன் ஆகப் போவதாக...ம்ம்ம ஓப்பன் ஆவதால் தொற்று போய்விட்டது என்று மக்கள் நினைக்கிறார்களோ என்றும் தோன்றுகிறது. கொஞ்சம் பயமாகத்தான் இருக்க்றது.

  விரைவில் தொற்று நீங்கிட வேண்டும்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. என்ன செய்திருக்க முடியும்? அனைவரையும் வீட்டுக்கு உள்ளே இருக்கச் சொல்லவேண்டும் என்பதில் முனைப்பாக இருந்த அரசு புலம்பெயர் தொழிலாளர்களை மட்டும் பயணம் செய்யச் சொல்லி இருக்க முடியுமா? அவங்க மட்டும் இல்லை, யாருமே இவ்வளவு பெரிய ஊரடங்கை எதிர்பார்க்காத சமயம் விரைவில் இது நீக்கப்படும் என்றுதான் எதிர்பார்த்திருப்போம். முதல் ஊரடங்கில் மக்கள் கொஞ்சம் அடங்கித்தானே இருந்தார்கள். அதன் பின்னர் தான் ஊர் விட்டு ஊர் ரகசியமாகச் செல்ல நினைத்து மாட்டிக் கொண்டவர்கள். முதல் முதல் மஹாராஷ்ட்ராவில் ஆரம்பம். அதன் பின்னர் ஒவ்வொரு மாநிலமாகப் பரவ ஆரம்பித்தது. ஒருத்தர் இருவர் என்றால் பரவாயில்லை. சாரி சாரியாக வரும் மக்களை எப்படிக் கணக்கெடுத்து ஒவ்வொருத்தரையும் எங்கே போகணும் என்று கேட்டு, உடை, உணவு கொடுத்து அனுப்பி வைப்பது எனில் மற்றவேலைகளைச் செய்ய யார் இருப்பார்கள்? ஒரு பக்கம் ஊரடங்கு ஒழுங்கா இருக்கானு கண்காணிப்பு! இன்னொரு பக்கம் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு உதவி செய்வது! இன்னொரு பக்கம் தடை போட்ட பகுதிகளில் மக்களைப் பாதுகாப்பது, அவர்களுக்குத் தேவையானதை வழங்குவது! இதோடு அடித்தட்டு மக்களுக்கு ரேஷன் போன்றவை வழங்குவது, உணவு இல்லாமல் பரிதவிக்கும் மக்களைப் பார்த்து உணவு அளிப்பது! ஊரடங்கை மீறி ஊர் சுற்றுபவர்களைக் கண்காணிப்பது! சாதாரண நாட்களை விடப் பணிகள் அதிகம் இருந்த/இருக்கும்/இருக்கப் போகும் நாட்கள்! நமக்குள்ளே தான் ஒழுங்கும் கட்டுப்பாடும் வரணும்.

   Delete
  2. திருப்பூர் அருகே வடமாநிலத்தவர் போர்வையில் தங்கி இருந்த வங்காள தேச அகதிகளைக் காவல்துறை கண்டுபிடித்து அவர்களை அனுப்பி வைத்துள்ளது. இப்படி இருக்கையில் ஒவ்வொருவரையும் எந்த ஊர், எந்த மாநிலம் என்று கேட்டால் உண்மை வருமா? சந்தேகமே! அதனால் தான் ஆதார் அட்டையைக் கேட்கின்றனர். அது இல்லாதவர்கள் தப்பி ஓடுகின்றனர்.

   Delete