எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, June 16, 2020

ஒசிந்து ஒசிந்து வரும் காவிரி!

காவிரியில் தண்ணீர் நேற்று மதியம் 2 மணி சுமாருக்குத் திருச்சிக்கு வந்தது. மூன்று மணி அளவில் மாடிக்குக் காய வைத்த வற்றலை எடுக்கப் போனேனா! சரி தண்ணீர் வரும்போது படம் எடுப்போம்னு எடுக்கப் போனேன். ஒரே வெயில்! அதிலும் எதிர்வெயில்! கண் கூசிக் கொண்டிருந்தது. கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது. என்றாலும் ஆவலில் சில படங்கள். இன்னொரு நாள் காலம்பரப் போய் எடுத்துக் கொண்டு வரணும்.


படங்கள் சில ஒரே மாதிரியாகக் காட்சி கொடுத்தாலும் வெவ்வேறு இடங்களில் இருந்து எடுத்தவை. வெயில் தாங்காமல் வியர்வை வெள்ளமாய்ப் பெருகவே அவசரம் அவசரமாய் எடுக்கும்படி ஆகிவிட்டது.



இப்போத் தண்ணீர்ப் பூரணமாய் வந்திருக்கும். காலம்பரப் பார்த்தப்போ அவ்வளவு இல்லை. ஏனெனில் கல்லணைக்குப் போக நேரம் எடுத்திருப்பதால் தண்ணீர் வேகம் குறைவோனு நினைக்கிறேன்.










நாளைக்கோ, அல்லது நாளை மறுநாளோ காமிராவை எடுத்துக் கொண்டு போய்ப் படங்கள் எடுக்கணும்னு நினைக்கிறேன். காமிராவையும் பயன்படுத்தி ரொம்ப நாட்கள் ஆகின்றன.  அது என்னமோ தெரியலை, தமிழ்நாட்டிலே பாலாறில் இருந்து ஆரம்பித்துப் பல நதிகள் இருந்தாலும் எல்லோரும் கவலைப்படுவது, கவனிப்பது காவிரியின் போக்கைத் தான். காவிரியில் தண்ணீர் வரலைனா அது ஓர் பெரிய மன வருத்தமாகிவிடும். மற்ற நதிகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இவற்றில் தாமிரபரணியும், வைகையும் தமிழ்நாட்டுக்குள்ளேயே உற்பத்தி ஆகி அங்கேயே முடிகின்றன.  காவிரியில் தண்ணீர் வருவதால் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல். 

47 comments:

  1. காவிரியில் தண்ணீர் காண்பது மனதிற்கு குளிர்ச்சி தருகிறது. 'நடந்தாள் வாழி காவேரி.....'

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாதேவி.

      Delete
  2. மிக இனிமையைத் தரும் காட்சி.
    ஜூன் 12க்குத் திறந்து விடுவார்கள் இல்லையா.
    மண்ணின் தாகம் தீரட்டும்.
    படங்களை வேற வேற கோணத்தில் அழகாக எடுத்திருக்கிறீர்கள். காவிரிக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள் கீதா மா.

    ReplyDelete
    Replies
    1. இந்த வருஷம் சரியா ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்து விட்டார்கள். குபுகுபுவென வருமோ என்று நினைத்துத் தான் மத்தியானமே மாடிக்குப் போனேன். மெதுவாகத் தான் வந்து கொண்டிருந்தது. இன்றோ, நாளையோ மறுபடி போய்ப் பார்க்கணும்.

      Delete
  3. நன்று மகிழ்ச்சி அப்படியே தேவகோட்டை பக்கம் கொஞ்சம் திருப்பி விடுங்களேன்....

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, கில்லர்ஜி, காவிரி ஏற்கெனவே பலமுறை தன் பாதையை மாற்றி இருக்கிறாள் என்பார்கள்.

      Delete
  4. காவிரியின் படங்கள் அழகு.
    காவிரியில் நீர் வந்த மகிழ்ச்சியில் பூக்களை தூவி விவசாய பெருமக்கள் மகிழ்ந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, அநேகமாக இந்த வருஷம் பூரண வெள்ளம் போகலாம். போன வருஷம் இங்கே இல்லையே! இந்த வருஷம் வெள்ளம் பார்க்கலாம் என நம்புகிறேன்.

      Delete
  5. காவிரியில் தண்ணீர் வருவது, அதைப் பார்ப்ப்பது ஒரு சந்தோஷம்தான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஸ்ரீராம்.

      Delete
  6. நேற்றே செய்திகளில் காவிரி நீர் கரூர் வந்து விட்டது என்றெல்லாம் படித்த உடன் நினைத்தேன்.  ஆற்றில் தண்ணீர் ஓடும் அற்புதக் காட்சியைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் என்று.

    ReplyDelete
    Replies
    1. நேற்று மத்தியானம் இரண்டு மணி அளவில் காவிரி திருச்சிக்குள் நுழைந்தது ஸ்ரீராம். அதான் உடனே போய் எடுக்கணும்னு வெயிலைப் பொருட்படுத்தாமல் போனேன். ஆனால் கண்கள் கூசியதில் சரியாக எடுக்க முடியலை.

      Delete
  7. ரொம்ப மகிழ்ச்சி. காவிரித்தாய் தமிழகம் நோக்கித் தவழ ஆரம்பித்திருப்பது.

    மழை பெய்யப் பெய்ய அவள் வீறுகொண்டு வருவாள். வரட்டும்

    ReplyDelete
    Replies
    1. இந்த வருஷம் மழைப்பொழிவும் அதிகமாக இருந்து காவிரியும் தமிழ்நாட்டுக்கு வந்து எல்லாம் செழிப்பாக இருக்கப் பிரார்த்திப்போம் நெல்லைத் தமிழரே. அதற்குள்ளாக இந்தக் கொரோனா தீர்ந்தும்/மறைந்தும் போகவேண்டும்.

      Delete
  8. ஆறு மாசத்துக்கு ஒரு முறை அம்பேரிக்கா போறீங்களே.. ஒரு ஜூம் கேமரா வாங்கிவந்தால் என்னவாம்.

    தண்ணீரையே ஜூம் பண்ணியிருக்கலாமே.

    உங்கள் கேமரா காவிரி ந்தியை ஓடையாக்க் காண்பிக்கிறதே ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கண்ணு வைக்காதீங்க! ஆறு மாசத்துக்கு ஒரு தரம் எங்கே போறோம்? ஆறு மாசங்கள் அங்கே தங்கறோம். அம்புடுதேன். என்னோட காமிரா ஜூம் பண்ணி எடுக்கும் வசதி உள்ளது தான். அலைபேசியிலேயே இப்போதெல்லாம் எடுப்பதால் காமிராவை எடுக்கவே இல்லை. அலைபேசியிலும் ஜூம் பண்ணலாம் என்றாலும் எனக்குச் சரியா வரதில்லை.

      Delete
  9. வெயில் தாங்காமல் - அச்சச்சோ... அங்க வெயில் அதிகமா இருக்கா?

    சாயந்திரம் படம் எடுத்தா போறாதா? எதுக்கு நடு மத்தியானம் மொட்டை மாடிக்குப் போறீங்க?

    ReplyDelete
    Replies
    1. வெயில் ஜாஸ்தினா நேரடியாக வெயிலில் நின்றால் சூடு தெரியத்தானே செய்யும். எங்க வீட்டு மொட்டை மாடி அமைப்பு அப்படி. மேற்கே பார்த்துக் காவிரியைப் படம் எடுத்தால் வெயிலில் காய்ந்தே ஆகணும். எனக்குக் காவிரி நுழையும்போது படம் எடுக்கணும்னு ஆசை. ஆனால் அந்த இடம் இன்னும் இரண்டு மைல் தூரத்தில் இருந்திருக்கு. அதனால் எங்க பக்கம் வரச்சே படம் எடுத்தேன்.

      Delete
  10. ஒசிந்து ஒசிந்து வரும் காவேரி - நல்ல தலைப்பு. வார்த்தை, நிலைமையை அழகாகச் சொல்கிறது. பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. புது மணப்பெண்! மெதுவாகத் தானே வருவாள். வரட்டும், வரட்டும்!

      Delete
  11. ஆகா...
    அடிக்கிற வெயிலையும் பொருட்படுத்தாமல் எடுக்கப்பட்ட படங்களுடன் பதிவு...

    இன்று முற்பகல் கல்லணையில் காவிரி நீர் திறக்கப்பட்டு விட்டது...

    தஞ்சை மண்டலம் நோக்கி
    வரும் காவிரிக்கு நல்வரவு..

    வயலெல்லாம் நிறையட்டும்..
    வளமெல்லாம் பெருகட்டும்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, கல்லணைக்குப் போய் அங்கே வழிபாடுகள் நடந்ததை நானும் பார்த்தேன். எதிர்பார்த்த நேரத்துக்குக் கொஞ்சம் தாமதம் என்றார்கள்.

      Delete
  12. காலை வணக்கம் சகோதரி

    காவிரி படங்களெல்லாம் அழகாக இருக்கின்றன. உங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து தினமுமே காவிரியின் அழகை ரசிக்கலாம் எனத் தோன்றுகிறது. உங்கள் தளத்திலிருந்து மொட்டை மாடிக்குச் செல்ல மின்தூக்கி வசதி உள்ளதா? இல்லை படிகள் ஏறித்தான் செல்ல வேண்டுமா? ஆனால் தினமும் படிகள் ஏறுவதென்றால் கஸ்டமாகத்தான் இருக்கும்.

    நீர் நிரம்பிய காவிரியை கண் குளிர பார்த்துக் கொண்டேயிருக்கலாம். சளசளவென்று கரை முட்ட ஓடும் அழகே தனிதான்.. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து காவிரித்தாய் மனமும் குளிரட்டும்.

    அங்கு நல்ல வெய்யிலா ? மாலை நேரத்தில் சென்று படங்கள் எடுத்திருக்கலாமே ? இங்கு வெய்யில் தாக்கம் குறைந்து சற்று குளிர் வந்து விட்டது. மதியம் கொஞ்சம் வெய்யில், பிறகு மழை மூட்டம் என "சட்டென்று மாறுது வானிலை." பாடலைப் போல மாறுகிறது.

    மழையென்று வந்தாலும், வெய்யில் அடித்தாலும் சந்தோஷபடவிடாமல் இந்த தடவை வைரஸ் வேறு பயமுறுத்துகிறது. எதற்கும் ஓர் தீர்வு உண்டல்லவா? அது நல்லபடியாக அமையட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, எங்க குடியிருப்பின் லிஃப்ட் பக்கத்தில் நின்று பார்த்தாலே காவிரி தெரிவாள். மொட்டை மாடியிலிருந்து தினமும் வறண்ட காவிரியைப் பார்த்துப் பார்த்து மனம் வருந்தும். இப்போது நீருடன் காவிரியைப் பார்த்துப் பார்த்து மகிழ்கிறோம். பலரும் தினம் மாலை, காலை மொட்டை மாடியில் உடல் பயிற்சி, நடைப்பயிற்சி, யோகாப் பயிற்சி எனச் செய்கின்றனர். நாங்களும் முன்னெல்லாம் தினம் போய் மொட்டை மாடியில் போட்டிருக்கும் பெஞ்சுகளில் உட்கார்ந்திருப்போம். இப்போல்லாம் போக முடிவதில்லை. மொட்டை மாடியை ஐந்து தரம் சுற்றி வந்தாலே போதும். போதுமான நடைப்பயிற்சி கிடைத்துவிடும். நான் வற்றல் காய வைக்கவெனப் போனேன். எங்களுடைய தளத்தில் இருந்துமொட்டை மாடிக்குப் படிகள் ஏறித்தான் போகணும். மின் தூக்கி இல்லை. எங்கள் தளத்தோடு முடிந்துவிடும். படிகள் ஏறுவது எங்கள் குடியிருப்பில் சிரமம் இல்லை. நல்ல அகலமான படிகள். உயரமும் குறைவு.

      Delete
  13. ஒசிந்து ஒசிந்து - ஆஹா...

    காவிரியில் நீர்வரத்து - மகிழ்ச்சி. கரைபுரண்டு ஓடும் காவிரியை மீண்டும் பார்க்கப் போவது எந்நாளோ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட்! கருத்துக்கு நன்றி.

      Delete
  14. காவிரியில் எப்பவாவது தண்ணி வருது. எங்க ஊரு பாலாற்றில் தண்ணி வந்தே பல வருடங்கள் ஆகிட்டுது. ஆற்றை கடைக்கையில் எங்காவது சிறு குட்டையளவுக்கு தண்ணி தேங்கி இருப்பதை பார்த்தாலே மனசு மகிழ்ச்சின் கொள்ளும். இருகரையும் தொட்டு எப்பதான் தண்ணி ஓடப்போகுதோ?!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி, 2,3 வருஷம் முன்னால் பாலாற்றில் வெள்ளம் வந்ததாகத் தொலைக்காட்சியில் பார்த்த நினைவு. பாலாற்றுத் தண்ணீரும் பால் போலச் சுவையாகவே இருக்கும். விரைவில் வெள்ளம் வரும், கவலைப்படாதீர்கள்.

      Delete
  15. திருச்சியில் காவேரி புரண்டு ஓடும் படம் நேற்று வாட்ஸாப்பில் வந்தது. உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். படம் போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நேற்று வாட்ஸாப்பில் வந்த படம் போங்கு என்பது உங்கள் படத்தை பார்த்தவுடன்தான்  புரிகிறது. 

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நானும் நீங்க சொன்ன காவிரி பெருகி ஓடி வரும் படங்களைத் தொலைக்காட்சி மூலமும், வாட்சப், முகநூல் மூலமும் பார்த்தேன். அனைத்தும் மதகு திறக்கப்பட்டதும் நீர் ஓடோடி வரும் பழைய பதிவூ செய்யப்பட்ட காட்சிகள். இப்போப் போய்ப் பார்க்கலை. இன்னும் 2 நாட்கள் கழிச்சுப் போனால் உண்மை நிலவரம் என்னனு தெரியும்.

      Delete
  16. நீங்கள் சொல்லியிருப்பது சரிதான், தமிழ்நாட்டைப் பொறுத் தவரை இப்போது காவிரிக்கு இருக்கும் மவுஸ் பற்றி நதிகளுக்கு இல்லை. 

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எப்போவுமே காவிரி எனில் தனி தான். கொஞ்சம் பொறாமையாகக் கூட இருக்கும். :))))))

      Delete
    2. மனுஷிகளுக்குத்தான், தன் வீட்டுப் பெண், அயல் வீட்டில் இருந்து வந்த மருமகள் என்று வேற்றுமை காட்டுவாங்க. ஆனால் நதிகளில், அயல் மாநிலத்தில் இருந்து வரும் நதிக்குத்தான் பெருமை. நம்ம ஊர் தாமிரவருணி, வைகை போன்றவற்றைக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஹா ஹா

      Delete
    3. இது புதிய கோணம்! கொஞ்சம் சேட்டை கலந்த எண்ணம்!

      Delete
    4. இந்த அழகிலே தாமிரபரணி ஓர் ஜீவநதி. தமிழ்நாட்டின் ஒரே ஜீவநதி! தண்ணீரின் சுவையும் அருமையாக இருக்கும். ஆனாலும் பெருமை இல்லை.

      Delete
    5. எங்கெங்கு ஆட்கள் இன்னும் குடியிருக்காங்களோ அங்கெல்லாம் தாமிரவருணி நல்லா ஓடுது. கீழந்த்தம் போன்ற பல ஊர்களில் மணல் கொள்ளையர்களால் ந்தி தன் பொலிவை இழந்ததுபோலத் தெரிகிறது.

      @ஶ்ரீராம்.... அப்போ டக்கென மனதில் உதித்து. என்னதான் சொன்னாலும் தன் இரத்தம் வேறு, அயல் இரத்தம் வேறு இல்லையா? மருமகளோ மருமகனோ.. அன்பு என்பது தன் ரத்தத்தின் நெருங்கிய சொந்தம் என்பதினால் மட்டுமே வரமுடியும்.

      இதுக்கு விதிவிலக்கு தன் ரத்தத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி பெண்ணை தன் மகனுக்கு மணமுடித்திருத்தாலோ (மகளுக்கும்) சாத்தியம்

      Delete
    6. என் மாமனார், மாமியார் வீடுகளில் சுற்றிச் சுற்றி உறவுகளே திருமணம் முடித்திருப்பார்கள். என் மாமனாரும், மாமியாருமே தூரத்துச் சொந்தம் எனவும் ஜாதகம் கூடப் பார்க்கவில்லை என்றும் சொல்வார்கள். அதே போல் என் பெரிய நாத்தனாரும் சொந்த அத்தை பிள்ளையையே திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயத்தில் சொந்த அத்தை பெண் இருந்தும் நம்மவர் தான் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டார். என் மாமனாருக்கு அது அளவு கடந்த வருத்தம். என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். அதே எங்க மைத்துனர் அத்தை பேத்தியைத் திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயத்தில் மாமனார், மாமியார் இருவருக்கும் மற்றும் குடும்பத்திலும் நாத்தனார்கள் அனைவருக்கும் அளவு கடந்த சந்தோஷமே!

      Delete
    7. மாமா செய்ததுதான் சரி - இரண்டு வகைகளில். ஒன்று, உறவுக்குள் திருமணம் என்பது வேண்டாம் என்று மருத்துவர்கள் சொல்வது. இரண்டு, அதனால்தான் உங்களைப் போன்ற தங்கம் மாமாவுக்குக் கிடைத்தார்! (என்னிடம் கூகுள்பே இருக்கு!!!!)

      Delete
    8. ஹாஹாஹா, ஸ்ரீராம், நீங்க என்னோட மின்னூல் "கீதா கல்யாணமே வைபோகமே!" படிச்சிருந்தால் அல்லது அது என்னால் பதிவுகளாக எழுதப்பட்டப்போப் படிச்சிருந்தால் மாமா தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்து என்னைக் கல்யாணம் செய்து கொண்டது தெரிஞ்சிருக்கும். நீங்க தான் பிடிஎஃப் என்றால் படிக்கப் பிடிக்கலைனூ சொல்வீங்களே! :)))))))

      எங்க பிறந்த வீட்டுப் பக்கம் எல்லோருமே அசல் தான். உறவு எல்லாம் இல்லை. புக்ககத்தில் தான் அவங்க எல்லோரும் கூடிப் பேசும்போது இப்போக் கூட அந்நியமாக உணர்வேன்! :))))))

      Delete
    9. எல்லாம் நாங்களும் 'கீதா கல்யாணமே வைபோகமே' படிச்சிருக்கோம். எனக்குத் தோணினது, மாமாவுக்கு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய விருப்பமில்லை. இதையும் யோசிச்சுக்கொண்டே இருந்தால், அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்யவேண்டிய நிர்பந்தம் வந்துடும்னும் நினைச்சிருக்கலாமே... எதுக்கு உங்களுக்குத் தோதாவே எல்லாரும் நினைக்கணும்? ஹா ஹா ஹா

      Delete
    10. //புக்ககத்தில் கூடிப் பேசும்போது// - ஹா ஹா. எங்க அப்பா எப்போதும் எதையும் தனிப்பட்ட முறைலதான் மெதுவா பேசுவார். சும்மா குடும்பத்தில் உள்ள எல்லாருக்கும் கேட்கும்படியாக பேச மாட்டார். மனைவி, ஆரம்ப காலத்தில், 'என்ன இது..உங்காத்துல எல்லாரும் எதையும் ரகசியமா பேசறீங்க'ம்பாள்.

      Delete
    11. நெல்லையாரே, எனக்குச் சாதகமாச் சொல்லலை. மாமா அந்த வேலை செய்யலைனால் அத்தை பெண்ணைத் தான் கல்யாணம் செய்திருப்பார். நான் இப்போவும் சொல்லிக் கொண்டிருப்பேன். ஆனால் அவர் நான் கல்யாணமே செய்து கொண்டிருக்க மாட்டேன் என்பார்! :))))))

      Delete
    12. உண்மையில் எங்க புக்ககத்தில் என் மாமனார், மாமியார், மைத்துனர்கள், நாத்தனார்கள் எல்லோரும் சேர்ந்து ஓர்ப்படியோடு பேசும்போது மணிக்கணக்கா ஆயிடும். கொல்லையிலே, வாசல் வராந்தாவிலே, மாடியிலேனு ஓடி ஓடிப் போய்ப் பேசுவாங்க! அதைப் பார்க்கையில் எனக்கு "அப்படி என்ன இருக்கும் பேச!" என்று தோன்றும். சரி, நாமளும் போய்த் தான் பார்க்கலாமேனு போனால் கல்லெடுத்து அடிச்ச காக்காய்க் கூட்டம் போல் எல்லோரும் கலைஞ்சுடுவாங்க! :)))))))) சிப்புச் சிப்பா இருக்கும்.

      Delete
  17. கீதாக்கா, ஹை காவிரில தண்ணீர். நடந்தாய் வாழி காவேரினு தண்ணீர் வருது போல!!!! காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் நு ஏதோ ஒரு பாட்டுல வரும். ஆனா டக்குனு இப்ப நினைவு வ்ரலை!..

    இங்கிட்டுருந்து அங்குட்டு வந்துவிட்டது ஹப்பா!! பார்க்கவே சந்தொஷமா இருக்கு. அதுவும் ஆற்றில் நீர் வருவதை அதாவது தண்ணீரே இல்லாமல் தூரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமா வருவதைப் பார்க்க அத்தனை அழகாக இருக்கும்.

    படங்கள் நன்றாக இருக்கின்றன இருந்தாலும் அக்கா வெயில்ல போய் எடுக்காதீங்க.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, நீங்க சொல்ற பாட்டு ஏதோ ரஜினி படம்னு நினைக்கிறேன். ஒருவழியாத் தண்ணீரை அனுப்பி வைச்சுட்டீங்க. காலை வேளையில் போய்ப் படம் எடுக்கணும். அதுவும் காமிராவில்.

      Delete
  18. ஆஹா அசைந்து அசைந்து வரும் காவேரி அழகு.. ஏன் கீசாக்கா தண்ணியைத்திறந்து விட்டிருக்கிறார்களோ எங்காவது இருந்து?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! அதிரடி, எந்த உலகத்தில் இருக்கீங்க? ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறந்து பாசனத்துக்காகக் காவிரி நீர் வருதே! என்னதான் ஸ்கொட்லாண்டில் இருந்தாலும் இங்குள்ள செய்திகளைத் தெரிஞ்சு வைச்சுக்க வேண்டாமோ!

      Delete